எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா, விஜயகாந்த் பதவி ஏற்க வரவில்லை
தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 5 பேர் தவிர, 228 பேர் சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவபுண்ணியம் (மன்னார்குடி), உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), பத்மாவதி (நன்னிலம்) ஆகிய 5 பேர் இன்று பதவி ஏற்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடப்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் அறைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு வருகிறார். விஜயகாந்த் காலை 11.30 மணிக்கு மேல் வருகிறார். இன்றும் பதவி ஏற்க முடியாமல் போனால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு சட்டசபை கூடும்போது அங்கு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொள்ளலாம்.










