தேர்தல் 2006 பதிவும், சி.என்.என் – ஐ.பி.என் பார்வையும்


நேற்று மாலை நானும் பத்ரியும், தேர்தல் 2006 பற்றிய ஒரு சிறப்பு செய்தியினை சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியின் நிருபர் விவியன் மேத்யுவிற்கு அளித்தோம். காலையிலிருந்து (ஏப்ரல் 5) அது ஓளிபரப்படுகிறது. காலையில் நான் பார்த்தேன். “தமிழ்நாடு ப்ளாக்பஸ்டர்ஸ்” என்கிற தலைப்பில் காலை 8.30 மற்றும் மாலை 7 & 9 நேரங்களிலும், மற்றபடி நாள் முழுக்க பல்வேறு செய்திகளிடையே துணுக்குப் பதிவாகவும் இது ஓளிபரப்பாகி இருக்கிறது. நான் தேர்தல் 2006 பதிவு உருவானவிதம், எழுதும் பதிவர்கள், அதனுடைய பார்வை பற்றி பேசியிருக்கிறேன். பத்ரி, வலைப்பதிவுகள் எவ்வாறு அரசியல் பார்வைகளை மாற்றி வருகின்றன, பத்திரிக்கை, தொலைக்காட்சி தாண்டிய ஒரு மாற்று ஊடகமாக இன்னும் 5 வருடங்களில் எப்படி மாறும் என்று பேசியிருக்கிறார். காலையில் நான் பார்த்ததில் வெட்டி போட்டிருந்தார்கள். தேர்தல் 2006, இட்லிவடை, ஹாட் மச்சி ஹாட் போன்ற வலைப்பதிவுகள் காண்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்தால் பாருங்கள்.

6 responses to “தேர்தல் 2006 பதிவும், சி.என்.என் – ஐ.பி.என் பார்வையும்

  1. Narain,
    IBN Live free streaming is available online and hence people living overseas can also watch it. I’ll try to catch it tonight.

  2. I have seen it.

    Good to see the news about Tamil blogs.

    Keep up

  3. 9 மணிக்குப் பார்த்தேன். தேர்தல் முடிவுகளில் வலைப்பதிவுகளின் தாக்கத்தைப் பற்றி அவர்கள் சொன்னது ரொம்பவே ‘ஓஓஓஒவர்’ 🙂

    தமிழ் வலைப்பதிவர்கள் பலரும் தேர்தலைப்பற்றி எழுதுவது தமிழ்மணத்தில் ‘தேர்தல் 2006’ என்ற தலைப்பின்கீழ் தனியாகக் காட்டப்படுகிறது. அதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் வலைப்பதிவர் சமூகத்தைப் பற்றிய அக்கறை வெளீப்பட்டிருக்கும். இது நிருபர் முடிவு செய்தது எங்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்று சப்பைக்கட்டு வேண்டாம். உங்களிடமெல்லாம் அந்தமாதிரி எதிர்பார்ப்பதுவும் ரொம்ப ‘ஓவரோ’ 😛

  4. —அந்தமாதிரி எதிர்பார்ப்பதுவும் ரொம்ப ‘ஓவரோ’ —

    என்னங்க… என்னுடைய புரிதலையே உடைக்கறீங்களே 😉 விமர்சனங்களை முன்வைப்பதற்கு மட்டும்தானே தமிழ்மணம் 😛

  5. Unknown's avatar வழவழா_கொழகொழா

    யாரோ கேட்டது மாதிரி, பத்ரி சிபி.காம் கட்டுரையில் கூட பல இணையதளங்களைப்பற்றி குறிப்பிட்டும், வலைப்பதிவுகளைப்பற்றி பேசும் போது கூட , தமிழ்மணத்தை குறிப்பிடவில்லையே? அவருக்கும் தமிழ்மணத்துக்கும் ஏதாவது பிரச்சினையா? இல்லை தமிழ்மணம் பவுண்டு செய்யப்படவில்லையா?இப்படி அவரவர் விளம்பரம் அவர்க்கு என்ரால் எங்கே இருந்து தமிழ்மணத்துக்கு ஆதரவு கிடைக்கும்?

    எந்த உள்குத்தும் இல்லாமல் அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.