திமுக கூட்டணியில் சில கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* காங்கிரஸ் – 48
* கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) – CPI (M) – 13
* இந்திய கம்யூனிஸ்ட் – CPI – 10
* முஸ்லிம் லீகுக்கான திமுகவின் உள் ஒதுக்கீடு – 3
பாமகவுக்கு 28-இலிருந்து 31 இடங்கள் ஒதுக்கப்படும் என்று பேசுகிறார்கள். இதனால் திமுகவுக்கு என்று கிடைக்கும் இடங்கள் = 129-இலிருந்து 132
இந்தக் கூட்டணியில் மிகவும் சந்தோஷமாக இருப்பது காங்கிரஸ். பாமகவுக்கு அதிருப்தி இருக்கும் என்று நினைக்கிறேன். மதிமுக கூட்டணியில் இருந்து கழன்று கொண்டதால் கிடைக்கும் 22 இடங்களின் தங்களுக்குக் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று பாமக எதிர்பார்த்திருக்கும். ஆனால் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் நிறையக் கிடைத்துள்ளதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது.
மேலும் சென்ற தேர்தல்களின்போது பாமகவே முதன்முதலில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கம். அவர்களுக்கு தங்களின் தேவை மிக நன்றாகத் தெரிந்திருக்கும்; அவர்களைக் கூட்டணியில் வரவேற்கும் கட்சிக்கும் பாமகவின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். ஆனால் இம்முறை பாமகவே கடைசி ஒப்பந்தம் செய்யப்போகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வருத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது. தனக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுத்த அதே அளவு இடங்கள் தேவை என்று கேட்பதாகத் தெரிகிறது. இவர்கள் இருவருக்குமே கொடுக்கப்பட்ட இடங்கள் அதிகம் என்பது என் கருத்து. ஆளுக்கு 7 தொகுதிகளுக்குமேல் கொடுத்திருக்கவே வேண்டாம்!











இவர்கள் இருவருக்குமே கொடுக்கப்பட்ட இடங்கள் அதிகம் என்பது என் கருத்து. ஆளுக்கு 7 தொகுதிகளுக்குமேல் கொடுத்திருக்கவே வேண்டாம்!//
உங்களுடைய கருத்துதான் எனக்கும். ஆனால் மதிமுகவின் கூட்டணி தாவலுக்குப் பிறகு மு.க மிகவும் உஷாராக இருக்கிறார்..
எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு..
பா.ம. கவுக்கும் சென்ற முறையை விட கூடுதல் இடங்கள் கொடுத்தாலும் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை..
கூட்டணி வெற்றி பெற வேண்டும்.. அதைத்தான் இன்று மறைமுகமாக ‘நாங்கள் செய்த தியாகம் வீணாகாது’ என்று மு.க கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பின்னூட்டங்கள் அதிகம் வரவேண்டுமென்று பொறுப்பில்லாமல் எழுதுபவர்கள் மத்தியில் உள்ளதை மட்டுமே எழுதும் உங்கள் பாணி எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது பத்ரி..