தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்குமா?- வைகோ பதில்
சங்கரன்கோவில், ஜன.30-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: ம.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் நிலைபாடு என்ன?
பதில்: ம.தி.மு.க. ஏற்கனவே உள்ள நிலைபாட்டில் எந்த மாறுதலும் இல்லை. 2004-ல் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த போது இருந்த ம.தி.மு.க.வின் அதே அரசியல் நிலைபாடுதான் தொடர்கிறது.
கேள்வி: ம.தி.மு.க.வின் பெரும்பாலான தொண்டர் கள் மத்தியில் மாற்றுக்கட்சி கூட்டணியை எதிர்பார்ப்பது போல தெரிகிறதே?
பதில்: ம.தி.மு.க.வின் உயிர் சக்தியே தொண்டர்கள்தான்.ம.தி.மு.க.வின் கடுமையான தோல்வியிலும், துன்பத்திலும் தங்களின் நலன் என்று எதையும் கருதாது இயக்கத் தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வகையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனம் பல சந்தர்ப்பங்களில் காயப்பட்டிருக்கிறது. 19 மாத சிறைவாசத்தின்போதும் அவர் கள் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்ததும் உண்மை.
ம.தி.மு.க.வின் கவுரமான அந்தஸ்தும் மரியாதையும் பாதுகாக்கப்படவேண்டும் என் பதுதான் தொண்டர்களின் நோக்கம்.
மேலும் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும் தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
கேள்வி:கூட்டணி எதுவாக இருந்தாலும் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்?
பதில்:கூட்டணி எதுவாக இருந்தாலும் என்ற வார்த் தையே தவறு.
கேள்வி:வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறீர்கள்?
பதில்:தேர்தலில் நிற்கும் போது உங்களிடம் சொல் கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ம.தி.மு.க. மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மாரியப்பன், நகரச்செயலாளர் பிச்சையா உள்பட பலர் இருந்தனர்.
Source: http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=103339
http://www.maalaimalar.com










