பிஸினஸ் மாடல்கள்


எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும். செயல்படுத்த அறியேன். தோன்றியதில் சில

1. ஃபீட் லவுன்ஜ் போன்ற தளங்கள் தமிழ்மணம்/தேன்கூடு போன்ற சேவைகளுக்கு மாதந்தோறும் ஐந்து அமெரிக்க வெள்ளிகளை சந்தாவாகக் கட்ட சொல்கிறார்கள். படிப்பதற்கு காசு கேட்டால் தமிழ் வாசகர்கள் (விகடன் போன்ற பெத்த பெயராக இல்லாவிட்டால்) கொடுக்கமாட்டார்கள்.

படிக்க வைப்பதற்கு பணம் கேட்கலாம். ஒரு மாதத்திற்கு உங்களுடைய வலைப்பதிவை தமிழ் வலைவாசலில் காட்டுவதற்கு ஐந்து டாலர் (அல்லது 250 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கலாம். வருட சந்தா என்றால் தள்ளுபடியாக ஐம்பது டாலர் கேட்கலாம்.

2. பின்னூட்டங்களில் வரும் அல்லாத வார்த்தைகளை நீக்குவதற்கான நிரலியை விற்கலாம். ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான செயலிகள் இருக்கிறது. அதே போல் தமிழிலும் கொண்டு வரலாம். வோர்ட்பிரெஸ் போன்றவற்றில் டேஞ்சரான சொற்களை நாமே தட்டச்சி இவை வந்தால் தடுத்துவிடவும் என்று சொன்னால், அவை வரும் மறுமொழிகள் நிராகரிக்கப்படும்.

நிரலியை நிறுவியவுடன் ஆட்டோமேடிக்காக புகழ்பெற்ற வசைப்பாடுகள் பின்னூட்டங்களில் தேடப்படும். அவசியம் என்றால் நாமே அதிகப்படியான அல்லது விடுபட்ட வன்சொற்களை நிரலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். ப்ளாக்ஸ்பாட்டுடன் எளிதில் இணைந்து செயல்படுவது அவசியம்.

3. தமிழில் தேட வேண்டும் என்றால் ரோமனைஸ்ட் ஆங்கிலத்தில் அடித்தால் போதுமானது என்று சொல்லுமாறு தேடுபொறி அமைக்கலாம். ரா ஷுகர் போன்ற niche தேடுபொறிகளின் காலம் இது.

அந்த நிரலியே கொடுக்கப்பட்ட சொற்றொடருடன் தேவையான விகுதிகளை சேர்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ‘ஐஸ்வர்யா’ என்று தேடினால் ‘ஐஷ்வர்யா’, ‘ஐஸ்வரியா’, ‘ஐஸ்வர்யாவின்’ போன்ற உபரிகளையும் கொண்டு வர வேண்டும். உலக அழகியா அல்லது லஷ்மியின் மகளா அல்லது அஷ்டலஷ்மிகளில் ஒருவரா அல்லது ரஜினிகாந்தா என்று வினவாமல், அனைத்து முடிவுகளையும் க்ளஸ்டி போல் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.

பாமினி, டிஸ்கி, யூனிகோட், டாப்/டாம் என்று பல எழுத்துருக்களில் மாற்றிக் கொண்டு தேடி, அனைத்து முடிவுகளையும் ஒருங்கிணைத்துத் தரும். மின்-மடலாடற் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்று பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் advanaced options-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்.

4. தமிழில் குறும்படங்களும் விவரணப்படங்களும் பெருமளவில் வெளிவருவதாக ‘நிழல்’ போன்ற பத்திரிகைகள் சொல்கிறது. ஆங்கிலத்துக்கு ‘இண்டி’ சர்க்யூட் இருப்பது போல் இவற்றுக்கு வலையில் பெரும் வரவேற்பு இருக்கும். மாத சந்தாவைக் கட்டினால் எத்தனை படம் வேண்டுமானால் பார்க்கலாம் என்னும் ஏற்பாட்டின் மூலம் பட ஆர்வலர்களையும் புதுப்பட முயற்சிகளையும் கைகோர்க்க வைக்கலாம்.

குறைந்த நேரங்களே ஓடும் படங்கள் என்பதினால் அகலபாட்டை, 56 கேபிபிஎஸ் போன்ற பிரச்சினைகள் பெரிதும் தலைதூக்காது. திருட்டுப் விசிடியையும் ஒரே முகவரியையே பலரும் பயன்படுத்துவதையும் தடுக்க, ஐ-ட்யூன்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

5. சூடாக அலசவேண்டிய, உலகளாவிய மற்றும் துறைசார்ந்த விஷயங்கள் இருந்தாலும், எழுத்தில் கொண்டுவரக் கூடியவர்களைக் காணவில்லை என்று பத்திரிகைகள் அங்கலாய்க்கும். எழுத்தாளர்கள் கிடைத்தாலும் புத்தகங்களாக முழுவீச்சோடு முடிப்பதில்லை என்று பதிப்பகங்கள் அலுத்துக் கொள்ளும்.

வலைப்பதிவுகளிலும், இணையப் பத்திரிகைகளிலும் இதுவரை வெளியிட்ட அத்தனை கட்டுரை, கதை, கவிதை என்று எல்லா மேட்டர்களையும் ஒருங்கிணைத்து டேட்டாபேஸ் உருவாக்கலாம். எவர் எதை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதை அனுமாணித்து, பதிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பாலமாக செயல்படலாம்.

இரு பக்கத்திலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அச்சுத் தேவையையும் எழுதும் தாகத்தையும் பொருத்தி விட்டு இடைத்தரகராக விளங்கலாம்.


| |

2 responses to “பிஸினஸ் மாடல்கள்

  1. BOBA is in full form and enjoying the vacation by drowning in blogworld and its underworlds 🙂

  2. //தமிழில் குறும்படங்களும் விவரணப்படங்களும் பெருமளவில் வெளிவருவதாக ‘நிழல்’ போன்ற பத்திரிகைகள் சொல்கிறது. ஆங்கிலத்துக்கு ‘இண்டி’ சர்க்யூட் இருப்பது போல் இவற்றுக்கு வலையில் பெரும் வரவேற்பு இருக்கும். மாத சந்தாவைக் கட்டினால் எத்தனை படம் வேண்டுமானால் பார்க்கலாம் என்னும் ஏற்பாட்டின் மூலம் பட ஆர்வலர்களையும் புதுப்பட முயற்சிகளையும் கைகோர்க்க வைக்கலாம்.//

    இது மேட்டரு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொன்னது, இப்பவும் யாராவது ஆரம்பிச்சா சேர்ந்துக்கலாம்.

ravi srinivas -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.