தமிழகத்தில் கம்யூனிசம் மலருமா?


தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் என் பார்வையில் அலசலாம் என்று இருக்கிறேன். முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில் உள்ளன.எப்போதும் பி.ஜே.பிக்கு எதிர் அணியில் இருப்பது தான் அவர்கள் தற்காலத்திய கொள்கை என்பதால் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெறாமல் போனால் அதே சமயம் தி.மு.க வும் கணிசமாக தொகுதிகளை இவர்களுக்கு தராமல் போனால் இவர்கள் கூட்டணி மாற்றிக்கொள்ளகூடும்.

1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து கணிசமாக தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் போட்டியிட்டு வென்றது எனக்கு நினைவிருக்கிறது(சுமார் 17 என்று நினைக்கிறேன்).இதில் மார்க்ஸிஸ்ட் தான் பிக் பிரதர். இந்திய கம்யூனிஸ்ட் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக என்ன வித்தியாசம் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.

தேர்தல் களத்தை பொறுத்தவரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பி.ஜே.பி எதிர்ப்பு என்பதை தவிர மற்ற எந்த கொள்கையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இவ்விரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொள்கையை பரப்புவது, கட்சியை வளர்ப்பது என்பதை பற்றியெல்லாம் இவர்கள் அக்கறை கொள்வதில்லை. நண்பர் சந்திப்பு தன்னுடைய ஒரு அலசலில் தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இளைஞர்கள் சேருவதில்லை என்பது போல கூறினார். அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம்.ஆனால் இக்கால இளைஞர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் சேருகிறார்கள் என்றால் அது பகல் கனவுதான்.

இது தொடர்பாக அவர்கள் மேல் எனக்கு கணிசமான விமர்சனங்கள் இருக்கின்றன.மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராடுகிறவர்கள் அவர்கள் தான்.ஆனால் தேர்தல் என்று வந்தால் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து (லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேரக்கூட தயங்குவதில்லை இவர்கள்) ஒன்றோ இரண்டோ எம்.எல்.ஏ சீட் வாங்கினால் மட்டும் பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்துவிடுமா?

அவ்வளவு எளிமையானவர்கள்,கொள்கை பிடிப்பாளர்கள் தோழர்கள் என்றால் எந்த கூட்டணியிலும் சேராமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்யலாமே?பதவிதான்(ஒரு சீட்,இரண்டு சீட்தான்) முக்கியம் என்று இருப்பது ஏன்?

தலைவர்களும் அதே பழைய ஆட்கள்தான். எண்பது தொண்ணூறு வயதில் அவர்களாக ரிட்டயர் ஆகும்வரை அதே ஆட்கள்தான்.புதுமுகங்களும் இளைஞர்களும் இங்கெல்லாம் பதவிக்கு வருவது என்பது அரிது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் என்பது ஒரு பாஸிடிவ் விஷயம்.தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார்கள்.
(கன்னியாகுமரி,நாகப்பட்டினம்,கோயமுத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில்). நல்லக்கண்ணு போன்ற கக்கன், காமராஜர் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்களை கொண்ட கட்சிகள் இவை.

12 responses to “தமிழகத்தில் கம்யூனிசம் மலருமா?

  1. Unknown's avatar சந்திப்பு

    முத்து! வணக்கம்.

    அரசியல் அரங்கில் நல்ல விவாதத்தை துவக்கியிருக்கிறீர்கள். சோ குறித்த பதிவு போல் அனைவரும் பங்கேற்றால் ஆரோக்கியமாக இருக்கும்.

    தமிழகத்தில் கம்யூனிசம் மலருமா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறீர்ள், கம்யூனிசம் தமிழகத்தில் மலராதா! என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
    நானும் தொடர்ந்து அரசியல் அரங்கத்தை கவனித்து வருவதால் ஒரு சில மாற்று விஷயங்களை முன்வைக்கிறேன்.

    1. தமிழகத்தில் அதிமுவுடன் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாமல் போனால், திமுக கணிசமான தொகுதிகளை ஒதுக்காமல் போனால் தோழர்கள் கூட்டணி மாறுவார்கள் என்று கூறியுள்ளீர்கள்!
    தங்களது கணிப்பு சரியில்லை என்பது என் கருத்து! கடந்த 5 ஆண்டு காலமாக மக்கள் விரோத – சர்வாதிகார – தான்தோன்றித்தனமான ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவை எதிர்த்து 5 ஆண்டுகள் தொடர்ந்து விடாப்பிடியாக போராடிய கம்யூனிச தோழர்கள் எப்படி அதிமுக பக்கம் தாவுவார்கள்? உங்களுடைய கணிப்பு சரியான லாஜிக்காக தெரியவில்லை.

    2. திமுக கணிசமான தொகுதி ஒதுக்கவில்லையென்றால் என்று கூறியிருக்கிறீர்கள்! கணிசமான தொகுதி என்றால் எத்தனை? (1996 பாராளுமன்றத் தேர்தலில் இதயத்தில் இடம் என்று கூறியவர் கருணாநிதி என்பதை மறந்து விடக்கூடாது. அப்போதும் கூட மார்க்சி°ட் தோழர்கள் கூட்டணி மாறவில்லை என்பதோடு, இதர கட்சிகளைப் போல் பேராசைக் கொண்டு 40 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. மாறாக வடசென்னை, மதுரை பாராளுமன்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டுவிட்டு, மற்ற இடங்களில் திமுகவை ஆதரித்தார்கள் என்பது வரலாறு.

    மக்களுக்காக போராடுபவர்கள் ஏன் ஒரு சீட், இரண்டு சீட் என்று தேர்தல் காலத்தில் பதவிதான் முக்கியம் என்று இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்!

    இல்லாததை இருப்பதாக மார் தூக்கிக் கொள்பவர்கள் கம்யூனி°டுகள் அல்ல என்று நினைக்கிறேன். தன்னுடைய பலம் என்ன? இலக்கு என்ன என்பதை உணர்ந்து பொறுப்புணர்வோடு செயல்படுபவர்கள். அதனால்தான் சீட்டுக்காக அலையாமல், யாரை எந்த நேரத்தில் வீழ்த்த வேண்டுமோ அதற்காக – கொள்கைக்காக தன்னுடைய இலட்சியத்தை அடைய மற்றவர்களின் பலத்தை பயன்படுத்தி எதிரியை வீழ்த்தி விடுகிறார்கள். இல்லையென்றால் கம்யூனி°ட்டுகளின் பலத்தை வைத்து பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்த முடியுமா? அல்லது தமிழகத்தில் காங்கிரசை விரட்டித்தான் இருக்க முடியுமா? பலம் பெறும் வரை மற்றவர்களின் பலத்தை திரட்டி எதிரியை வீழ்த்துவதே சரியான தந்திரம்! அந்த அடிப்படையில் பார்த்தால் கம்யூனி°ட்டுகள் சரியான திசை வழியில் செல்வதாக தெரிகிறது.
    இறுதியாக… பத்திரிகையில் படித்த ஒரு விஷயத்தை கூறி முடிக்கிறேன்!

    கேரளாவின் மறைந்த முன்னால் முதல்வர் நம்பூதிபாடிடம் நிருபர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்.

    கேள்வி இதுதான் : இந்தியாவில் கம்யூனிசம் வருமா?

    பதில் : அமெரிக்காவிலும் கம்யூனிசம் வரும்!

    கம்யூனிசம் குறித்து பலருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். இது ஒரு மனிதகுலத்திற்கான விஞ்ஞான தத்துவம் என்ற அடிப்படையில் – உலக மக்களை – உயர்ந்த சமூகத்திற்கு அழைத்துச் செல்வதுதான் கம்யூனிச லட்சியமாக இருப்பதால் இது தமிழகத்தில் மட்டுமல்ல! உலகம் முழுமையிலும் வெல்லும்! என்பது என்னுடைய நம்பிக்கை.

    லத்தின் அமெரிக்க நாடுகளில் வெனிசுலா, கியூபா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, இக்குவாடார் என்று பல நாடுகளில் அமெரிக்க ஆதரவு தத்துவம் தண்ணி குடிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது! இதை தாங்களும் அறிந்திருப்பீர்கள்!

  2. க்யூபாவில் IceCream வாங்க 200 பேர் வரிசையில் கால் வலிக்க நிற்க வேண்டும்.

    போதுவாக கம்யூனிஸ்டகள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஓவ்வோரு Poll Boothஇலும் நாற்பது கள்ளவோட்டு பொட “தொழர்கள்” முயற்சி செய்வார்கள்.

    தேர்தல் கமிஷன் செய்த விசாரனையில் வங்கத்தில் இப்படி தான் “தொழர்கள்” நான்கு முறை வென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

    போலிஸ் சங்கம் – அதை கம்யூனிஸ்டகளின் கூடாரம் ஆக்கிவிட்டனர் வங்கத்தில்.

    பங்ளாதேஷ் முஸ்லிம்களின் வோட்டுக்காக நாட்டை விற்றுவிட்டனர்.

    இப்போது, எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் பங்களாதேஷ் அகதிகள் மீது சந்தேகம் எழுகிறது.

    மெலும் இந்தியாவை விட இவர்களுக்கு சீனா மீது தான் பாசம் ஜாஸ்தி.

    முன்பு சோவியத் மீது இருந்த பாசம் இப்போது சீனா மீது.

    சோவியத் KGB இடம் இருந்து கார் கன்னாடிகள் வழியாக யாரும் பனம் கொடுப்பது இல்லை என்பதால்!

    ரஷ்யாவில் தொழர்கள் தொல்வி அடைந்துவிட்டனர்.

    சீனா இன்னும் கம்யூனிச நாடு என்றால் சிரிப்பு தான் வரும்.

    கயூபாவில் icecream வாங்க 200 பேர் வரிசையில் நிற்க வேண்டுமாம்.நல்ல நாட்டை உதாரனம் காட்டுங்கள்!

    பிரேசில் இன்னும் தனது Embraer விமானத்தில் அமெரிக்க spares ஐ பயன்படுத்துகிரது.அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் மிக நல்ல உறவு உள்ளது.

    //அர்ஜென்டினா//

    அங்கே இப்போது வரலாறு கானாத வேலை இல்லா திண்டாட்டம்.

    //நிகரகுவா, இக்குவாடார் //

    இந்த நாடுகளின் பரிதாப நிலை எப்போதும் இந்தியாவுக்க வர கூடாது!

    கம்யூனிஸ்டகளுக்கு வோட்டு போட்டால் வேலை இல்லா திண்டாட்டம் தான் வரும்.

    எதையும் உருப்படியாக நடக்க விடமாட்டார்கள்.

  3. Unknown's avatar சந்திப்பு

    சமுத்ரா அமெரிக்காவிலும், பிரான்சிலும், ஜப்பானிலும், ஐரோப்பாவிலும் ஏன் இந்தியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்து விட்டதா? நீங்கள் காட்டும் வழி என்ன! போக ஊருக்கு வழி காட்டாதீர்கள். சிலருக்கு தூசி பட்டால் அலர்ஜி, இன்னும் சிலருக்கு கம்யூனிசம் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி அந்த வகையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    பா.ஜ.க., திமுக, அதிமுக, காங்கிர°, லாலு, சந்திரபாபு நாயுடு, முலாயம், உமாபாரதி…. இவர்கள் சார்ந்த கட்சிகளும், தொண்டர்களும் கள்ள ஒட்டு என்றாலே மகா அலர்ஜி. (பாவம் நீங்கள்!)
    குஜராத்தில் போலீசும் – அரசும் சிறுபான்மையினரை கொன்றதே! அரசே சங்பரிவாரமாக காட்சியளிக்கிறதே! அது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்!

    சோவியத்தில் கம்யூனிசம் காணாமல் போய்விட்டதற்கு சந்தோஷப்படும் நீங்கள். சோவியத் தற்போது சொர்க்கபுரியா என்று கூறுங்கள்.

    சோவியத் வரிசையில் சீனாவையும் சேர்த்து அழித்து விட்டால் ரொம்ப நலமாக இருக்கும். கழுகுகளுக்கு எப்போதும் பிணங்கள்தான் தேவைப்படும்! என்ன சரியா சமுத்திரா?

  4. //சமுத்ரா அமெரிக்காவிலும், பிரான்சிலும், ஜப்பானிலும், ஐரோப்பாவிலும் ஏன் இந்தியாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்து விட்டதா?//

    ஆம்.
    இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட சர்வதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளை விட வேலை வாய்ப்புகள் அதிகம்.

    மக்களின் வாழக்கை தரம் மிக நன்றாக உள்ளத.

    வெறும் 8 டாலர் அளவுக்கு வரி கட்ட தவறிய தங்கள் தெசத்தின் குடிமகனை ரஷ்ய அதிகாரிகள் பாரம்பரிய முறைபடி கொன்ற வீடியோவை பார்த்தால் நீங்கள் இப்படி பேசமாட்டிர்கள்.

    //சிலருக்கு தூசி பட்டால் அலர்ஜி, இன்னும் சிலருக்கு கம்யூனிசம் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி அந்த வகையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

    சத்தியமாக சொல்கிறேன் சந்திப்பு அவர்களே, சீனாவிடம் பிச்சை
    எடுக்கும் இந்திய கம்யூனிஸ்டகளை பார்த்தால் எனக்கு அலர்ஜி தான்.

    அதுவும் இந்தியா அனுகுண்டு கூட தயாரிக்க கூடாது, அனாலும் பாகிஸ்தானுக்கு சீனா அனுகுண்டு கொடுப்பதை பற்றி பேச கூடாது என்று கூறும் தேச விரோத சக்திகளை கண்டால் எனக்கு அகாது.

    இந்தியாவில் ஜப்பானிய முதலீடு செய்வதை தடுத்து நிறுத்தி அதை சீனாவுக்கு திசைதிருப்ப சீன கம்யூனிஸ்டகளின் கட்டளை படி Honda,Toyota ஆகிய நிறுவனங்களில் வேலை நிறுத்த மிரட்டல் விடுக்கும் கம்யூனிஸ்டகளை என்ன செய்தால் தகும்?

    //சோவியத் தற்போது சொர்க்கபுரியா என்று கூறுங்கள்.//

    முன்பு இருந்ததை விட மக்கள் சந்தோசமாக தான் உள்ளார்கள்.

    அதுவும் சில்லரை வரிகளை கட்டாவிட்டாலும் குதிரைகளில் இருபுறம் கட்டி இழுத்து(உடலை இடுப்பு பகுதியில் இரண்டாக பிளந்து) கொல்ல சோவியத் போலிஸ் வராது என்று ரொம்பவும் சந்தோசமாக தான் உள்ளார்கள்.

    //குஜராத்தில் போலீசும் – அரசும் சிறுபான்மையினரை கொன்றதே! அரசே சங்பரிவாரமாக காட்சியளிக்கிறதே! அது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்!
    //

    இந்த கலவரம் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் மக்கள் யாருக்கு வோட்டு போட்டனர் ?

    //சோவியத் வரிசையில் சீனாவையும் சேர்த்து அழித்து விட்டால் ரொம்ப நலமாக இருக்கும். கழுகுகளுக்கு எப்போதும் பிணங்கள்தான் தேவைப்படும்! என்ன சரியா சமுத்திரா? //

    மிக சரி சந்திப்பு.
    சாகட்டும் கம்யூனிஸ நாடுகள்.

  5. Unknown's avatar சந்திப்பு

    முதலாளித்துவ நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளதாக புளகாங்கிதம் அடையும் சமுத்ரா அவர்களே!

    காத்ரீனா புயல் அமெரிக்காவைத் தாக்கிய போது, அமெரிக்காவின் சீரழிந்த சமூக அமைப்பும் வெளியில் வந்ததே. அப்போது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு கணா கண்டுக் கொண்டிருந்தீர்களா?

    சரி! அதை விடுங்கள், அமெரிக்காவின் மாசாசூட்° மாநிலங்களில் கடுமையான குளிர் காலத்தில் அங்குள்ள ஏழை மக்களுக்கு வெனிசுலா அதிபர் யூகோ சாவேசு மிக குறைந்த விலையில் “ஹீட்டிங் எண்ணை” கொடுத்தாரே! ஜார்ஜ் புஷ்ஷின் அரசு ஏன் அதைச் செய்யமுடியவில்லை! அமெரிக்க மக்கள் புஷ்ஷை பார்த்து காரி துப்பினார்களே அது உங்கள் கண்ணை மறைத்து விட்டதா!

    சரி! அதையும் விடுங்கள்! பிரான்° பற்றி எரிந்ததே எதற்காக? வேலையின்மை, வீடின்மை, பாகுபாடு என பிரான்சின் நவீன கொத்தடிமைத்தனமல்லவா? பிரான்சை எரிக்கச் செய்தது? இதுவெல்லாம் தற்போதைய உதாரணங்கள்?

    சரி! இன்றைய செய்திக்கு வருவோம்! நீங்கள் விரும்பும் அமெரிக்கா இன்றைக்கு ஈரானுக்கு ஓட்டளிக்க வேண்டும்.

    இல்லையென்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று இந்தியாவை பார்த்து மிரட்டியுள்ளதே! இப்போதும் உங்கள் தேசப்பற்று அமெரிக்காவின் பக்கம்தான் இருக்கும்! சரியா!

    அணு குண்டு இந்தியா தயாரித்தால் கம்யூனி°ட்டுகள் எதிர்ப்பார்கள் என்று கூறியுள்ளீர்கள்! இந்தியா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் மானுடத்தை அழிக்கும் கொடிய அணுகுண்டை தயாரிக்க கூடாது என்பதுதான் என் விருப்பம். அதுமட்டுமல்ல! நீங்கள் விரும்பும் அமெரிக்காதான் உலகில் முதன் முதலில் 5 லட்சம் பேரை அணுகுண்டு வீசி சொர்க்கத்திற்கு! அனுப்பியது. உங்கள் சிந்தனை அழிவுக்கு துணைபோவதில்தான் ஈடுபாடு கொண்டுள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது!

    தேசம் என்றால் வெளிநாட்டு முதலீடு மட்டுமல்ல! இங்கிருக்கும் மக்கள்தான். உடல் என்றாலே உங்களுக்கு வெறும் எலும்புகூடுதான் ஞாபகத்திற்கு வரும் போல் இருக்கிறது. அதற்கு துணையாக செயல்படும் நரம்புகளும், சதைகளும், இரத்தமும், உயிரும் கண்ணுக்கே தெரியவில்லை என நினைக்கிறேன். தொழிலாளியின் உழைப்பு இல்லாமல் உலகில் எந்த முதலாளியும் ஒரு வேளை சாப்பாடு கூட உண்ண முடியாது! முதலாளிகள் வயிறு நிறைப்பதே தொழிலாளியின் இரத்தத்தில்தான்… பாவம் உங்களுக்கு அதெல்லாம் தெரிய நியாயமில்லை! நீங்கள் தொழிலாளியா என்பதும் எனக்கு தெரியவில்லை?

    குஜராத்தில் மக்கள் ஓட்டுப் போட்டார்களா? சமத்துக்குட்டி! சரி! இப்போதும் உங்களின் மென்மையான இதயம் கொல்லப்பட்டவர்களுக்காக வருத்தப்படவில்லை என்பதில் இருந்தே உங்களது சிந்தனை சீரழிவுப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதை அம்பலப்படுத்துகிறது.

    கம்யூனிசம் சாகட்டும்! சாகட்டுமே! (பூனை கண்ணை மூடிக் கொண்டால் இருண்டா விடும்) ச்சூ… ச்சூ… ச்சூ…

    (உங்கள் மனம் புண்பட வேண்டும் என்று எழுதவில்லை. சில விஷயங்களுக்கு பஞ்ச் தேவை! என்பதற்காகதான். மற்றபடி உங்களை சக சகோதரனாகவே நான் பார்க்கிறேன். விவாதம் – விவாதமாக இருக்கட்டும் – நியாயத்துடன்)
    ஆஹா… என்றெழுந்தது பார் யுகப் புரட்சி என்று ரஷ்ய புரட்சியைப் பற்றி கர்ஜித்தாரே பாரதி…. ரஷ்யப் புரட்சியை யுகப் புரட்சி என்று வர்ணித்ததே. இது மனித குலத்தை விடுவித்த புரட்சி என்பதாகத்தான். ரஷ்யப் பாதை முதல் சோதனையில் விழுந்திருக்கலாம். ஆனால் வலுவாக எழும்… முதலாளித்துவம் என்ற அரக்கணை வீழ்த்த…

  6. Unknown's avatar முத்து(தமிழினி)

    கூட்டணி மாறுவது பற்றி கூறி தோழர்கள் சொக்கதங்கங்கள் என்று கூறுகீறிர்கள்.ஆனால் பீகாரில் லல்லுவுடைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சி இல்லை என்கீறீர்களா?பிறகு ஏன் தோழர்கள் லல்லுவுடன் கூட்டணி வைத்தார்கள்? பி.ஜே.பியை எதிர்ப்பது என்ற ஒற்றை பரிமாண தத்துவத்தை வைத்து அரசியல் நடத்துவது போல் தோன்றுகிறது. இப்போது பீகாரில் என்ன நடந்தது?

    கம்யூனிசம் ஒரு விஞ்ஞான தத்துவம் தான்.ஆனால் அதை செயல்படுத்துவதாக கூறுபவர்கள் சரியில்லையோ என்ற எண்ணம் தான் எனக்கு. சில தேர்தல்களில் போட்டியிடாமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்தால் என்ன என்பது தான் என் கேள்வி.
    முதலாளித்துவ நாடு குறிப்பாக அமெரிக்காவின் அவலங்களை பற்றி நீங்கள் சமுத்திராவிற்கு கூறிய பதில்கள் நன்றாக உள்ளன.
    //தேசம் என்றால் வெளிநாட்டு முதலீடு மட்டுமல்ல! இங்கிருக்கும் மக்கள்தான். உடல் என்றாலே உங்களுக்கு வெறும் எலும்புகூடுதான் ஞாபகத்திற்கு வரும் போல் இருக்கிறது. அதற்கு துணையாக செயல்படும் நரம்புகளும், சதைகளும், இரத்தமும், உயிரும் கண்ணுக்கே தெரியவில்லை என நினைக்கிறேன்//
    குறிப்பாக மேற்கண்ட வார்த்தைகள். தொழிலாளிகள் என்றால் என்ன என்றே தெரியாமல் இருப்பவர்களை பார்த்து நாம் பரிதாபப்படத்தான் முடியும்…..

  7. //காத்ரீனா புயல் அமெரிக்காவைத் தாக்கிய போது, அமெரிக்காவின் சீரழிந்த சமூக அமைப்பும் வெளியில் வந்ததே. அப்போது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு கணா கண்டுக் கொண்டிருந்தீர்களா?//

    உலகின் மற்ற நாடுகளை விட அங்கே சிரமைப்பு நன்றாக தான் நடந்து வருகிறது.

    மேலும், Condoleeza Rice மற்றும் Colin Powell இருவரும் கறுப்பு இனத்தவர் தானே?

    //ஹீட்டிங் எண்ணை” கொடுத்தாரே! ஜார்ஜ் புஷ்ஷின் அரசு ஏன் அதைச் செய்யமுடியவில்லை

    இதை மிக நல்ல PR Stunt என்று தான் கூற வேண்டும்.

    இவர்கள் எழை நாடுகளுக்கும் அதே சலுகைவிலையில் என்னை வழங்க வேண்டியது தானே?

    //சரி! அதையும் விடுங்கள்! பிரான்° பற்றி எரிந்ததே எதற்காக? வேலையின்மை, வீடின்மை, பாகுபாடு என பிரான்சின் நவீன கொத்தடிமைத்தனமல்லவா? பிரான்சை எரிக்கச் செய்தது? இதுவெல்லாம் தற்போதைய உதாரணங்கள்?//

    சொம்பேறிகளுக்கு அரசு சாப்பாடு பொட வேண்டியது இல்லை.

    மெலும் இந்த கலவரத்தில் எந்த பிரிவினர் இடுபட்டனர் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

    வடகொரியா, சீனா, ரஷ்யா நாடுகளைவிட பிரான்ஸில் வாழ்க்கை தரம் நன்றாக இல்லை என்று Statistical Data மூலமாக நிங்கள் நிருபிக்க தயாரா?

    //இங்கிருக்கும் மக்கள்தான்//

    அதை சீன மற்றும் சோவியத் அரசுகளிடம் என்னோ இந்திய கம்யூனிஸ்டகள் சொல்வது இல்லை.

    இரண்டாவது குழந்தையை பெற்று எடுத்தால் சீனாவில் என்ன நடக்கும் என்று தெரியுமா சந்திப்பு அவர்களே?

    அல்லது அரசுக்கு எதிராக சோவியத்து ரஷ்யாவில் எதாவது பேசினால் என்ன நடந்திருக்கும் என்றாவது தெரியுமா?

    ஏன் Google இனையயம் தனது தேடல் முடிவுகளை censor செய்ய வேண்டும் என்று சீன அரசு வலியுறித்தி வருகிறது?

    எந்த கம்யூனிஸ்ட நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும் ?

    Tianmenn Squareஇல் நடந்தவற்றை பற்றி என் பேசுவதில்லை உங்கள் “தொழர்கள்” ?

    //அணு குண்டு இந்தியா தயாரித்தால் கம்யூனி°ட்டுகள் எதிர்ப்பார்கள் என்று கூறியுள்ளீர்கள்! இந்தியா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் மானுடத்தை அழிக்கும் கொடிய அணுகுண்டை தயாரிக்க கூடாது என்பதுதான் என் விருப்பம். அதுமட்டுமல்ல//

    பின்னர் என் உங்களது சோவியத் தோழர்கள் நாஜி Scientistsகளை கடத்தி சென்று அமெரிக்காவுக்கு முன்பே அனுகுண்டு தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இடுபட வேண்டும் ?

    இந்திய ஜனாதிபதி சீனாவில் சுற்றுபயனம் செய்யும் போது என் சீனா அனுகுண்டு சோதனை செய்ய வேண்டும் ?

    இந்த அனுகுண்டை பாகிஸ்தானுக்கு விற்ற போது ஏன் “தோழர்கள்” மவுனமாக இருக்க வேண்டும் ?

    ஒருவரின் நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டின் மீதும் அனுகுண்டு பிரயோகம் செயதால் என்ன தவறு?

    Pear Harbour யாருடைய தவறு?

    //முதலாளித்துவம் என்ற அரக்கணை வீழ்த்த… //

    நிங்களும் நானும் அப்போது உயிருடன் இருக்க கூடாது என்று இறைவனை வேண்டுவோம்!

    கம்யூனிஸ்ட நாடுகளில் சக மனிதரை நடத்தும் விதம் நாம் அறிந்ததே….சீனாவில் உள்ளது போல கற்பத்தில் இருக்கும் குழந்தையை ஊசி போட்டு கொல்லும் கம்யூனிஸ்ட் அரசின் கீழ் நான், நீங்களும் நிச்சயமாக வாழ கூடாது.

    //கர்ஜித்தாரே பாரதி//

    அவரை எனக்கு பிடிக்கும் அதற்காக அவர் என்ன சொன்னாலும் நான் ஏற்க தேவையில்லை.

    அறிவே தெய்வம் என்றும் அவர் எழுதியுள்ளார்.

    //உங்களை சக சகோதரனாகவே//

    கம்யூனிஸ்டகள் இப்படி தான் 1962இல் சொன்னார்கள்.இந்திய-சீன போர் தான் வந்தது.

    வியட்நாமிடம் கூட இப்படி தான் சொன்னார்கள், பின்னால் அவர்களுக்கும் போர் வந்தது.

    திபெத்தை பற்றி இந்திய கம்யூனிஸ்ட்கள் என் வாய் திறப்பது இல்லை ?

    //முதலாளித்துவ நாடு குறிப்பாக அமெரிக்காவின் அவலங்களை பற்றி நீங்கள் சமுத்திராவிற்கு கூறிய பதில்கள் நன்றாக உள்ளன. //

    வரி கட்டாமல் விட்டால் சோவியத் அரசை போல குதிரையில் இழுத்து கொல்லாமல் விடும் அமெரிக்க அரசை மோசம் என்று சொல்லாமா?

  8. Unknown's avatar வெங்காயம்

    சந்திப்பு, சமுத்ராவுக்கு நீங்கள் எத்தகைய ஆதாரத்தை எடுத்து வைத்தாலும் அவர் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. பாக்கிஸ்தானா இந்தியாவா என்றால் பெரும்பாலும் பாக்கிஸ்தான் பக்கமே சாயும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டத்தினர் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தால்கூட அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிப்பார்கள். எனவே இத்தகையவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணாக்காதீர்கள். ஒரு வேளை அமெரிக்காவில் கம்யூனிச அரசு அமைந்தால் இவர்களும் கம்யூனிசத்தை ஆதரிக்கக்கூடும்.

  9. வெங்காயம் அவர்களே,
    ஆமெரிக்க-இந்திய-பாகிஸ்தானிய உறவுகளை பற்றி எற்கனவே நான் நன்பரின் பதிவில் எழுதியிள்ளேன்.

    மேலும், பாகிஸ்தானுக்கு சாதாரன ஆயுதம் கொடுக்கும் அமெரிக்கா அனுகுண்டு மற்றும் எவுகனை சப்ளை செய்யும் சீனாவை விட மேல் என்பதே எனது என்னம்.

    அல்லது, அமெரிக்காவை பகைத்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாம் பாகிஸ்தானில் இருந்து வரும் சீன அனுகுண்டுகளிடம் அடிபட்டு சாக வேண்டுமா?

  10. முத்து அவர்களே,

    1939-ல் ஹிட்லர் ஸ்டாலின் ஒப்பந்தம் நடந்து இரு நாட்டினரும் சேர்ந்து போலந்தை கபளீகரம் செய்தனர். ஆக 1941 வரை கம்யூனிஸ்டுகள் பிரிட்டிஷாருக்கு எதிராகவே இருந்தனர். 1941-ஆம் ஆண்டு ஹிட்லர் சோவியத் யூனியன் மேல் படை எடுத்தவுடன் கம்யூனிஸ்டுகள் ஒரே இரவில் கட்சி மாறி, பிரிட்டிஷாரை ஆதரிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு சோவியத் நலம்தான் பெரிதாகிப் போயிற்று. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் போராட்ட வீரர்களை வேட்டையாட பிரிட்டிஷ் அரசுக்கு தாராளமாக உதவி புரிந்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பது 1962 வரை ஒன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகுதான் பிளவுபட்டது. சீனாவை கண்டிக்க வேண்டும் என்றவர்கள் வலது சாரி கம்யூனிஸ்டுகள், கண்டிக்கக் கூடாது என்பவர்கள் இடது சாரி கம்யூனிஸ்டுகள், அதாவது சி.பி.எம்.

    இது சரித்திரம்.

    இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையான தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  11. Unknown's avatar பெத்த ராயுடு

    சந்திப்புக்கு சில கேள்விகள்.

    1. 2001 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தபோது, அவர்களின் 91 – 96 ஆட்சியின் அவலங்கள் தெரியாதேனோ?

    Ref: http://www.flonnet.com/fl1809/18090310.htm

    2. குஜராத்தில் காவல்துறை காவிமயமாகியே கிடக்கட்டும். வங்காளத்தின் காவல்துறை பற்றிய கேள்விக்கு பதில் கூற மறுக்கிறீர்களே, ஏன்? அதன் மூலம், இக்குற்றசாட்டு உண்மை என்கிறீர்களா?

    3. முன்னாள் சோவியத் நாடுகளின் தற்போதைய நிலை சொர்க்கபுரியா என்று கேள்வி பற்றி….
    எழுபது ஆண்டு கால சொர்க்கபூமி கடந்த பதினைந்து ஆண்டுகளில் சீரழிக்கப்பட்டது என்கிறீர்களா அல்லது எழுபது ஆண்டு கால சீரழிவை நேர் செய்ய இன்னும் பல காலம் தேவைப்படும் என்கிறீர்களா ?

    4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் குறிக்கோள்தான் என்ன? பொதுவுடைமை சமுதாயமா அல்லது மதச்சார்பற்ற ஆட்சியா?

    5. அமெரிக்காவில் கம்யூனிசக் கட்சி உண்டு. ஆனால் சீனாவிலொ, வடகொரியாவிலோ வேறொரு கட்சி தொடங்க முடியுமா?

    எனது பார்வையில், சீனாவில் நடப்பது ஒரு கட்சி ஆட்சி மட்டுமே. தற்போடைய சூழலில் கம்யூனிஸம் அங்கு ஒரு ‘Brand Name’ மட்டுமெ. வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதிலும், தனியார்மாக்கலை ஆதரிப்பதையும் பார்த்தபின், அங்கு இன்னும் பொதுவுடைமை தத்துவம் உள்ளது என்பது நல்ல நகைச்சுவையே.

    சீனா, ரஷ்யா கிடக்கட்டும் விடுங்க.., 20 ஆண்டு ஆட்சியில், மேற்கு வங்காளம் சொர்க்கபூமி ஆகிவிட்டதா?

    I love a reply from certain Mr. Buddhadeb Bhattacharjee.

    நன்றி,
    பெத்தராயுடு

  12. Unknown's avatar சந்திப்பு

    தமிழினி – முத்து, வெங்காயம், பெத்தராயுடு, சமுத்ரா, டோண்டு ராகவன் அனைவருக்கும் வணக்கம்.
    சனிக்கிழமை நெட் பிராப்ளம், ஞாயிறு விடுமுறை எனவே உங்களது அர்த்தமுள்ள கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் மனது அலைபாய்ந்தது.
    இங்கு எழுப்பியுள்ள அனைத்து விஷயங்களையும் விவாதிப்பது நல்லதே! இருப்பினும் பொதுவாக சில கேள்விகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
    முதலில், சோவியத் பற்றி….
    1917இல் லெனின் தலைமையில் அமைந்த அரசே முதன் முதலில் ‘மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவு கட்டியது’. அங்கே உழைப்பு என்பது மதிப்பு மிக்கதாக ஆகியது. மற்ற நாடுகளில் உழைப்பு விலை பேசும் பௌhனதோடு, இழிவாக பார்க்கப்பட்டது. ஏதோ தொழிலாளர்கள் உழைப்பதற்கே பிறந்தவர்கள் போலும், மற்றவர்கள் அவர்களை ஆளுவதற்கு பிறந்தவர்கள் போலும் இன்றும் கருதப்படுகிறது. அப்படித்தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்° உட்பட அனைத்து நாடுகளிலும் கருதப்படுகிறது.
    சோசலிசம் என்பது ஒரு விஞ்ஞானம், அதுவும் ரஷ்யாவிற்கு முன் உலகில் எந்த நாட்டிலும் சோசலிச முன்மாதிரி என்று எதுவும் இல்லை. மேலும் முதலாளித்துவ நாடுகள் 300 ஆண்டுகளாக தங்களது சுரண்டல் கொள்கையால் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததோடு! நாடு பிடிக்கும் – சுரண்டல் கொள்கையால் மனித குலத்தையே போர் என்ப பிசாசிடம் சிக்கச் செய்து கோடிக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தது.
    எனவே, ரஷ்யாவில் சோசலிசம் அமலாக்கப்பட்டபோது, அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும், ஜெர்மனியும் நூற்றாண்டுகளாக தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் சாதித்ததை மிக குறுகிய ஆண்டுகளிலேயே சோவியத் யூனியன் சாதித்தது. அதுமட்டுமின்றி ரஷ்ய மக்களை உழைப்பதற்கான மாடுகளாகவே பார்த்த நிலையை மாற்றி அவர்களை மனிதர்களாக்கியது சோவியத் யூனியன்.
    இன்றும் ஒரு விஷயம் இந்திய நாடு விடுதலை பெறுவதற்கும், விடுதலை பெற்ற பின் இந்த அளவிற்கு முன்னேறுவதற்கும் நீங்கள் விரும்பும் அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, ஜெர்மனோ எச்சைக் கையில்கூட காக்காய் ஓட்டவில்லை. மாறாக சோவியத் யூனியன் இல்லையென்று சொன்னால் இந்தியாவின் விடுதலை கேள்விற்குறியாகி இன்றைக்கும் நீங்களும், நானும் பிரிட்டிஷ் இந்தியாவின் அடிமைகளாக இருந்திருப்போம். இன்றைய இரும்பு உருக்காலைகளும், அணு தொழில்நுட்பமும், ராக்கெட் தொழில்நுட்பமும்… இன்னும் பல தொழில்நுட்ப உதவிகளை அளித்தது ரஷ்யாவே என்பதை நீங்கள் மறந்தால் அது உங்களது இந்திய பண்பாட்டை நிச்சயம் கேள்விக்குள்ளாக்கும்.
    இது இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு உதவியது – நேசக்கரம் நீட்டியது ரஷ்யாவே.
    ரஷ்யா அணு ஆயுதம் தயாரித்ததற்கு கூட எந்த நாட்டின் மீதும் விசுவதற்கல்ல; மாறாக அமெரிக்காவிடம் இருந்து உலக மக்களை காப்பதற்கே. உலக மக்களின் – மனித குலத்தின் எதிரியாக அமெரிக்கா அன்று முதல் இன்று வரை செயல்பட்டு வருகிறது என்பது உலக வரலாறு – உண்மை வரலாறு.
    பின் ஏன் சோவியத் யூனியன் பின்னடைவுக்கு உள்ளானது என்ற கேள்வி எழலாம். விஞ்ஞானத்தில் சிறு தவறுகள் நேர்ந்தாலும், அது சில பாதிப்புக்களை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த அடிப்படையில்தான் சோவியத்திலும் – கம்யூனிசத்தை அமலாக்கியவர்கள் சில தவறுகளைச் செய்துள்ளார்கள் அதன் விளைவுதான் இது. இது ஒரு அனுபவம். இந்த அனுபவத்தை கொண்டு எதிர்காலத்தில் சோவியத்தைவிட பலமான கம்யூனிச நாடுகள் பல மலரும். அதைத்தான் கியூபாவும், சீனாவும், வடகொரியாவும், வியம்நாமும், லவோசும் நிரூபித்து வருகின்றன.

    முத்து கேட்டிருப்பதுபோல், லல்லுவை ஆதரிப்பது முரண்பாடாக இல்லையா? என்பது சரியான எதிர்பார்ப்புதான். ஆனால், இன்றைக்கும் இந்திய நாட்டில் பெரும் ஆபத்தாக இருப்பது மதவாதமே! (சங்பரிவாரின் மதவாத ஆபத்தே) தற்போதைய சூழ்நிலையில் எந்தவிதத்திலும் அவர்கள் பலமடைவதற்கு, துளிர்விடுவதற்கோ எந்தவிதமான சூழலையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதுதான் முதன்மையான நோக்கம். அதனாhல்தான் பீகாரில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும் என்று சி.பி.எம். வற்புறுத்தியது. ஆனால் சி.பி.ஐ. உட்பட – ராம்விலா° பா°வான் உட்பட அவர்களுக்கு ஏதோ மலையளவு பலம் இருப்பதுபோல கனவு கண்டதன் விளைவே மண்ணை அள்ளியது.
    ஊழல், ஊதாரித்தனம், முறைகேடுகள் என்று எடுத்துக் கொண்டால் இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான முதலாளித்துவ கட்சிகளுடன் ஒட்டிப் பிறந்த விஷயம் இதில் லாலு விதிவிலக்கல்ல.
    மேலும், நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் ஜார்ஜ் பெர்னான்ட°, அவரது தெகல்கா ஊழல் நாடு சிரித்ததையும் நாம் மறக்ககூடாது. அத்துடன் அவர் இராணுவ அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா அவரை நிர்வாணமாக்கி சோதித்ததை வசதியாக நாட்டு மக்களிடம் மறைத்து விட்ட கேவலத்தை யாரிடம் போய் சொல்வது.
    அடுத்து, சீனாவில் பல கட்சிகள் இருப்பரு நண்பருக்கு தெரியாமல் இருப்பது குறித்து வருந்துகிறேன். நீங்கள் சீனாவில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளவும்.
    மேற்குவங்கம் சொர்க்கபுரி என்று யார் சொன்னது? அதை எப்படி சொர்க்கபுரியாக்க முடியும். இன்றைய அரசியல் சட்டப்படி எந்தஒரு மாநில அரசும் மத்திய அரசின் சட்ட திட்டத்திற்கும் – அரசியல் சூழ்நிலைக்கும் ஏற்பத்தானே செயல்பட முடியும். மேலும் எந்த மாநில அரசாக இருந்தாலும் தற்போதைய அரசியல் சட்டப்படிதானே செயல்பட முடியும். என்ன ஒரே விஷயம்! மேற்கு வங்கத்தில் நிலங்கள் பங்கிடப்பட்டு 21 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தமிழகத்தில் தாமிரபரணியிலும், ஹரியானாவில் – ஹீண்டாய் தொழிலாளிகளையும் வேட்டையாடியதுபோல் மேற்குவங்கத்தில் வேட்டையாடுவதில்லை.
    அங்கே வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை! இங்கே முடியுமா? முதலாளிகள் தங்களது நிறுவனத்தை மூடினால் – அந்த தொழிலாளிகளை பாதுகாக்க மாதம் ரூ. 500 வழங்கப்படுகிறது. அதேபோல் ஒரிசாவில் டாட்டா நிறுவனத்திற்கு ஆதரவாக 11 பழங்குடி மக்களை துப்பாக்கியால் சுட்டதுபோல் மேற்குவங்கத்தில் நடக்காது. மேலும் ஒரிசாவில் பழங்குடி மக்கள் நிலங்கள் முதலாளிகளுக்காக அபே° செய்யப்படுகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் முன்னுரிமை பழங்குடி மக்களின் வாழ்வுதான்.
    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்குவங்கத்தில் பஞ்சயாத்து தேர்தல் முறையாக நடக்கும். அத்துடன் பஞ்சாயத்து மூலமாக மாநில நிதி ஆதாரம் 50 சதவீதம் பங்கிடப்படுகிறது – செலவழிக்கப்படுகிறது. தமிழகத்தில் எவ்வளவுத்தெரியுமா? வெறும் 8 சதம்தான்.
    இன்னும் எவ்வளவோ சொல்லலாம்… இதையெல்லாம் மனசாட்சியோடு பரிசீலனை செய்தால் உண்மை புரியும் – வெளிச்சம் கிடைக்கும். இல்லையென்றால் யானையைத் தொட்ட சமூக குருடனாக வாழ்வில் இருக்க வேண்டியதுதான்.
    இதையெல்லாம் பார்த்தால் – நிச்சயம் மேற்குவங்கம் சொர்க்க வாசலின் முதல் படிதான்.
    ஜெயலலிதாவின் அராஜக – ஊழல் ஆட்சியைப் பற்றி உங்களுக்கே தெரியும் போது, எங்களுக்கு….? பெரியாரின் கொள்கைகளை பரப்புவேன். அண்ணா வழியில் ஆட்சி செய்வேன் என்று புறப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் வழுக்கல்தான் ஜெயலலிதாவின் – அதிமுகவின் அப்பாவித் தொண்டர்களை அரசியல் ரீதியாக மதவாதத்திற்கு எதிராக பயன்படுத்த வேண்டிய நிலைமை கம்யூனி°ட்டுகளுக்கு ஏற்பட்டது என்பதை மனதில் கொள்க!
    இந்திய கம்யூனி°ட் கட்சியின் தற்போதைய குறிக்கோள் மதச்சார்பற்ற ஆட்சி! எதிர்கால திட்டம் மக்கள் ஜனநாயக ஆட்சி! சோசலிசம் நீண்ட கால இலக்கு… அது தற்பேதைய திட்டம் அல்ல… நண்பரே!
    இன்னும் பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம். நேரம் – இடம் போதமைக் காரணம்தான்!
    விவாதத்திற்கு நன்றி!

வெங்காயம் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.