மேலோட்டமாக பார்த்தோமென்றால்…….


தமிழக தேர்தலில் முக்கியமான தலைவலி தி.மு.க தலைவருக்குத்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ராமதாஸ் ஏற்கனவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்றால் அது நாங்கள் இல்லாமல் முடியாது என்று கூறிவிட்டார்.

வைகோ கெளரவமாக சொல்லிக்கொள்ளும்வகையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டுக்கள் எண்ணிக்கை இருக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.இதுவெல்லாம் ஒரு வகையிலான பிளாக்மெயில் என்பது தமிழகஅரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

காங்கிரஸை சமாதானப்படுத்துவது சுலபம். இங்கே துள்ளிக்கொண்டு இருப்பார்கள்.ஆனால் மாறனை விட்டு 10,ஜன்பத்தில் பேசி சரி பண்ணிவிடலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளை சமாதானப்படுத்துவதும் கடினமில்லை.

இவர்களுடன் ஒப்பிட்டால் அம்மாவுக்கு பிரச்சினை அதிகமில்லை. அதிகம் பேருக்கு சீட்டு கொடுக்கவேண்டிய சூழ்நிலையில்லை. ஆட்சிக்கும் பெரிதான கெட்டபெயர் இல்லை என்றுதான் சொலலவேண்டும். தேர்தலுக்காக கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறார் என்று சொல்லலாம.

3 responses to “மேலோட்டமாக பார்த்தோமென்றால்…….

  1. //தமிழக தேர்தலில் முக்கியமான தலைவலி தி.மு.க தலைவருக்குத்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ராமதாஸ் ஏற்கனவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்றால் அது நாங்கள் இல்லாமல் முடியாது என்று கூறிவிட்டார்.//

    உண்மை. 234 தொகுதிகளில் குறைந்தது 160 தொகுதிகளிலாவது தி.மு.க போட்டியிட வேண்டும். அப்போது தான் தனித்து பேச முடியும். இதில் 15-20 குறையலாம். ஆனால், மிச்சமிருக்கும் 70 சொச்ச தொகுதிகளை பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யுனிஸ்டுகள் என பங்குப் போட்டால் குழப்பம்தான் மிஞ்சம். சென்றமுறை போல இந்த முறை எவருக்கும் “இதயத்தில் இடங்கொடுக்க முடியாது”. ஆக தலைவலி தி.மு.க கூட்டணிக்கு ஆரம்பித்துவிட்டது.

  2. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையை சமாளித்தது,விவசாயத்தோழர்களை ஏமாற்றாது தொடர்ந்து(சில நேரம் தேவைக்கு அதிகமாகவே)பெய்த பருவ மழை,சீராகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முடங்காமல் நடந்து வரும் சிறு/பெரு தொழில்கள்,எம்.ஜி.ஆர் என்ற காந்த சக்தியின் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் வாரிசு என்னும் பல்வேறு காரணிகளின் பட்டியலில் இந்தக் கூட்டணிப் பிரச்சினையும் இணைந்து ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க உதவுமா???
    காலம் தான் கூற வேண்டும்.

  3. Unknown's avatar மாயவரத்தான்...

    பத்திரிகைகளில் கருத்து கணிப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது (அப்படிதானே?!) என்றாலும் பத்திரிகைகளும் ஊடகங்களும் வேறு எந்த வழியிலாவது தங்கள் கருத்துகளை மக்களின் கருத்துகள் என்ற போர்வையில் பரப்ப ஆரம்பிப்பார்கள். அது குறித்து இந்த வலைப்பூவில் அலசுங்களேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.