நன்றி: Blog entry “November 4, 2008” by Patrick Moberg
Joint Congressional Committee on Inaugural Ceremonies
EBay removes offers of inauguration tickets – Los Angeles Times
ஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.
முதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.
காட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.
மருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.
இந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.
இப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.
அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.
கடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.
அதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.
பராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.
மருதனின் பத்தியில் விஷயம் இல்லை.
வினாத்தாளா, Street smart சாதுர்யமா?
அமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.
அதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.
எப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.
இந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது?
குதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா!’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.
இதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.
ஆசிரியர் ஊக்கத்தொகை
ஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா? அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா?
தொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.
திறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.
கையில் காசு; வாயில் படிப்பு.
கல்வி: யார் பொறுப்பு?
‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.
கல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.
மோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது? மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.
இப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.
புதிய பள்ளி கட்டுமானம்:
இந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது?
‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா?’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி!
பெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு! அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.
இந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா? அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா?
ஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா? அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா?
எல்லோரும் ஆசிரியர் ஆகலாம்:
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா?
அறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே? வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.
இப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.
இவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.
இன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.
ஆர்நியைக் குறித்து
மேலும் தகவல்: Snap Judgement: US Education System; Secretary of State
கடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.
தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
கதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.
கெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.
இந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.
என்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.
ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.
ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா
ஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.
இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
சினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂
பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.
ஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.
பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்
இதில் என்ன தவறோ? ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை!
ரிப்போர் கார்டே ஆகாதா? பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா? மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை!
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.
என்னது! அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா! சொல்லவே இல்லியே!!
Posted in சமூகம், நிகழ்வுகள், Magazines, Magz
குறிச்சொல்லிடப்பட்டது America, Analysis, Anandha Vikatan, Arne, ஒபாமா, கல்வி, நிதி, படிப்பு, பராக், பொருளாதாரம், விகடன், Duncan, Economy, Education, Finance, Funds, Guns, GWB, NCLB, Obama, Policy, Schools, Students, Study, Teachers, USA, Vikadan, Vikatan, Violence
பரவாயில்லை. இங்கே இருக்கட்டும். தப்பில்லை.
இவையெல்லாம் சமீபத்தில் ட்விட்டியது:
அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.
செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.
தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.
நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.
அவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: பிபிசி
1. அமெரிக்காவின் அனைத்து பத்திரிகைகளின் முகப்பை பார்க்க வேண்டுமா? ஒபாமா அதிபராக தேர்ந்தெடுத்த அன்று வெளியான தினசரிகளின் தலைப்புச் செய்தி எவ்வாறு இருந்தது? :: 672 Obama Headlines – Both Browsable and Readable | FlowingData
இங்கே சென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால், மிக சுளுவாக அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
2. தலைப்பு செய்தி ஆக்குவது சாதாரண நாளிதழ்கள் செய்வது. எத்தனை பேர் புதிய அதிபருக்கு உண்டான முக்கியத்துவத்தை தரவில்லை? எந்த பத்திரிகைகள் பராக் ஒபாமா ஜனாதிபதி ஆனதை ஒரு மூலையில் தள்ளிவிட்டார்கள்?
mental_floss Blog » 7 Post-election Day Newspapers that Buried the Lede: As you’ll see in the screenshots, the announcement of Obama’s victory is either buried beneath the fold of the paper, or otherwise marginalized at the header, in a sidebar, or accompanied by a photo so small, you could easily mistake it for any other front-page story.
காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.
இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?
ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.
நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.
இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?
அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.
இந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், நிதியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”
ஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.
குடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.
ஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.
இன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.
இதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.
என்ன மாதிரி கோரிக்கை? Democrats Seek Help for Carmakers – NYTimes.com
ஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்ள சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”
ஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது? Uncle Sam Goes Car Crazy – WSJ.com: “Your government gets into the auto business.”
சரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா?
ஏன் திவாலாக வேண்டும்? Nationalizing Detroit – WSJ.com
திவாலானால் விளையும் பேரிழப்பு: News Analysis – G.M.’s Troubles Stir Question of Bankruptcy vs. a Bailout – NYTimes.com By MICHELINE MAYNARD: General Motors, with dire warnings, is seeking a bailout, but skeptics point to the benefits of bankruptcy, which can offer a new start.
என்ன செய்யலாம்? Detroit Auto Makers Need More Than a Bailout – WSJ.com
மக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.