ஐயகோ ஓபாமா…
என்தலையில் விழுவது உன் பாமா?
வெள்ளை அமெரிக்காவை ஆண்டிட வந்திட்ட
என் கருப்புச் சிங்கமே!
நீ அரியணை ஏறிடப்போகிறாய் என்றதுமே
உன்னுடைய
கருப்பின தொப்புள் கொடி சொந்தங்கள்,
கருப்பு முத்துக்கள், உன்
கண்ணான திராவிட சொத்துக்கள்
கண்ணீர் வித்துக்கள்
கரும்பாம்பின் புத்துக்குள்
கைவிட்டால் கொத்துக்கள்
தாங்கிடுதற்கும வலுவுள்ள
தமிழினத் தங்கங்கள், தயங்காத சிங்கங்கள்
ஆர்பரித் தெழுந்து தோள்விம்மிப் பூரித்திட்டு
போர்வாள் சுழற்றி ஊர்வாள் கழற்றி
பூர்வாள் திருத்தி நார்வாள் உறுத்தி
‘அவாள்’ எல்லாம் அறிவாள் என்று இறுமாந்திருந்திட்ட
ஆரியப் பதர்களுக்கு அரிவாளாக வந்து உதித்திட்டனை
என்று
ஆறரைக் கோடி தமிழ் நெஞ்சங்களின்
அரியணைமேல் வீற்றிருந்திடட உன்
அண்ணன் மகிழ்ந்திட்டேனடா!
ஆனாலும்
அகிலமெல்லாம் போன்போட்டிட்டாய்
அண்ணனை ஏனடா தங்கமே மறந்திட்டாய்
எங்கெங்கு செல்லினும்
என் செல்லில் உன் சொல்லொன்று
வாராதா வாராதா என்று ஏங்கித் துடித்திடுகின்ற
தமிழர்கள், உன் கருப்புச் சொந்தங்கள்,
திராவிட-ஆப்பிரிக்க தொப்புள் கொடியர்கள்
ஆரியக் கொடியர்களை அறுத்தெரியப் புறப்பட்டிட்ட
வீரியக் குடியர்கள்
உள்ளம் மகிழ்ந்திட
உன் அண்ணனுக்கு ஒரு போன் போட்டிடா என் தங்கமே
உலகை எல்லாம் ஆண்டிட வந்த ஆப்பிரிக்க திராவிடச் சிங்கமே!
– கலைஞர் கருணாநிதிக்காக எழுதித் தந்தவர் கிரி
அட்ரா சக்க.
🙂
Aaha… 🙂
சொத்தை…. கருணாநிதியே எழுதிருந்தா இன்னும் காமெடியா இருந்திருக்கும்…. 🙂
சுரேஷ், விஜய் __/\__
மிகவும் அருமையான கவிதை. ஆனால் MK குடும்ப சொத்தாக எங்கேயாவது ஓரிரு வார்த்தைகள் நீண்ட “குறி” ,நெடிய பூணூல், தீட்டு போன்ற அவாளின் டிரேட் மார்க் வார்த்தைகள் சேர்த்திருந்தால் ஒரிஜினல் டச் கிடைத்திருக்கும்.
நச்சுனு இருக்கு!!