-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Tag Archives: Icons
A Visit with Mahatma Gandhi: 1924: Atlantic Archives
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 1920s, Atlantic, Bharat, Caste, Congress, Dalits, EVR, Fasting, Fighters, Freedom, Gandhi, Guide, Hindus, Icons, INC, Independence, India, Islam, Kerala, Mahatma, MK Gandi, Mohandas, Musalman, Muslims, Nairs, Nehru, Nonviolence, Periyar, Religion, Tours, Travelogues, Trivandrum, Untouchability, Visits
Writer Dilip Kumar Meet
திலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.
- தமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
- ஆசான் மௌனி? : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:
‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.
- நண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.
- பால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.
- திலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.
- கணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.
- ‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.
- நாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க!” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.
- ‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா?” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா?” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல! ஆனால், “செய்ய மாட்டேன்!” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.
- கவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦
- மொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.
- தேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.
தொடர்புள்ள பதிவுகள்:
1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்
2. திலீப் குமார் – மதுசூதனன் தெ.
3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி
4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்
ஆ) கண்ணாடி – Thinnai: திலீப் குமார்
5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை”
6. SAWNET: Book Review: A Place to Live – Contemporary Tamil Short Fiction: “Edited by Dilip Kumar; Penguin India — Review by Vaijayanti Gupta”
7. Book Reviews: The Hindu : Contemporary concerns: “These stories take you on an exciting journey, and you traverse a whole gamut of human experience and emotions that reflect the changing Tamil milieu.'”
8. Buy Dilip’s book: Bagchee.com: A Place to Live: Contemporary Tamil Short Fiction: Books: Dilip Kumar (ed.)Vasantha Surya (tr.): Innumerable strands of ethnic, regional and universal experiences are woven together in this collection of fine short fiction spanning four decades – 1960-1990-in which the short story emerged as the definitive genre of modern Tamil literature. Twenty-nine famous names are represented here-from Rajanarayanan to Paavannan and many others who have encapsulated the joys, sorrows, and peculiar challenges of life in Tamil Nadu.
9. Interview with Dilipkumar:
திலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
என் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.
பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.
நான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.
10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:
பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.
இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.
11. ஞாநி:
எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.
பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.
அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.
எனவே எது இலக்கியம் ? யார் இலக்கியவாதி ?
12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”
13. கோகுலகண்ணன் (கலிபோர்னியா):
இருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.
தீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.
குறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.
அவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.
ஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.
14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):
பவா. செல்லதுரை
சிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.
படைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.
அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.
‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.
‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’
‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா? நிஜமாகவா? என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.
நமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…
இக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.
’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.
உனக்கு நினைவிருக்கிறதா? திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…
உனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’
இப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.
ஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.
வாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.
‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.
‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’
கங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…
அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’
வெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.
‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
அந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா? இவன் பேசுகிறான்
”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”
தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’
நீங்கள் இவனுக்காக சிரிப்பீர்களா? அனுதாபப்படுவீர்களா? பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.
15. Rumi article – அன்புடன் | Grupos de Google:
தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி
உதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.
சிலிர்க்கும் அவளது தேகத்தில்
அனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்
…
அந்த இருட்டின் அறைக்குள்
அவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்
தவறவிட்ட ஒரு காதணியை
ஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.
16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:
“என் சினிமா கனவுகள்!” – எழுத்தாளர் ஞாநி
பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.
– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007
Posted in Library, Links, Lists, Literature, Local, Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Asokamithran, Authors, திலிப், திலிப்குமார், திலீப், திலீப் குமார், Chat, Dilip, Dilip Kumar, Dlipkumar, Faces, Famous, Fiction, Icons, Lists, Lit, Literary, Literature, Meets, Mouni, Names, Njaani, Pareeksha, People, Poems, Tamil, Translations, Writers



















