நோ ஷேவ் நவம்பர் மாதத்தை நினைவூட்டவே பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. – இது என்னுடைய ஆறாவது காரணம்.
படத்தில் வரும் நல்லவர்கள் – அதாவது சோழர்கள் எல்லோரும் தாடியும் மீசையும் வைத்திருக்கிறார்கள். கக்கத்தை மட்டும் சுத்தமாக மழித்திருக்கிறார்கள் படத்தில் வரும் வீரபாண்டியன் மட்டும் – மொழுமொழு கன்னத்தோடு கழுத்தை இழக்கிறார்.
சின்ன வயது ஆதித்த கரிகாலனுக்கு கூட அரும்பு தாடி கொடுத்திருக்கிறார்களோ என சந்தேகம் இப்பொழுது வருகிறது.
படம் மயிருக்குக் கூட பிரயோசனம் இல்ல – என்று எவராலும் சொல்ல முடியாது. படம் முழுக்க கொண்டைகளும் குடுமிகளும் கோடாலி முடிச்சுகளும் அவிழ்ந்த நீண்ட சௌரி முடி கூந்தல்களும் உதிரவிட்டு, சடாதரனை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
மூலக் காரணத்தை ஆராய்வோம்: ஏன் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கேசத்தின் மீது பாசம்?
புற்றுநோய் ஆரய்ச்சிக்கான நிதி திரட்டுவது
ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது – ஆடவர் இறப்பதற்கான முக்கிய காரணத்தைத் துவக்கத்திலேயே பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பது
விரைப் புற்றுக்கட்டி பற்றிய அக்கறையை ஆண்களிடம் பரவலாக்குவது
இது குளிர்காலத்தின் துவக்கம் – வீட்டிலேயே சோம்பித் திரியாமல் உடற்பயிற்சி செய்வது
இந்த மாதிரி அனைத்து சோழகுல இளவரசர்களையும் சிற்றரசர்களையும் தாத்தாக்களையும் முகமுடி கொண்டு ரொப்பி, மயிர்கழியா நவம்பர் மாதத்தில், அமேசான் ப்ரைம் கொண்டு வெளியிடுவது – 6த் ரீஸன்.
தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.
எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.
இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.
எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?
(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)
ஔவையார் / சந்திரலேகா
சம்சாரம் அது மின்சாரம்
கல்யாணப் பரிசு
சிவகவி
சிந்து பைரவி
மனோகரா
உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
திருவிளையாடல் / ஆதிபராசக்தி
திரிசூலம் / ஊட்டி வரை உறவு
பொன்னியின் செல்வன் 1
அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்
திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்
உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.
மணி ரத்தினம் ஏன் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தைப் படமாக்கினார்? மூன்றாவது காரணம்: பாசிசம் அதன் வேர்களை அறிவொளியில் காண்கிறது.
யோஹான் வொல்ஃப்காங் வொன் கோயத் (Johann Wolfgang von Goethe) அமர்ந்த மரத்தடி ஜெர்மனியில் புகழ்பெற்றது. ஜெர்மானிய இலக்கியத்தில் இந்த கோயத் புலவருக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள்.
யூதர்களைக் கொன்று குவிக்க பல வதை முகாம்களை நாஜிக்கள் கட்டினார்கள். அந்தக் கட்டிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்தார்கள். ஒரேயொரு மரத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கோயத் தன்னுடைய கவிதைகளையும் காவியங்களையும் இயற்றினார். கோயத் என்ன எழுதினார் என்பதை நாஜிக்கள் மறந்து விட்டார்கள். கோயத் எழுத்தின் அர்த்தத்தை உணராமல் வெறும் நினைவுச்சின்னத்தை – கொலைகூடத்திற்கு நடுவாந்தரமாக குலப்பெருமையாக வைத்துக் கொண்டார்கள்.
இது போல் பொன்னியின் செல்வன் நாவல் என்ன சொல்கிறது என்பதைத் திரையில் கொணராமல், “சோழர்கள் நம் பெருமிதம்!” என்று நினைக்க வைக்க மணிரத்னம் கல்கியின் வரலாற்றுப் புனைவை சினிமாவாக மாற்றுகிறார். – இது மூன்றாவது காரணம்.
புஷென்வல்ட் (Buchenwald) கிராமத்தின் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்திருந்தால் கோயத் அமர்ந்த மரமும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். சுஜாதாவின் “கரையெல்லாம் செண்பகப்பூ” மாதிரி… எந்த இயக்குநருக்கும் இலக்கிய கதையை வெள்ளித்திரைக்குக் கொணரத் தெரியாது என்று போயிருக்கும். ஆனால், லட்சக்கணக்கில் மக்களை அடைத்து வைக்க பயன்பட்ட முகாமின் முக்கிய இடத்தில் — கோயத் என்னும் பெரும்புள்ளியைக் கொண்டாட அந்தப் புலவரின் கருவாலி மரத்தை கூட்டாக இணைக்கிறார்கள். நாஜிக்களைப் பொறுத்தமட்டில், மரம் அழிக்க முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரில் நடந்த குண்டு வெடிப்பில் அந்த மரம் இறக்கிறது. பட்டுப் போகிறது. தங்களின் பாரம்பரியத்தில் தாங்களே மண் வாரிப் போட்டுக் கொண்டதை இது உணர்த்துகிறது.
இந்த மரத்தைக் குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது இலையுதிர்க்கும் மரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தன் இலைகள் அனைத்தையும் உதிர்த்து மொட்டை மரம் ஆகி விடும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் துளிர்விட்டு பூப்பூக்கும். இந்த மரத்தை பார்க்கும் யூதக் கைதிகள், “இந்த மரத்தில் எந்த இளவேனிற்காலத்திலாவது மீண்டும் மொட்டுக்கள் மலராமல் இருக்கிறதோ, அப்பொழுதுதான் நமக்கு விடுதலை!” என விளையாட்டாகச் சொல்லிக் கொள்வார்கள். அதாவது, எப்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது. வருடா வருடம் அது மீண்டும் மீண்டும் இலை உதிர்க்கும்; மீண்டும் மீண்டும் இலை மலரும்.
கை கூடா கனவு ஒரு நாள் நிறைவேறியது. விமானத்தில் போட்ட குண்டுத் தாக்குதலில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. அதனால், அந்த வசந்த காலத்தில் மரத்தில் இலைகள் மீண்டும் மலரவேயில்லை. அது போல், பொன்னியின் செல்வன் கதையும் சிறைக்குள் பூட்டுண்டு இருந்தது. இன்று வெளியே வந்து சோழ வரலாறு பலரைச் சென்றடைந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” கதை வாசித்து #PS1 பார்த்தவர்களை அந்த வதை முகாமில் சித்திரவதைக்குள்ளானவர்களாகப் பார்க்கலாம். பொ.செ.1 படம் எடுத்தவர்களை – நினைவுகூறப் பட வேண்டிய சரித்திரக் கதையைப் படமாக்குகிறோம் என்று சொல்லி புலவரின் பெருமையாக கருவாலி மரத்தை நடுக்கூடத்தில் கும்பிட்டவர்களாகப் பார்க்கலாம்.
அந்த மரம் போரின் இறுதியில் வெட்டப்பட்டது. இந்தக் கதை படத்தின் இறுதியில் சமாதி ஆகிறது.
இந்த மாதிரி நம் பாரம்பரியத்தை தமிழரின் பெருமையை இனத்தின் கலாச்சாரத்தை பல்லிளிக்க வைப்பது – – 3ர்ட் ரீசன்.
பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.
முதல் காரணம் எளிது:
கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.
ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.
இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…
ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.
யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.
ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.
கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.
மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!
ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.
சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.
பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்
பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;
மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;
முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;
கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;
’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;
வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)
தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்
படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.
ஆன்டி சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?
அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்; கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்; மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்; தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்
லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.
சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.
இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.
1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது. அவள் அப்படித்தான் தப்புத் தாளங்கள் சிகப்பு ரோஜாக்கள் பைலட் பிரேம்நாத் தாய் மீது சத்தியம் மனிதரில் இத்தனை நிறங்களா வண்டிக்காரன் மகன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தங்கரங்கன் கண்ணாமூச்சி அதிர்ஷ்டக்காரன்
இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்
உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
உருவகக்கதைகளுக்குரிய மொழி உரைவீச்சு வசனகவிதை எழுதியவர். 1994ல் மறைந்தார்.
கண்ணதாசன் சிறுபத்திரிகைக் குறிப்பு
வல்லிக்கண்ணன்
அப்படி எல்லாம் நடந்தபோதிலும் வாழ்வின் இறுதி வரையில் அவன் தன் எழுத்துக்களுக்கு உரிய மதிப்பையும், தனக்கு உரிய கவனிப்பையும் பெறமுடிவதில்லை என்பதை அந்த நாவல் விவரிக்கிறது. என்னிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த நண்பர்களில் என்.ஆர். தாசனும் முக்கியமானவர். அவர் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆற்றல் நிறைந்தவர் சுயசிந்தனையாளர் உழைக்கத் தயங்காதவர். புத்தகங்கள் படிப்பதில் உற்சாகம் உடையவர். கதைகள், நாவல்கள், வசன கவிதைகள், நாடகம் முதலியன எழுதினார்.
கவிஞர் கண்ணதாசன் நடத்திய தரமான இலக்கிய இதழான ‘கண்ணதாசனில் என். ஆர். தாசன் அதிகம் எழுதினார். பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். ரவீந்திரநாத தாகூர், கலீல் கிப்ரான் கவிதைகளின் தாக்கத்தினால், தாசனும் தத்துவச் சிந்தனைகளும் வாழ்க்கை அனுபவங்களும் செறிந்த வசனகவிதைகளைச் சொற்கோலம்’ என்ற பெயரில் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.
என். ஆர். தாசன் சிறுகதைகள், ஓரிரு நாவல்களை அவருடைய நண்பர் ஒருவர் வெளியிட்டார். ஆரம்ப காலத்தில், பிறகு தாசனின் எழுத்துக்கள் புத்தகங்களாக வர வாய்ப்பில்லாது போயின. எனவே தாசன் தாமே புத்தக வெளியீட்டிலும் முனைந்தார். நாவல்களையும், சிறுகதைகளையும், சொற்கோலங்களையும் தொகுத்து அக்கறையோடு கவனித்து, அழகு அழகான புத்தகங்களாகப் பிரசுரித்தார். அவற்றைத் தாமே எடுத்துச் சென்று புத்தக விற்பனையாளர்களிடம் கொடுத்து வந்தார். பின்னர், பணம் வசூலிப்பதற்காக அலைந்தார்.
இப்படியெல்லாம் தீவிரமாக முயன்று உழைத்ததனால்தான் என். ஆர். தாசன் எழுத்துக்கள் புத்தகங்களாக உருவம் பெறமுடிந்தது. அது அவருக்குத் திருப்தி தந்தது. ஆயினும், அவருடைய படைப்புகளும் எழுத்தாற்றலும் உரிய கவனிப்பைப் பெறாமலே போயின. அவருடைய அருமையான சொற்கோலம்’ எவ்வளவுக்குப் பேசப்பட்டிருக்க வேண்டுமோ, அவ்வளவுக்குப் பேசப்படவில்லை- சிறிது கூடக் கவனிக்கப்படவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துபோனார்.
காலவெள்ளத்தில் அமிழ்ந்துவிட்ட எத்தனையோ திறமைசாலிகள் சிந்தனையாளர்கள்- படைப்பாளிகளைப் போல என்.ஆர். தாசனும் மறக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் ஒன்றுமில்லை.
இந்திரா பத்திரிகை மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் கோத சண்முகசுந்தரம் – பின்னர் ஆதித்தனாரின் தமிழன்’ இதழ் மூலம் மேதாவி’ என்று பெயர் பெற்றவர் வாழ்க்கையில் பலவித அனுபவங்கள் பெற்று…
ஒரு சிறுகதை
சார்,,, உங்க தோட்டத்த வேவு பார்க்குறானே… அவன் பக்கா திருடன்.. அவனை விரட்டி அடிங்க என்றான் அவன்
அப்படியா… என அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றவனை அவன் மனைவி பிடித்துக்கொண்டாள்
திருட்டு எச்சரிக்கையை ஏன் அலட்சியம் செய்கிறீர்கள் என்றாள்
அவன் சொன்னான்.. எச்சரித்தானே..அவன் இவனை விட பெரிய திருடன்… ஒருவனை விரட்டினால் என்ன பயன் ?
மனைவி கேட்டாள்… இருவரும் திருடன் என்றாலும் ஒருவனை விரட்டினால் பாதி தீமையாவது குறையுமே ?
அவன் சொன்னான்.. தீமையை அப்படி படிப்படியாக குறைக்க முடியாது.. ஒரேயடியாக அழித்தால்தான் உண்டு.. அதற்கான வழிகளைத்தான் யோசிக்கிறேன்
அவள் கேட்டாள் . சரி.. அவனும் திருடன் என எப்படி சொல்கிறீர்கள்
அவன் சொன்னான்.. அவன் சொன்ன தொனியை கவனித்தாயா… என்ன சத்தம், என்ன கூச்சல்.. ஒருவரை குற்றம் சொல்கையில் அவன் மனசாட்சி நீயும்தான் குற்றவாளி என சப்தமிடும்.. அந்த சப்தத்தை மறைக்கவே சத்தமாக பேசுகிறார்கள்… சத்தியத்துக்கு சத்தம் தேவையில்லை
1 இந்த நூற்றாண்டு சிறந்த கதைகள் நூறு என்ற தலைப்பில் வீ அரசு தொகுத்த கதைகள் ஒரு புத்தகமாக வந்துள்ளது.. அதில் என் தாசன் எழுதிய கதை இடம்பிடித்துள்ளது .கதையின் பெயர் – அவள் அறியாள்
2 அகிலன் தொகுத்துள்ள சிறந்த கதைகளில் இவர் கதை இடம்பெற்றுள்ளது
கதையின் பெயர் – நீலச்சிலுவை
3 1996ல் வல்லிக்கண்ணன் , ஆ சிவசுப்ரமணியம் தொகுத்து வெளிவந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவர் கதை : சுய வதம்
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde