Tag Archives: வீடியோ

Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்

மேலும்:
1. நிமித்தகாரன்
2. Short Film of the Day

‘ஒரு மாலைப் பொழுது’

தமிழரசன் 

நல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.

வொயிட் பேர்ட்

முரளி

இருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.

முட்டாசுபட்டி

ராம் – ICANS

’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.

ப்ராஜெக்ட் ஐஷு

அருண்குமார்

காதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.

பண்னையாரும் பத்மினியும்

அருண் குமார்

கடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.

இலக்கணப் பிழை

சரத் ஜோதி

இவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா? சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்‌ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்! அட்டகாசம்.

அன்பில் அவன்

ரஷிதா & சுரேகா

டம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…

’நியூ’ ரூம்மேட் 2303

WTH முரளி

அமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்?

துரு

கார்த்திக் சுப்பராஜ்

கலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.

போஸ்ட் மேன்

மனோகர்

நல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம்? இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.

தி சவுண்ட் மெஷின்

Prize-Winner: Propeller TV Best Short Film Competition
Shortlisted: Friends of the Earth Short Film Competition
Screened at Hull International Film Festival 2009

மொழியே தேவையில்லாத குறும்படம்

ஸ்னாப்

வெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.

அடுத்த ‘நாயகன்’? – தம்பி வெட்டோத்தி சுந்தரம்

சினிமா ட்ரெய்லர்

தொடர்புள்ள பதிவுகள்:

  1. விழா மாலைப் போதில்…
  2. பாட்டு புஸ்தகம்
  3. சுந்தரம் அழைக்கிறான்
  4. திரைப்படம் >> தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  5. ட்வீட்: கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.
  6. ப்ரமோஷன் வலையகம் – Thambi Vettothi Sundaram
கதை முழுதும் கன்யாகுமரி – கேரள எல்லையில் நடக்கிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் நிகழும் குற்றங்களின் சதவீதமும் அதிகம். அதற்கான மூலக் காரணத்தை ஆராயும் திரைக்கதை இது. எல்லைப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், அடிப்படை முன்னேற்றமின்மை, கடத்தல், சட்டமீறல்கள், பதற்றம் போன்றவை தேச எல்லைகளுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. மாநில எல்லைகளிலும் அதுதான்.

எழுத்தாளர் பா ராகவன் உரை

வைரமுத்து பாடல் வரிகள்

மண்புழுவோ மண்புழுவோ மண்ண திங்குது
அந்த மண்ண தின்னும் புழுவ தவள திங்குது
புழுவ தின்னும் தவளைதான் பாம்பு திங்குது
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பாம்ப தின்னும் கழுக தானே நரியும் திங்குது
அந்த நரிய கூடி வேட்டையாடி மனிதன் திங்குறான்

அந்த மனுசனதான் கடைசியிலே மண் திங்குது
அந்த மண்ண புரிஞ்ச மனுசனுக்கு
ஞானம் பொங்குது

வி சி வடிவுடையான்

பட முன்னோட்டம் – பேட்டி

வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி: பாலாவின் ‘நான் கடவுள்’

  • மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
  • ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
  • அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
  • “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
  • “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”

முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

naan-kadavul-bala-arya-pooja-ilaiya-raja-aham-brahmasmi

பிற செவ்வி:

  1. நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
  2. நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
  3. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul

முந்தைய இடுகை:

1. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா

2. Naan Kadavul – Music

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா

ஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.

தற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:

முன்னாள் செயலர் காலின் பவல்:

பவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

ஓப்ரா வின்ஃப்ரே

ஷெர்ரி ஷெபர்ட்

ஜெஸ்ஸி ஜாக்ஸன்

மேலும்: The Savvy Sista: Colin Powell, Condoleeza Rice and Others React to Obama’s Victory

பணம் படைத்தவன்

விவரிப்பு:

  • அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
  • பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

  • சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
  • எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
  • பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?

விளம்பரம்:

விமர்சனம்:

  • ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
  • தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
  • குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
  • நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
  • இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.

விளைவுகள்:

  • ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
  • ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
  • அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
  • பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
  • ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

விளம்பரத்தின் உரை வடிவம்: Complete Text (and video) of Barack Obama campaign infomercial | Top of the Ticket | Los Angeles Times

அலசல்: All Obama, all the time – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

கம்பர் தெரு காணாமப் போச்சு – இணையம், சவுத் பார்க்

முதலில் கலை: Over Logging

No one in South Park has internet and there’s no telling when, or even if, it will come back. Desperation sets in as the fear of the unknown spreads rapidly across the country. When Randy hears there still may be some internet out in California, he packs up his family and heads west in search of a signal

(எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது)

நகைச்சுவை நாடகத்தைப் பார்க்க: South Park's new episode parodies our Internet dependence: “the Internet is a giant Linksys router in the desert – Episode Player”

இது நிஜம்/செய்தி:
AT&T: Internet to hit full capacity by 2010 | Tech News on ZDNet: "U.S. telecommunications giant AT&T has claimed that, without investment, the Internet's current network architecture will reach the limits of its capacity by 2010."

பின்குறிப்பு: ‘கம்பர் தெரு காணாமல் போச்சு’ என்னும் வசனம் இடம் பெற்ற திரைப்படம் எது?

பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity

ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.

இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.

2. “Toughest”

வணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்னும் விளம்பரம்:

3. “Carry”

‘பாரம்பரியவாதி, தாராளவாதி வாக்காளர் என்று அமெரிக்காவை பிரிக்காமல், அனைத்து சாராரையும் ஒருங்கிணைப்பவர் – பராக் ஒபாமா’ என்கிறது.

ஜான் எட்வர்ட்ஸ் – 'என்னைப் பார்! என் அழகைப் பார்!!'

தொலைக்காட்சியில் அழகாகத் தோன்றுவது வேட்பாளர்களுக்கு காலத்தின் கட்டாயம். வியர்த்து, விறுவிறுத்து காணப்பட்டால், ‘சோர்வானவர்; பதைபதைப்புடன் செயல்படுபவர்‘ என்றெல்லாம் வாக்காளர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஆனால், அழகு பார்க்கும்போது, செல்பேசி விழியப்பதிவுகளை தடுத்தாட்கொள்வது அரசியல் வெற்றிக்கு முக்கியமான விஷயம்.

இங்கே, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் எட்வர்ட்ஸ் ‘நான் நடந்தால் நடையழகு; நான் கோதினால் முடியழகு’ என்று கண்ணாடி களிப்புறும் காட்சி:

இதற்கும் முன்னால் நானூறு அமெரிக்க வெளிகளுக்கு சிகையலங்காரம் செய்து கொண்டு சர்ச்சைக்குள்ளான செய்தி: Edwards’ $400 haircut, and other curious facts hiding in the presidential campaign-finance reports.

இவருக்கு முன்னோடியான பில் க்ளின்டன் அந்தக்கால விலைவாசிக்கு ஏற்றவாறு இருநூறு டாலர்களுக்கு முடிவெட்டி வழிகோலியிருக்கிறார்:

கவிஞர் மாயா ஆஞ்சேலூவின் ஹில்லரி ஆதரவுப் பேச்சு

அமெரிக்காவின் தலைசிறந்த பத்து பெண்மணிகளுள் ஒருவராக அறியப்படுவரும் பெரும் மதிப்புக்குரியவருமான கவிஞர் மாயா ஆஞ்சேலூ ஹில்லரியை ஆதரித்து ஒரு பேச்சை வெளியிட்டிருக்கிறார். ஆஞ்சேலூ ஓப்ரா வின்ஃப்ரீக்கு (ஒபாமாவின் பிரச்சார பீரங்கி) மிகவும் நெருக்கமானவர். “ஒப்ரா எனக்கு மகளைப் போன்றவள்; ஆனால் என்னுடைய நகலாக்கமல்ல” என்று சொல்கிறார். ஒபாமாவை வெறுக்கக் காரணம் ஏதுமில்லை. ஒரு பெண் என்ற வகையில் – ஒரு நல்ல பெண் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக விளங்குவதால் நான் ஹில்லரியை ஆதரிக்கிறேன் என்கிறார்.