போடுங்கம்மா வோட்டு!

வாக்கு போட்டாச்சா?

நன்றி: GOOD » Project 001: If You Can Read This…»

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.

தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.

மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.

விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

பார்ப்போம்…!!!

மூக்கு சுந்தர்

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?

போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.


அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?

கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?

மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.


தொடர்புள்ள இடுகைகள்:

1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?

2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

ஒபாமாவினால் பழசாகும் ஜோக்ஸ்

  • Today on Wall Street, there are only 2 positions:

“Cash”…and “Fetal”

  • Q. What’s the capital of Iceland?

A. About $3.50

  • “I went to buy a toaster — they threw in a free Bank!”
  • Q: In these busy market times, how can you get the attention of your broker?

A: Say, “Hey, waiter!”

  • Q. What do you call 12 investment bankers at the bottom of the ocean?

A. A good start.

  • Q. What’s the difference between an investment banker and a large pizza?

A. A large pizza can feed a family of four.

  • “This Financial Crisis is worse than a divorce. I’ve lost half my net worth and I still have a wife.”
  • “Get my broker, Miss Jones.”

“Yes sir. Stock, or Pawn?”

  • Q. How do you get a broker down from a tree?

A. Cut the rope.

  • Q: What’s the definition of optimism?

A: An investment banker who irons five shirts on a Sunday evening.

  • ”President Bush’s response to this economic crisis was to meet with some small business owners at a soda shop in San Antonio, Texas, this week”

”Well, the bad news? The small business owners are now General Motors, General Electric, and Century 21.”

  • What’s the difference between an investment banker and a pigeon?

A pigeon can still make a deposit on a Ferrari. Box: New Terms for the 2008 market

  • CEO –Chief Embezzlement Officer.
  • CFO– Corporate Fraud Officer.
  • BULL MARKET — A random market movement causing an investor to mistake himself for a financial genius.
  • BEAR MARKET — A 6 to 18 month period when the kids get no allowance, the wife gets no jewelry.
  • VALUE INVESTING — The art of buying low and selling lower.
  • P/E RATIO — The percentage of investors wetting their pants as the market keeps crashing.
  • BROKER — What my broker has made me.
  • STANDARD & POOR — Your life in a nutshell.
  • STOCK ANALYST — Idiot who just downgraded your stock.
  • STOCK SPLIT — When your ex-wife and her lawyer split your assets equally between themselves.
  • FINANCIAL PLANNER — A guy whose phone has been disconnected.
  • MARKET CORRECTION — The day after you buy stocks.
  • CASH FLOW– The movement your money makes as it disappears down the toilet.
  • YAHOO — What you yell after selling it to some poor sucker for $240 per share.
  • WINDOWS — What you jump out of when you’re the sucker who bought Yahoo @ $240 per share.
  • INSTITUTIONAL INVESTOR — Past year investor who’s now locked up in a nuthouse.
  • PROFIT — An archaic word no longer in use.

ஃப்ளிக்கர்வாசிகள்

ரொம்ப நாளாய் ட்ராஃப்டில் அமர்ந்து ஆறிப் போச்சு. இப்போதைய கவனமெல்லாம் அமெரிக்க அதிபரிலேயே மூழ்கி இருப்பதால், ட்ராஃப்ட் அப்படியே பப்ளிஷ் ஆகிறது (:

அன்று ட்விட்டரில் கவர்ந்த சில நட்சத்திரங்களை குறித்த பதிவு. இன்று ஃப்ளிக்கர்.

தமிழ்ப்பதிவுகள் பெருக ஆரம்பித்த காலத்திலேயே, அனைத்தையும் வரிசைக்கிரமமாக வாசிக்க தமிழ்மணம் வந்து சேர்ந்தது. புகைப்படத்திற்கேது மொழி என்பதாலும், அவரவருக்கு பிடித்த வலையகங்களில் நிழற்படங்களை வைத்துக் கொண்டதாலும் ஓரிடத்தில் அனைத்து சென்னைப் படங்கள், மொத்த தமிழ்நாட்டு புகைப்படங்கள் என்று பார்ப்பது சற்று சிரமம்தான்.

ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான சுவையான படங்களைப் பார்க்க ஃப்ளிக்கர் லீச் பயன்படும்.

உதவிய பதிவுகள்:

1. Thomas Hawk’s Digital Connection: Top 10 Hacks on Flickr

2. Thomas Hawk’s Digital Connection: Top 10 Ways to Find Great Photos on Flickr

3. சிவியார்: என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: “காஞ்சி மற்றூம் வேலூர் பயணக்குறிப்புகள்”

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III

அமெரிக்கத் தேர்தல்  தகிடுதத்தங்கள்: I
அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: II

5.பொய் சொல்லப் போறோம்
மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் குறைகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சில அரசு அதிகாரிகளுமே மக்களை குழப்பிவிடும் விஷமத்தனத்தைச் செய்யும் வழக்கமும் கிட்டத்தட்ட அண்மைய தேர்தல்கள் அனைத்திலும் தலைதூக்குகின்றன. 2008 தேர்தலில் ஏற்கனவே கறுப்பின நிறுபான்மையினர் வாழும் பல பகுதிகளில் வாக்களிக்கச் செல்பவர்கள் Parking Violations உட்பட்ட சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களாயின் கைது செய்யப்படுவார்கள் என துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில இடங்களில் துண்டு பிரசுரங்களில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாயிருப்பதனால் இந்த வருடம் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமையும் டெமக்ராட்டிக் கட்சிக்காரர்களுக்கு புதன்கிழமையும் தேர்தல்கள் நடக்க இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

சில மாவட்டங்களில் அரசு அதிகாரிகளே மக்களை குழப்பும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். காலராடோவில் வெளி மாநில மாணவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யக் கூடாது என அதிகாரி ஒருவர் தவறாக அறிக்கை ஒன்றை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மின்னஞ்சல்கள் மூலமும் இத்தகைய தவறான செய்திகள் வாக்குப் பதிவை குறைக்கும் வகையில் பரப்பப்படுகின்றன. இவை குறிப்பாக ஊடகங்களை கவனிக்காத அடித்தட்டு மக்களை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரங்களாகும்.

முறையற்ற வாக்காளர் பதிவு டெமெக்ராட்டிக் கட்சிக்கு எதிரான வாதமாகவும், வாக்காளர்களை பயமுறுத்தி அல்லது திசை திருப்பி வாக்களிக்க விடாமல் செய்வதை ரிப்பப்ளிக்கன் கட்சிக்கு எதிரான வாதமாகவும் எப்போதும் வைக்கப்படுகிறது.

அஞ்சல் வழியே வாக்குகளை அனுப்பும் முறயிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. 2000ம் ஆண்டு தேர்தலில் ஒகையோ மகாணம் எல்லா வாக்குகளையும் அஞ்சல் வழியே பெற்றது இது பெரும்பான்மை வாக்குகள் வருவதை ஊக்குவித்தது(80%). இருப்பினும் பலரும் தங்கள் வாக்குச் சீட்டை வீட்டில் இருந்த வேறொருவர் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறையில் வீட்டில் பலமுள்ளவர்கள் பிறரை தங்கள் விருப்பத்திற்கேர்ப்ப வாக்களிக்கச் செய்யும் வாய்ப்பும் உள்ளது.

டெக்சாசில் அஞ்சல் வழி வாக்குகளைப் பெற சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிலர் காசு கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பல கல்லூரி மாணவர்களும் தாங்கள் அஞ்சல்வழி ஒரு மாநிலத்திலும், நேரடியாக இன்னொன்றிலும் இருமுறை வாக்களித்ததாகக் கூறியுள்ளனர்.

ஜனநாயகம் ஒரு சமரச அமைப்பு என்பதை தேர்தல் முறைகேடுகளும், குழப்படிக்கும் சட்டங்களும் மேலும் வலியுறுத்துகின்றன. அமெரிக்க தேர்தல் முறையில் இன்னும் பல மாற்றங்களும் செய்யப்படவேண்டும் என்பதும் இது காலத்திற்கேற்ப செப்பனிடப்பட வேண்டிய அமைப்பு என்பதும் இங்குள்ள பல அரசியல் பண்டிதர்களின் கருத்துமாகும்.

பல மகாணங்களிலும் இழுபறி நிலையில் கணிப்புகள் இருக்கும் 2008 தேர்தலில் முன்பில்லாத வகையில் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்திருக்கும் நிலையில் குழப்பம் மிகுந்த அமெரிக்க தேர்தல் முறை நிறைவான முடிவைத் தருமா இல்லை சந்தேகங்களுடன் நிறைவு பெறுமா என்பதற்கு நாளை விடை கிடைக்கலாம்.
===
நன்றி: டைம், விக்கிபீடியா, http://findarticles.com/

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்!

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது.

இதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர்.
ஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

மேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவிருக்கின்றனர்.
இது தவிர, எப்போதும் போல் வாக்களிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

இந்த தேர்தலின் வாக்குப் பதிவு நிச்சயமாக முன்னொப்போதுமில்லாத அளவிற்கு இருக்கப் போகிறது. வாக்குப் பதிவு தினத்தில் நீண்ட வரிசைகளும் பெரும் காத்திருப்பும் அதிகமிருக்கப் போகிறது.

NPR-இல் கேட்ட தகவலின்படி, வாக்குப்பதிவு அலுவலர்களின் சராசரி வயது 72, கேள்விக்குரிய இந்தத் தகவல் குழப்பத்தையும் தாமதத்தையும் கூட்டவிருக்கிறது.

LA Times-இல் இன்று வந்துள்ள தகவலின்படி, நவம்பர் 4 தேர்தல் நாளாக இருந்தாலும், அக்டோபர் 25 அன்றிலிருந்தே லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பதிவாளர் அலுவலகத்தில் வாக்குப் பதிவது(early voting) ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்குக் குறைந்தது 2000 வாக்குகள் பதிவாகின்றன.  நவம்பர் 1 சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு குறையாமல் காத்திருந்து வாக்களித்துச் சென்றிருக்கின்றனர்.  நாளை நவம்பர் 4 வரப்போகும் பெரும் கூட்டத்திற்கும் காத்திருப்புக்கும் இது முன்னோட்டமே!

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – II

அமெரிக்கத் தேர்தல்  தகிடுதத்தங்கள்: I

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III

3. எந்திரன்
அமெரிக்கத் தேர்தல் முறை குறித்த கவலைகள் மிக அதிகமாக எழுந்தது 2000ம் ஆண்டு நடந்த தேர்தலின்போதுதான். மோசமாக வடிமவமைக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் மக்களை குழப்பிவிட ஆயிரக்கணக்கில் வாக்குகள் செல்லாத வாக்குகளாகிவிட்டது. முடிவில் அல் கோர் ஃப்ளோரிடாவையும் அதிபர் பதவியையும் கோட்டைவிட நேர்ந்தது. தற்போது அத்தகைய வாக்குச் சீட்டுகள் குறைந்து மத்திய அரசின் $3.9 பில்லியன் திட்டத்தின் வாயிலாக பரவலாக வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையும் நிறைவானதாயில்லை.

வாக்குச் சீட்டு வடிவமைப்பு பிரச்சனை இந்த முறையும் தலைதூக்கியுள்ளது. அஞ்சல் வழி வாக்குகளை சேகரிக்க மெக் கெய்னின் பிரச்சாரக் குழு வடிவமைத்து அனுப்பிய வாக்குச் சீட்டில் தான் வாக்களிக்க தகுதியானவரா என்பதைச் சுட்டும் ஒரு கேள்வியும் இருந்தது. இது தேவையற்றதென்றாலும் அதை டிக் செய்யாத வாக்குகளை தேர்தல் அதிகாரி நிராகரிக்க, பின்னர் உச்ச நீதிமன்ற தலையீட்டால் அந்த வாக்குகள் எண்ணப்பட்டன. காலராடோ மகாணத்தில் இதேபோல குழப்பமாக வடிவமைக்கப்பட்ட வாக்காலர் பதிவு விண்ணப்பங்கலால் 6400 பேர் வாக்காலர் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

2000ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் அமெரிக்க தேர்தல் முறை ஒரேயடியாக எந்திர வாக்குப் பெட்டிகளின் பயன்பாட்டுக்குத் தாவியது. எந்திர வாக்குப்பெட்டிகள் சரியான முறையில் தயார்படுத்தப்பட(Calibrate) வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தினால் ஒபாமாவிற்கு என்றும் இன்னொன்றை அழுத்தினால் மெக்கெய்ன் என்றும் திரையில் தெரிகிறது. ஆனால் உள்ளே அதை தவறுதலாகவோ, வேண்டுமென்றோ மாற்றி பதியச் செய்யும் வாய்ப்பும் உள்ளது. 2006 அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் (பெயர்ப்பொன) ஃப்ளோரிடாவில் டெமெக்ராட்க ஆதரவு அதிகமாயிருந்த 13வது மாவட்டத்தில் ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் 369 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாது சர்ச்சைக்குள்ளானது. 18,000க்கும் மேலான வாக்குகள் வாக்கு சேகரிக்கும் எந்திரத்தால் பதிவு செய்யப்படவேயில்லை. அதாவது வாக்காளர் பொத்தானை அழுத்தினார் ஆனாலும் அது பதிவுசெய்யவில்லை. எந்திரங்கள் கோளாறுக்குட்படுபவை என்பதை இது உணர்த்தியது. இதன் பின்னர் ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மகாணங்கள் எந்திர வாக்குகள் தாளிலும் பதிவு செய்யப்பட வேண்டும் எனும் சட்டத்தை உருவாக்கின. தேசிய அளவில் இதை செயல்படுத்த முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன. இருப்பினும் பல மகாணங்களும் எந்திர வாக்குப் பதிவை மட்டுமே நம்பியுள்ளன.

எந்திர வாக்கு சேகரிப்பு முறையை அமல் படுத்தும் கெடு 2006ல் முடிந்துவிட்ட போதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இயந்திரங்களற்ற பழைய வாக்கு சேகரிப்பு முறையின்படியே வாக்களிக்கவுள்ளார்கள்.

இயந்திரக் கோளாறுகளும் வாக்குச் சீட்டு குளறுபடிகளும் ஒருபுறமிருக்க போதுமான வாக்குச் சாவடிகளை திறப்பதிலும் அங்கே வாக்காளர் பதிவிர்கேற்ப எந்திரங்களை, வாக்குப் பெட்டிகளை நிறுவதிலும் பல ஏற்ற இரக்கங்கள் உள்ளன. குறிப்பாக புதிதாக வாக்களிக்கும் உரிமைபெற்ற பல இளைஞர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாயுள்ளனர். இருப்பினும் பல பகுதிகளிலும் வாக்குச் சாவடிகள் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப திறந்து வைக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு இரு கட்சியினராலும் முன்வைக்கப்படுகிறது. 2004 தேர்தலில் ஒகையோ மகாணத்தில் டெமெக்ராட்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் குறைவான வாக்குப் பெட்டிகளே இருந்தன எனும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பலர் காத்திருக்க நேர்ந்ததாயும் ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் திரும்பிச் சென்றதாயும் கணக்கிடப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டி, எந்திர எண்ணிக்கை குறித்த சட்டங்களும் மகாணத்துக்கு மகாணம் வேறுபடுகின்றன. விஸ்கான்சினில் 200 வாக்காளர்களுக்கு ஒரு பெட்டி, விர்ஜினியாவில் 500 முதல் 750 பேருக்கு ஒரு பெட்டி காலரடாவில் “போதுமான அளவுக்கு”.

4. புதிய முகம்
முன்பே சொன்னதுபோல வாக்காளர் பதிவில் இருக்கும் குளறுபடிகளையும், வாக்களிப்பதில் மோசடிகளையும் தவிர்க்கவும் முதன் முறையாக வாக்களிக்க வருபவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என சட்டம் உள்ளது. மிக்கி மவுஸ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க இயலாமல் போவது இதனால்தான்.

இந்த சட்டமும் மகாணத்துக்கு மகாணம் வெவ்வேறாக அமுல்படுத்தப்படுகிறது. பென்சல்வேனியாவில் மாதாந்திர பில்களில் (Utility Bills) ஒன்றை கொண்டு வந்தால் போதுமானது. இண்டியானாவில் அரசு வழங்கும் ஓட்டுநர் உரிமம் உட்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை தேவை. இதனால் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாக்களிக்க செல்லாத நிலமை உள்ளது, ஓட்டுநர் உரிமம் அல்லாத அடையாள அட்டைகளைப் பெற இயலும் என்றபோதும். ஒரு கணக்கெடுப்பில் 2001ல் வாக்காளிக்கும் வயதினரில் 6 முதல் 10 சதவீதத்தினர் அடையாள அட்டை இல்லாதவர்களாயிருந்தனர்.

பல வாக்காளர்களுக்கும் இந்த நடைமுறைகள் தெரிந்திருக்காதது இன்னொரு கசப்பான செய்தி. இதனால் வாக்குச் சாவடி வரை சென்று திரும்புவர்களும் உண்டு. இவர்களில் பலரும் சமுக்கத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழைகளும் சிறுபான்மையினருமாகும்.

(தொடரும்…)

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I

அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.

1. கல்லூரிச் சாலை
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அமெரிக்காவின் மகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சமமான எலக்டோரல் காலேஜ் வாக்குகள் வழக்ங்கப்படுகின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினரைப்போல தான் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் வாய்ப்பு எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அவ்வாறு வாக்களிப்பதில்லை. அமெரிக்காவில் 50ல் 48 மகாணங்கள் தங்கள் மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே அத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளையும் தந்துவிடுகின்றன. ஆக மக்கள் பிரதிநித்துவம் மகாண அளவிலானதாகிவிடுகிறது. இந்தியாவைப்போல ஒவ்வொரு தொகுதியும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, கீழ்நிலை பிரதிநித்துவத்தை இந்த முறை மறுதலிக்கிறது. மெய்ன்(Maine) மற்றும் நெபராஸ்கா மகாணங்கள் மட்டுமே மாவட்டவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எலக்டோரல் காலெஜ் வாக்குகளை வழங்குகின்றன.

இந்த முறையின்படி Popular Vote எனப்படும் நாடு முழுவதுமான வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் போதுமான அளவு எலக்டோரல் காலெஜ் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வி அடையும் நிலை உள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் அவ்வாறே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் அவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

எலக்டோரல் காலேஜ் முறையை மாற்றியமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரே அந்த மகாணத்தின் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறும் முறையை மாற்றி நாடளவில் அதிக வாக்குகளைப் பெற்ற (Most popular votes) வேட்பாளர் பெறும் முறையை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. இது பிராந்திய மக்களின் பிரதிநித்துவத்தை குறைத்துவிடும் முயற்சியாகும். சரியான மக்கள் பிரதிநித்துவம் மாவட்ட வாரியாக, சிறிய தொகுதிகள் வழியாக நிலைநாட்டப் படுவதே சிறப்பானதாகும். இத்தகைய கீழ்நிலை பிரதிநித்துவம் பிராந்திய அரசியலுக்கு குறிப்பாக சாதி, இன அரசியலுக்கு வழிவகுக்கும் என்பது வேறொரு விவாதத்திற்கான கருத்து.

2. பட்டியல்
அமெரிக்க வாக்காளர் பட்டியல் தற்போது கணினிவழி பதிக்கப்படுகிறது. கணினிமயமாக்கல் வேலையை எளிதாக்கினாலும் முற்றிலும் குறைகளற்ற முறையல்ல. குறிப்பாக தட்டச்சுப் பிழைகளால் தங்கள் வாக்குகளை பலரும் இழக்க நேரிடுகிறது.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவரின் பெயர் விபரங்கள் ஏற்கனவே இருக்கும் அரசு கணினி தகவல் தொகுப்புகளான (Databases) ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் தகவல் போன்ற அரசின் தகவல் தொகுப்புக்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து மாறினாலும் வாக்காளரின் தகவல் சரிபார்க்கப்பட முடியாதத்து அல்லது தவறானது என கணினி கூறிவிடும். விஸ்கான்சின் மகாணத்தில் 22% பதிவுகள் இம்முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் தேர்தலை கண்காணிக்கும் ஆறு முன்னாள் நீதியரசர்களில் நான்குபேரின் தகவல்களும் அடக்கம். இறுதியில் விஸ்கான்சின் வாக்காளர் பதிவை ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையையே கைவிட்டது. ஆனால் ஃப்ளோரிடாவில் 9000 புதிய வாக்காளர்கள் இம்முறையில் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் வாக்களிக்கலாம் ஆனால் முறையான ஆவனங்களை சமர்பித்தபின்னரே இவர்களின் வாக்குகள் எண்ணப்படும். ஒகையோவில் 2 லட்சம் பேரின் பதிவுகள் சரிபார்க்க இயலாதவையாக உள்ளன.

வாக்காளர் பதிவுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பலரும் மக்களை மிரட்டும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹிஸ்பானிக் என அழைக்கப்படும் தென்னமெரிக்க வம்சாவழியினரை அவர்கள் அமெரிக்க குடிமக்களானாலும் தேவையற்ற ஆதாரங்களைக் கேட்டு மிரட்டுவது ஜியார்ஜியா மகாணத்தில் நடந்துள்ளது. மிசிசிப்பியில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை செய்கையில் தவறுதலாக 10,000 வாக்கலர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். பின்னர் இவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.
வாக்காளர் பதிவு முற்றிலும் பிரச்சனையற்ற முறையாக இல்லை. லட்சக்கணக்கில் வாக்குப் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கலாம் எனக் கவலை கொள்கிறது டைம் பத்திரிகை. (Millions have been stripped from voter rolls in key states, but the legitimacy of those eliminations remains unclear.).

வாக்காளர் பதிவில் மேலும் ஒரு கவலைதரும் விஷயம் இந்தத் தேர்தலில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏக்கார்ன் (ACORN) எனும் தன்னார்வக் குழு ஏழ்மை நிலையில் இருப்பவர்களை அவர்களின் பல உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் இத்தகைய கீழ்நிலையில் இருக்கும் மக்களை (குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பிற சிறுபான்மையினர்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யயும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முறை ஏக்கார்ன் தனது பிரதிநிதிகளிடம் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கேற்ப உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனச் சொன்னதன் விளைவாக மிக்கி மவுஸ் முதற்கொண்ட கற்பனை பாத்திரங்களின் பெயர்களையும் வாக்காளர் பதிவில் சேர்த்து ‘சேவை’ செய்துவிட்டனர் ஏக்கார்னில் வேலை செய்த 13000 பகுதி நேர வேலையாட்களில் சிலர்.

வாக்காளர் பதிவில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் இருபெரும் கட்சிகளான குடியர, ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவு குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் ஜனநாயகக் கேலிக் கூத்தானாலும் இது முறைகேடான வாக்குப் பதிவுக்கு இட்டுச் செல்வதில்லை. மிக்கி மவுஸ் டிஸ்னி சேனலில் மட்டுமே வாக்களிக்கச் செல்ல முடியும். ஆனால் தவறான வாக்குப்பதிவுகளின் விளைவாக வாக்களிப்பவர்கள் அதீத கட்டுப்பாட்டுகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வாக்குப்பதிவு தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. இது பல விளிம்புநிலை வாக்காளர்களையும் வாக்குப்பதிவிலிருந்து மறைமுகமாக தடுக்கிறது.

(தொடரும்…)