ஆதவன்

நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்

எழுத்து விமர்சகர்:

  • என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.
  • என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே?
  • முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது.
  • ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன்.

வாசகர்: அபிமானி

  • பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.
  • எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.

சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்

  • ‘ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்

  • பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது.

புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி

  • என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன்.
  • ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது.
  • இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய ‘தான்’ அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா?
  • எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்

  • பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
  • ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்.
  • ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள்

ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?

  • ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?

  • நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் – அதிக பட்சமாக – கொள்ளவேண்டும்.

காகித மலர்கள்

  • இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் – வாழ்வின் பிரும்மாண்டத்தையும் ‘வெல்ல முடியாத தன்மை’ யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் – இது எழுதப்பட்டிருக்கிறது.

ஆதவனாகிய நான்

  • இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.
  • எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல.

திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்

Separated at Birth

தேவதர்ஷினி & Erinn Hayes

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு

அமெரிக்க அதிபர்கள்: ஜன. 20, 2009 – வாழ்த்துகள்

november-4-2008

நன்றி: Blog entry “November 4, 2008” by Patrick Moberg

Obama Inauguration 2009 – Fast Facts about Inauguration Day 2009 When Barack Obama is Sworn in as President of the United States

Joint Congressional Committee on Inaugural Ceremonies

EBay removes offers of inauguration tickets – Los Angeles Times

குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி

patch_problemsஅசல்: Kumudam :: மணிவண்ணன்

(சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.”

#2 ஆக எழுதி இருப்பது:

பர்த் கன்ட்ரோல் பேட்ச்

கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.

இப்பொழுது பத்து ஆபத்து:

  1. ஆணுறைக்கு மாற்றாக இதை உபயோகிக்க வேண்டாம்.
  2. ABC News: Do You Know Birth Control Patch’s Risks?: “Do Users of the Birth Control Patch Know Enough About Its Potential Dangers?”

  3. பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பை விட 15 மடங்கு அதிக விபரீத வாய்ப்பு இந்த பட்டியை ஒட்டிக் கொள்வதால் அதிகரிக்கிறது.
  4. இந்த patchஐ உபயோகித்தவர்களில் இன்றைக்கு மட்டும் இதுவரை 17 பேர் மரணம். 62 பேருக்கு முடக்கம்.
  5. மூட்டு வலி, கால் வீக்கம், மூச்சிறைப்பு போன்றவை உங்களுக்கும் வேண்டுமா? இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை இன்றே நாடுவீர்.
  6. Birth control patch linked to higher fatality rate – Women’s health- msnbc.com: “Report: Device has three times greater risk of stroke, blood clot than pill”

  7. ஆணுறை தவிர இந்த மாதிரி பேட்ச் போடும் முறை பாதுகாப்பானதல்ல. எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய் தொற்றிக் கொள்ளக் கூடும்.
  8. உடல் பருமன் அதிகரிக்கும்
  9. இரத்தம் உறைந்து, கட்டிக் கொள்ளும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு உறைகட்டிக் கொள்ளுதல் அதிகமாகும்.
  10. அமைச்சர் அன்புமணிக்கு பிடிக்காததை செய்ய இயலாது. சிகரெட்டில் ஒரு தம் கூட இழுக்க முடியாது
  11. பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
  12. பாதுகாப்பான பாலுறவிற்கு பர்த் கன்ட்ரோல் பாட்ச் உபயோகம் ஆனதல்ல. எயிட்ஸ் கூட வந்து சேரலாம்.

ஆரஞ்சிப் பழம்

uncoil-hand-life-orange-eat-enjoy-live-hunger

இது நேற்று கனவில் நடந்தது. நிஜமாகவே.

“அரிவராசனம் விச்வமோஹனம்”

மின்விளக்கு அணைத்த அகல்விளக்கு இருளில் பஜனை. ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டிருக்கிறேன். ”

ஓம் சக்தி! ஆதிபராசத்தி!!”

ஐயப்ப சாமிமார் கூட்டமா? மேல்மருவத்தூர் வழிபாடா? சந்தேகம் தெளிந்தது.

“ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர”.

என்னிடம் மட்டும்தான் மேல்சட்டை. மற்ற எல்லாரும் திறந்த மார்புடன் தோற்றமளிக்கிறார்கள்.

சர்வமத மையத் தலைவர் என்னை நோக்குகிறார்.

“போலோ ஜெய் ஸ்ரீ சத்ய சாய்பாபாஜி கீ ஜே!”

கனவில் கூட நான் இப்படி எக்குத்தப்பாக வரமாட்டேனே? எப்படி மாட்டிக் கொண்டேன்?

“முதல் முறையா மகனே?”

இல்லை என்பது போல் மேலும் கீழும் தலை ஆடுகிறது.

brain-mandarin_orange-fruit-petal-individual-flickr“நீங்கள்தான் அடுத்த பாபா என்று கடவுள் கை காட்டியுள்ளார். உங்களிடம் இரு ஆரஞ்சிப் பழத்தை ஒப்புவிக்கவும் கட்டளை இட்டுள்ளார். நம்மை வெகு விரைவில் அசுரர்கள் தாக்கவுள்ளனர். அப்போது நாம் ஸ்தம்பித்து நிற்க இந்த முதல் ஆரஞ்ச் உதவும். மனிதர் பிரமை பிடித்தது போல் நிற்பதால் குழம்பிப் போகும் எதிரி சோர்வுற்று ஓய்ந்து போவர். அவர்கள் மறைந்த பின் இரண்டாவது ஆரஞ்சு கொண்டு எம்மை உயிர்ப்பிக்கவும்”.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாதிரி ரம்மியமான குரலில் தேஜஸான சர்ஃப் சால்வை அணிந்தவர் சொல்லிவிட்டு பஜனையில் மூழ்கிவிட்டார்.

நான் அடுத்த பாபா ஆகிவிட்டேனா? கையில் இரண்டு ஆரஞ்சு இருந்தது. பரிசோதித்துப் பார்ப்போமா?

ப்ரொடக்சனுக்கு செல்வதற்கு முன் எந்த சாஃப்ட்வேரையும் டெவலப்மன்ட்டில் சோதனை செய்து விடுவேனே! அதே மாதிரிதானே? ஒரு முறை டெஸ்ட் செய்து ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துவிடுவோம்.

முதல் பழத்தை விட்டெறிய எல்லோரும் வீழ்ந்தார்கள். பயந்து போய் உடனடியாக இரண்டாவதையும் போட்டு அனைவரையும் தெளிவித்தேன்.

அதே ஸ்ரீஸ்ரீ; எதிரொலிக்கும் தியானக்குரலில் கடுமை துளிக்கூட இல்லாமல் வருகிறார்.

hold-me-please-sun-orange-world-baba-flickr“என்ன காரியம் செய்தாய் மகனே? இதில் கூடவா நம்பிக்கை இல்லை? என்னிடம் இரு ஜோடி ஆரஞ்சி மட்டுமே உள்ளது. இதுதான் மனிதகுலத்திடம் உள்ள கடைசி காபந்து பழங்கள். இதையாவது பத்திரமாய் வைத்து எம்மை பாதுகாப்பாய்”

வெகு சிரத்தையுடன் இரு கையில் ஒன்றாய் வைத்திருக்கிறேன். காலை பஜனை பிற்பகலிலும் வெகு ஜோராகத் தொடர்கிறது.

என்னைப் பார்த்து அந்தச் சிறுமியும் சிறுவனும் ஓடி வந்தார்கள்.

“சார்! ரொம்பப் பசிக்குது. மயக்கமா வருது. நைவேத்தியம் செய்யாம எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தப் பழத்தைத் தந்தா வயித்தைக் கிள்ளும் பசி கொஞ்சமாவது தீரும்.”

ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டேன். புசித்து விட்டார்கள்.

விழித்துக்கொண்டேன்.

Rogue Economics: Capitalism’s New Reality :: Loretta Napoleoni

புத்தக ஆசிரியரின் வலையகம்: Rogue Economics

புத்தகம் வாசிக்க: Rogue Economics: Capitalism’s New … – Google Book Search

மேற்கோள் 1: “The first business on the Internet is pornography, the second is gambling, the third is child pornography. There is no doubt about that.”

மேற்கோள் 2: “”We have thankfully watched the fall of the Berlin Wall, but unfortunately the Wall fell on women’s heads.”

‘வேர் இஸ் த பார்ட்டி’ போட்ட சுப்பிரமணிய சுவாமி, உள்ளூர் அமைச்சர் ப சிதம்பரம் போன்ற பல வல்லுநர்கள் படித்த ஹார்வார்ட் பல்கலையில் செய்த ஆராய்ச்சி இது:

குரங்குக்கு காசு கொடுப்பார். பணத்தை வைத்து என்ன வாங்கலாம் என்றும் கற்றுக் கொடுப்பார். முதலில் தனக்குத் தேவையான திராட்சை, தண்ணீர் என்று வாங்கிக் கொண்டது குரங்கு.

குரங்குகளிடம் பணம் புழங்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே பாலியல் இச்சைக்காகவும் பணம் கொடுக்க முயற்சித்தன.

மனிதனின் முன் தோன்றலாகிய வானரம், உணவு, இருப்பிடம் என்பதை விட்டுவிட்டு செக்ஸ் நாட்டத்திற்கு செலவழிக்க சென்றதேன்?

நிதி வரும் முன்னே; தவறான எண்ணம் வரும் பின்னே என்பது புதுமொழியா?

  • சுதந்திரத்திற்கும் அடிமை பேரம் அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
  • விலைமாதர் சல்லிசாவதற்கும் கம்யூனிசம் வீழ்ந்ததற்கும் யாது தொடர்பு?
  • வட்டி விகிதம் குறைவதனால் மட்டுமே வீடு விலை ஏறியதா? வங்கி எப்படி விளையாடியது?

புத்தகம்: Amazon.com: Rogue Economics: Capitalism’s New Reality: Loretta Napoleoni: Books

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005

ராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)

நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்

– ஆகஸ்ட் 1975

அசல்:

The Pasture by Robert Frost

I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.

I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.

கொசுறு: The Death of the Hired Man by Robert Frost

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

குடிபோதையும் கார் ஓட்டுனரும்

பத்ரியின் எண்ணங்கள்: முஸ்தஃபா தாஹிர் லகடா பதிவைப் பின் தொடர்ந்து:

டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். 90களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரசில் இடம்பெறும்.

அமெரிக்காவில் இந்த மாதிரி விபத்துகளைத் தவிர்க்க, ஸ்டியரிங் வீலைத் தொடுவதற்கு முன் வாயை ஊதி ஆல்கஹால் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சட்டம் இயற்ற முயல்கிறார்கள்.

அந்த மாதிரி சாதனம் வைப்பதை ப்ரைவசி குறுக்கீடு என்று ஒரு சாரார் விரும்பவில்லை (மதுபான/சாராயக்க்கடை லாபியிஸ்ட்)

அப்படி சாதனம் இருந்தாலும் 21+க்குத்தான் மது என்பதையே ஒழுங்காக நடைமுறை செய்யாத சமூகத்தில் இதற்கும் மாற்றுவழி வந்துவிடும் என்று இன்னொரு சாரார் கிடுக்கிப்பிடி சட்டத்தைக் கோருகிறன்றனர்.

குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.