métier

வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.

  • ப்ளாக்ஸ்பாட்டை விட வோர்ட்ப்ரெஸ் சிறந்தது. யார் பின்னூட்டம் இடுகிறார்கள், எப்படி வருகை புரிகிறார்கள் போன்ற சில்லறை விஷயங்களிலிருந்து போலிகளைக் கட்டுபடுத்துவது வரை மேம்பட்ட முறையில் செயல்படுகிறது. இதுவரை வலைப்பதிவு தொடங்காவிட்டால் வோர்ட்பிரஸ் பயன்படுத்தவும்.
  • கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வீடு, மாமியார் வீடு ரெண்டும் முக்கியம்; அது போல், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் பதிவை சமர்ப்பித்து விடவும்.
  • சாஃப்ட்வேருடன் வரும் manual-களை ஏறெடுத்தும் சீந்தாத சாதியைச் சேர்ந்தவர்கள் நாம். என்றாலும், கில்லியின் தமிழ் தட்டச்சு பக்கம், Indian Language Development WebSite போன்ற உதவிப் பக்கங்களைப் பொறுமையாக ஒரு முறையாவது முழுவதுமாக சிரத்தையாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளவும்.
  • டெக்னோரட்டி, ரோஜோ, போன்ற அகில உலக தில்லாலங்கடி சேவைகளிலும், அனிதா போரா, காமத், போன்ற லோக்கல் தாதா லிஸ்டிங்களிலும் முன்மொழிந்து மொய் போல் சுட்டியை வலைப்பதிவில் சேர்த்துவிட்டு அவர்களின் நோட்டு புத்தகத்தில் இடம் பிடித்துவிடவும்.
  • இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.
  • ப்ராஜெக்ட் டெலிவரி ஆனபிறகு சப்போர்ட் கடுப்படிக்கும். அது போல் நாளடைவில் நனவோடைகள் போரடிக்க, சினிமா, தொலைக்காட்சி, புத்தகம் போன்ற கலைத் துறை விமர்சனங்களை முன் வைக்கவும்.
  • இதுவும் தீர்ந்து போக தினசரி செய்திகளை மேயவும். எல்லோரும் தினத்தந்தி, தினமலர், தினகரன் படிப்பதால் தி ஹிந்து, டெக்கான் * போன்ற ஆங்கில நாளிதழ்களை வாட்ச் செய்யவும். விகடன், குமுதம், கல்கி, துக்ளக், கீற்று.காம் போன்றவற்றையும் கண்காணிக்கவும்.
  • தொடர்ந்து சரக்கில்லாவிட்டால், இந்தியா டுடே, ஃப்ரண்ட்லைன், தி வீக், அவுட்லுக் பக்கம் பார்வையைத் திருப்பவும். இதுவும் redundant ஆனால், எகனாமிஸ்ட், ஃபாரின் பாலிசி,ஃபோர்ப்ஸ் என்று மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் உதவும்.
  • நியுஸ்லெட்டர்ஸ் கொடுக்கும் தளம் அனைத்திலும் பெயரையும் மின்மடலையும் பதிவு செய்து, அவர்களின் வலையகம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தெரிவிக்க வசதி செய்து கொள்ளவும்.
  • இவ்வளைவையும் படித்து அப்படியே கொடுக்க செய்திகள் ஹார்லிக்ஸ் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும். நமக்கு முக்கியமாகப் படுவதை, புல்லட் பாயிண்ட்டாக கொடுத்தால் நேரப் பற்றாக்குறையால் திண்டாடும் படிப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும். நம்ம கருத்தை சுருக்+நறுக்காக பக்கத்திலேயே சொந்தமாக கிறுக்கலாம். புகைப்படம் இட்டால், காசி சொல்வது போல் (மேலும் விரிவாக இங்கே) எளிதில் வலைப்பதிவில் தோன்ற வகை செய்யவும்.
  • சிந்தையைக் கிளறுவதாக தோன்றும் பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடவும். நமக்குப் பிடித்த பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து இடவும். நமக்குக் கருத்து இருந்தால் மட்டுமே இடவும். கண்டிக்கிறேன், பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, நீங்க நல்லா எழுதலை போன்ற பெரிய மனுசத்தனமான மறுமொழிகள் தேவையில்லாதது; அப்படியும் கை அரித்தால் ஏன் என்றாவது சொல்லி விடவும். நம்ம அலுவல்/வீட்டு ஐ.பி முகவரி தெரியக் கூடாது என்றால் பிகேபி சொல்வது போல் செயல்படவும்.
  • அனானியாக பின்னூட்டமிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நம்ம வலைப்பதிவிற்கு சக கருத்து உடையவரை (& vice versa) வரவேற்பதற்கும் காமெண்ட்கள் உதவுகிறது; அதே சமயம் நம்ம crap-ஐ நாமே சொந்தம் கொண்டாடா விட்டால், வேறு யார் உரிமை பாராட்டுவார்கள்?
  • நேர்மையாக சொல்ல வந்ததை எழுதவும். நம்ம மனசுக்குப் பட்டதை ஒத்துக் கொண்டு எழுதினால் அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி. மேலும், எழுத்திலும் வெளிப்படையான எண்ணம் தெரியவரும். அதற்காக சொல்ல வந்ததை அப்படியே சொல்கிறேன் என்று உடனடியாக போஸ்ட் செய்து விடாமல், ஒரு தடவையாவது ப்ரூஃப் பார்த்து தட்டச்சுப் பிழைகளை கூடிய மட்டும் திருத்திப் போட்டால் வாசகரை கௌரவிக்கும்.
  • வலைப்பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து படித்து வரவும். கில்லி, தேஸிபண்டிட், தேஸிகிரிடிக்ஸ் போன்ற பரிந்துரைகளைப் பார்க்கவும். தினசரி தெருமுக்கு பிள்ளையாருக்கு அரகரா போடுவது போல் தேன்கூடு, தமிழ்மணம், மறுமொழி நிலவரம், வாசகர் பரிந்துரை, நட்சத்திரப் பதிவர். அதிகம் பார்வையிடப்பட்டவை ஆகியவற்றை தரிசித்து விடவும். [இந்த வலைப்பதிவரும் கில்லியின் பங்களிப்பாளர் போன்ற disclosureகளை சொல்லிவிடவும்]
  • வலைப்பதிவு என்பது தனி நபர் மடலுக்கு ஈடாகாது. நீங்கள் வலைப்பதிவராக இல்லாவிட்டால், இந்தப் பதிவை நான் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அஞ்சலிட்டிருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வேறு எவரையும் புண்படுத்தாது என்றும் உணர்ந்தால் மட்டுமே பொதுவில் இடவும்.
  • நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.
  • மேலே உள்ள கருத்திற்கு பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விதிவிலக்கு. அரசியல்வாதிகள், நடிகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைத் திட்டாவிட்டால் வலைப்பதிவுக்கு மேட்டரே கிடைக்காது.
  • வார்ப்புருவில் மாட்டிக் கொண்ட வலையகம் போல் ஒரே மாதிரி monotonous-ஆக எல்லா பதிவுகளும் அமைத்துக் கொள்ளாமல், ஒரு பதிவில் நினைவலை, அடுத்தது அரசியல், தொடர்ந்து சினிமா, கொஞ்சம் வலைப்பதிவு வட்ட அரசியல், சொல்ப தமிழ், லிட்டில் ஆங்கிலம், குடும்ப ரசாபாசம் என்று கலந்து கட்டி கூட்டாஞ்சோறாகக் கொடுக்கவும்.
  • ஃப்ரீயா கொடுத்தா பினாயில் குடிப்போம் என்பதற்காக என்னைப் போல் நிறைய சுட்டிகளையும், ஜாவாஸ்க்ரிப்ட் ஜாலங்களையும் வலைப்பதிவில் இணைப்பதால், அகலபாட்டை இல்லாமல் வருபவர்களுக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எப்போது முடியும் என்று பொறுமையிழப்பது போல் கோபம் வரும். டெம்பிளேட்டில் அதிகம் கை வைத்தால் சரக்கு கம்மி என்று அர்த்தம். உலகெங்கும் உலாவிகள் தோறும் அதிவேகத்தில் வலைப்பதிவு மின்ன, சின்ன வார்ப்புரு வைத்திருக்கவும்.
  • கொதிப்பு உயர்ந்து வருகிறதா… பதிவு செய்யலாம்; கருத்தை நிறைக்கிறதா… பகிரவும்; அசத்தல் திரைப்படமா… சொல்லவும்; போன பதிவில் பின்னூட்டமிட்டவருக்கு இந்த விஷயம் பிடிப்பதால் மட்டும் பதிய நினைக்கிறோமா… பதிவதற்கு முன் யோசிக்கவும்.
  • அதிகம் ஈஷிக் கொள்ளாமல், முன்முடிவுகளுடன் நட்புக்காக சங்கடமான எண்ணங்களைத் தவிர்க்காமல், இன்றைக்கு மட்டும் நான்கு பதிவுகள் இட்டு விட்டோமே என்று சுயக்கட்டுப்பாடுகள் இட்டுக் கொள்ளாமல், பெருசு போல் டி ஆர் விஜயகுமாரி கண்களுக்கு மயங்குகிறோமே என்று மறைத்து வைக்காமல், தனித்துவமாக நினைத்த விஜய்காந்த் முதல் நாளே சட்டசபை மட்டம் போடும் உள்முரண்களை இருட்டினுக்குள் தட்டிக் கொள்ளாமல் எழுதினால் லேஸிகீக் சொல்வது போல் Raw, naive and unfettered ஆக இருந்தால் வரப்பிரசாதம்.ஏதோ சொல்ல நினைத்து, எங்கோ இழுத்து சென்றால் ஃப்ரீயா வுடுங்க… அதுதான் ப்ளாக் போஸ்ட்! இந்தப் பதிவில் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் தலைப்பு வார்த்தையாவது புத்சு.

    | |

  • MIA Already – Jayalalitha & Vijayganth

    எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா, விஜயகாந்த் பதவி ஏற்க வரவில்லை

    தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 5 பேர் தவிர, 228 பேர் சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவபுண்ணியம் (மன்னார்குடி), உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), பத்மாவதி (நன்னிலம்) ஆகிய 5 பேர் இன்று பதவி ஏற்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடப்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.

    ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் அறைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு வருகிறார். விஜயகாந்த் காலை 11.30 மணிக்கு மேல் வருகிறார். இன்றும் பதவி ஏற்க முடியாமல் போனால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு சட்டசபை கூடும்போது அங்கு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொள்ளலாம்.

    Raama Narayanan becomes Director – State Sangeetha Nataka Academy

    தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம. நாராயணன் :: Tamil Nadu Iyal Isai Nadaga Mandram

    தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் இராம. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதலமைச்சர் கருணாநிதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

    மன்றத்தின் உறுப்பினர் செயலராக கவிஞர் இளையபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    News & Web Log

    சிதறலாய் என் சிந்தையைக் கவர்ந்த சில செய்திகள்/வலையகங்கள்:

    1. பிரேசிலின் சிறைகளை தாதா ஆதரவாளர்கள் கைப்பற்றி காவலாளர்களைப் பிணைக்கைதியாக்கினார்கள்: கூட்டுக் குடும்பமாக இருந்த எட்டு பெரிய தாதாக்களை பிரித்து விட்டார்களாம்; அதனால் ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவினால் கொந்தளிப்பு. சிடி ஆஃப் காட் நிஜத்தில் அரங்கேறுகிறது.
    2. விடாக்கண்டன் அமெரிக்காவிற்கும் கொடாக்கண்டன் க்யூபாவிற்கும் மீண்டும் சதாய்ப்பு: அமெரிக்க கட்டிடத்தில் விடுதலையைக் கவர்ச்சியாக விற்கிறார்கள்; பயந்து போன ஃபிடல் காஸ்ட்ரோ கொடித் தோரணம் கட்டி மறைக்கிறார். (க்யூபா குறித்த முந்தை பதிவு.)
    3. ‘Incendiary Circumstances – Amitav Ghosh: புத்தக விமர்சனம் – 1
    4. ‘Seeing’ By José Saramago: நோபல் பரிசு வென்றவரின் சமீபத்திய புத்தகத்தைக் குறித்த விமர்சனம் (பு.வி. 2)
    5. Chantix™ (Varenicline): நீங்க புகை ஊதுபவரா? பழக்கத்தை விட்டுவிட நினைப்பவரா? இன்னொரு மார்க்கம் சந்தைக்கு வரப்போகிறது.
    6. இஸ்ரேலில் திருமணமானவர்கள் பிரிந்திருக்க வேண்டும்: பாலஸ்தீனியர்களை மணமுடித்தவர்களைப் பிரித்து வசிக்க வைக்கிறது இஸ்ரேலிய நீதிமன்றம் & சட்டம்.
    7. ஜெர்மனியின் ராபின் – ஹூட்: அமெரிக்க டாலர் 150-க்கு சாண்ட்விச்; கூச்சி கைப்பைக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று சம்பாதிப்பவர்களிடம் இருந்து திருடினால் தப்பா?
    8. மோச்சே பழங்குடியினருக்குத் தலைவராக இருந்தவர் பெண்: 1600 வருடங்களுக்கு முந்தைய பெரு நாட்டின் பூர்வகுடியினர் சம்பந்தமான ஆராய்ச்சி.
    9. The Revolution Will Not Be Televised: வெனிசுவேலா நாட்டு அதிபர் ஹூகோ சாவெஸ் குறித்த திரைப்படம். உங்கள் ஊரில் திரையிடுகிறார்களா என்றும் அறியலாம்.
    10. PIRELLI FILM – The Call: பிரேல்லி டயர்கள் தயாரிப்பது தவிர, (Rated Adults Only) நாள்காட்டிதான் இதுவரை கொடுத்து வந்தார்கள். இப்பொழுது நவோமி காம்பெல், ஜான் மால்கோவிச்சுடன் திரைப்படம். இணையத்திலேயேப் பார்க்கலாம் (திரைப்படம் சைவ விளம்பரம்தான்; தைரியமாகக் குடும்பத்தோடு பார்க்கலாம்)
    11. FREE Gas Help.com: அமெரிக்காவில் இலவசமாய் பெட்ரோல் பெறுவது எப்படி?


    | |

    Tamil Nadu Ministry

    அமைச்சரவை

    பெயர் – வயது – எத்தனையாவது முறை எம்.எல்.ஏ ஆகிறார் – அமைச்சராக முன்பு எத்தனை தடவை இருந்திருக்கிறார் – வேறு பொறுப்புகள், வாரிசு தகுதி

  • கருணாநிதி – 82 – 11 – 4 – திமுக தலைவர்
  • அன்பழகன் – 84 – 8 – 3 – திமுக பொதுச் செயலாளர்
  • ஆற்காடு வீராசாமி – 69 – 6 – 2 – திமுக பொருளாளர்
  • முக ஸ்டாலின் – 53 – 4 – 0 – திமுக இளைஞரணி செயலாளர்; திமுக துணைப் பொது செயலாளர்
  • கோசி மணி – 76 – 4 – ? – தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்
  • வீரபாண்டி ஆறுமுகம் – ? – ? – ? – சேலம் மாவட்ட திமுக செயலாளர்
  • துரைமுருகன் – 62 – 8 – 2 – திமுக தலைமைக் கழக செயலாளர்
  • பழனிவேல்ராஜன் – 74 – 3 – 0 – முன்னாள் சபாநாயகர்
  • பொன்முடி – 56 – ? – ? – முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர்
  • கே என் நேரு – 53 – 3 – 2 – திருச்சி மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் லால்குடி எம்.எல்.ஏ.; நெப்போலியனின் மாமா.
  • பன்னீர்செல்வம் – 49 – ? – 1 – கடலூர் மாவட்ட திமுக செயலாளர்; திமுக நட்சத்திரம் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியின் வாரிசு
  • ஐ பெரியசாமி – 54 ? – 1 – திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளர்
  • சுரேஷ்ராஜன் – 43 – 2 – 1 – குமரி மாவட்ட திமுக செயலாளர்
  • பரிதி இளம்வழுதி – 47 – 6 – 0 – திமுக துணைப் பொது செயலாளர்
  • எவ வேலு – 54 – 3 – 0 – திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் (பஸ் கண்டக்டராக இருந்தவர்; பல கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்)
  • சுப தங்கவேலன் – 71 – 2 – 0
  • கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – 57 – 8 – ? – விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்
  • அன்பரசன் – 46 – ? – 0 – காஞ்சி மாவட்ட திமுக செயலாளர்
  • பெரியகருப்பன் – 47 – ? – 0 – சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர்
  • என் கே கே பி ராஜா – 40 – 1 – 0 – ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் அமைச்சர் என்கேகே பெரியசாமியின் வாரிசு
  • தங்கம் தென்னரசு – 38 – 2 – 0 – மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் வாரிசு
  • உபயதுல்லா – 60 – 4 – 0
  • மொய்தீன்கான் – 58 – 2 – 0 – தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்
  • என் செல்வராஜ் – 62 – 1 – 0 – திருச்சி எம்.பியாக இருந்தவர்
  • சாமிநாதன் – 42 – 3 – 0 – திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்
  • பூங்கோதை – 42 – 1 – 0 – முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் வாரிசு
  • கீதா ஜீவன் – 36 – 1 – 0 – தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தவர்; திமுக தலைவர் என் பெரியசாமியின் வாரிசு
  • தமிழரசி – 30 – 1 – 0 – மதுரை மேற்கு ஒன்றிய தலைவராக இருந்தவர்
  • கேபிபி சாமி – 56 – 1 – 0 – திருவொற்றியூர்
  • யு மதிவாணன் – 48 – 1 – 0 – திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்
  • கே ராமச்சந்திரன் – 57 – 1 – 0 – நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்

    உதவியவை: தேர்தல் 2006 :: வாரிசு வேட்பாளர்கள் | தினகரன்


    | |

  • Percentage Votes – Dinamani

    தேர்தல் முடிவுகளும் அரசியல் திருப்பங்களும் – இரா. செழியன்

    2001 – 2006 சட்டசபைத் தேர்தல்களில் வாக்களித்தவர்களின் விகிதாசார அளவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் முறையே

    தமிழ்நாடு 59.1% – 70.8%,
    மேற்கு வங்காளம் 75.3% – 82.0%,
    புதுச்சேரி 70.1% – 85.7%,
    அசாம் 74.6% – 79.1% என்று அதிகரித்துள்ளன.

    கேரளத்தில் மட்டும் 72.5% – 72.3% என மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது.

    ஐந்து மாநிலங்களில் வந்து வாக்களித்தவர்களின் விகிதாசாரங்கள்
    தமிழ்நாடு 60.8%,
    புதுச்சேரி 76.1%,
    கேரளம் 71.5%,
    மேற்கு வங்காளம் 78.0%,
    அசாம் 69.1%.

    இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் 2004 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2006 சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகமான ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.

    தி.மு.க. அணிக்கு 44.7% என்றும் அ.தி.மு.க. அணிக்கு 44.1% என்றும் இருப்பதால், இடையில் குறைந்த அளவில் வித்தியாசம் வந்துள்ளது.

    நாம் கடைப்பிடிக்கிற இங்கிலாந்து நாட்டுத் தேர்தல் முறையில் அதிகமான வாக்குகள் பெற்ற வேட்பாளர் மொத்த வாக்குகளில் பத்து சதவிகிதம்தான் விழுந்தன என்றாலும் 5.1 சதவிகிதம் வாங்கிய வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். வாக்கு விகிதாசாரப்படி இடங்கள் கிடைப்பதில்லை. ஜெர்மன் நாட்டில் உள்ள பட்டியல் முறைப்படி, பாதியிடங்கள் நேரடியான தேர்தலாகவும், மறுபாதி இடங்கள் கட்சிகள் பெற்ற விகிதாசார முறையிலும் அமைவதாகவும் இருப்பதைப்போல பல ஆண்டுகளாக இந்தியாவிலும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசப்பட்டு வருகிறது.

    King George III vs Kalainjar Karunanidhi

    தமிழக முதல்வராக அஞ்சாவது முறையாக பதவியேற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. அஞ்சு ஜார்ஜுடன் ஒப்பிட முடியாவிட்டாலும்; அஞ்சாவது ஜார்ஜ் பொருத்தமாக இல்லாவிட்டாலும்; இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜுடன் புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் இன்றைய டாக்டர் கருணாநிதிக்கு ஓர் ஒப்பீடு.

    மூன்றாம் ஜார்ஜ் குறித்தோ கலைஞர் குறித்தோ தகவற் பிழையிருப்பின் சுட்டவும். மூன்றாம் ஜார்ஜ் மன்னர் குறித்த தகவல்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா


    | |

    Burro Festival

    தமிழகத் தேர்தல் நடந்து முடிந்தது போல், மெக்ஸிகோவில் கழுதைத் திருவிழாவும் நடந்தேறி இருக்கிறது. கழுதை ஊர்வலங்கள், அணிவகுப்புகள், கழுதை மாதிரி முகம் அணிந்து கொண்டு நடனங்கள் இடம்பெற்றது. கழுதைகளுக்கிடையேயான ஓட்டப் பந்தயங்கள் முடிவில் வெற்றி பெற்ற கழுதைகளை அறிவித்திருக்கிறார்கள்.

    சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்து பெருந்திரளாக மக்கள் வந்து ‘கழுதை அழகன்‘ & ‘கழுதை அழகி‘ விழாவில் வாக்களித்து கலந்து கொண்டனர். கடந்த நாற்பது வருடமாக நடைபெறும் கொண்டாட்டம் இந்த வருடமும் சிறப்புற நடந்து முடிந்தது.

    பரிந்துரை: ‘சென்ற வார உலகம்’ – சன் டிவி

    விரிவான (நிஜக்) கழுதைத் திருவிழா ஒலிப்பேழை: என்.பி.ஆர்.
    விரிவான (நிஜக்) கழுதைத் திருவிழாப் பதிவு: கார்டியன்

    தொடர்புள்ள பதவியேற்பு வைபவம்: தமிழ் முரசு | இரண்டு


    | |

    What does Chennai Want?

    ஆசை அதிகம் வச்சு
    மனசை அடக்கி வைக்கலாமா?

    சென்னைத் தமிழர்களின் தேடல் எது…
    Chennai remains a close competitor for Sex Searches in Google

    அகில உலக அளவில் யார் செக்ஸை அதிகம் தேடுகிறார்கள்…
    World Trends on Search on Sex - Pakistan #1 (India Not far behind)
    விரிவான செய்தி: இண்டெர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்

    நீங்களும் கூகிள் ட்ரெண்ட்ஸ் கொண்டு ஆராய வாருங்கள்.


    | |

    Idealism – West Wing

    ஐடியலிஸம்‘ என்பதைத் தமிழில் எப்படி சொல்வது?

  • ஸ்டாலின் முதலமைச்சராகவும் ஜெயலலிதா துணை முதல்வராகவும் பதவியேற்றால் எப்படி இருக்கும்?
  • சட்டசபையில் திருக்குறள் மட்டுமல்லாமல் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ ஆரம்பித்து ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ வரை மேற்கோள் காட்டி எதிரெதிர் வாதங்கள் அமைந்தால் எப்படி இருக்கும்?
  • கவர்னராக பிசி அலெக்ஸாந்தர் போன்ற செயல்திறமும் சுயசிந்தனையும் உடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சகத்திடம் வேண்டினால் எ.இ.?
  • மகனின் திருமணத்திற்கு ஆஜராகக் கூட முடியாமல் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடகாவுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் முதல்வர் கிடைத்தால் எ.இ.?
  • கான்வெண்ட் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பாமல், ஊட்டி, கொடைக்கானலுக்கும் ஹாஸ்டல் தள்ளிவிடாமல், அரசுப் பள்ளிக் கூடமே சிறந்தது என்று உளமாற நினைத்து, அந்த அரசுப் பள்ளிக்கே குழந்தைகளை அனுப்புமாறு நடந்து கொள்ளும் அமைச்சர்கள் இருந்தால் எ.இ.?
  • எந்த அமைச்சர் எப்படி செயல்படுவார்; அரசுத்துறை நிர்வாகம் எவ்வாறு திட்டங்களைத் தீட்டி அரசியலுக்கு ஏற்றவகையில் மக்களுக்கு கொண்டு செல்கிறது; பேரங்கள் எப்படி படிகிறது; ஏன்? பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொண்டால் எ.இ.?
  • பேச்சு யார் எழுதித் தருகிறார்கள்? ஆக்கப்பணிகள் எப்படி சொற்பொழிவாகிறது? மத்திய மாநில சுமூக உறவை மதித்து தொடர்ந்து உரையாடி, வர்த்தகமும் சமூகமும் அமைச்சகமும் பின்னிப் பிணைவதையும் உண்ர்ந்து பொதுநலனை முன்னிறுத்தி, தேர்தல் அறிக்கையில் வாக்கு கொடுத்ததை நிறைவேற்றினால் எ.இ.?
  • எதிர்க்கட்சியுடன் கொள்கை அளவில் ஒத்துப் போகும் தீர்மானங்களை இயற்றி, மாவட்ட சகாக்களுடன் நட்பு பாராட்டி, மாநிலத்துக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஒன்று திரளும் எம்.எல்.ஏ.க்கள் வாய்த்தால் எ.இ.?
  • உதாரண மனிதர்களும், காரியத்துடிப்புடன் சமரசம் செய்யாத மனப்போக்குடையவர்களும், குறைகளை எவர் எடுத்து வைத்தாலும் திறம்பட வாதிட்டு வெல்ல நினைப்பவர்களும், அந்த வாதத்தின் இறுதியில் எதிராளி சொல்வது உகந்ததாக இருக்கும் பட்சத்தில் மேலானக் கொள்கையை எடுத்துக் கொண்டு முடித்துக்காட்டும் வைராக்கியமுடையவர்களும் சட்டமன்றத்தை நிறைத்துக் கொண்டிருந்தால் எ.இ.?
  • இவையெல்லாம் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

    அமெரிக்காவில் நினைத்ததை நடத்திக் காட்டிய தொடர் ‘வெஸ்ட் விங்‘ இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவிலேயே நடக்க இயலாத விஷயங்களை மெய்சிலிர்க்க புத்திசாலித்தனமாக நாடகமாக்கிய தொடர். பெண்ணாசை இல்லாத ‘சுதந்திர கட்சி’ ஜனாதிபதி. எதிர்க் கட்சி வேட்பாளரை #2-வாக நியமிக்கும் பரந்த மனப்பான்மை.

    அரிய புத்தகங்களின் முக்கிய takeaways-ஐ சாதாரணமான சம்பாஷணையில் பொருத்தமாக நுழைப்பது. அமெரிக்காவின் வழிமுறைகளை, செனேட், காங்கிரஸ், நீதிமன்றம், ராஷ்டிரபதி, அமைச்சரவை, கவர்னர் போன்ற பல்துறைப் பொறுப்பாளிகளை விளக்கமாக விறுவிறுப்பாகக் காட்டிய அரசியல் தொடர் + பாடம்.

    தொடர்புடைய பதிவு: Commander in Chief – Thinnai | NBC.com > The West Wing


    | |