Tamil Nadu Local Body Elections – Statistics & Details

1.31 லட்சம் பதவிகளை உருவாக்கும் உள்ளாட்சித் தேர்தல்

பா. ஜெகதீசன்

சென்னை, செப். 14: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான நடவடிக்கைகள் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆரம்பம் ஆகிறது.

சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

இத்தேர்தலை அக்டோபர் 24-ம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

இத்தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் இருந்து மொத்தம் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 385 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

29 மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 686 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) இருந்து 8,825 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் இருந்து 969 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் இருந்து 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் இருந்து 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.

எந்தப் பதவிக்கு எவ்வளவு டெபாசிட்: இப்பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.

சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.

மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.

பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.250.

மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.

பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.

இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும். எனினும், தேர்தல் முடிவுகளை மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக உடனுக்குடன் ஆன்-லைனில் வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அக்.24-க்குள் தேர்தல்: தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இத்தேர்தலைத் தள்ளி வைக்க இயலாது. எனவே, அக்டோபர் 24-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சிகள் பல்வேறு கட்டங்களாக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் மொத்தம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

பதற்றம் ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி வாக்குப் பதிவை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ADMK MLA is Stripped of Party post for Acknowledging MK Stalin’s Contributions

Dinamani.com – TamilNadu Page

ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதன் எதிரொலி: கட்சிப் பதவியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ. நீக்கம்

சென்னை, செப். 14: உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் ஜெயலலிதா பேரவையின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார் அவர். தற்போது அப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்ட தொடக்க விழாவில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் கலந்துகொண்டார்.

திராவிட இயக்கங்களை ஒற்றுமைப்படுத்தி சகோதர யுத்தத்துக்கு முடிவு கட்டி தமிழகத்தை பிரகாசிக்க செய்யும் பொறுப்பு மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது என்று அவர் பேசினார்.

அதோடு அரசியல் நாகரீகம் தெரிந்தவர், பண்பாளர் என்றெல்லாம் ஸ்டாலினைப் பாராட்டினார்.

இந்நிலையில் எஸ்.வி. சண்முகம் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே எம்.எல்.ஏ. பதவியை சண்முகம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உள்பட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

60 ஆயிரம் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட நான், ஒருசிலர் கோருவதற்காக ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சண்முகம் கூறியுள்ளார்.


திமுக- அதிமுக இணைப்பை மக்கள் விரும்புகின்றனர்: மதுரை அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி. சண்முகம் பேட்டி

மதுரை, செப். 14: திமுக – அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர் என, மதுரை மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் (அதிமுக) தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

திராவிட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசியதில் தவறில்லை.

அதைத் தவறு என்று கூறினால், தொடர்ந்து அத்தவறை செய்யத் தயங்கமாட்டேன். நிர்பந்தங்களுக்கும் பயப்படமாட்டேன்.

திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைப்பு என்ற கருத்துடன், அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுடனும் மென்மையான அணுகுமுறையை திமுக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். எனவே என் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.

திராவிட இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் நாகரிகமான அரசியல் நடைமுறை ஏற்பட வேண்டும். மதுரை மேற்குத் தொகுதியில் நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம்.

திமுக-அதிமுக ஒருங்கிணைப்பை மக்கள் விரும்புகின்றனர். அதற்கான நல்ல விதையை விதைத்துள்ளேன். அது நன்றாக வளரும். இணைப்பு ஏற்படாவிட்டால் தேவையில்லாத தேமுதிக போன்ற அரசியல் களைகள் உருவாகிவிடும்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய கருத்துகளைக் கட்சித் தலைமையிடமும் தெரிவித்துள்ளேன். ஆனால், தலைமையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

திமுக-அதிமுக இணைப்புக்கு நீண்ட காலத்திற்கு முன் தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் முயற்சி மேற்கொண்டார். தற்போது நான் முயற்சித்துள்ளேன்.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்து 38 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இன்று வரை இணையவில்லை.

இருப்பினும், ஒரே தளத்தில் நின்று செயல்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அதுபோன்ற நிலை தி.மு.க- அ.தி.மு.க.விடமும் ஏற்படலாம்.

இக்கருத்தை தெரிவித்ததால் நான் அ.தி.மு.க.விலிருந்து விலகுகிறேன் என்று அர்த்தமல்ல. நான் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எனவே, அ.தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. என்னை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.வினருக்கும் இல்லை.

திமுக- அதிமுக ஒருங்கிணைப்புக் கருத்தைத் தெரிவித்ததால் என் மீது தாக்குதல் ஏதும் நடைபெறலாம் என்று கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Local body elections in Tamil Nadu – Allocations for Lady Candidates

Dinamani.com – TamilNadu Page

34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு :: ஆர்.ராமலிங்கம்

வேலூர், செப்.13: தமிழகத்தில் 34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 இடங்கள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சிகள் (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்):

  • கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி (திருவாரூர்),
  • சிதம்பரம் (கடலூர்),
  • கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),
  • தஞ்சாவூர், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),
  • ஆரணி (திருவண்ணாமலை),
  • மணப்பாறை (திருச்சி),
  • ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி (விருதுநகர்),
  • தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை ,
  • திருமங்கலம் (மதுரை),
  • போடிநாயக்கனூர், கம்பம் (தேனி),
  • மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி (கோவை),
  • சங்கரன்கோயில் (திருநெல்வேலி),
  • பெரியகுளம், சின்னமனூர் (தேனி),
  • சீர்காழி (நாகப்பட்டினம்),
  • கரூர், மதுராந்தகம் (காஞ்சிபுரம்),
  • அரக்கோணம் (வேலூர்),
  • உசிலம்பட்டி (மதுரை),
  • கிருஷ்ணகிரி.

    தாழ்த்தப்பட்ட மகளிருக்கு

  • செங்கல்பட்டு (காஞ்சிபுரம்),
  • துறையூர் (திருச்சி),
  • திருப்பத்தூர் (வேலூர்),
  • ஆத்தூர் (சேலம்) ஆகிய நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கு

  • தாராபுரம் (ஈரோடு),
  • புளியங்குடி (திருநெல்வேலி),
  • திண்டிவனம் (விழுப்புரம்),
  • தேனி அல்லிநகரம் (தேனி),
  • திருவள்ளூர்,
  • ஆவடி (திருவள்ளூர்),
  • மேட்டூர் (சேலம்) நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சிகள்
    மதுரை மாநகராட்சி மகளிர் பொதுவுக்கும், சேலம் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூன்றாம் நிலை நகராட்சிகள்
    மூன்றாம் நிலை நகராட்சிகளில் 17 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அதன் விவரம்: தாழ்த்தப்பட்ட மகளிருக்கானவை:

  • கூடலூர் (வடக்கு) (நீலகிரி),
  • புஞ்சைபுளியம்பட்டி (ஈரோடு),
  • பூந்தமல்லி (திருவள்ளூர்).

    மகளிர் (பொது):

  • தாராபடவேடு,
  • ஜோலார்பேட்டை,
  • சத்துவாச்சாரி (வேலூர்),
  • கூடலூர் (நகரம்) (தேனி),
  • வெள்ளக்கோயில், குனியமுத்தூர் (கோவை),
  • ஆனையூர், திருப்பரங்குன்றம் (மதுரை),
  • அனகாபுத்தூர் (காஞ்சிபுரம்),
  • தாந்தோனி, இனாம்கரூர் (கரூர்),
  • கள்ளக்குறிச்சி (விழுப்புரம்),
  • அரியலூர் (பெரம்பலூர்),
  • திருத்தணி (திருவள்ளூர்).

    நரசிங்கபுரம் (சேலம்), மணலி (திருவள்ளூர்), ஜெயங்கொண்டம் (பெரம்பலூர்), திருத்தங்கல் (விருதுநகர்) ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Thamizmanam vs Thenkoodu – Alexaholic

    1. Daily Reach :: கடந்த மாதத்தில் வாசகர்கள் அதிகம் நாடியது: தமிழ்மணம் x தேன்கூடு

    (ஆகஸ்ட் 30, 15 இரண்டு நாளிலும் எப்படி இவ்வளவு கூட்டம்?)

    2. ஆறு மாத அலசல்: தமிழ்மணம் x தேன்கூடு

    (வாரயிறுதிகளில் கூட்டம் அலைமோதாது!)

    3. மூன்று மாதம்: தமிழ்மணம் x தேன்கூடு x பத்ரியின் வலைப்பதிவுகள்

    (பத்ரியை தேன்கூட்டை விட நிறைய பேர் பார்க்கிறார்கள்!)

    நீங்களும் உங்கள் பதிவுகளை இட்லி-வடை போன்ற நட்சத்திரப் பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். (Alexaholic) அலெக்ஸாவின் மிகப் பெரிய நிறை (எதிர்மறையாக பேச வேண்டாம் என்னும் நல்லெண்ணத்தால்) மலையையும் மடுவையும் சீர்தூக்க இயலாது. எனவே, தினமலர், தினகரன், தினத்தந்தி என்று ஒரு பக்கம் வரைபடம் இடலாம்; அல்லது தமிழ் முரசு, மாலை மலர் என்று இன்னொரு பார்வை காணலாம். மொத்தமாக தி ஹிந்து, நியு யார்க் டைம்ஸ், ஈ-தமிழ் என்று போடச் சொன்னால் அலெக்ஸாவின் முடிவுகள் போதாமையை வெளிப்படுத்தும்.

    நன்றி: Alexaholic: Website Statistics and Website Traffic Graphs & Wikipedia.org is more popular than… – Meta


    | |

    News Stories – Sep 1st Week

    1. சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க. & கண்சிமிட்டும் ரஜினி!எஸ்.சரவணகுமார்

      பணம் காசக் கண்டு விட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலமாச்சுதடா கண்மணீ!

    2. அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி :: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி
    3. பாஜகவினரின் தாக்குதலைக் கண்டித்து லக்நௌவில் கத்தோலிக்க பள்ளிகள் மூடல்

      லக்நௌவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோபோ குமார் மண்டல் என்ற கிறிஸ்தவர் கலந்துகொண்டார். பிரார்த்தனையின்போது அவர், யேசு கிறிஸ்து தனது உடலில் கலந்திருப்பதாக கூறினார். இதனைக் கண்ட மாணவர்கள் பயந்துபோயினர்.

      இந்நிலையில், லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குள் பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். கிளர்ச்சியுடன் வந்த அவர்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்.

    4. தென்னிந்திய சினிமா, ‘டப்பிங்’ கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி
    5. அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு :: இளைஞர்கள் அதிருப்தி
      • அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்
      • தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது
      • அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது
    6. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிவதை தவிர்க்கத் தயாராக இருந்தேன் :: ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேச்சு
    7. மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை
    8. பாக். துருப்புகள் நடமாட்டம்:

      பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பழங்குடி இனத் தலைவரும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தவருமான அக்பர் பக்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கன் எல்லையில் தலிபான்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    9. சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர் :: சோ. முருகேசன்சா. பக்கிரிசாமிப்பிள்ளை நூற்றாண்டு நாள்.
    10. குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு :: சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தின் (SCARF) போட்டி
    11. நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை :: வி. கிருஷ்ணமூர்த்தி

    சென்ற வார செய்தித் தொகுப்பு


    | |

    Common Man’s Sep. 11 Impact


    நன்றி: Hutch Owen – Let’s Get Furious

    நன்றி: BBC NEWS | Special Reports | 629 | 629 | How 9/11 changed America: In statistics


    | | | |

    Creamy Layer Exclusion for BCs – Veeramani & KM Vijayan

    Dinamani.com – TamilNadu Page

    வசதியுள்ளோருக்கு இடஒதுக்கீடு மறுக்கும் பரிந்துரை கூடாது: வீரமணி எதிர்ப்பு

    சென்னை, செப்.12: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையில், பணவசதி படைத்தோருக்கு விலக்கு அளிக்கும் பரிந்துரையை ஏற்க முடியாது என தி.க. தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையை செப்.15-ல் அரசுக்கு சமர்ப்பிக்கப் போவதாக, அதற்கான குழுவின் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

    பணவசதி படைத்தோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தையும் இதில் சேர்க்கப் போவதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, இதுபோன்ற திட்டத்தைச் சேர்க்க வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டது. எனவே, மேற்படி திட்டத்தை பரிந்துரையில் சேர்ப்பது, இந்த முடிவுக்கு முரணானதாகும்.

    திறந்த போட்டிக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவுக்கோ இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை. அதுதான் சரியான சமூக நீதியாகும். பிற்படுத்தப்பட்டவர்கள் மீது மட்டும் ஏன் இந்தத் தாக்குதல் தொடுக்க வேண்டும்?

    வீரப்ப மொய்லியின் அறிக்கையில் இதுகுறித்த பரிந்துரை இருக்குமானால், நாடு முழுவதும் அந்த அறிக்கையை தி.க. சார்பில் எரிப்போம் என வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


    பிற்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    புதுதில்லி, செப். 12: பிற்பட்ட வகுப்பினரில், “கிரீமிலேயர்‘ என அழைக்கப்படும் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    கடந்த 1992-ம் ஆண்டு மண்டல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் கூறியதை அடுத்து, நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் அல்டமாஸ் கபீர் ஆகியோர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தனர்.

    “கன்ஸ்யூமர் கேர்’ என்ற நுகர்வோர் அமைப்பு, இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. விவரம்:

    மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பிற்பட்ட வகுப்பினரில் யாரைச் சேர்ப்பது, உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா, இல்லையா என்பதைப் பார்த்து, அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்குமாறு மண்டல் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, அரசைக் கட்டுப்படுத்தும்.

    தீர்ப்புக் கூறப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழகம் மட்டும் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றவில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், அவர்களில் வசதி படைத்தோர் அதிலிருந்து விலக்கப்படாததால், தகுதியுள்ளவர்களுக்கு அந்த சலுகை கிடைப்பதில்லை. எனவே, பிற்பட்டோரில் வசதி படைத்தோரை அடையாளம் கண்டு, அவர்கள் இட ஒதுக்கீடு பயனை அனுபவிப்பதிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

    US Open Tennis

    யு.எஸ். ஓப்பன் டென்னிஸ்

  • ஆனா கோர்னிகோவா மாதிரி பதுமை நடை மட்டும் பயிலாமல், வெற்றியும் கண்டார் மரையா ஷரபோவா
  • மகளிர் & ஆடவர் இறுதிச்சுற்று, ஐந்து மலை கடந்த அகஸிக்கும் பாக்தாதிசுக்கும் இடையேயான இரண்டாம் சுற்று என்று மூன்று ஆட்டங்களை மட்டுமே தொலைக்காட்சியில் பார்க்க நேரம் கிடைத்தது.
  • பெக்கர் வெல்ல வேண்டும் என்று பிரார்தித்த காலந்தொடங்கியே, முக்கிய தருணங்களில் ஓரிரு புள்ளிகளை தட்டிச் சென்றால், ஆட்டத்தை வென்று விடலாம் என்று அறிந்திருந்தேன். அந்த அதிமுக்கிய 30-40 கணக்கு சமயத்தில், நிதானம் தவறாமல், பதறாமல், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்பவர்களைப் பார்த்தால் பொறாமை கலந்த ஆச்சரியம் வருகிறது.
  • இறுதியாட்டத்தின் மூன்றாவது செட். 6-5 என்று பின்தங்கியிருந்தாலும் சொந்த சர்வீஸை தக்கவைத்தால் டை ப்ரேக்கருக்கு இழுத்து விடலாம். தடாலடியாக 0-40 என்று ரோடிக் சரியும்படி, தன்னுடைய ஆட்டத்தினை உயர்த்திக் காட்டுகிறார் ரோஜர் ஃபெடரர். அதுவரை பரிமளித்து வந்த ஆண்டி ரோடிக் சின்ன சறுக்கலில் தன்னம்பிக்கை இழந்து ஆட்டத்தைக் கைவிடுகிறார்.
  • மகளிர் இறுதியில் மரியாவின் வீச்சுக்கு ஜஸ்டினால் (Justine Henin-Hardenne) ஈடே கொடுக்கமுடியவில்லை. தன் அழகை நன்கறிந்தவர், ஈவினிங் கௌன் மிளர ஒவ்வொரு ஆடையில் தோன்றினாலும், ‘ஆட்டத்தின் மேலே கண் வையடா தாண்டவக்கோனே’ என்று நிறைவாக வென்றார். கடந்த முறை சந்தித்தபொழுதெல்லாம் இதே ஜஸ்டினிடம் ஜகா வாங்கி மண்னைக் கவ்வியதை நினைத்து மிரளாமல், எடுத்தவுடன் தோல்விமுகமாக 0-2 என்று தடம்புரண்டாலும், பொறுமையாக முன்னேறி, உணர்ச்சிகளைப் புதைக்காமல் வெளிப்படுத்தி, சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பிபிசி செய்தி: ஐம்பதினை எட்டும் நவரடிலோவோ ஐம்பது ஒன்பது பட்டங்களுடன் விடைப்பெற்றார் – ஓய்வு பெறும் வயதே அல்ல. இன்றும் ஆடினால் கூட, எதிராளி கெலிப்பது கஷ்டம்தான்.
  • The Unsung Hero : outlookindia.com – மார்ட்டினாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்தியாவின் லியாண்டர் பியஸ். சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில் இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை சற்று குறைச்சல்தான்.


    | |

  • Vettaiyaadu Vilaiyaadu – Madhavan’s Review

    சொதப்பல் விளையாட்டு – மாது

    வெள்ளித்திரையில் ‘வேட்டையாடு விளையாடு‘ கண்டு களித்த சக பாஸ்டனார் மாதுவின் மடல்.

    தலைப்பை படித்துவிட்டே புரிந்திருக்கும். வேறு தலைப்பு தோன்றவில்லை – மன்னிக்கவும். பலருக்கு புரிந்திருக்கும் வேட்டையாடு விளையாட்டை பற்றிய கட்டுரை என்று. விறுவிறுப்பாக ஆரம்பிக்கின்றது கதை. கொடூரமான கொலை. துப்புத் துலக்க வருகிறார் உயர் காவலதிகாரி. பிணத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்குப் பிறகு படம் நகர மறுக்கின்றது. ஏதேதோ காட்டி படத்தை கஷ்டப்பட்டு நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். (பார்வையாளர்கள் இஙகேயே வெளியே செல்லலாம்)

    மிக வலுவான கதை முடிச்சை வைத்துக்கொண்டு, அதை அவிழ்ப்பதில் தவறியிருக்கிறார்கள். கொடூரக் கொலைகளுக்கு வலுவான காரணத்தையும், வில்லனையும் முன் வைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் (Hannibalன் படத்தை வில்லனின் அறைச் சுவற்றில் ஒட்டி விட்டால், வில்லன் ஒரு Hannibal Lecterஆக ஆகிவிடமுடியாது). வில்லனை கண்டுபிடிக்கும் விதத்தில் எந்தவித நுட்பமும் இல்லாதது ஒரு thrillerன் மிகப் பெரிய குறை. வில்லனின் கதாபாத்திரம் மிக மெலிதாக படைக்கப் பட்டிருக்கிறது. தலை நிறைய முடி வைத்துக் கொண்டு இரைந்து பேசினால் (பேசுவது பாதி புரியவில்லை) சைகோ வில்லனாக ஆகி விட முடியாது. நடு நடுவே வில்லன் தான் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக் உலகை சாவிலிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று வசனம் பேசுகிறார், எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை பார்வையாளர்களை சைகோ ஆக்கப் பார்க்கிறார்களோ?

    கமல்-ஜோதிகா காதல் filler valueக்காக சேர்த்திருப்பது போலிருக்கிறது. ஏற்கனவே தோய்ந்த கதையே மேலும் தொய்ய வைக்கிறது. படத்தில் இருந்த சிறு விறு விறுப்பையும் போக்கி விடுகிறது.

    கதாநாயகன் மிகவும் கஷ்டப்படாமல் வில்லனை கண்டுபிடித்து விடுகிறார். இங்கேயாவது படத்தை முடித்திருக்கலாம். பார்வையாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். “ஒ…இன்னும் இரண்டரை மணி நேரம் முடியவில்லையா இன்னும் கொஞ்சம் இழுப்போம்” என்று வில்லனை தப்பிக்க விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரிரு தமிழ்ப் படங்களைப் பார்த்திருந்தால் கூட முடிவை யூகித்திருக்க முடியும்.

    படத்தில் ஒரிரு நிறையும் இருக்கிறது – ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.

    இந்த படத்திற்கு ப்ராயச்சித்தமாக கமலும் கௌதமும் தனித்தனியாக ஒரு நல்ல படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகிற்கு சமர்ப்பிக்க கடவதாக.


    | | |

    1000 Years from Now: Desires & Predictions

    தெரியல! :: இன்னும் ஆயிரம் ஆண்டுகளில்… என்ன நடக்கும் என்று கேட்கிறார்.

    விரிவாக நிதானமாக எழுதி முடிக்கும் வரை… உடனடியாக தோன்றியது:

    நன்றி: Baldo – Online Comics

    என்னை விட சிறப்பாக அலசும் ஐவரை இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்:

    1. வெங்கட்
    2. முத்து (தமிழினி)
    3. உஷா
    4. கே வி ராஜா
    5. தமிழ் சசி


    | |