காசு கொடுத்தால் பத்திரிகைகள் விளம்பரம் கொடுக்கும். தேர்தல் நாளன்று முதல் பக்கத்தை தாரை வார்த்துத் தரும். நடிகர் பணம் கொடுத்தால், அவரின் படத்தை அட்டையில் போடும்.
அமெரிக்காவை விட பணக்கார நாடாகி வரும் சீனா சும்மா இருக்குமா?
எங்களிடம் பாலும் தேனும் ஓடுகிறது. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். கம்யூனிசத் தலைவர்கள் எல்லோரும் உத்தமர்கள். எந்த டென்னிஸ் வீராங்கனைகளையும் வன்புணர்வு எதுவும் செய்வதில்லை. பேச்சுரிமை இருந்தாலும் எவரும் வாய்திறப்பதில்லை. அவ்வளவு கேளிக்கைமயமாக குடிமக்கள் பொழுதுபோக்குகிறார்கள். எப்போதும் இயற்கையோடு ஒன்றோடு ஒன்றாக இயைந்து வாழ்கிறார்கள். ஆடல், பாடல், இசை என உற்சாகமாக ஓய்வெடுக்கிறார்கள். நஞ்சில்லா வேளாண்மை உணவை சல்லிசாக சோஷலிசம் விற்பதால் எல்லோரும் நலமாக உண்கிறார்கள்.
திராவிட மேடை தோற்றது! கட்சிப் பிரச்சாரங்கள் கூசி நாணும் அளவு சீனாவை எப்படி உலகிற்கு சந்தையாக்கம் செய்கிறார்கள்?
சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.
அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.
அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.
“வெப்3-இல் வேலை செய்ய $500,000 சம்பளம் கொடுக்கிறோம். வாங்க…” என்கிறார்கள்.
‘அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்.எஃப்.டி.-இல் கிடைத்த லாபத்தை வைத்து சான் ஹோஸே நகரத்தில் மூன்று மில்லியன் டாலர்கள் ரொக்கமாகக் கொடுத்து வீடு வாங்கிவிட்டேன்!” என்கிறார்கள்.
இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. நிஜமாகவே பற்பலரின் அனுபவம்.
சமூக ஊடகம், நேரடிச் சந்தை, இடைத் தரகரில்லாத வியாபாரம் – 2010கள்
இப்பொழுது க்ரிப்டோ, பிட்காயின், ப்ளாக்செயின், மாற்றமுடியா முத்திரை (NFT), மெய்யுரு (non fungible token), மெட்டா, மெய்நிகர் உலகம் – 2020கள்.
இந்த நுட்பங்களுக்கு நுழைவாயிலாக பானுமதி ந. எழுதும் தொடர் அமைந்திருக்கிறது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக கட்டுரைகள் இருக்கின்றன:
1. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த சங்கேத பட்டுவாடாக்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன?
2. இந்த Decentralized Autonomous Organization, DeFi எல்லாம் வைத்து செல்வம் சேர்ப்பது ஒரு சிலரால் மட்டுமே ஆக்கிரமிப்புக்குள் அடங்கி, மற்ற எல்லாருக்கும் சில்லறைக் காசு மட்டுமே அள்ளித் தெளிக்கப்படுகிறதா?
பணம் மட்டுமல்ல. நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும்… பயணத்துறை, கல்வித்துறை, விவசாயம், கட்டுமானம், மருந்து, உடல்நலம், உணவு, கேளிக்கை, இலக்கியம், அச்சு, செய்தித்துறை, இசை – எதுவாக இருந்தாலும் நுண்நாணயம் தன் வீச்சை செலுத்தப் போகிறது. அதை பயன்படுத்த நீங்கள் தயாரா?
முதல் பகுதிக்கான அறிமுகம்:
நாய் மனிதனைக் கடித்தால் செய்தி இல்லை; மனிதன் நாயைக் கடித்தால் செய்தி.
அது போல் உங்கள் நிறுவனத்தையோ நகரத்தையோ கள்வர்கள் வந்து கணினியை முடக்கினால் செய்தி இல்லை. நீங்கள் அந்தக் கயவர்கள் யார், எவர் எனத் தெரிந்து கொண்டால் மட்டுமே செய்தி.
இதைக் குறித்த விரிவான கட்டுரையை இந்த சொல்வனம் இதழில் வாசிக்கலாம்.
சின்ன கம்பெனி முதல் பெரிய ஃபார்ச்சூன் 500 அமைப்பு வரை எல்லோரும் கொந்தர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் கேட்கும் பிட்காயின் / எதிரீயம் தொகையை பட்டுவாடா செய்கிறார்கள். அதன் பின் தங்கள் வியாபாரத்தை நிர்வாகத்தைத் தொடர்கிறார்கள்.
நாடுகளே இதில் தங்கள் ஆள்களை உலவ விட்டிருக்கிறார்கள். சீனா, ருஷியா போன்ற நாடுகளுக்கு இது அதிகாரபூர்வமற்ற திருட்டு வியாபாரம். உக்ரைன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இது கண்ணாமூச்சி ஆட்டம்.
முதல் பகுதியை ந. பானுமதி சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.
– அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் இதனால் என்ன லாபம்?
– கள்ள இணையம் எனப்படும் டார்க் வெப் எப்படி இயங்குகிறது?
– கறுப்பை வெளுப்பாக்குவது போல் புலப்படா இணையப் பணம் எவ்வாறு அமெரிக்கன் டாலராக மாறி நிதிப் புழக்கத்திற்கு விடப்படுகிறது?
– காப்பீடு நிறுவனங்கள், கஞ்சா விற்பவர்கள், தகாத செயல்கள் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகளாக இருந்த காலம் மாறி எப்படி முறைசார்ந்த அடுக்குமுறை அதிகாரவர்க்கத்தின் அடியில் ஒழுங்காக இயங்குகிறார்கள்?
Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.
சில எண்ணங்கள்:
1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.
3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?
அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்
ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்
இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்
ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை
உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.
4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?
i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?
ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?
iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?
iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.
5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.
6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.
7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.
8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.
9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.
10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.
இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.
முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.
நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.
இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.
1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.
ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.
‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)
பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?
அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.
‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.
ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.
அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.
அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).
படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..
மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.
சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.
மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.
ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.
ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.
அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.
அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.
தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.
கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:
பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.
2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.
கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.
மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”
இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.
மயிலாப்பூர் டி.எஸ்.வி கோவில் தெருவில் ஒரு சின்ன அறையில் அவரின் பார்வையறை இருக்கும். அந்தத் தெருவிற்கு ஏன் “டாக்டர் நாகேஸ்வரன் தெரு” என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.
அவர் குழந்தை நல மருத்துவர். அவர் ஒரு மனநல மருத்துவரும் கூட. அவரை குருஜி என்றும் சொல்ல வேண்டும். பலர் அவரை தங்களின் ஆலோசகர் + வழிகாட்டுனர் ஆகவே பார்த்தார்கள்.
சுருக்கமாக நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையானவர். வாழ்க்கை சிக்கல்கள் ஆகட்டும்; உடல்நலக் குறைபாடுகள் ஆகட்டும்; பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றோருக்கு சுருக்கமான தீர்வுகளை ஐந்து ரூபாயில் தந்தவர்.
மயிலையில் நிறைய விஷயங்களுக்கு கூட்டம் அலை மோதும். வருடத்திற்கொரு முறை அறுபத்து மூவர். ஆண்டிற்கொரு முறை வைந்த ஏகாதசியின் போது ஸ்ரீனிவாசப் பெருமாள். கிறிஸ்துமஸ் இரவின் போதும் புனித வெள்ளி காலத்தின் போதும் சாந்தோம் சர்ச். ஆனால், நாகேஸ்வரன் எப்பொழுதெல்லாம் அவர் க்ளினிக்கில் இருக்கிறாரோ, அப்பெழுதெல்லாம் அந்தத் தெருவே ரொம்பி வழியும்.
சாதாரண பொது சந்திப்பு, சிறப்பு வழி, ஐநூறு ரூபாய் வழி, பின் வழி, வி.ஐ.பி. வழி என்பதெல்லாம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் உரியதல்ல. டாகடர் நாகேஸ்வரனுக்கும் உரியது. சொல்லப் போனால், திருமலை தேவஸ்தானத்திற்கு இவர்தான் வழிகாட்டி.
மருத்துவமனையை நடத்தும் நேரம் போக, தன் நோயாளிகளின் நல்ல / கெட்ட விஷயங்களுக்கும் தவறாமல் ஆஜர் ஆவார். காதுகுத்து, கல்யாணம் என்று பத்திரிகை வைத்தால், அவரின் அக்மார்க் சிரிப்புடன் வருவார். ஓரமாக உட்கார்ந்திருப்பார். சகஜமாகப் பேசுவார். உங்களை இயல்பாக்குவார்.
நான்கைந்து முறை அவரைப் பார்க்க நான் சென்றிருக்கிறேன். கடுமையான ஜுரம், வாந்தி / பேதி, உடல்கட்டிகள் என்று விதவிதமான உடலியல் சிக்கல்களுடன் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குரிய கவனிப்பையும் மருந்தையும் கொடுத்துவிட்டு, அவர் என்னிடம் பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்.
‘நீ ஏன் மதராஸ் மொழியில் பேசுகிறாய்? நல்ல தமிழில் உரையாட வருமா?’; என் அம்மாவைப் பார்த்து, “இந்தப் பையனுக்கு சுத்தமா பிராமண பாஷையே வருவதில்லை… இல்லியா?” – வந்த சிக்கல் போயேவிடும். உண்மையான சிக்கல் உரைக்கும்.
“வடக்கிந்தியா வாசம் எப்படி இருக்கிறது? வீட்டை விட்டு தொலைதூராம் இருக்கிறாயே… பிரிவை எவ்வாறு சமாளிக்கிறாய்?”
“ஆளைப் பார்த்தால் மூன்று வேளை சாப்பிடற மாதிரியே தெரியலியே! பூஞ்சான் மாதிரி இருக்கே… புரதச் சத்து சேர்த்துக்கோ; கார்த்தாலே சாப்பிடாம இருக்கியோ?”
அவரைப் போல் உழைக்க வேண்டும். சக உயிர்கள் மீது கரிசனமும் பரிவும் வேண்டும். சரியான கவலைகளை நோக்கி நமக்குத் தெரிந்தவர்களை முன் செலுத்த வேண்டும்.
வாழும் காலத்தில் ஆரவாரமின்றி மருத்துவர் நாகேஸ்வரன் போல் சுற்றத்தினாரின் மகிழ்ச்சிக்காவும் ஆரோக்கியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் இயங்க வேண்டும்.
நெட்ஃப்ளிக்சில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” பார்த்தேன். அனுராக் பாசுஇயக்கியது. கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை.
சோகர் பாலி
மான்பஞ்சன்
உடைந்த கூடு
எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)
டுய் பான் (இரண்டு சகோதரிகள்)
மிருனால் கி சித்தி
அதிதி
காபூலிவாலா
The stories by themselves may not read great (now).
Assume for a second (hypothetically), a well-trained person who is good in literal translation brings it to Tamil – It will be verbatim and plain.
but, The screen adaptation, the sets (art director), time machine going to the 19th century, beautiful costumes, coloring, photography, rustic scenery – all add magic to the short stories/fiction.
Did I say, the women in this series are just nostalgic and beautiful? The same actresses in other films were never showed them in this light.
It is relaxing, enjoyable, and pleasant. When I am in tough times (job loss, covid, other sad events), I like to watch feel-good films. When life is good (promotion, arrival of newborns, good events), I like to watch depressing movies, dystopian sci-fi.
So, I liked this Tagore series on Netflix.
via interweb
“துன்பத்தில் ஒரு பெண் இல்லை” – ரவீந்திரநாத் தாகூரின் கதைகள் சக்திவாய்ந்த பெண்களை சித்தரிக்கின்றன
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் முற்போக்கான, தைரியமான, மற்றும் அவர்களின் காலத்திற்கு முன்னால் இருந்த கதைகளுக்கு பெயர் பெற்றவர். இந்த கதைகளின் தொகுப்பானது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” என்ற பெயரில் அனுராக் பாசு இயக்கியது. இது EPICசேனலில் ஒளிபரப்பப்பட்டது, மேலும் இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி தற்போது நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அனுராக் பாசு வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான தொடர்பைக் கொடுத்தார், மேலும் நடிகர்கள் தங்கள் பங்கை மிகச்சிறப்பாக நடித்து இந்த கதைகளை உயிர்ப்பிக்க வைத்தனர். கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை. தாகூரால் நெய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பெண்கள் பலவீனமானவர்களாகவும் சார்புடையவர்களாகவும் கருதப்பட்டு ஆணாதிக்க வங்காள சமுதாயத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளான காலங்களில் தைரியமாக இருந்தன. ரவீந்திரநாத் தாகூரின் சில கதைகளின் பட்டியல் இங்கே, பெண் கதாபாத்திரங்கள் அவற்றின் காலத்திற்கு முன்னால் இருந்தன, தங்களுக்குள் புரட்சிகரமாக இருந்தன.
1. சோகர் பாலி
ஆதாரம்: தாசா புதுப்பிப்புகள்
சோகர் பாலி என்பது ஒரு பெங்காலி சொல், அதாவது ‘கண்ணில் மணல்’ அல்லது ‘கண்ணில் உள்ள துகள் தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது’. இந்த சொல் தனிநபர்களுக்கிடையேயான உறவுகளின் சிக்கலான வலையை மிகச்சரியாக விவரிக்கிறது, குறிப்பாக இந்த வார்த்தை ஒரே மனிதனை விரும்பும் இரண்டு பெண்களுக்கு இடையிலான பொறாமையை விவரிக்கிறது. ராதிகா ஆப்டே, ஆரம்பத்தில் விதவை பெற்ற பினோதினி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தவர், ஆஷலதாவை திருமணம் செய்து கொண்ட மகேந்திராவின் மீது கண்களைக் கொண்ட ஒரு பெண்மணியாக சித்தரிக்கப்படுகிறார். பினோடினி ஒரு விதவை, இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவாக கருதப்பட்டது. மகேந்திராவை அவளது சிற்றின்பத்தால் கவர்ந்திழுக்க முயற்சிக்கையில், அவளது பாலுணர்வை ஆராய அவளுக்கு ஒரு வெறி இருந்தது. இது காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றின் கலவையாக இருந்தது, ஏனென்றால் பினோடினியை கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை மகேந்திர நிராகரித்தார், மேலும் அழகான ஆனால் படிக்காத பெண்ணாக இருந்த ஆஷலதாவை மணந்தார். தனது வாழ்க்கையில் எந்த விதியை எதிர்கொண்டாலும் அது மகேந்திரா மற்றும் அஷலதா தான் என்று பினோடினியின் இதயத்தில் ஆழ்ந்த மனக்கசப்பு இருந்தது, மேலும் அவர் அவருக்கு ஒரு சிறந்த போட்டி என்று அவர் நம்பினார். அவள் ஆஷலதாவுடன் நட்பு கொண்டிருந்தாள், இது மகேந்திராவை நெருங்குவதற்கான வாய்ப்பாகக் கண்டாள்.
பினோடினியின் விதவை அவளது பாலியல் ஆசைகளை அடக்கச் செய்யவில்லை. அவர் ஒரு வாம்பாக சித்தரிக்கப்படுகிறார் என்றாலும், அவர் சூழ்நிலைகளுக்கு பலியானார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அவளுடைய உரிமை அவளுடைய விதியால் பறிக்கப்பட்டது. அவர் ஒரு துறவி அல்ல, ஆனால் ஒரு பெண், அதன் செயல்கள் அன்பு, காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் நகர்த்தப்பட்டன, அது அதிக உயிர்களை நாசமாக்கியது மற்றும் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதை உணராமல். பல்துறை நடிகையாக ராதிகா ஆப்தே பினோடினியின் பாத்திரத்திற்கு நியாயம் செய்தார், இது தாகூரின் கதைகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியது.
2. Maanbhanjan
source: instagram
ஒரு அழகான மற்றும் திறமையான பெண்மணியான கிரிபாலாவைச் சுற்றி கதை சுழல்கிறது, அவர் ஒரு பணக்கார ஆனால் மோசமான நில உரிமையாளரான கோபிநாத்தை மணந்தார். அவர் மீதான காதல் இழந்து அவர் ஒரு நாடக நடிகை லத்திகாவைப் பார்க்கத் தொடங்கினார். ஒருமுறை, கிரிபாலா தனது கணவர் தன்னைப் பற்றிய அலட்சியத்தின் மூலத்தைக் காண ரகசியமாக தியேட்டருக்குச் சென்றார். லத்திகா நடித்த லைலா மஜ்னுவின் நாடகத்தைப் பார்த்த அவர், மயக்கமடைந்தார். கணவனை மீண்டும் வெல்ல நாடக நடிகையின் அழகை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். அவரது அழகு மற்றும் பல முயற்சிகள் இருந்தபோதிலும், கோபிநாத் ஒதுங்கி இருந்தார். அவன் ஒரு முறை அவளை மோசமாகத் தூக்கி லத்திகாவுடன் ஓடிவிட்டான். லத்திகா கணிசமான காலத்திற்கு தியேட்டரில் இல்லாததால், அவருக்கு பதிலாக ஒரு புதிய நடிகை வந்தார் என்ற செய்தியைக் கேட்டார். அவர் ஏமாற்றமடைந்து, அவருக்கு பதிலாக யார் என்று கண்டுபிடிக்க கோபிநாத்தை தியேட்டருக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். பாராட்டுக்களைப் பெற்ற புதிய நடிகை வேறு யாருமல்ல, அவரது சொந்த மனைவி கிரிபாலா அல்ல என்பதைக் கண்ட கோபிநாத், அதிர்ச்சியடைந்தார்.
கிரிபாலா தனது கணவரை மீண்டும் கவர்ந்திழுக்க ஒரு நாடகக் கலைஞராக ஆனார் என்று சில பார்வையாளர்கள் கருதினாலும், ஒரு முறை அவர் தியேட்டரில் சேர்ந்து புகழ்பெற்ற முகமாக மாறினார் என்ற விளக்கத்தை நான் கண்டேன், அது அவளிடமிருந்து எடுக்கப்பட்ட சரியான பழிவாங்கல் வேறொரு நாடக நடிகைக்காக அவரை விட்டு வெளியேறிய கோபிநாத். கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு திருமணமான பெண்ணின் அவலநிலையை இந்தக் கதை காட்டுகிறது, அதே நேரத்தில் தனக்கு ஒரு பெயரை உருவாக்க தனது துக்கங்களுக்கு மேலே உயர்ந்த அதே பெண்ணின் வலிமையையும் இது காட்டுகிறது.
3. உடைந்த கூடு (நாஷ்டானீர்)
Thanks: pinterest
ஒரு தனிமையான இல்லத்தரசி தனது திருமணத்திற்கு வெளியே உருவாகும் ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பை மையமாகக் கொண்டு, கதையின் தலைப்பு சரியானது, இது ஒரு திட்டமிடப்படாத காதல் முக்கோணத்தின் காரணமாக ஒரு திருமண உறவு எவ்வாறு சிதைந்து போகிறது என்பதைக் காட்டுகிறது. செய்தித்தாள் ஆசிரியரான பூபதி தனது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார், அவரது மனைவி சாருலதா, அழகான, திறமையான மற்றும் படித்த பெண்மணிக்கு இசையில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது உறவினர் அமோல் என்ற சட்ட மாணவரை அவர்களுடன் வாழ அழைக்கிறார், இதனால் அவர் சாருலதாவுக்கு நிறுவனம் கொடுக்க முடியும். அமோல், தனது நகைச்சுவையான தன்மையுடன், அவளுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக மாறிவிடுகிறார், அதே நேரத்தில் அவளுக்கு இசை பாடங்களையும் தருகிறார். தேவர்-பாபி இரட்டையர்கள் இசை, கவிதை மற்றும் இயற்கையின் மீது பிணைப்பைத் தொடங்கினர். படிப்படியாக, சாருலதா தனது கணவரைப் புறக்கணிக்கும்போது அமோலுக்கு ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். அமோல் இதை உணர்ந்து, அவளிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடிவுசெய்து, ஒரு திருமண கூட்டணியை ஏற்றுக்கொண்டார். சாருலதா அவனை தங்குமாறு கெஞ்சினாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. க்ரெஸ்ட்ஃபாலன், அவள் மீண்டும் தனிமையாகி, அமோல் வெளியேறியவுடன் இசை மற்றும் கவிதை மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தாள். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த மனைவி, தனது தம்பியின் எண்ணங்களில் தொலைந்து போயிருப்பதை அறிந்த பூபதி மனம் உடைந்தாள். மைசூரில் ஒரு வேலையை எடுக்க அவர் நகரத்தை விட்டு வெளியேறினார், சாருலதாவிடம் தன்னுடன் இருந்தால் மட்டுமே அவளை தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி அவளது சோகத்தையும் தனிமையையும் முடிவுக்குக் கொண்டுவந்தான். அவள் உண்மையாக இருக்க முடிவுசெய்து, இந்த திருமணத்தில் எந்தவிதமான உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை என்பதை அறிந்த அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள்.
ஒரு வழக்கமான உலகத்தைப் பொறுத்தவரை, திருமணமான ஒரு பெண் மற்றொரு ஆணுக்கு விழுவது ஒரு முழுமையான பாவமாகத் தோன்றலாம். ஆனால் சாகுலதா கறுப்பு நிறத்தை வரைவதற்கு தாகூர் தைரியமாக இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணின் தனிமை, அவரது துக்கம், வாழ்க்கையின் அனைத்து சிறிய விஷயங்களிலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, சாருலதா இழந்த அனைத்தையும் மிக அழகாக சித்தரிக்கிறது. சாருலதா கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தா பூரி பார்வையாளர்களை தனது ஒளி வீசுவதால் மெய்மறக்கச் செய்து கதையை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
Courtesy: pinterest
இது இரண்டு துருவ எதிர் நபர்களுக்கு இடையிலான காதல் கதை. அபூர்பா, ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், படித்தவர், தனது விதவை தாயிடம் கீழ்ப்படிதல் கொண்டவர், ஒரு தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த டோம்பாய்ஷ் பெண்ணான மிருன்மொயீயைக் காதலிக்கிறார். ஒரு மருமகள் மற்றும் ஒரு பாரம்பரிய வீட்டில் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவள் வெறுப்படைந்தாள். அபூர்பாவின் தாயும் மிருன்மொயீயை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் இறுதியாக தனது மகனின் ஒரே விருப்பத்திற்கு அடிபணிந்து, அவர்களை திருமணம் செய்து கொண்டார். மிருன்மோய் அபூர்பாவிடம் தன்னை நேசிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறார், மேலும் ஒரு மரபுவழி குடும்பத்தின் மருமகளின் தரத்துடன் பொருந்த முயற்சித்ததில்லை. ஆனால் அபூர்பாவின் கனிவான இதயமும், அவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும், அவருக்காக அவளை வீழ்த்தியது, அதே நேரத்தில் அவளும் மாமியார் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டாள், அவளுடைய பாசத்தை வென்றாள்.
ஒரு ஆண் தன்னை காதலிக்க வைப்பதற்கு பெண்ணின் தன்மை, நேர்த்தியானது அல்லது கருணை போன்ற சமூக விதிமுறைகளுக்கு ஒரு பெண் பொருந்த வேண்டியதில்லை என்ற கதை ஒரு செய்தியை அனுப்புகிறது. அவள் அவளாகவே இருக்க முடியும், அவளுடைய எல்லா குறைபாடுகளையும் மீறி சரியான மனிதன் அவளை நேசிப்பான். இங்கே, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏன் கடுமையாக மாறுகிறது என்பதை மிருன்மோயியால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் ஒரு பையனின் வாழ்க்கை அப்படியே உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணாக இருந்து ஒரு பெண்ணாக இருக்கும் பயணத்தின் பாரம்பரிய யோசனையையும், இந்த யோசனைகளுக்கு எதிராக நிற்கும் கதாநாயகன் பற்றியும் ஆராய்கிறது.
5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)ஆதாரம்: எழுத்தாளரின் கஷாயம்
“நான் என் மனைவியை இழந்தால் இன்னொருவரைப் பெற முடியும், ஆனால் நான் என் சகோதரனை இழந்தால் நான் எப்படி மற்றொரு சகோதரனைப் பெறுவது?” கதையில் ஒரு கதாபாத்திரத்தால் கூறப்பட்ட இந்த வரிகள் பெண்களை மனித நேயமயமாக்குவதன் வேதனையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன, குறிப்பாக ஒரு மனைவி மற்றும் மருமகளின். பெண்கள் வெறுமனே சமூகத்தில் மலிவான, மாற்றக்கூடிய பொருட்களாக கருதப்படுகிறார்கள். ஒரு திருமண வீடு ஒரு பெண்ணின் உண்மையான வீடாகக் கருதப்படுகிறது, ஆனால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டு மாற்றக்கூடிய விஷயமாகக் கருதப்பட்டால் என்ன செய்வது? தாகூரின் ‘சாஸ்தி’யை அடிப்படையாகக் கொண்ட’ தண்டனை ‘என்பது ஒரு கதை, அங்கு மினி என்ற இளம் பெண் தனது பெற்றோர் வீட்டில் நேசிக்கப்படுகிறாள், அவளது புதிய வீட்டில் சரிசெய்ய முயற்சிக்கிறாள். அவரது மூத்த மைத்துனர் ஒரு மோசமான பெண்மணி, அவர் எப்போதும் வேலை செய்வதைக் கண்டித்தார், அதே நேரத்தில் அவரது கணவர் உபேந்திரா ஒரு அன்பான மனிதர், வீட்டில் அவரது ஒரே தனிமை. ஒரு அதிர்ஷ்டமான தேதியில், அவரது மைத்துனருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு சூடான வாக்குவாதம் நடந்தது, அந்த தருணத்தின் வெப்பத்தில், அவர் அவளைக் கொன்றார். காவல்துறையினர் வந்ததும், இதனால் முற்றிலும் அதிர்ச்சியடைந்த அப்பாவி மினி மீதான குற்றச்சாட்டுகளை உபேந்திரா மாற்றினார். இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார், மினி தற்செயலாக ராதாவின் தலையில் ஒரு குவளை அடித்தார். மினி எல்லா வழிகளிலும் அமைதியாக இருந்தார். அவள் மறுக்கவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற தந்தையின் வார்த்தைகளை அவள் நினைவில் வைத்தாள். உபேந்திரா குற்றத்தை இனி தாங்க முடியாதபோது, அவர் தான் குற்றவாளி என்று திறந்த நீதிமன்றத்தில் கூறினார். தனது சகோதரனின் தியாகத்தைப் பார்த்ததும், மூத்த சகோதரர் தேவேந்திரர் கடைசியாக தனது மனைவியைக் கொன்றது என்று ஒப்புக்கொண்டார். இந்த குழப்பத்தில், மினி பின்வாங்கவில்லை, முன்பு அவர் மட்டுமே என்று கூறப்பட்டதால், அவர் நீதிமன்றத்தால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.
வெளிப்புறமாக, மினி தனது கணவனையும் அவரது சகோதரரையும் காப்பாற்றும் ஒரு நல்ல மனைவியின் கடமையை நிறைவேற்றுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது அவளுடைய அமைதியான கிளர்ச்சி. தனது நம்பிக்கையை காட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பிய கணவருக்கு எதிரான கிளர்ச்சி. அவர் தனது தரையில் நின்று, தனது கணவரை பாரிய குற்ற உணர்ச்சி, தனிமை மற்றும் வருத்தத்தின் ஆயுள் தண்டனைக்கு அனுப்ப இறக்க தயாராக இருந்தார். தன்னை பின்னுக்குத் தள்ளிய கணவனை விட தூக்கு மேடைக்கு தன் உயிரைக் கொடுக்க அவள் தயாராக இருந்தாள். சோதனை முழுவதும் மினியின் ம silence னம் மற்றும் இறுதி வரை கதையின் மிக சக்திவாய்ந்த, இதயத்தைத் தூண்டும் பேச்சு என்பதை நிரூபித்தது.
6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)ஆதாரம்: ரைட்டர்ஸ் ப்ரூ
கதாநாயகர்களின் பாலின மாற்றத்துடன் கதை தி ப்ரோக்கன் நெஸ்ட்டைப் போன்றது. இங்கே ஒரு மனிதன் தன் மனைவியின் சகோதரியை காதலிக்கிறான். கதை ஒரு பெண்ணின் இரண்டு வடிவங்களை சித்தரிக்கிறது. ஒன்று அன்பானவர் – மகிழ்ச்சியான, கட்டுப்பாடற்ற மற்றும் சுதந்திரமான, காமவெறி, மற்றும் உற்சாகம் நிறைந்தவர். மற்றொன்று தாய்மார் அன்பின் ஒரு வடிவம் – பாசம், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்தவை. ஒரு மனிதன் எப்போதுமே இந்த இரண்டு வடிவங்களையும் தனது வாழ்க்கைத் துணையில் விரும்புகிறான், ஆனால் எப்போதாவது எந்தவொரு பெண்ணும் இந்த எல்லா பண்புகளையும் பெற்றிருக்கிறாள். ஆகவே, மனிதன் தனது வாழ்க்கையில் காணாமல் போன விஷயங்களில் ஈர்க்கப்பட்டு, குழப்பத்தில் இருக்கிறான். தாய்மைப் பண்புகள் அனைத்தையும் பெற்ற மூத்த சகோதரியான ஷர்மிலாவின் கணவர் ஷஷாங்க். ஆனால் அவள் அவனுக்கு மிகவும் பாதுகாப்பானவள், மேலும் அவன் அவளை ஒரு கூண்டில் வசிப்பதைப் போல உணரவைக்கிறான், அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஷர்மிலாவின் தந்தையிடமிருந்தும் அவர் பெரும் உதவிகளைக் கொடுத்தார், எனவே அவர் அவர்களிடம் நன்றியுணர்வை உணர்ந்தார், மேலும் அவரது உணர்வுகளை அவளிடம் ஒருபோதும் திறக்க முடியவில்லை. மருந்துகள் படித்து வரும் ஷர்மிலாவின் தங்கை உர்மி, ஷர்மிளாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது அவர்களுடன் வாழ வருகிறார். நோய்வாய்ப்பட்ட தனது மனைவிக்கு நேரமில்லை, ஒரு வேலையாள் ஷாஷாங்க், இப்போது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிட்டார். அவரும் உர்மியும் நட்பு மற்றும் வசதியான உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர், டென்னிஸில் பொதுவான ஆர்வம் கொண்டிருந்தனர், மேலும் பெரும்பாலும் மனம் கவர்ந்த தருணங்களை ஒன்றாகக் கழித்தனர். அவர் தனது வேலையை புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது வணிகத்திற்கு இழப்பு ஏற்பட்டது, அதில் ஷர்மிளாவுக்குத் தெரிந்தது. கடனை அடைப்பதற்கும், புதிதாக வியாபாரத்தைத் தொடங்குவதற்கும் அவள் நகைகளை அடமானம் வைத்தாள், ஷாஷாங்க் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தாள். விரைவில் சஷாங்கும் உர்மியும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இந்த நெருக்கம் பற்றி ஷர்மிளாவுக்கு நன்றாகவே தெரியும், அவளுடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது, அவளுடைய காதல் அவளிடமிருந்து விலகிச் சென்றது, ஆனாலும் அவள் கணவனின் மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தாள். தனக்கு மிகக் குறுகிய ஆயுட்காலம் இருப்பதை அவள் உணர்ந்தாள். எனவே அவள் ஷஷாங்கையும் உர்மியையும் அழைத்து எப்போதும் நிரந்தரமாக இருக்கச் சொன்னாள். இதற்கிடையில், ஷர்மிலா நகைகளை அடமானம் வைத்திருப்பது குறித்து ஷஷாங்கிற்கு தெரிய வந்தது. ஒரு குற்றப் பயணம் அவரைத் தாக்குகிறது, அவர் தனது அன்பான மற்றும் அக்கறையுள்ள மனைவியை தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்தார் என்ற உணர்வு. அவர் திருத்தங்களைச் செய்ய முடிவுசெய்து, உர்மியுடன் பிரிந்து செல்வதாக ஷர்மிலாவிடம் கூறுகிறார், அது ஒரு தவறு என்பதால். இதற்கிடையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் இடத்தை விட்டு வெளியேறிய உர்மியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறார்கள், மேலும் படிப்புக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்தனர். கடிதத்தில் ஷர்மிளாவுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய இந்த முறைகேடான உறவுக்கு சகோதரியிடம் மன்னிப்பு கேட்டார்.
ஒரு ஆணின் வேறொரு பெண்ணிடம் செல்வதைத் தடுக்க, ஒரு மனைவி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. கணவருக்காக ஒரு மனைவி செய்த தியாகங்களை கதை சித்தரிக்கிறது, அவர் இன்னும் திணறடிக்கப்பட்டு தனது சகோதரிக்காக விழுந்தார். இது ஒரு பெண்ணின் தைரியத்தின் கதையைச் சொல்கிறது, அவர் தனது கணவரும் அவரது சகோதரியும் அவருக்கு மிகவும் தேவைப்படும்போது நெருங்கி வருவதைக் கண்டார், இன்னும் அவரது மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தார். ஒரு பெண்ணின் விருப்ப சக்தியைப் பற்றியும் இது கூறுகிறது, அவளுடைய இணைப்பு மற்றும் வலுவான உணர்வுகள் இருந்தபோதிலும், சரியான பாதையில் செல்லவும், சட்டவிரோத உறவிலிருந்து தனது படிகளை பின்வாங்கவும் தைரியம் இருந்தது, அவளுடைய சகோதரியின் மகிழ்ச்சிக்காக.
7. மிருனால் கி சித்தி (‘ஸ்ட்ரியர் போட்ரோ’ அடிப்படையில்)மூல: Pinterest
கதை ஒரு அழகான, புத்திசாலித்தனமான பெண், எழுதுவதில் விருப்பம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு பணக்கார குடும்பத்தினரால் திருமணத்திற்காக நல்ல தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பழமைவாத குடும்பமாக இருந்தது, அங்கு பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே இருந்தது. அவளுடைய இருண்ட நிறத்திற்காக எப்போதும் அவதூறாக இருந்த அவளுடைய மூத்த சகோதரி, எந்த கேள்வியும் இல்லாமல் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் மிருனால் வித்தியாசமாக இருந்தார், எப்போதும் பாலியல் பற்றி கேள்வி எழுப்பினார். அவளுடைய மூத்த சகோதரியின் தூரத்து சகோதரி பிந்து, ஒரு சிறுமி அவர்களுடன் வாழ வந்தபோது, எல்லோரும் அவளை ஒரு ஊதியம் பெறாத ஊழியரைப் போலவே நடத்தினார்கள், மிருனால் மட்டுமே அவள் பக்கத்தில் நின்றாள். பிந்துவின் சுமையிலிருந்து விடுபட, அவர்கள் அவளுக்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். மிருனாலுக்கு அவளுடைய அச்சங்கள் இருந்தபோதிலும், பிந்து தனது புதிய வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு பிந்துவின் கணவர் ஒரு பைத்தியக்காரர், அவரது குடும்பத்தினர் அவளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். மிருனால் பிந்துவை மீண்டும் அழைத்து வர முயன்றார், ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை எதிர்த்தனர். பூரிக்கு யாத்திரை என்ற போலிக்காரணத்தில் வீட்டை விட்டு வெளியேறி, பிந்துவை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல அவள் தீர்மானிக்கிறாள். ஆனால் பிந்து தன்னை தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி அவளுக்கு கிடைத்தது. உடைந்து நொறுங்கி, அவள் தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள், மேலும் பெண்களுக்கு மரியாதை இல்லாத தனது வீட்டிற்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற தனது தீர்மானத்தை அவனிடம் கூறுகிறாள்.
கதை மிகவும் தொடுகின்றது மற்றும் இதயம் உடைக்கும் ஒன்று. ஒரு பெண் மட்டும் சமுதாயத்தின் ஆணாதிக்க விதிமுறைகளை சவால் செய்கிறாள், கணவனின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கிறாள், ஒரு சிறுமி அனுபவிக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறாள், அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லை. பிந்து இறந்துவிட்டார், ஆனால் அவரது மரணம் மிருனாலுக்குள் சுயமரியாதையின் தீப்பிடித்தது, அவர் இப்போது தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, தனது நிபந்தனைகளுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ தயாராக இருந்தார். வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருப்பதை அவள் உணர்ந்தாள், அந்த வீட்டின் மருமகளாக இருப்பதன் மூலம் அவளால் சாதிக்க முடியவில்லை. அமிர்தா பாக்சி நடித்த மிருனாலின் கதாபாத்திரம் அப்பாவி மற்றும் அமைதியானதாகத் தோன்றுகிறது, ஆனால் குருதேவ் செதுக்கிய வலிமையான மற்றும் கடுமையான பெண் கதாநாயகர்களில் ஒருவர்.
அந்தக் காலத்து பெண்கள் தங்கள் குரல் சமூகத்தில் கேட்கப்படுவதை உறுதிசெய்ய இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், குருதேவ் எழுதிய இந்த சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் கதையின் மற்ற கதாபாத்திரங்களை மறைத்துவிட்டன.
எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…
எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.
சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.
ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.
இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.
எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.
கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.
இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.
தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.
இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.
விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.
கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.
கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.
ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.
தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.
1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது. தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி மாறனின் சன் டி.வி குழுமத்தின் அங்கமாகும். கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது தினகரன் நாளிதழ். மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக் பாண்டி தலைமையிலான குண்டர்கள் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகத்தை தாக்கினர். பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களாகப் பணியாற்றிய வினோத், கோபி மற்றும் காவலாளி முத்து ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நிகழ்வை நினைவு கூறுவதற்காக, சிம்பாலிக் ஆக, அந்த அப்பாவி உயிர்களை நினைவு கோருகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
எழுத்தாளர் அழகியபெரியவன்.
2. தினத்தந்தி பத்திரிகையை இதே ‘குற்றத்துக்காக’ எரிக்க முடியுமா? நாடார் படைகள் வந்து சுளுக்கெடுத்துவிடும் என்கிற பயமா?
(என்னும் கேள்வியை அழகிய பெரியவனிடம் முன் வைக்கிறார் ஒத்திசைவு) வெ. ராமசாமி
தினத்தந்தி பத்திரிகை
3. அதிமுக கொடுத்த பணத்தை எரிக்க முடியாது. தினகரன் கும்பல் கைமாற்றிய பிட் காயினைப் பற்ற வைக்க முடியாது. அதெல்லாம் நிஜமாகவே காசு செலவாகிற விஷயம். எனினும், வாளாவிருக்க இயலாது. அதற்காக பைசா பிரயோசனம் இல்லாத அறச்சீற்றத்தைக் கையாள்கிறார் ரைட்டர் அழகியபெரியவன்.
4. ஹோமம் செய்தால் ஆன்மிகம் ஆகி விடும். அக்கினி வளர்த்தால் பிராமணக் கட்சி ஆகி விடும். எனவே, இவ்வாறு யக்ஞம் செய்கிறார் அழகிய பெரியவன்.
5. எல்லாப் பேப்பரையும் வாங்கி எரிப்பது நிஜமாகவே போர் அடிக்கும் வேலை. பாதி செய்தித்தாள் கடைகள் இயங்குவதில்லை. அன்றாடம் செய்தித்தாள் வாங்காவிட்டால், செய்தித்தாளே கையில் கிடைக்காது. தினசரி படிப்பதைத்தானே எரிக்க முடியும் என்கிறார் அழகிய பெரியவன்.
6. செய்தித்தாள்கள் எல்லாம் இது காலம் மட்டும் நிஜமாகவே “நான்காவது தூண்” என்று நம்பிக் கொண்டு இருந்தார் அழகியபெரியவம். அந்த போலி சாயம் போய் வெளுத்துவிட்டதில் அதிர்ச்சி அடைகிறார். அன்றாட பேப்பர்கள், ஊடகங்கள், மீடியாக்கள் எல்லாமே காசுக்காக அச்சிடுபவை என்றும் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடும் என்பதை உணர்கிறார் அழகியபெரியவன். அதனால் வந்த ஆத்திரம் இவ்வாறு வெளிப்பட்டது.
7. ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் மட்டுமே இவ்வாறு ஃபேக் நியூஸ் போட வேண்டுமா என்று போட்டிக்கு பிள்ளைப் பெற்றது தமிழக தினசரிகள். அன்றாடம் ஃபேஸ்புக், வாட்ஸாப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அப்ளிகேஷன்களை ஐஃபோனை விட்டு நீக்கவும் முடியாது. ஆப்பிள் ஃபோனையும் எரிக்க முடியாது. “எடுடாப் பேப்பரா… எரிடா பொறுப்பா!” என்று செயலில் இறங்கி ஃபேஸ்புக்கில் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறார் அழகியபெரியவன்.
8. தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தேர்தல் நாளன்று பேசப்பட விரும்பி, இச்செயலை நிறைவேற்றினார் அழகியபெரியவன்.
9. அமெரிக்காவில் “Burning Man” புகழ்பெற்ற விழா. அது வீடு அடங்கிக் கிடந்த காலத்தில் தள்ளிப் போடப்பட்டது. அதைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்கிறார் அழகியபெரியவன்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde