Category Archives: Uncategorized

விவாதத் திறமை

சொ.சங்கரபாண்டி

புத்திசாலித்தனமான ஆனால் விஷமத்தனமானவர்கள்

தன் கருத்துக்கு ஒவ்வாதவர்களையோ, தன் எதிரிகள் என்று கருதுபவர்களையோ

இழிவுசெய்து எழுதக் கையாளும் உத்திகள் பல உண்டு:

1. இலேசாக பொய்களை ஆங்காகே தூவுவது (Machiavellian strategy).

2. எதிரிகளின் கருத்தை சிறிது திரித்து எழுதுவது (distortion or misrepresentation).

3. எதிரிகளின் கருத்தை சுருக்கி எழுதும் சாக்கில் தனக்குச்சாதகமான சிலவற்றை

எடுத்து எதிரிக்குச் சாதகமான பலவற்றை விடுத்து களங்கம் ஏற்படுத்தல் (The

Straw Man Fallacy or writing out of context).

4. எதிரியின் கருத்துக்களை விடுத்து, உருவ மற்றும் செயல்படும் திறமைக்

குறைவை பெரிதுபடுத்தல் (focussing on physical discrepancies).

நன்றி: தமிழோவியம்

மனோரமா இயர்புக் 1997 – காலந்தோறும் தமிழிசை

கவிதாசரண்-சிஃபி:

முனைவர் இ. அங்கயற்கண்ணி

இசைத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக்கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டு வரும் காலங்களுக்கேற்ப பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எண் –/ பண்கள் / இராகம்

பகற் பண்கள்

1. / புற நீர்மை / பூபாளம்

2. / காந்தாரம் / நவரோசு

3. / பியந்தைக்காந்தாரம் / நவரோசு

4. / கெüசிகம் / பைரவி

5. / இந்தளம் / நாதநாமக்ரியை

6. / தக்கேசி / காம்போதி

7. / நட்டராகம் / பந்துவராளி

8. / சாதாரி /பந்துவராளி

9. / நட்டபாடை / கம்பீர நாட்டை

10. / பழம் பஞ்சுரம் / சங்கராபரணம்

11. / காந்தார பஞ்சமம் / கேதார கௌளை

12. / பஞ்சமம் / ஆகிரி

இரவுப் பண்கள்

13. / தக்கராகம் / காம்போதி

14. / பழந்தக்க ராகம் / சுத்த சாவேரி

15. / சீகாமரம் / நாதநாமக்ரியை

16. / கொல்ý / நவரோசு

17. / கொல்ýக்கெüவாணம் / நவரோசு

18. / வியாதுக்குறிஞ்சி / செüராஷ்ட்ரம்

19. / மேகராகக் குறிஞ்சி / நீலாம்பரி

20. / குறிஞ்சி / குறிஞ்சி

21. / அந்தாளிக்குறிஞ்சி / சாமா

பொதுப் பண்கள்

22. / செவ்வழி / எதுகுலகாம்போதி

23. / செந்துருத்தி /மந்தியமாவதி

24. / திருத்தாண்டகம் / அரிகாம்போதி”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும்

அம்பலம் அரட்டை – தேசிகன் பக்கம்: ”

w-sujatha: டகடேசுவரன அமுத சரபியில் ரவி சப்ரமண்யம் வெ சா இரா முருகன் கட்டுரைகளை படிததீர்களா

மகுடேசுவரன்: சார். அவசியம் படிக்கிறேன். கொஞ்ச காலமாகவே அமுத சுரபி படிக்கவில்லை

w-sujatha: மகுடேசுவரன் அதில் உங்கள் கவிதைகளைப் பற்றி இராமுருகன் எழுதியள்ளார் ரவி வைரமுத்து வுக்க சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்

மகுடேசுவரன்: தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்கு சென்னை வந்திருந்தேன். அந்நிகழ்ச்சியை ஒட்டி என் கவிதைகள்குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?

மகுடேசுவரன்: சார். அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.

w-sujatha: மகுடேசுவரன் இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்

மகுடேசுவரன்: சார், தாமதமாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

shankar: i have a theory. v always blame the rulers for dishonesty and currption. but recnetly i have seen many of the public are equaly currupt and not honest in their own way from cheating taxes to govt etc. so when we will become currupt free if most of us corrupted already?? may be good law is required

w-sujatha:நிறைய பேசிவிட்டோம் அடுதத வாரம சந்திப்போம் ஷங்கர் நீங்கள்சொல்லும கருத்தினஅடிப்படையிலதான் டைரகடர் ஷங்கரின் அடுதத படமான `அன்னியன்` அமைந்திருக்கிறது எல்லோருக்கம் வணக்கம்

சிஃபி/அமுதசுரபி – தமிழ் இலக்கியம் 2004 – இரா. முருகன்: “என் கருத்து – எஸ்.பொ.வின் பாலுணர்வுத் தேடல்கள், அவருடையவை. அவற்றை வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்து கொள்வதால் என்ன நிறைவு அடைந்திருக்கிறார், அவர்? அதுவும் அவரோடு இருந்த, பெயர் குறிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிப் பெண்கள் பற்றியெல்லாம், அவர்கள் மூலம் தனக்கு பால்வினை நோய் வந்ததைப் பற்றி எல்லாம் எழுதித்தான் இருக்க வேண்டுமா? அது மெல்லிய குரூரம் இல்லையா? இந்தப் பெயர்களும் எஸ்.பொ. வுக்குப் பால்வினை நோய் வந்ததும் எப்படி வரலாற்றில், வரலாற்றோடு வாழ்வதாகும் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஞானி பேசினாலும் அவையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். பேசி முடித்து அவர் கீழே இறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு ஓர் அன்பர், அவர் காலில் விழுந்தார். ஞானியின் புன்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரிகிறது.

—-

கவியரங்கில் ஏமாற்றம், மகுடேசுவரன். சுஜாதாவின் செல்லப் பிள்ளையாகக் கணையாழியில் எழுதி வளர்ந்தவர். (இலக்கியச் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றித் தோழமை அரங்கில் மாலன் குறிப்பிட்டதாக நினைவு). தான் தற்போது எழுதிவரும் “மூன்றாம் பால்” தொகுப்பில் இருந்து கவிதைகளைப் படித்தார், மகுடேசுவரன். ஊர்ப் பெயர்களாக அடுக்கி ஒரு காதல் தம்பதியின் கதையைச் சொல்லும் கவிதை ஒன்று இப்படி முடிந்தது.

இப்போது / பழனியில் அவன்

திரிகிறான் / பரதேசியாக.

வேலூரில் அவள்

இருக்கிறாள் /வேசியாக.

‘Don’t send me such trash anymore’”

விமான விபத்து – கிஷ்

சென்னை ஆன்லைன்: கிஷ்: “அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்

இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான். பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது.” என்று பிரசன்னா எழுதித்தான் கிஷ் மகாத்மியம் அறிந்து கொண்டேன்.

‘வெற்றி கொடி கட்டு’ கனவுகளுடன் கிஷ்ஷில் இருந்து ஷார்ஜாவுக்குப் திரும்பிக் கொண்டிருந்த நாற்பத்தி நான்கு பேர்கள் விமான விபத்தில் இறந்து விட்டார்கள். இருவர் மட்டுமே உயிருக்குப் போராடி வருகின்றனர். பன்னிரண்டு இந்தியர்களும், ஒரு பங்களாதேஷியும் இறந்துள்ளார்கள்.

ஹரன்பிரசன்னா கிஷ்ஷை வைத்து ஒரு கதையும் எழுதியுள்ளார்.

ஆடோகிராஃப்


நன்றி: குமுதம்

வாழ்க்கையை இன்ச் பை இன்ச் ரசிக்கிறேன் – அனுராதா ரமணன்

சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): “நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.

எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.

பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது.”

மரபு காக்கும் தமிழ் நாள் காட்டி — தமிழ்க்கனல்

ஆறாம்திணை: “அனைத்தும் தமிழ்மயமாக வேண்டும் எனும் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், முழுவதும் தமிழ் முறையிலான தமிழ் நாள்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் கூட வலுத்து வருகிறது.

‘வழக்கில் −ருந்து வரும் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளும் தமிழ் ஆண்டுகள் அல்ல. −வற்றுக்குச் சொல்லப்படும் கதை அறிவியலுக்குச் சற்றும் பொருத்தமானதாக −ல்லை. சித்திரை தொடங்கி பங்குனி வரை தமிழ் மாதங்களாகச் சொல்லப்படுபவை தமிழ்ப் பெயர்களே அல்ல.

கி.மு. 31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு, திருவள்ளுவர் (தமிழ்) தொடர் ஆண்டின் அடிப்படையில் −ந்த நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளது. −ன்றைய எண்களுக்கு மூலமான தமிழ் எண்களே −ந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழர் பின்பற்றி வந்த மாத, நாள் முறையே −தில் −டம் பெற்றுள்ளது.

மேழம் (ஆடு வடிவம்), விடை (காளை), ஆடவை (−ரண்டு ஆடவர்), கடகம் (நண்டு), மடங்கல் (சிங்கம்) கன்னி (பெண்), துலை (தராசு), நளி (தேள்), சிலை (வில்) ஆகிய மாதங்களும் பெயரிடப்பட்டன.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆரிய −னக் குழுவினர் ஏற்படுத்திய மாதங்களை நடைமுறைக்கு வரச் செய்தனர். அறிவன், காரி ஆகிய நாள்களை முறையே புதன், சனி என வடமொழிமயமாக்கினர். பக்கல் என்பதைத் தேதி என மாற்றினர். பற்சக்கர முறையிலமைந்த பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் முறையைப் புகுத்தினர். பெண்ணாக மாறிய நாரத முனிவனுடன் கிருஷ்ணன் அறுபதாண்டுகள் கூடியிருந்ததாகவும் அப்போது ஆண்டுக்கு ஒன்றாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களே பிரபவ முதல் அட்சய வரையும் என்ற கதையும் கூறப்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடினர். எந்த சாதி, சமயப் பிரிவையும் சாராத உலகப் பொதுமறையை −யற்றிய திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தொடராண்டு பின்பற்றுவதென அவர்கள் முடிவு செய்தனர். −லங்கைத் தனித் தமிழ் அறிஞர் கா.பொ. ரத்தினம் உள்பட உலகெங்கும் உள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேவநேயப் பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம், பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தென்மொழி −தழ், கல்பாக்கம் வேம்பையன் எனப் பல தரப்பினராலும் அப் பணி −ன்றும் தொடர்ந்து வருகிறது. “

தமிழோவியமும் தத்துவமும்

மனத்திற்கு : கன்றுக்குட்டி டெக்னிக்: ”

கம்பராமாயணத்தில் ஒரு இடம்

செத்துக்கிடந்த ராவணணைப் பார்த்து அழுகிற மண்டோதரி, ” ஐயா.. இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்தக் காமம் இன்று உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது..” என்று புலம்புகிறாள். எனவே எதையும் எதிர்த்து நீங்கள் உங்கள் சக்தியை பிறயோகிக்கவேண்டாம். அடக்குமுறை நிச்சயம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். தாயுமானவர் ” மனம் அடங்க கல்லாருக்கு வாய் ஏன் பராபரமே ” என்றார். ” மனம் அடக்க ” என்று பாடவில்லை. மனம் தானே அடங்கவேண்டும். நீங்கள் அதை அடக்கக்கூடாது. ”

எதையுமே திணித்தால் எடுபடாதுதான்; அந்த சிந்தனையோடு ஒத்துப் போகிறேன். ஆனால், விளையாட்டாக ஒரு கேள்வி:

காமத்தை சில காலம் அடக்கின ராவணனுக்கே அந்த கதி என்றால், பல காலம் அடக்கியாண்ட ராமருக்கு? மனைவியே பக்கத்தில் இல்லாமல் இருந்த இலக்குமணருக்கு எப்படி பழி வாங்கியதாம்!?

இதுதான் நியூயார்க் – வைரமுத்து

வானைத் தொடத் துடிக்கும்

விஞ்ஞான விரல்களாய்க்

கட்டடங்கள் புடைத்து நிற்கும்

கால்வலித்த மேகம்

உச்சிமாடியில்

உட்கார்ந்து போகும்

தீப்பிடித்த வீடாய்

வாழ்க்கை விரையும்

மூழ்கும் கப்பலின் எலிகளாய்க்

கார்கள் பறக்கும்

கார்நிறுத்த இடம் கிடைத்தால்

உலோபியின் புதையலாய்

உள்ளம் களிக்கும்

போகத்தின் உச்சத்தில் பேசும்

பொருளற்ற வார்த்தைகளாய்

அங்கங்கே மெல்லிசை காதுகிழிக்கும்

வீதியில் பூக்கும்

வெள்ளை ரோஜாக்கள்

பெண்மையின் அடையாளங்களை மட்டும்

மூடி மறைத்து முறுவலிக்கும்

‘வா’ என்று கேட்க

வண்டுக்கும் உரிமையுண்டு

‘போ’ என்று தள்ளப்

பூவுக்கும் உரிமையுண்டு

கணவனுக்கு – மனைவியினும்

காரின் கற்பு

முக்கியமாகும்

மனைவிக்கு

பர்த்தாவை விடவும்

‘பாத்ரூம்’ சுத்தம் முக்கியமாகும்

நடைபாதைக் காதல்

மூச்சுவிட மறந்து

முத்தமிட்டுக் கொண்டிருக்கும்

சுற்றிவரும் போலீஸ்

ஒட்டிய உதடுபிரிக்க

உதவும்

0

ஷாம்பூ போட்டுக் குளித்த

மரங்கள்

வாழை இலைச் சாலைகள்

முடிவெட்டிக் கொண்ட

புல்வெளிகள்

கட்டடங்களை

உரசி பறக்கும்

உலோகப் பறவைகள்

எல்லாம் இருந்தும்

ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கை

0

அறிவு –

உறவை

டாலர்களாய்ப் பார்க்கும்

உணவை

வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்

அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு

அவர்களை சாப்பிடும் உணவு

வாரத்தில் ஐந்துநாள்

வாழ்க்கை விற்கப்படும்

வாரத்தில் இரண்டுநாள்

வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்

பாலித்தீன் பை

காதல்

கைதுடைக்கும் காகிதம்

….

அங்கங்கே

ரகசியக் குரலில்

கோஷம் கேட்கும்

வீட்டுக் கூரையில்

நிலா வேண்டுமா?

மாத்திரை போடு

சூரியனில் நடக்க வேண்டுமா?

மாத்திரை போடு

கிளியோபாட்ராவை

எழுப்பித் தருகிறோம்

மாத்திரை போடு

இப்படி

வீதி முனைகளில்

சுலபத் தவணையில்

தற்கொலை விற்கும்

0

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே

பள்ளி மாணவி சொல்வாள்:

‘இன்றைக்கே

கலைத்து விடுங்கள் டாக்டர்

நாளை

பத்தாம் வகுப்பு பரீட்சை’

0

1989

நன்றி: வைரமுத்து கவிதைகள்

(கி.பி. 2000 வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளுள்

அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு)

உரிமை: டாக்டர் பொன்மணிவைரமுத்து

ரூ. 300/-

சூர்யா வெளியீடு


என்னுடைய சில சிதறல்கள்:

* அமெரிக்கா வருவதற்கு முன்பே படித்து விட்ட கவிதை.

* வார்த்தைகளும் எண்ணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியது அந்தக் காலம்.

* சொல்லமைப்புகள் மட்டுமே ஒரு ‘அட…’வையும், தட்டையான பிம்பங்கள் மேல் ஒரு ‘ஹ்ம்ம்ம்…’மும் போடுகிறேன் இந்தக் காலம்.

* நியூ யார்க்கை குறித்து மற்றவர்கள் இன்னும் இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறார்களா….!

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்… எனக்கு கணினி பற்றி ஏதும் தெரியாது. இன்னமும் என் கட்டுரைகளை நான் காகிதத்தில் தான் எழுதி வருகிறேன். மிகச் சமீபத்தில் தான் webcam என்பது கூட தெரியும். இன்னமும் கணினியின் மைக் வழியே மற்றொருவருடன் எனக்குப் பேசத் தெரியாது.

ஸீரோ டிகிரி மின் நாவலாக வெளிவர என் உதவியாளர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய மொழிகளிலேயே முதல் மின் நாவல் என்று ஸீரோ டிகிரியைப் பற்றி விளம்பரப்படுத்தியது அவர்களுடைய தவறு. அவர்கள் எனக்கு விஷயத்தைச் சொன்ன பிறகு நான் வேறு வேலைகளில் மூழ்கி விட்டேன்; பயணங்கள் வேறு.

அதற்குள் ஒருவர் ஏதோ கொலைக் குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதைப் போல் தனது இணைய தளத்தில் கூப்பாடு போட்டிருக்கிறார். என் உதவியாளர் செய்த பிழைக்காக “சாரு பொய் சொல்லுகிறார்’ என்று அலறும் இவர் யார் தெரியுமா? பொய் சொல்லுவதையே தனது தொழிலாகக் கொண்டவர். அந்தக் கீழ்மையான தொழிலுக்குக் கூலி: சில பல லட்சங்கள். தொழிலில் ஒப்பாரி வைப்பதும் உப தொழில்.

கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டிருக்கிறீர்கள் தானே? அதுபோல் இவர் சமீபத்தில் வைத்த ஒப்பாரி என்ன தெரியுமா?

ஒரு அரசியல் தலைவரின் மரணத்தின் போது தழுதழுத்த குரலில் (பொய்யான தழுதழுப்பு என்று வெளிப் படையாகவே தெரிந்தது.) “ஒரு சகாப்தமே இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறியது. இப்படிச் சொல்வதற்கு உங்கள் தன்மானத்தை நீங்கள் விற்க வேண்டும். விலையாக சில பல லட்சங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இப்படி கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் விளிம்பு நிலையில் நின்று, பட்டினி கிடந்து, உலக இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்களால் எனது படைப்பை எதிர்கொள்ள முடியாது. அதற்கு வேண்டிய இலக்கிய அறிவு இவர்களிடம் இல்லை. இவர்களிடம் இருப்பது பண பலம், அதிகார பலம். இதையெல்லாம் காண்பித்து ஒரு கலைஞனை பயமுறுத்த நினைப்பது கோழைத்தனம்.

நேற்று எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்களை சில அரசியல் ரவுடிகள் நாசப்படுத்திய போது அவர் கூறினார்: “இது mediocrityயின் காலம். நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்த முடியாது. உயர்த்தினால், உங்கள் தலை நசுக்கப்படும்… ஆனால், இவர்கள் கோழைகள். கலாச்சாரம் பற்றி ஏதுமறியாத கூலிப்படையை வைத்து இவர்கள் நம்மைத் தாக்குகிறார்கள். ஆனால், இது நீடிக்காது. காலம் இவர்களைக் காணாமல் அடித்துவிடும்…’

இலக்கிய உலகில் புகுந்து இலக்கியவாதிகளை மிரட்டும் அரசியல் தரகர்களுக்கும் என்னுடைய பதில் இதே தான்!

சாரு நிவேதிதா

நன்றி: கோணல் பக்கங்கள்