Category Archives: Uncategorized

‘வலைப்பூ’ ஆசிரியர்கள்

வெள்ளி விழாவை எட்டிப் பார்க்கப் போகும் வலைப்பூவிற்கும் வழிநடத்தும் மதிக்கும் என் வாழ்த்துக்கள்.

1. 09/21 – 09/27: சந்திரவதனா

2. 09/28 – 10/04: மீனாக்ஸ்

3. 10/05 – 10/11: பரிமேலழகர்

4. 10/12 – 10/18: சுபா

5. 10/19 – 10/25: காசி ஆறுமுகம்

6. 10/26 – 11/01: வெங்கட்ரமணி

7. 11/02 – 11/08: கிருபாஷங்கர்

8. 11/09 – 11/15: வினோபா கார்த்திக்

9. 11/16 – 11/22: ராமச்சந்திரன் உஷா

10. 11/23 – 11/29: நவன்

11. 11/30 – 12/06: டாக்டர் நா.கண்ணன்

12. 12/07 – 12/13: பாஸ்டன் பாலாஜி

13. 12/14 – 12/20: எம்.கே.குமார்

14. 12/21 – 12/27: ரவியா

15. 12/28 – 01/03: பவித்ரா

16. 01/04 – 01/10: சித்தார்த் வெங்கடேஷ்

17. 01/11 – 01/17: ஹரன் பிரசன்னா

18. 01/18 – 01/24: சங்கர்

19. 01/25 – 01/31: கார்த்திக்ராமாஸ்

20. 02/01 – 02/07: பத்ரி சேஷாத்ரி

21. 02/08 – 02/14: பாலாஜி பாரி

22. 02/15 – 02/21: ‘ஐகாரஸ்’ பிரகாஷ்

23. 02/22 – 02/28: முத்து

ஒவ்வொரு வார அசிரியரை குறித்தும் விமர்சனம் வைக்க கை துறுதுறுக்கிறது. அவர்களுக்குக் கிடைத்த பின்னூட்டங்களையும் அலச வேண்டும்!

அகக் குரலும் புறச்சூழலும்

திசைகள் – அரும்பு சொல்வெளி:

அனைத்துலகப் பெண்கள் தினத்தன்று முற்றிலும் பெண்களே முன் நின்று நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி:

 

அகக் குரலும் புறச்சூழலும் — மார்ச் 8ம் நாள் மாலை 6 மணி

தீபீகா அரங்கம் / அரும்பு வளாகம் / 49, டெய்லர்ஸ் சாலை / சென்னை 600 010

 

படைப்பும் பதிவும்

சுற்றுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற கவிதை நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர் சீதா ரவி பெற்றுக் கொள்கிறார்.

நூல் அறிமுகம்: கவிஞர் சுமதி மணிமுடி

படைப்பும் பகிர்வும்

கவிஞர்கள் கனிமொழி, வைகைச் செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி, இளம்பிறை, க்ருஷாங்கிணி, திலகபாமா, தமிழச்சி, வத்சலா ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்.

கருத்தும் காட்சியும்

கவிதைக் காட்சி: சுற்றுச் சூழல் குறித்துப் பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகளும், புத்தகக் கண்காட்சி: பெண் படைப்பாளிகளின் நூல்களும் பார்வைக்கு வைக்கப்படும்.

மொஹரம் ஸ்பெஷல் படம்



(c) Vikatan

The Passion of the Christ & மொஹரம் ஸ்பெஷல் – பா.ராகவன்

சமீபத்தில் இறப்புக்குப் பிறகு மனிதன் என்ன ஆகிறான் என்பது குறித்துப் பேசும் ஏழெட்டு நூல்களை எடுத்துவைத்துக்கொண்டு ஒரு நாலைந்து நாள் அலசினேன். மனைவி டைவர்ஸ் அளவுக்கு போகப்போவதாக பயமுறுத்தியதும் மூடிவிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். ரொம்ப வியப்பாக இருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும், முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தும், உள்ளுணர்வின் அடிச்சுவட்டின் படியும் பலர் பலமாதிரி இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள்.

மெக்ஸ் ட்ரூவிங் என்றொரு ஜெர்மானியர் எல்லாருக்கும் இரண்டு படி மேலே போய் மரணத்துக்குப் பிறகு மூன்று நிலைகள் இருப்பதாகச் சொல்கிறார். படுபாவியாக வாழ்ந்து செத்துப் போனால் உடனே மறுபிறப்பு. புழுவாக, ஆடாகவெல்லாம் இல்லை. அதே மனுஷ ஜென்மம் தானாம். செய்த பாவத்தைத் தீர்த்துக்கொள்ளும் வரை இதே பிறப்பு தொடருமாம். கஷ்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்குமாம்.

சுமாரான நல்லவனாக, கொஞ்சம் மனச்சாட்சியுடன் வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் கொஞ்சம் உயர் மனித உடல் சாத்தியமாகுமென்கிறார் இவர். அதாவது ஒரு அப்துல்கலாம் ரேஞ்சில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. உத்தமோத்தமனாக வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் சந்யாசி தானாம். சந்தேகமே இல்லை. ஒரு நல்ல சன்னியாசியாக வாழ்ந்து , இந்தப் பிறப்பில் இறைவனைக் குறித்து தவம் செய்து, யோகத்தின் உயர்நிலைகளையெல்லாம் தொட்டுவிட்டால் ?

நேரே சொர்க்கம் என்று தானே நினைக்கிறீர்கள்?

இல்லை. சூக்ஷ¤ம உலகம் என்றொரு கிரகம் இருக்கிறது என்று அநேகமாக் எல்லாருமே சொல்கிறார்கள். (உபநிஷத்திலும் இது குறித்த பேச்சு பல இடங்களில் உண்டு.) இந்த சூஷ¤ம உலகம் எப்படி இருக்கும்? சுவாமி யுக்தேஷ்வர் கிரி என்னும் வங்காளத்தைச் சேர்ந்த 18ம் நூற்றாண்டு யோகி அதை வருணிக்கிறார்:

1. சூஷ¤ம உலகம் பூமியை விடப் பெரியது.

2. அங்கே வசிக்க அருளப்பட்டவர்கள் தாம் விரும்பிய உருவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் 90 வயதில் இறந்தாலும் 20 வயது உருவத்தை நிரந்தரமாகப் பெறலாம்.

3.சூஷ¤ம உலகில் நதிகள் பல வண்ணத்தில் இருக்கும். நீலம், பச்சை, மஞ்சள், வயலட் இன்னபிற. ஆனால் இதன் வண்ணத்தையெல்லாம் மை யாஹ¤ போல் மாற்றிக்கொண்டிருக்க முடியாது.

4.சூஷ¤ம உலகவாசிகள் மூக்கால் சாப்பிடலாம், வாயால் கேட்கலாம், காதால் பேசலாம், கையால் நடக்கலாம், காலால் வீணை வாசிக்கலாம். உடல் உறுப்புகளைத் தம் விருப்பப்படி உபயோகிக்க முடியும்.

5. அவர்கள் வாய்திறந்து அதிகம் பேசுவதில்லை. தாம் பரிமாற நினைக்கும் கருத்தை மனத்திலிருந்து மனத்துக்கு அப்லோட் செய்துவிட முடியும் அவர்களால்.

6. இடைவிடாத இறைசிந்தனை அவர்கள் அனைவருக்கும் இருக்கும்.

7. சூட்சும உலகிலும் கெட்டவர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு தான் மாந்திரீகம் போன்றவை செய்யப்படுகின்றன.

8. சூட்சும உலக வாசிகளை நம்மால் காண முடியாது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு தேவதைகள் தென்படுவார்கள். இரவில் குழந்தை தூக்கத்தில் சிரித்தால் யாரோ சூட்சும உலகத்து தேவதை விளையாட்டுக் காட்டுகிறதென்று அர்த்தம்.

9. அவர்கள் நினைத்தால் பூமிக்கு வந்து விருப்பப்பட்டவர்களுடன் பேசிச்செல்ல முடியும். அப்போது சாதா மனித ரூபத்தை (பழைய உருவத்தையே) மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.

10. பூமியிலிருந்து நேரே சொர்க்கத்துக்குப் போக முடியாது. சூட்சும உலகிலிருந்து தான் அது சாத்தியம்.

மேற்சொன்ன விஷயங்கள் தவிரவும் அந்த சூட்சும உலகம் குறித்து நிறைய சமாசாரங்கள் இருக்கின்றன. ரொம்ப மேஜிக்கலாகத் தோன்றக்கூடியவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

நிற்க. நாம் பேச ஆரம்பித்தது மரணத்துக்குப் பின் மனிதன் என்பது குறித்து.

ஒன்று மறுபிறவி, அல்லது சூட்சும தேகம். அவ்வளவு தானா என்றால் இல்லையாம்!

இரண்டு சாத்தியங்களும் இல்லாமல் (நோ வேகன்ஸி) அந்தரத்தில் ஆவியாகவே அலைந்துகொண்டிருப்பதும் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆவிகளில் சிலவற்றைத் தான் சில்லறைச் சித்தர்கள் வாழைப்பழத்திலிருந்து பிள்ளையார் எடுக்கவும், வாயிலிருந்து லிங்கம் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். ஏவல் போன்ற விஷயங்களில் சேரும் இது. ஆனால் இந்த நிலையில் ஒருத்தர் எத்தனை காலம் இருக்க வேண்டியிருக்கும் என்று யாரும் உறுதியாக்ச் சொல்லவில்லை. பல ஆண்டுக்ளோ, சில நாட்களோ, சில வாரங்களோ, சில நிமிடங்களோ ஆகலாம்.

இறந்தவர் யாரும் இந்த ஆவி அலைச்சல் நிலையை அதிகம் விரும்புவதில்லை என்கிறார்கள். மனித வாசனை மிச்சங்களுடன் உடலை மட்டும் துறந்துவிட்டு அலைவதில் அவர்களுக்குப் பல எக்ஸிஸ்டென்ஷியல் பிரச்னைகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இத்தனை விவரம் கிடைக்கிறதே தவிர, அந்த சொர்க்கம் எது, அதன் வண்ணம் என்ன, வடிவம் என்ன என்பதுகுறித்து ஒரு தகவலும் இல்லை. உயர்ந்ததொரு மாளிகையில் ஒய்யாரமான சிம்மாசனத்தில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு எந்தக்கடவுளும் பித்தளை கிரீடங்கள் தாங்கி அமர்ந்திருக்கவில்லை என்று மட்டும் அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள்.

ரொம்ப குடைந்துபார்த்தால் ‘அட போய்யா, அகம் பிரும்மாஸ்மி’ என்றுவிடுகிறார்கள்.

அடக்கடவுளே, அகத்தை ஆராய்ந்து அறிய இந்த உலகிலிருந்து, ஆவி உலகுக்குப் போய், மீண்டும் பிறந்து, மீண்டும் இறந்து, மீண்டும் சூட்சும உலகுக்குப் போய் அங்கிருந்து நேரே டிக்கெட் வாங்கிக்கொண்டு சொர்க்கத்துக்குப் போனாலும் அங்கு சிம்மாசனம் ஏதுமில்லை என்று திரும்பி இங்கேயே வந்து ‘அகம்’ தேட வேண்டியது தானா?

சபரி மலைக்குப் போனவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி , கால்கள் நடுங்க மலை ஏறி, தாகம் வாட்டி, தள்ளாடி க்யூவில் நின்று, நகர்ந்து சந்நிதானத்துக்குள் நுழையும் போது மேலே பெரிதாக இந்த போர்டு தான் வைத்திருப்பார்கள். “அகம் ப்ரும்மாஸ்மி”

அரை அங்குல உயரத்தில் சுவாமி பாதிதான் கண்ணில் படுவார். அதற்குள் பிடித்துத் தள்ளிவிடுவார்கள். நிஜ ஸ்வாமி அந்த் போர்டு தான் என்று அவசியம் தோன்றும்; தோன்ற வேண்டும்.

கொஞ்சம் உற்றுப்பார்த்தால் எல்லா இந்திய தத்துவஞானிகளுக்குமே இந்தக் கேள்விதான் அல்டிமேட்டாக இருந்திருக்கிறது. இறப்புக்குப் பிறகு என்ன ஆகிறோம்?

பைபிளில்கூட இது குறித்து மிக விரிவான விசாரணைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில். ஆனால் அது கதை மாதிரி இருப்பதால் பலபேர் ‘அப்புறம் காக்கா வடையைத் தவற விட்டுடுச்சா?’ என்பதிலேயே நின்றுவிடுகிறார்கள். கதை முகமூடி தாண்டி உள்ளர்த்தம் தேடும்போது மிகப் பல சங்கதிகள் அகப்படுகின்ற்ன.

நானே வழியும் சத்தியமும் ஜீ£வனுமாயிருக்கிறேன் என்கிற ஒரு வரிக்குள் பகவத் கீதை முழுவதுமே அடங்கிவிடுவதைப் பார்க்கலாம். (அப்படியே தலைகீழாக மாற்றிப் படித்துப் பாருங்கள் – ஜீ£வன் சத்தியத்தின் அடியற்றி வாழ்ந்தால் வழி தானாகக் கிட்டும்.) நானே ஜீவனும் சத்தியமும் வழியும் என்பது பரம அத்வைதம். அத்வைதப்படியும் அனைத்துப் படியும் நோக்கினால் ஆன்மாவுக்கு மரணமே இல்லை. எனில் மேற்சொன்ன அந்த் உலகம், அடுத்த உலகம், கீழுலகம், மேலுலகப் பயணங்கள் , வாழ்வுகள் எல்லாம் இருப்பதை உறுதி செய்வதாகிறது.

ஆக, இறுதியில் குழப்பமென்னவோ நிச்சயம். அந்தப் பிறவா நிலை? சான்ஸே இல்லை போலிருக்கிறது.

பா.ராகவன்

07/02/2003

நன்றி: புத்தகப்புழு

மனவியல்… உளவியல்… உளறல்: தென்றல்

‘சொல்ல மறந்த கதை’யை விட ‘தென்றல்’ தெம்பான படம். தத்து

எடுக்கப்படும் சிறுவர்களின் மனவியல் மாற்றங்களை மெலிதாக

சொல்லியிருக்கும் பகுதி குறிப்பிடத்தக்கது. புது வீட்டுக்கு

வந்தவுடன் பார்த்திபனுடனேயே ஒட்டி உறவாட விரும்புவது,

அவர் இடும் வார்த்தைகளுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பது,

காலம் செல்ல செல்ல உரிமை எடுத்துக் கொள்வது, கொஞ்ச நாட்களுக்குப்

பின் முரண்டு பிடித்து தான் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க

ஆணையிடுவது, கழிவிறக்கத்தில் அன்பைத் தேடி ஒடுங்குவது

என்று பல பரிமாணங்களை அந்த பாதுகாவலன் டு நண்பன் டு

அப்பா வளர்ச்சியில் சொல்லியிருந்த விதத்திற்காகவே படத்தை

பார்க்க வேண்டும்.

தாமரை (உமா) தன் தந்தையை சிறிய வயதிலேயே இழந்ததினால்,

நலங்கிள்ளியை அப்பா ஸ்தானத்தில் வைப்பதா அல்லது இனக்கவர்ச்சியா

அல்லது ஹீரோ வழிபாடா என்று பன்முக ஆராதனை செய்வதை விதவிதமாக

காட்டுவதும் அழகு. ‘வானமதி’யில் பொம்மையாக வந்து போன ஸ்வாதி

பெயர் மாற்றி ‘ஸ்வாதிகா’வாக பின்னியிருப்பதை விகடன் கூட கண்டு

கொள்ளவில்லை. உண்மை சம்பவங்களை ஆங்காங்கே கதையோடு

கோர்த்தது, உப்புமா கவிஞரைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை,

படைப்பாளியின் மனக்குழப்பங்களும் எழுதுவதற்கான மனநிலை,

கலையை அனைத்து வடிவங்களிலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்,

புத்தகத்தின் மேல் தமரை கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணங்கள்,

மூட் சமாசாரம் என்று பல விஷயங்களை தெளிவாக காட்டுகிறார்.

இளைய தலைமுறையை சென்றடையாதபடி சோகம் அப்பியிருப்பது மட்டுமே

வருத்தம் தரும் விஷயம். ‘சாமி’யில் கூட நாயகன்/நாயகி துன்புறும் காட்சிகள்

இருந்தன; நம்மை வருத்தப்பட வைத்தன; ஆனால், நிறைய மசாலா தூவி

தொடர்ந்த காட்சிகள் போல மசாலா ஆக்காவிட்டாலும், இந்தக் காலத்திற்கு ஏற்ற

மாதிரி ‘இனிப்பான’ நிகழ்வுகளை சரியான விகிதத்தில் தூவவில்லை. இந்த

மாதிரி வரவேறகத்தகுந்த படங்கள் ‘லாபம்’ ஈட்ட வேண்டும் என்ற கவலையில்,

மகிழ்ச்சி/காதல்/சுவையான காட்சிகள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம்

இருந்திருக்க வேண்டும்!

தென்றல் குறித்து மரத்தடியில்….

தென்றல் – ஒரு பார்வை: கஜன் ஷண்முகரத்னம்

தென்றலும் தெருப்பொறுக்கியும்: ‘ஸ்வஸ்திக்’ சுரேஷ்

புத்தகம் வெளியிட, விற்க…

IHT: New do-it-yourself chapter for authors: அமெரிக்காவின் ஹிக்கின்பாதம்ஸ் (நீங்கள் பெங்களூர்வாசி என்றால் அமெரிக்காவின் ‘கங்காராம்ஸ்’) என்று பார்டர்ஸ் புத்தகக்கடையை சொல்லலாம். வாரா வாரம் சென்று புது புத்தகம் மேய்வதற்காகவும், சல்லிசான விலையில் என்ன புத்தகங்களை கூறு கட்டியிருக்கிறார்கள் என்பதற்கும், புத்தக அறிமுகக் கூட்டங்களில் என்ன அலசுகிறார்கள் என்றும் பார்க்க செல்லலாம். புத்தக விற்பனையில் மட்டுமே ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது பதிப்பாளராக முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.

அஞ்சு டாலர் கொடுத்து ‘சுயமாக புத்தகம் வெளியிடுதுவது எப்படி’ என்று ஒரு செய்முறை விளக்கத்தை வாங்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி இருநூறு டாலருடன் உங்கள் காவியத்தையும் இணைத்து அனுப்ப வேண்டியதுதான் பாக்கி. முப்பதே நாட்களில் உங்கள் கைகளில் பத்து பிரதிகள் தவழும். இருநூறுக்கு பதிலாக ஐந்நூறு டாலர் கொடுத்தால் இன்னும் ராஜ மரியாதை. உள்ளூர் புத்தகக் கடைகளின் முகப்பில் உங்களின் புத்தகம் மிளிரும். ISBN எண் கொடுப்பார்கள். பார்டர்ஸ்.காம் வலைதளத்தின் மூலம் ட்ரிஸ்டாடன் -டி-கன்ஹாவில் கூட வாசகர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

.காம் மூலம் மில்லியனர்கள் உருவான காலத்தில் மின்புத்தகம், சுய புத்தக அச்சடிப்பு என்பது பரவலாக புகழ்பெற ஆரம்பித்தது. துக்கடா பதிப்பகங்கள் காணாமல் போன பிறகு மிச்சம் இருந்த சுய வெளியிட்டாளர்களை பார்டர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சாப்பிட்டது. இது வரை 45,000 புத்தகங்கள் இந்த முறையில் வெளிவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை கடும் முயற்சிக்குப் பின்பே சுய வெளியீட்டை நாடிய எழுத்தாளர்கள், இப்பொழுது ஆரம்ப நிலையிலேயே பதிப்பகங்களின் படிகளை ஏறி இறங்காமல் தன்னம்பிக்கையோடு தானே வெளியிட்டு விடுகிறார்கள்.

வெளியிடுவது எளிதுதான்; தவறுகளை திருத்தி, எடிட் செய்து, வாசகர்களை படிக்க செய்வதுதான் கஷ்டமான காரியம்! வருடத்திற்கு ஒன்றரை லட்சம் புத்தகங்கள் வெளிவரும் அமெரிக்காவில் உங்களின் புத்தகத்தை பரவலாக்கவும் சில திட்டங்களை இவர்கள் கொடுக்கிறார்கள். முதல் வருடத்திற்குள் ஐந்நூறு பிரதிகள் விற்றுவிட்டாலே, நட்சத்திர அந்தஸ்து கொடுத்து, பதிப்பாளர்களே விளம்பரமும் தொலைகாட்சி நேரங்களும் இத்யாதி விளம்பர உத்திகளும் கொடுக்க விழைகிறார்கள். இதுவரை ஐ-யூனிவர்ஸ் வெளியிட்ட பதினேழாயிரம் புத்தகங்களில் வெறும் 84 மட்டுமே இந்த நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்திருக்கிறது. அவற்றில் இருந்தும் ஒரு அரை டஜன் மட்டுமே ஹிக்கின்பாதம்ஸ் போன்ற வெகுஜன புத்தகக் கடைகளை எட்டி பார்க்க முடிந்திருக்கிறது.

‘எழுத்தாள்ர்கள் (அல்லது அப்படி அழைக்கப்பட விரும்புபவர்கள்) சுய புத்தகபதிப்பின் மூலம் சீக்கிரமே ஆயிரக்கணக்கான புத்தகக்கடைகளையும் லட்சகணக்கான வாசகர்களையும் அடையலாம் என்பது மாயை’ என்கிறார் பார்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர்.

வலையுலகின் சங்கிலித் தொடர்புகள்



TouchGraph GoogleBrowser V1.01

TouchGraph: இணைய தளங்களுக்கிடையே உள்ள பிணைப்புகளை ‘டச்கிராஃப்’ படமாக விரிக்கிறது. மேலேயுள்ள படத்தை சொடுக்கினால் ‘தமிழோவியம்’ தளத்துடன் சம்பந்தப்பட்ட, தமிழோவியம் பிடித்தால் பிடிக்கக்கூடிய வேறு வலைப்பக்கங்களை வரைபட உயிரூட்டத்தின் மூலம் அறியலாம். உங்களுக்குப் பிடித்த தளத்தையும் உள்ளிட்டு எங்கெங்கே தொடுப்பு கொடுக்கிறது என்று பாருங்களேன்!

படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன?



A poster of the Saudi dissident for sale in  Rawalpindi, Pakistan (c) Washignton Post
1. ஆயுத எழுத்தின் ஆதிமூலங்கள்: ‘சிடி ஆஃப் காட்’ என்பதின் தாக்கம் ஆய்த எழுத்தில் நிறைந்திருக்கும் என பேச்சு அடிபட ஆரம்பித்து இருக்கிறது. டீகடையில் சொல்லியிருக்கும் ‘கடவுளின் நகரம்’ கதைக்கும் மணியின் படத்திற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கலாம். பிரேசில் படத்தில் இரண்டு பேர் இரு துருவங்களானால், மணி ரத்னம் இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டு மூன்று வழிப்பாதை போட்டிருக்கார். அமெரிக்காவில் City of God பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையானால் ஆஸ்கார் மாட்டுகிறதா என்பதும் தெரிந்து விடும்.

மணிரத்னம் என்ன செய்தாலும் ‘க.மு.’வை ‘ஏ.ஐ’யின் தழுவல்தானே என்று கேள்வி கேட்பார்கள்! அந்த மாதிரி….

Pardon My Planet2. மவுசு குறைஞ்சு போச்சுங்க – Sify.com: ‘இந்தியா டுடே’ கருத்துக் கணிப்புகளில் எனக்கு அதிக நம்பிக்கை கிடையாது. புரட்சி தலைவிதான் இருப்பதிலேயே ‘மோசமான’ முதலமைச்சர் என்று சொன்னார்கள். காங்கிரசில் சேர்ந்து எதுவும் சாதிக்காத சிரஞ்சீவிக்குக் கூட தலை ஐம்பதில் இடம் கொடுத்து விட்டார்கள். வாயே திறக்காமல், தமிழகத்தின் அனைத்து முக்கிய பத்திரிகை, வலைத்தளம், விஐபி, கட்சி, என எல்லாவிடங்களிலும் நீக்கமற காட்சி தரும் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஷாருக் – 27

ரெஹ்மான் – 29

ஐஷ்வர்யா – 42

கமல்/ரஜினியை விடுங்க; சிம்ரன்/ஜோதிகாவை விடவா ஏ.ஆர்.ரெஹ்மான் மக்களை பாதிக்கிறார்?



Beetle Bailey
3. ஆபத்தான வழிகள்: அமெரிக்காவில் எந்த சந்து பொந்துகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். அங்கு வண்டியோட்டும்போது முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பீர்கள்.

எதற்கெல்லாம் தலை-பத்து இருக்கிறது என்று நினைத்தால்…

மிஸ்டர் மியாவ்

ஜூனியர் விகடன்: “முன்பு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கரூரில் ஒரு கோயிலில் சில இளைஞர்கள் கோபுர உச்சியில் நின்று போராடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு காட்சியை Ôதென்றல்Õ படத்திலும் வைத்திருக்கிறார் தங்கர். இந்த காட்சியைப் பார்த்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மெய்சிலிர்த்துப் போய், தங்கருக்கும் பார்த்திபனுக்கும் பாராட்டுக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.”

அ.தி.மு.க-வில் கார்த்திக்..

JuniorVikatan.com: “தேர்தல் சூட்டில் அடுத்து வறுபடத் துவங்கியிருக்கிறார் நடிகர் கார்த்திக். வெளியுலகப் பிரவேசத்தை எப்போதும் விரும்பாத கார்த்திக், கடந்த புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு அ.தி.மு.க|வின் தலைமைக்கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ராதாரவியோடு திடீரென பிரசன்னமாகி அரசியல் பரபரப்பில் ஐக்கியமாகியிருக்கிறார்.

அலுவலகத்துக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு ராதாரவியுடன் நடைபோட்டு அந்த அலுவலகத்தில் நுழைந்த கார்த்திக், அங்கிருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் ஒரு கடிதம் அடங்கிய கவரைக் கொடுத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பூச்செண்டையும் கொடுத்தார்!

அப்படியே பக்கத்து அறையையும் எட்டிப்பார்த்த கார்த்திக், அங்கு இருந்த அமைச்சர் வளர்மதி, செங்கோட்டையன், சுலோசனா சம்பத் ஆகியோரைச் சந்தித்து, ÔÔநான் அ.தி.மு.க. அனுதாபிÕÕ என்று சொல்லி திரும்பியிருக்கிறார். ”