Category Archives: Uncategorized

கண்ட (!) ஹிந்திப் படங்கள்

1. மர்டர் – வந்தியத்தேவன் சொல்கிறாரே என்று பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். ஹிந்தி சினிமாவில் ஒரு மைல்கல் முயற்சி 😛

2. மே ஹூ நா? – நிச்சயம் பார்க்கலாம்; கஷ்டப்படாமல் சிரிக்கலாம்; லாஜிக் கேட்காமல் ரசிக்கலாம். ஷெட்டிக்கு பதில் கமல் ஒத்துக் கொண்டிருந்தால்….!

3. ஹம் தும் – ‘When Harry met Sally’ பார்க்காவிட்டால் லயிக்கலாம்; இல்லாவிட்டாலும், ஒருமுறையாவது பார்க்கலாம்.

4. யுவா – ஆய்த எழுத்துப் பார்த்துவிட்டால், தவிர்த்து விடவும்.

5. கல் ஹோ ந ஹோ – தவிர்த்து விடலாம்; காதல் படங்கள் மிகவும் விரும்புபவரைக் கூட தாலாட்டி தூங்க வைக்கும்.

6. முன்னாபாய் எம்பிபிஎஸ் – விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை; நிறையவே செண்டிமெண்ட்டலாய் தொட்டார்கள்; காதல், ஆக்ஷன் மட்டுமே வந்த ஹிந்திப் படவுலகின் சூப்பர் ஹிட்டான சாதாரண காமெடி.

காணவேண்டுமா? விட்டு விடலாமா?

1. சமேலி – கரீனா கபூர் கலக்கியிருப்பதாக பேச்சு.

2. Kyun! Ho Gaya Na… – அமிதாப், ஐஸ்வர்யா, விவேக் ஓபராய்…

3. ரெயின் கோட் – ஐஸ்வர்யா, தேவ்கன்; ஆனால்… மீண்டும் புளித்துப் போன பழைய காதலர்களின் சந்திப்பு.

4. லக்ஷ்யா – ரொம்ப நாளாச்சு ஹ்ரிதிக் படம் பார்த்து!

5. வீர் சாவர்க்கர் – அமெரிக்காவில் கிடைக்குதா?

6. மானசரோவர் – Talks about coincidences that hurt people என்கிறார்கள். கேட்க நன்றாயிருக்கிறது. பார்க்க?

7. மீனாக்ஸி – எம்.எஃப். ஹுசேன் 😉

8. மஸ்தி – மூன்று திருமணங்கள்… ஒவ்வொன்றும் ஒரு விதம் 😛 பார்க்க வேண்டும்

9. அப் தக் ச்சப்பன் – நானா படேகர் + ராம் கோபால் வர்மா

10. (மலையாளம்) Vismayathumbathu – பாசில் + மோகன்லால்; Caption கிடைக்கும் டிவிடி வேண்டுமே 🙂

மன்மதன்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

ஓ… மஹிரே

– அனுஷ்கா – 2.5 / 4

கவர்ச்சிப் பாடல். பாடல் நல்லாவே ஆட வைக்குது.

வானமுன்னா…

– ஷங்கர் மஹாதேவன், ஸ்ரீராம் – 2.75 / 4

ஹீரோயிஸப் பாடல். Axiom-கள் நிறைந்த வரிகள்; ரசிகர்களுக்கு சிம்புவின் கட்டளைகள்.

என் ஆசை மைதிலியே

– சிம்பு, சுசித்ரா – 3.25 / 4

உல்டா பாடல் ; ‘ஆசை நூறு வகை’ பாதையில் என்னை சிறிய வயதில் ஆட வைத்த — இன்னொரு ஹிட், ரீ-மிக்ஸ் ஆகிறது. சிம்புவிற்கு பதிலாக ஷங்கரோ/கேகே-வோ குரல் கொடுத்து, பாடல் வரிகளையும் ரெண்டாம் வகுப்பு மாணவியின் உரைநடை காதல் கடிதமாக — ‘மர் கயா’ செய்யாமல் இருந்திருந்தால் 4/4 கொடுத்திருக்கலாம். Still, epilogue-இல் குத்தும் குத்திற்காகவே, மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

காதல் வளர்த்தேன்

– கேகே – 3.25 / 4

ஆல்பத்தில் வரும் மெலடிப் பாடல்; க்ளைமாக்ஸ் பாடல் போல, இறுதியில் உச்சகட்டத்தை அடைந்து சமீபத்தில் ரசித்த வேறொரு பாடலை நினைவுறுத்தினாலும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல். மந்த்ரா பேடியுடன் பாடும் கனவுப் பாடல்?! Very well executed crescendo.

தத்தை தத்தை

– சிம்பு, க்ளிண்டன், வசுந்தரா தாஸ், ப்ளாசி – 1.5 / 4

ராப் செய்கிறேன் என்று கஷ்டப்படுத்துகிறார்கள். தன்னுடைய நிறைகுறைகளை அறிந்து பாடும் இளைய தளபதி போல், சிம்புவும் சொந்த எல்லைகளைத் தெரிந்துகொள்ளுதல் எனக்கு நன்மை பயக்கும்.

மன்மதனே

– சாதனா சர்கம் – 2.5 / 4

எனக்கு சாதனா சர்கத்தின் ஸ்டைலிஷ் தமிழ் ரொம்பப் பிடிக்கும் 😉 சிம்புவின் படத்தை வைத்துக் கொண்டு ஜோதிகா பாடும் சோலோப் பாடல்?!

மன்மதர் & ரதிகளை நோக்கி குறி தப்பாமல் அம்பு விட்டிருக்கிறார் யுவன்.

கேட்க: RAAGA – Manmadhan – Tamil Movie Songs

செல்லமே

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வெள்ளைக்கார முத்தம்

– மாலதி – 2/4

வசீகரா ஸ்டைல் பாடல்; வசீகரம் எனக்குத் தென்படவில்லை!

ஆரிய உதடுகள்

– ஹரிஹரன், ஸ்வர்ணலதா – 2.75/4

செம ஆரம்பம். பாடகர்கள் நிலைநிறுத்துகிறார்கள்.

(கண்களே நீயாகப் போனால்

வேறு பார்வை வருமா?
)

கும்மியடி

– சந்தியா – 2/4

கொஞ்சம் அந்தக்கால குரலுடன் கூடிய மெட்டு; முதலிரவு நினைவலைகளைத் தட்டி எழுப்பலாம். ரீமா சென் கதாநாயகி என்று எண்ணிப் பார்த்தால்; எப்படி படமாக்கியிருப்பார்களோ என்றும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால்; ‘A’ முத்திரை பாடல் வரிகளில் மட்டுமில்லாமல் போய் விடுமோ என்று நினைக்கவைக்கும் பாடல்.

செல்லக் கிளியே

– ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம் – 1.5/4

சுகமான ரொமாண்டிக் டுயட். ஆனால், அனுராதா ஸ்ரீராம் இருந்தும் பாடலை தூக்கி நிறுத்த முடியவில்லை.

காதலிக்கும் ஆசை (மை சோனாலிஸா…)

– கேகே, மாலதி, சின்மயி, டிம்மி – 1/4

ஹீரோ கெஞ்சுகிறார். இந்த மாதிரி பாடினால், எவராயிருந்தாலும் காதலிக்க ஆரம்பிக்க மாட்டார்கள்.

செல்லமே – ஹாரிஸ் ரொம்பக் கொஞ்சுகிறார்; பாடல் வரிகளால் சாக்லேட் இசை திகட்டுகிறது.

எம்மி விருது உன்னிப்பு ஊகங்கள்

விருது ஆருடம எனக்குப் பிடித்தது கருத்து கார்னர் இன்னும் பார்க்கவில்லை
DramaSeries The Sopranos, HBO The Sopranos, HBO கலந்துகொண்ட எல்லாமுறையும்The West Wing  வென்றிருக்கிறது Joan of Arcadia, CBS
Comedy Series Sex and the City, HBO Curb Your Enthusiasm, HBO Sex and the City முடிந்துவிட்டதால், அதற்குப் பிரிவுபசாரம் Arrested Development, Fox
Miniseries Angels in America, HBO Traffic: The Miniseries, USA இந்தப் படத்தை குறித்து நிறை மட்டுமே கேள்விப் படுகிறேன் Angels in America, HBO
Made-for-TV Movie தெரியாது The Reagans, Showtime The Reagans நிச்சயம் வெற்றியடையாது 😉 அனைத்தும்
Variety, Music or Comedy Series Late Show With David Letterman, CBS The Daily Show With Jon Stewart ஜே லீனோவை அடிச்சுக்க ஆளில்லை; ஆனாலும் பரிந்துரையில் இல்லாதது வருந்தத்தக்கது.
Variety, Music or Comedy Special A&E in Concert: Paul McCartney in Red Square, A&E Chris Rock: Never Scared, HBO எச்.பி.ஓ.விற்கு மாதம் பத்து டாலர் கொடுக்கத் தூண்டும் அணிவகுப்பு. Chris Rock: Never Scared, HBO
Actor, Drama Series Kiefer Sutherland, 24, Fox Martin Sheen, The West Wing அவரும் எவ்வளவு வாட்டிதான் பரிந்துரைப் பட்டியலில் மட்டுமே இடம்பெற்றவர் ஆவார்? Anthony LaPaglia, Without a Trace, CBS
Actress,Drama Series Edie Falco, The Sopranos, HBO Mariska Hargitay, Law & Order: Special Victims Unit, NBC ஆலிஸன் போன வருடம்தானே வென்றார்? Amber Tamblyn, Joan of Arcadia, CBS
Actor,Comedy Series John Ritter, 8 Simple Rules, ABC Larry David, Curb Your Enthusiasm, HBO  கெல்ஸி க்ராமருக்கு ரிடையர்மெண்ட். லாரி டேவிடுக்குக் கிடைக்காவிட்டால் அக்கிரமம்! ஆனால்…
Actress,Comedy Series Bonnie Hunt, Life With Bonnie, ABC Patricia Heaton, Everybody Loves Raymond, CBS வோட்டுப் போடுவதற்கு ரொம்ப கஷ்டமான பகுதி. Kaczmarek, Malcolm in the Middle, Fox
Supporting Actor, Comedy Series David Hyde Pierce, Frasier, NBC Sean Hayes, Will & Grace, NBC. Frasier பிரிவுபசாரம்

Jeffrey Tambor, Arrested Development, Fox
Supporting Actress,Comedy Series Doris Roberts, Everybody Loves Raymond, CBS Kim Cattrall; Kristin Davis; Cynthia Nixon; Sex and the City, HBO Sex and the Cityக்கு வாரி கொடுத்து வோட்டுகளை சிதறடிக்க வைத்து விட்டார்கள் 😦
Actor, Miniseries or a Movie Al Pacino, Angels in America, HBO   எல்லாமே பெருந்தலைகள். அனைத்தும்
Actress, Miniseries or a Movie Meryl Streep, Angels in America, HBO Emma Thompson, Angels in America, HBO டிட்டோ அனைத்தும்

USATODAY.com – List of primetime Emmy nominations

Vasool Raja MBBS – Kamal Sneha 

Vasool Raja MBBS – Kamal Sneha Posted by Hello

வசூல்ராசா எம்.பி.பி.எஸ்.



நன்றி: Gemini’s” VasoolRajaMBBS – Official Website

The Cider House Rules

(c) IMDB.comசுஜாதா சொன்னதாக கேள்விப்பட்டது. “நான் கதை எழுதித் தருவேன். நிறைய வசனங்களோடு இருக்கும். அவற்றில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டி கொட்டி திரைக்கதை அமைத்துக் கொள்வார்கள்.” நல்ல புத்தகத்தை எழுதிவிட்டு, அவை சின்னாபின்ன படமாக்கப்பட்டு வெளிவருவதைத் தடுப்பதற்கு, இந்தப் படத்தின் கதாசிரியர் கடைபிடித்த உத்தியை பின்பற்றலாம். அவர் எழுதிய புத்தகத்துக்கு, அவரே திரைக்கதை கொடுத்து, அதற்கான ஆஸ்காரையும் வென்றிருக்கிறார்.

பாஸ்டனுக்கு வடமேற்கே, அமெரிக்காவின் ஈசானிய மூலையில் இருக்கும் ‘மெயிண்’ மாகாணத்தில் நடக்கும் கதை. இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டம். அநாதை இல்லம் நடத்துபவரின் செல்லப் பையனாக (தற்போதைய ஸ்பைடர்மேன்) டோபி மெக்வ்யெர். டோபிக்கு வாழ்க்கை போரடிக்கிறது. விடுதியின் தலைவருக்கு வயசாகிப் போனதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய விடுதியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கிறார்கள். மருத்துவம் படிக்காமலேயே, அனுபவத்தினாலும், திறமையினாலும், foster father போன்ற நடத்துநரின் ஆர்வத்தாலும் ob-gyn பயிற்சியுள்ள டோபி தலைமை இயக்குனராவதுதான் கதை சுருக்கம்.

புத்தகங்களுக்கேயுரிய கிளைக் கதைகள், கதாபாத்திர சித்தரிப்புகள், மெல்லிய நகைச்சுவை, மனதில் ஒட்டிக்கொள்ளும் வசனங்கள் என்று ஆஸ்கார் பரிந்துரையை படம் நியாயப் படுத்துகிறது. அறுபது வருடம் முந்திய காலகட்டத்தில் நடந்த கதையாக சொல்லப்பட்டாலும், இன்றைய நிகழ்வுகளிலும் அவற்றில் பல காட்சிகளை நினைக்கலாம். த்ரிலுக்காக போர் விமானம் ஓட்டும் ‘வாலி’யை இன்றைய ஈராக் சண்டையினால் உள்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்தி, போருக்கு சென்ற இடத்திலும் சாதிக்காமல் திரும்பிய புஷ் அரசோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறேன். ஐம்பது வருடம் முன்பு பற்றியெரியும் பிரச்சினையாக இருந்த Pro-Choice கருக்கலைப்பு — இன்றும் மக்களால் மதநம்பிக்கையாலும், உணர்ச்சிபூர்வமாகவும் சிந்திக்கப் படுகிறது. உறவு கொள்ளத் துடிக்கும் இளவயதினரின் பொறுப்பற்ற தனமைகளில் பெரிய அளவில் மாற்றமேதுமில்லை.

பாசத்துக்கும், காதலுக்கும், ஆசைக்கும் உள்ள சிறிய வேறுபாடுகளை வெளிக்கொணர்கிறது ரோஸ் குடும்பம். துள்ளித் திரியும் இளம் மானாக இருக்கும் ரோஸ் (பிரபல பாடகி ‘எரிகா படு’), எவ்வாறு சுருங்கிப் போகிறாள் என்பதை இயல்பாக சித்தரிக்கிறார்கள். அன்பும் அரவணைப்பும் கிடைத்தாலும், குழந்தைகளுக்கு அப்பா, அம்மா என்னும் பந்தத்தில் எவ்வளவு ஆர்வம் என்று சொல்லும்போது நமது மனமும் கசிகிறது. ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும், மனதுக்கு உகந்தவர்களுடன் பார்ப்பதால், படம் பார்ப்பது ‘வேறு எதற்கோ’ என்று சொல்லும் போது ‘அட’ போடாமல் இருக்கமுடியவில்லை.

கட்டளைகள் நிர்ணயிப்போர் எப்பொழுதுமே அவற்றை பிறருக்காக மட்டுமே வடிக்கிறார்கள் என்று எள்ளல் செய்வது; எல்லைகள் இல்லாத உலகம்தான் இது; ஆனால், சொந்த எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணவைப்பது; செய்யும் செயல் ஒவ்வொன்றிலும், உன்னால் உலகுக்கு என்ன நன்மை என்று சுய மதிப்பீடு செய்யத் தூண்டுவது; தவறு செய்து தப்பிக்க வாய்ப்பு அமைந்தால் பயன்படுத்துவோமோ என்று யோசிக்க வைப்பது; தன்னால் அடைய இயலாதபோதும் கொண்ட கொள்கையில் நம்பிக்கை வைத்திருப்போமா என்று சந்தேகிக்க செய்வது; நிலைமையை சரி செய்ய முடியுமானால், தனக்கு ஆதாயமில்லாமல் ஆபத்தே என்றாலும், தலையிடுவோமா என்று கேள்வி கேட்பது; காத்திருந்தால், பொறுமையோடு வாழ்வின் கடனை செலுத்தினால் நன்மையே பயக்குமோ என்று வேறூன்றுவது; மனமுதிர்ச்சியின் அடையாளமே நாம் அனைவரும் அனாதைகளே என்று உணர்வதோ என்று இம்சிக்க வைப்பது; இன்னும் அலசிக் கொண்டே இருக்கவைக்கும் குணாதிசயங்களின் அணிவகுப்பாக கதை நகர்கிறது.

தமிழில் இதை மறுபதிப்பாக்கினால் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் யோசித்துப் பார்க்க ஆசை. அனாதை இல்லத்தின் தலைவராக; சட்டம், நிகழ்வியல் அபத்தங்களை அறிந்த டாக்டராக சிவகுமார். வயசுக்கு வரும் வயதின் குழப்பங்களோடு, வாழ்க்கையை வாழ நினைக்கும் இளைஞனாக ‘ஜெயம்’ ரவி. பர்மாவின் மேல் பறப்பதற்குத் துடிக்கும் போர் வீரனாக ‘புன்னகைப் பூவே’ நந்தா. காதலனை மிஸ் பண்ணும் நாயகியாக சிம்ரன். ஆப்பிள் பறிப்பவர்களின் தலைவராக பிரகாஷ்ராஜ். அப்பாவுடன் முரண்புணர்வுக்கு உள்ளாகும் சூட்டிகையான மகளாக பூமிகா. தலைமை தாதியாக சுகாசினி. Haapy-go-lucky-ஆக இரவின் நட்சத்திரங்களை ரசிக்கும் ஆப்பிள் பறிப்பவனாக விவேக். பிரும்மாண்டம் தலைநீட்டாமல், இயற்கையான இயக்குநராக ஜெனநாதன். வசனத்திற்கு இ.பா. மாதிரி யாரையாவது சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

இவ்வளவும் சொல்லிவிட்டு படத்தின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளை பற்றி எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. கடவுளை உணரவேண்டுமானால், பார்க்கவேண்டிய புத்தகம். 

 



 

 

ரெண்டு வரி நோட்: இந்தக் கதாசிரியரின் புத்தம்புதிய நாவல் A Widow for One Year, நாளை முதல் The Door In The Floor என்று வெள்ளித் திரையிடப் படுகிறது.

The Cider House Rules – Tobey McGuire 

The Cider House Rules – Tobey McGuire Posted by Hello

The Cider House Rules – Tobey McGwire & Charlize T…

The Cider House Rules – Tobey McGwire & Charlize Theron
 Posted by Hello

உதவி… உதவி… ‘குமுதம்’ எப்படிப்பட்ட பத்திரிகை?

tamilbloggers யாஹு குழுமத்தில் ஷோபா கேட்கும் கேள்வி:

I’m doing my bachelors of mass media. We have a subject called Niche magazine and journalism for which we are required to analyse one of the top 10 magazines in the country. Well, I have been assigned KUMUDHAM purely out of default coz I happen to be the only tamilian in the class.

Well.Well…., the tragedy is I dunno how to read tamil properly. I happen to read tamil very slowly and I haven’t read kumudham at all. I have been asked to talk about the style of the articles and stuff like that. Could u please spare sometime and send me ur opinions on the writing style, the kind of articles and stuff that appear in kumudham. That would be of great help. Ur comments , likes and dislikes would also be welcome.

Venkatachalam Ramakrishnan சொன்ன பதில்.

இன்னொருவர் இவரிடம் கேள்வியை கேட்குமாறு சொல்லியிருக்கிறார்.பதில் சொல்வாரா என்று தெரியாது. ஆனால், அசோகமித்திரனில் இருந்து கொல்கத்தா வரை நன்றாகவே படம் பிடிக்கிறார்.