Category Archives: Tamil

Todo: Movie Reviews

கூடிய சீக்கிரம் விரிவாக்கங்களுடன் இற்றைப்படுத்தப்படலாம்…

1. ராட்டடூயி: இப்போதைக்கு *****/****; அமர்க்களம் + அட்டகாசம் + ஆஹா!

2. யூ, மீ, & டூப்ரி: மனம் விட்டு சிரிக்கலாம். தமிழில் எடுத்தால் கோபிகா, பரத் (மாட் டிலன்) & தனுஷ் (ஒவன் வில்ஸன்).நிச்சயம் ஹிட் ஆவும்.

3. 40 யியர் ஓல்ட் வர்ஜின்: எப்படி? எப்படி? ‘டேட்‘டுவது எப்படி? அமெரிக்க காதல் அணுகுமுறை + கலாச்சார விதிநெறிகள் அறிமுகம்.

4. பொய்: எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு இன்னிக்கும் பாலச்சந்தர் படங்கள் பிடிக்கும். முடிவு 😦 பாரதிராஜா என்றாலும் படம் 🙂

Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

தனிமையின் இசை: மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலாஅய்யனார்

நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்

கட்டுரை: தனிமையின் உபாக்கியானம் – ஞானக்கூத்தன்
கட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர் – கி. நாச்சிமுத்து
கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல் – அசோகமித்திரன்

நகுலன் கவிதைகள்

ஒரு குரல்

பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்து
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.

அங்கு

“இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?”
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன்.

– நகுலன் கவிதைகள்
காவ்யா வெளியீடு

Nagulanநாகூர் ரூமி:

கண்ணம்மாவைக் கண்டதுண்டா?
நான் – என் அம்மாவைத்தான்
கண்டுள்ளேன்
அவளும் இப்போது இல்லை

நகுலனின் “நவீனன் டயரி“ என்ற நாவல் இவ்வகையில் மிக முக்கியமானதாகிறது. “நண்பா பாரதியைப் படித்திருக்கிறாயா, பாரதியை நண்பா, படித்திருக்கிறாயா, படித்திருக்கிறாயா நண்பா பாரதியை“(26) போன்ற வாக்கியங்கள் அழுத்த மாற்றத்தின் மூலம் (intonation shift) அர்த்த மாற்றத்தை ஒரே வாக்கியத்திற்கு தர முயல்கின்றன.

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான்

நகுலனின் “கோட்ஸ்டாண்ட் கவிதைகள்“ தொகுதியிலே வரும் “எல்லைகள்“ என்ற கவிதை இது. இக்கவிதையில், கருத்தளவில், பாரம்பரிய எல்லைகளைக் கடந்து செல்லுகின்ற யாரும் தனக்கும் பாரம்பரியத்திற்கும் உள்ள தொடர்பை முறிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே இங்கே தொடர்காலத்தை (continuous tense) குறிக்கும் ‘கொண்டிருந்தான்‘ என்ற சொல்லின் சப்த முறிவின் மூலம் அது உணர்த்தப்படுகிறது. அதே சொல் இரண்டாம் முறை வரும்போது, ‘கொண்டிருந்தான்’ என்பது தொடர்காலத்தைக் குறிக்கும் ‘கடந்து கொண்டிருந்தான்’ என்பதன் பகுதியாக நிற்காமல் எல்லைகளைக் கடப்பதன் மூலம் ஏற்படும் கலாச்சார லாபத்தைக் கொண்டிருத்தல், பெற்றிருத்தல் என்ற அர்த்தத்தில் செயல்படுகிறது. கவிதையில், வடிவத்தை, வார்த்தையை, மொழியை சிறிது மாற்றினாலும் நாம் சிறிய இழப்புக்காகவேனும் உள்ளாவோம் என்பதை இக்கவிதை தெளிவு படுத்துகிறது.

  • Thinnai: நகுலன் படைப்புலகம் – சங்கர ராம சுப்ரமணியன்
  • Thinnai: நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி – எச். பீர்முஹம்மது
  • Thinnai: ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘) – பாவண்ணன்

டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயருடைய நகுலனின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை உடையவை. நினைவுப்பாதை என்னும் நாவல் மிக முக்கியமான படைப்பு. நவீனன் டயரி, நாய்கள், வாக்கு மூலம் ஆகியவை பிற படைப்புகள். கவிதைத்துறையிலும் இவரது சாதனை மிகுதி. 1998 ஆம் ஆண்டில் நகுலன் கதைகளையும் 2001 ஆம் ஆண்டில் நகுலன் கவிதைகளையும் காவ்யா பதிப்பகம் தொகுத்து நுால்வடிவம் கொடுத்துள்ளது. ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘ என்னும் கதை கணையாழி இதழில் 1967ல் வந்தது. ‘நகுலன் கதைகள் ‘ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த “குருஷேத்திரம்” இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும்.

Nagulan:நகுலன் :: தெ. மதுசூதனன்

Continue reading

métier

வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.

  • ப்ளாக்ஸ்பாட்டை விட வோர்ட்ப்ரெஸ் சிறந்தது. யார் பின்னூட்டம் இடுகிறார்கள், எப்படி வருகை புரிகிறார்கள் போன்ற சில்லறை விஷயங்களிலிருந்து போலிகளைக் கட்டுபடுத்துவது வரை மேம்பட்ட முறையில் செயல்படுகிறது. இதுவரை வலைப்பதிவு தொடங்காவிட்டால் வோர்ட்பிரஸ் பயன்படுத்தவும்.
  • கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வீடு, மாமியார் வீடு ரெண்டும் முக்கியம்; அது போல், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் பதிவை சமர்ப்பித்து விடவும்.
  • சாஃப்ட்வேருடன் வரும் manual-களை ஏறெடுத்தும் சீந்தாத சாதியைச் சேர்ந்தவர்கள் நாம். என்றாலும், கில்லியின் தமிழ் தட்டச்சு பக்கம், Indian Language Development WebSite போன்ற உதவிப் பக்கங்களைப் பொறுமையாக ஒரு முறையாவது முழுவதுமாக சிரத்தையாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளவும்.
  • டெக்னோரட்டி, ரோஜோ, போன்ற அகில உலக தில்லாலங்கடி சேவைகளிலும், அனிதா போரா, காமத், போன்ற லோக்கல் தாதா லிஸ்டிங்களிலும் முன்மொழிந்து மொய் போல் சுட்டியை வலைப்பதிவில் சேர்த்துவிட்டு அவர்களின் நோட்டு புத்தகத்தில் இடம் பிடித்துவிடவும்.
  • இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.
  • ப்ராஜெக்ட் டெலிவரி ஆனபிறகு சப்போர்ட் கடுப்படிக்கும். அது போல் நாளடைவில் நனவோடைகள் போரடிக்க, சினிமா, தொலைக்காட்சி, புத்தகம் போன்ற கலைத் துறை விமர்சனங்களை முன் வைக்கவும்.
  • இதுவும் தீர்ந்து போக தினசரி செய்திகளை மேயவும். எல்லோரும் தினத்தந்தி, தினமலர், தினகரன் படிப்பதால் தி ஹிந்து, டெக்கான் * போன்ற ஆங்கில நாளிதழ்களை வாட்ச் செய்யவும். விகடன், குமுதம், கல்கி, துக்ளக், கீற்று.காம் போன்றவற்றையும் கண்காணிக்கவும்.
  • தொடர்ந்து சரக்கில்லாவிட்டால், இந்தியா டுடே, ஃப்ரண்ட்லைன், தி வீக், அவுட்லுக் பக்கம் பார்வையைத் திருப்பவும். இதுவும் redundant ஆனால், எகனாமிஸ்ட், ஃபாரின் பாலிசி,ஃபோர்ப்ஸ் என்று மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் உதவும்.
  • நியுஸ்லெட்டர்ஸ் கொடுக்கும் தளம் அனைத்திலும் பெயரையும் மின்மடலையும் பதிவு செய்து, அவர்களின் வலையகம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தெரிவிக்க வசதி செய்து கொள்ளவும்.
  • இவ்வளைவையும் படித்து அப்படியே கொடுக்க செய்திகள் ஹார்லிக்ஸ் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும். நமக்கு முக்கியமாகப் படுவதை, புல்லட் பாயிண்ட்டாக கொடுத்தால் நேரப் பற்றாக்குறையால் திண்டாடும் படிப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும். நம்ம கருத்தை சுருக்+நறுக்காக பக்கத்திலேயே சொந்தமாக கிறுக்கலாம். புகைப்படம் இட்டால், காசி சொல்வது போல் (மேலும் விரிவாக இங்கே) எளிதில் வலைப்பதிவில் தோன்ற வகை செய்யவும்.
  • சிந்தையைக் கிளறுவதாக தோன்றும் பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடவும். நமக்குப் பிடித்த பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து இடவும். நமக்குக் கருத்து இருந்தால் மட்டுமே இடவும். கண்டிக்கிறேன், பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, நீங்க நல்லா எழுதலை போன்ற பெரிய மனுசத்தனமான மறுமொழிகள் தேவையில்லாதது; அப்படியும் கை அரித்தால் ஏன் என்றாவது சொல்லி விடவும். நம்ம அலுவல்/வீட்டு ஐ.பி முகவரி தெரியக் கூடாது என்றால் பிகேபி சொல்வது போல் செயல்படவும்.
  • அனானியாக பின்னூட்டமிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நம்ம வலைப்பதிவிற்கு சக கருத்து உடையவரை (& vice versa) வரவேற்பதற்கும் காமெண்ட்கள் உதவுகிறது; அதே சமயம் நம்ம crap-ஐ நாமே சொந்தம் கொண்டாடா விட்டால், வேறு யார் உரிமை பாராட்டுவார்கள்?
  • நேர்மையாக சொல்ல வந்ததை எழுதவும். நம்ம மனசுக்குப் பட்டதை ஒத்துக் கொண்டு எழுதினால் அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி. மேலும், எழுத்திலும் வெளிப்படையான எண்ணம் தெரியவரும். அதற்காக சொல்ல வந்ததை அப்படியே சொல்கிறேன் என்று உடனடியாக போஸ்ட் செய்து விடாமல், ஒரு தடவையாவது ப்ரூஃப் பார்த்து தட்டச்சுப் பிழைகளை கூடிய மட்டும் திருத்திப் போட்டால் வாசகரை கௌரவிக்கும்.
  • வலைப்பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து படித்து வரவும். கில்லி, தேஸிபண்டிட், தேஸிகிரிடிக்ஸ் போன்ற பரிந்துரைகளைப் பார்க்கவும். தினசரி தெருமுக்கு பிள்ளையாருக்கு அரகரா போடுவது போல் தேன்கூடு, தமிழ்மணம், மறுமொழி நிலவரம், வாசகர் பரிந்துரை, நட்சத்திரப் பதிவர். அதிகம் பார்வையிடப்பட்டவை ஆகியவற்றை தரிசித்து விடவும். [இந்த வலைப்பதிவரும் கில்லியின் பங்களிப்பாளர் போன்ற disclosureகளை சொல்லிவிடவும்]
  • வலைப்பதிவு என்பது தனி நபர் மடலுக்கு ஈடாகாது. நீங்கள் வலைப்பதிவராக இல்லாவிட்டால், இந்தப் பதிவை நான் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அஞ்சலிட்டிருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வேறு எவரையும் புண்படுத்தாது என்றும் உணர்ந்தால் மட்டுமே பொதுவில் இடவும்.
  • நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.
  • மேலே உள்ள கருத்திற்கு பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விதிவிலக்கு. அரசியல்வாதிகள், நடிகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைத் திட்டாவிட்டால் வலைப்பதிவுக்கு மேட்டரே கிடைக்காது.
  • வார்ப்புருவில் மாட்டிக் கொண்ட வலையகம் போல் ஒரே மாதிரி monotonous-ஆக எல்லா பதிவுகளும் அமைத்துக் கொள்ளாமல், ஒரு பதிவில் நினைவலை, அடுத்தது அரசியல், தொடர்ந்து சினிமா, கொஞ்சம் வலைப்பதிவு வட்ட அரசியல், சொல்ப தமிழ், லிட்டில் ஆங்கிலம், குடும்ப ரசாபாசம் என்று கலந்து கட்டி கூட்டாஞ்சோறாகக் கொடுக்கவும்.
  • ஃப்ரீயா கொடுத்தா பினாயில் குடிப்போம் என்பதற்காக என்னைப் போல் நிறைய சுட்டிகளையும், ஜாவாஸ்க்ரிப்ட் ஜாலங்களையும் வலைப்பதிவில் இணைப்பதால், அகலபாட்டை இல்லாமல் வருபவர்களுக்கு ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எப்போது முடியும் என்று பொறுமையிழப்பது போல் கோபம் வரும். டெம்பிளேட்டில் அதிகம் கை வைத்தால் சரக்கு கம்மி என்று அர்த்தம். உலகெங்கும் உலாவிகள் தோறும் அதிவேகத்தில் வலைப்பதிவு மின்ன, சின்ன வார்ப்புரு வைத்திருக்கவும்.
  • கொதிப்பு உயர்ந்து வருகிறதா… பதிவு செய்யலாம்; கருத்தை நிறைக்கிறதா… பகிரவும்; அசத்தல் திரைப்படமா… சொல்லவும்; போன பதிவில் பின்னூட்டமிட்டவருக்கு இந்த விஷயம் பிடிப்பதால் மட்டும் பதிய நினைக்கிறோமா… பதிவதற்கு முன் யோசிக்கவும்.
  • அதிகம் ஈஷிக் கொள்ளாமல், முன்முடிவுகளுடன் நட்புக்காக சங்கடமான எண்ணங்களைத் தவிர்க்காமல், இன்றைக்கு மட்டும் நான்கு பதிவுகள் இட்டு விட்டோமே என்று சுயக்கட்டுப்பாடுகள் இட்டுக் கொள்ளாமல், பெருசு போல் டி ஆர் விஜயகுமாரி கண்களுக்கு மயங்குகிறோமே என்று மறைத்து வைக்காமல், தனித்துவமாக நினைத்த விஜய்காந்த் முதல் நாளே சட்டசபை மட்டம் போடும் உள்முரண்களை இருட்டினுக்குள் தட்டிக் கொள்ளாமல் எழுதினால் லேஸிகீக் சொல்வது போல் Raw, naive and unfettered ஆக இருந்தால் வரப்பிரசாதம்.ஏதோ சொல்ல நினைத்து, எங்கோ இழுத்து சென்றால் ஃப்ரீயா வுடுங்க… அதுதான் ப்ளாக் போஸ்ட்! இந்தப் பதிவில் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் தலைப்பு வார்த்தையாவது புத்சு.

    | |