Daily Archives: நவம்பர் 23, 2026

சொல்வனம் #379

சொல்வனம் ஆசிரியர் குழுவில் துவக்க காலத்தில் இருந்து பயணிக்கும் ரா கிரிதரனின் நாவல் ஒரு வழியாக வெளியாகிறது.
அந்த நூலின் ஒரு அத்தியாயம் இந்த சொல்வனம் இதழில் கவர் ஸ்டோரியாகி இருக்கிறது.

ரா கிரிதரன் வார்த்தை வார்த்தையாக, ஒவ்வொரு எழுத்தாக செதுக்குபவர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தப் படைப்பை எழுதி, மறு ஆக்கம் செய்து, மீண்டும் புதிதாக மினுக்கி உருவாக்கி இருக்கிறார்.
வாசித்து உங்களின் கருத்துகளைச் சொல்லுங்கள்.

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் கட்டுரை ஆய்வாக, தகவல் கிடங்காகக் கிடைக்கிறது.
என் ஆசிரியர்களில் முதன்மையானவர் இரா முருகன்.
அவருக்கு அஞ்சலியாகவும் இன்னொரு ஆளுமையான சூஸன் சாண்டாக் அனுவமாகவும் அமைகிறது.

சொல்வனம் என்றால் அறிவியல் புனைவுகள்.
அது மொழியாக்கம் மட்டுமே என்பது அந்தக் காலம். மைத்ரேயனின் பிரத்தியம் என்பது கடந்த காலம்.
ராம் பிரசாத் அதை தற்காலத்தில் போக்கினார் என்றால் இப்பொழுதைய நட்சத்திரம் விவேக் – முக்கியமான / காத்திரமான, சிந்திக்க வைக்கும், அறிபுனை scifi.

அடுத்ததாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்த கதையும் அதன் மேற்சென்று இக்கால தலைமுறை, டிண்டர் கலாச்சாரம், கல்யாணத்திற்கு முன் கலவி என பல வகையில் செல்லும் கலந்துரையாடல்.
கடிதம் + விவாதம் + எண்ணம் = சமூகம்?
மற்றவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சந்தேகிப்பதிலேயே ஒழுக்கம் அடங்கியிருக்கிறது.

புத்தக அறிமுகங்கள்.
புனைவுகள்.
நெடுங்கதைகள்.
புதியவர்களின் முதல் ஆக்கங்கள்.

தற்கால நடப்புகள்.
கவிஞர் சேரனுக்கு அஞ்சலி.

சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026 – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-379

வாசித்து Solvanam குறித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்