
- சாய் தரம் தேஜ். சிரஞ்சீவி குடும்பத்தவர். சிரஞ்சீவியின் சகோதரியான விஜய் துர்காவின் புதல்வர். நன்றாகவே நடிக்கிறார்.
- இன்னொரு பக்கம் கண்ணுக்கு பசுமையான கல்யாணி ப்ரியதர்ஷன். எத்தனை படம் பார்த்தாலும் இன்னும் டெல்லி பக்கத்து கல்லூரியின் மாணவிகளை நினவுறுத்தும் நிதானமும் குளிர்ச்சியும் அகங்காரமும் கலந்த பாந்தம். அம்மா லிஸியைக் கூட இதே போல் கண் குளிர பார்த்த நினைப்பு.

- துணை நடிகர்கள் பிரும்மாண்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அற்புதமான கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள். நன்றாக சித்தரிக்கப்பட்டு, சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள்.
- மெகாதீரா + மொம்மரில்லு “சுனில்” ஆகட்டும்; தூகுடு + ஆலா வைந்தபுரமுலு + ஜானு “வெண்ணிலா கிஷோர்” ஆகட்டும்; அத்தடு “போஸனி கிருஷ்ண முரளி” ஆகட்டும்; கஸ்துரிபா காந்தி “ரோஹினி ஹட்டாங்கடி” ஆகட்டும்; ஈசன் “ராவ் ரமேஷ்” ஆகட்டும் – ஒவ்வொன்றுக்கும் பொறுக்கி எடுத்துப் போட்டு இருக்கிறார்கள்.
- இசை டி.எஸ்.பி. – தேவி ஸ்ரீபிரசாத். ஆனால், ஆச்சரியம். கத்தல் இல்லை; அலறல் இல்லை. மென்மையாகவே கேட்கும்படி இருக்கிறது.
- இப்பொழுது பார்க்கும் படங்களில் எல்லாம் எப்படியோ மெட்ரோ வருகிறது. கதையோடு ஒன்றி பயணிக்கிறது. “ஞான் ப்ரகாஷன்” இப்பொழுதுதான் பார்த்தேன். அப்புறம் “விக்ருதி” படத்தின் மூலஸ்தானத்திலும்… காதலிலும் ட்ரெயின்; சோகத்திலும் ரயில்; பிரிவோம்; சந்திப்போம் எனச் சொல்வதற்கு வசதியான தொடர்வண்டி.
- படத்தில் கல்யாணிக்கு அப்புறம் பிடித்தது வசனங்கள்:

- ஸ்விக்கியில் சொன்னால் வரிசைப்படி வீட்டில் உட்கார்ந்தபடி எல்லாமும் வரும் என்பதைப் போல் எல்லாவற்றையும் எதிர்பார்க்காதே. வெற்றி நேரம் எடுக்கும்!
- என் வாழ்க்கையில் நான்கு திசைகளிலும் விடியல் காலத்தில் சூரியனின் திசையில் ஒளி பிரகாசிக்கிறது. ஏனென்றால் நான் இருளின் முகவரி.
- வாழ்வது என்பது பிழைப்பது என்று அர்த்தமல்ல. வாழ்க்கையை விட அதிகமாக நேசித்த ஒரு பெண்ணுடன் இருப்பது.
- நீங்கள் விரும்பும் போது உங்களைப் பார்ப்பதை விட, உங்களைப் பார்க்கும்போது உங்களை நன்றாக உணர வைக்கும் ஒரே விஷயம் காதல்.
- உங்கள் தவறை அறிந்து கொள்வதை விட பெரிய சாதனை எதுவுமில்லை
- ஒரு காலத்தில், நூறு பேர் இருந்தால், சீனு என்று அழைத்தால், இருபது பேர் திரும்பிப் பார்ப்பார்கள். இப்போது நாம் பொறியியலாளர் (எஞ்சினியர்) என்று அழைக்கும்போது, ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் திரும்பிப் பார்க்கிறோம்.
- அம்மா, அப்பா, பணம், சாதி, மதம் என்று பிரியக் கூடியதற்கு காரணங்களை யோசியாமல் ஒரு முறை இருவரும் காதலிப்போம். நீங்களே அதில் ஈடுபடுங்கள். துன்பத்தின் மகிழ்ச்சி உங்கள் கைகளில் உள்ளது.

- (தோழியிடம் காதலைச் சொல்லாமல் சொல்வது) பவன் கல்யாண் படத்தில் அவரால் தன் மனதில் உள்ள உண்மையான உணர்வுகளை ஏன் சொல்ல முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அது விரைவில் வருமா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
- நான் உங்களை தொந்தரவு செய்ய விடாதே.
- காதலி: நான் செல்கிறேன். காதலன்: நீங்கள் போய்விட்டீர்கள்.
- அவர் கலாம் அல்ல என்று கலாம் நினைத்தால், அவரும் ஒரு சாதாரண மனிதர். சோற்றுக்கனவு பிழைப்போடு கலாம் போல் ஆக கனவு காண முடியாது.
- வாழ்வது என்பது பிழைப்பாக இருக்கக்கூடாது.
- தோல்வியடைவது ஒரு அதிர்ஷ்டம். தோல்வி சிறந்த ஆசிரியர். தோல்வி என்பது நமக்குத் தெரிந்த விஷயம். தோல்வி என்பது எதையும் கொண்டு வரத் துணிந்த ஒரே விஷயம்.
- வெற்றியாளர் வெற்றிபெறும் போதெல்லாம் அது தலைவலி. தோல்வியுற்றவர் வெற்றி பெறும்போது, அது வரலாறு.
