Monthly Archives: ஜூலை 2009

அமெரிக்காவில் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM

சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

கள்ளவோட்டுதான் ஜனநாயகமா?

அசல் இடுகை: ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?

Madurai-Monkey-Tamil-Nadu-Drink-Water-Flickr-Redbull-Chimpவாக்காளர் நலம் சார்ந்து பேசினால், “தேர்தல் சமயத்தில் ஆரத்தியெடுத்து, தேர்தலை வைத்து சோறு தின்பவர்களுக்கு ஏன் ஊழல் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்கிறார்கள்.

ஓட்டுதான் சோறு போடுகிறது என்றால், வாக்கு அளித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஜனநாயகம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் வோட்டளித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் வாக்காளர்களுக்கு ஓட்டு சோறு போடுகிறது?

அரசியலை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஓட்டை வைத்துக் கொண்டு **** முடியாது.

cats-read-books-language-books-images-photos-flickr-paul-nganஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் வெற்றிக்கான கள்ள வாக்கு. அதற்கு மேல் booth capturingஐ உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஓட்டு மக்களாட்சி முறைகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் பிரதிநித்துவங்களில் வாக்குரிமையைக் கலப்பதில்லை. ஓட்டளிக்க விரும்பாததும் முயலாததும் சமூகப் போக்காகவும் தனியாள் உரிமையாகவும் இருக்கலாம்.

ஆனால், “சோறு போடும் நன்றிக்காக கள்ள வாக்கை கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த சுதந்திர நாடும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: சுருக் + சறுக் + நறுக் பகீர்

மீண்டும் கார்சாய்: ஆப்கானிஸ்தான் தேர்தல் களம்

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

  • ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
  • தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
  • நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
  • Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
  • அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
  • பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
  • வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
  • எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.

வேட்பாளர்கள்

Dr. Abdullah in Kabul after filing to run for president.

Dr. Abdullah in Kabul after filing to run for president.

  • ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
    • மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
    • முன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili
  • அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
  • முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
  • தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
    • முனைவர்.
    • பிரான்சில் குப்பை கொட்டியவர்.
    • அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
    • காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
    • புத்தகப் புழு.
    • இணைய தளம் வைத்திருக்கிறார்.
    • 15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
    • முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
    • கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.

அமெரிக்கா

  • தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
  • அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
  • தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.

அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.

சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்

Kaalam-Canada-Sitrithazh-Small-Magz-Tamil-Lit-Coversமுந்தைய பதிவு

  1. தமிழ் சிற்றிதழ்கள்
  2. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

இணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.

மேற்கோள் முத்து

1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

Kalai-Images-Pictures-Thamil-Magazine-Covers-Little-Mag2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

தகவல், பின்னணி, வரலாறு

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

KPR-Keppiyaar-Kumari-District-Alternate-Journals-Issues-Articles-Opinionsந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

பெயர்கள், பட்டியல்

  • நிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை
  • ஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்
  • ஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • மே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • ஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.
  • கலைஞன் Oppuravu-Literary-Adventures-New-Obsolete-Images-Cover-Photos-artsபதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  • சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்)
  • தாமரை(ப.ஜீவானந்தம்)
  • சரஸ்வதி (விஜயபாஸ்கரன்)

கருத்து, வம்பு, கிசுகிசு

உசாத்துணை, இணையத்துக் கட்டுரைகள்

1. Tamil-Neyam-EVR-Periyar-Left-Rational-Thinkers-Contents-Researchமரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்

2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

3. ஆறாம் திணைஇலக்கியம் :: சிற்றிதழ் வரிசை

தொடர்புள்ள புத்தகங்கள்

1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்

3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை

4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

Puthu-Ezhuthu-Manonmani-Preface-Table-of-contents-Index-Search-Fiction-Story5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்

7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்

8. இந்திய இலக்கியம் – க.நா.சு.

9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்

ஓபாமா: ட்விட்டிடும் அமெரிக்க ஆண்

உதவி: Non Sequitur — UCLICK GoComics.com | Doonesbury@Slate – Daily Dose | Prickly City – Cartoons & Comics

முதல் கருத்துப்படத்துக்கான புத்தக விமர்சனம்:
Use who you know to help get ahead: ‘The Power of Who’ aims to change how you network « மெட்ரோ