சினிமா போஸ்டர் இங்கே:
நபிகள்னா மெக்கா! ராஜான்னா பக்கா – தமிழ் சினிமா: ராஜாதி ராஜா
கண்டனம் அங்கே:
கூத்தாநல்லூர்: இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்: “தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.”
திருப்பதிக்கு மொட்டை-லட்டு போல இதுபோன்ற ஸ்லேடைகளை ஒதுக்கித் தள்ள இவர்களுக்கு வேறுவேலை இல்லை. அதனால் ஒன்னும் இல்லாத விஷயங்களை பெரிதாக்கி , யாரும் யோசிக்காததைச் செய்வார்கள்.
நம் நாட்டில் மதம் அரசியல் இரண்டும் சரியான கலவையில் தப்பித கற்பிதங்களை மக்களுக்கு புகட்டுகின்றன.
மெக்கான்னா நபிகள்னு சொன்னா சரியாயிருக்குமா? லட்டுன்னா திருப்பதின்னு சொல்லலாமா? என்ன சம்பந்தம்னே புரியலியே!!