வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்


உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  • வீடு பேறு பெற்றோர் – முக்தர்: நித்தியர்
  • ஒரு பொழுதும் தளைக்குட்படாத நிலையானவர்
  • தளைக்குட்பட்டோர்  – பக்தர்கள்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படாதவை: பயிரினங்களும் விலங்கினங்களும்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படுவோர்: மனிதர்கள் & கடவுள்
      • உலகப்பயன்களை நுகர விழைவோர்: புபுட்சு
        • நன்மையை நாடுவோர்: தர்மபரர்
        • பொருள், இன்பம் விழைவோர்: அர்த்தகாமர்
          • »பல கடவுளைச் சார்ந்து நிற்போர்: வேதாந்த பரர்
          • »ஒரே கடவுளைச் சார்ந்து நிற்போர்:: பகவர் பரர்
            • துன்புறுவோர்: அர்த்தர்
            • அறிவு விழைவோர்: சிக்ஞாசர்
            • பொருளை நாடுவோர்: அர்த்தார்த்தி
      • வீடுபேறடைய விரும்புவோர்:  முமுட்சு
        • தன்னை தூய நிலையில் உணர விழைவோர்: கைவல்யபரர்
        • இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: மோட்சபரர்
          • »அன்புவழிப்பட்டோர்: பக்தர்கள்
            • அன்பினை வழியாக ஏற்றோர்: சாதனை பக்தர்
            • அன்பினை முடிவாகக் கொண்டோர்: சாத்திய பக்தர்
          • »புகல்வழிப்பட்டோர்: பிரபன்னர்கள்
            • அறிவு அன்பு மட்டுமே இறைவனிடமிருந்து பெற விழைவோர்: பரமை கரந்திகள்
            • உறுதிப் பொருளை இறைவனிடமிருந்தே பெற விழைவோர்: ஏகாந்திகள்
              • முன்வினைப்பயன் நுகர்வின் முடிவில் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: திருப்தர்
              • புகலுறுதி மேற்கொண்டவுடன் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: ஆர்த்தர்

8 responses to “வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்

  1. பாபா… தலைப்பிற்கும் பகுப்பிற்கும் என்ன சம்பந்தம்னு நிஜமா புரியலை. கொஞ்சமாவது காண்டெக்ஸுடன் சின்ன விளக்கம் ப்ளீஸ் 🙂

  2. என்னங்க இது… தலைப்புக்கு ரிசர்ச் ஜர்னல் மாதிரி கொக்கி போடறீங்க 🙂

    அர்த்தகாமர் கேபிடலிஸ்ட்னு வைத்துக் கொண்டால் யாரை கம்யூனிஸ்ட் என்று கருதலாம் என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

    அது சரி…

    குத்திக்கல் தெரு படித்தீர்களா? எனி காமென்ட்ஸ்?

  3. பாபா சென்னையில் எதாவது மடம் துவங்கும் எண்ணமா?, இல்லை இருக்கிற மடம் ஒன்றை கைப்பற்றி அதை NRI ஐயங்கார்களுக்காக மட்டும் நடத்துவதாக திட்டமா ? 🙂

    • ஐ எம் நாட் காட்,
      சொன்னால் நம்ப மாட்டீர்கள். இருந்தாலும் எழுதி விடுகிறேன்.

      அஹோபில மட வசதிகளைப் பார்த்தவுடன் முழுமூச்சில் கார்பரேட் குருவாகாவோ ஜீயராகவோ ஆகிவிடும் ஆசை வந்திருக்கிறது.

      மூன்று ஏசி பேருந்து. ஒரு குளீரூட்டப்படாத சாதாரணப் பேருந்தில் சாலையில் நிறுத்தி எங்கு வேண்டுமானாலும் சமைக்க ஏதுவான சாமான்கள், இன்ன பிற. இறங்கும் இடத்தில் எல்லாம் துந்துபி உட்பட மத்தளம் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு.

      ஹ்ம்ம்…

      சாமியாராக கொடுத்து வைத்திருக்க வேண்டும்! 🙂

  4. >குத்திக்கல் தெரு < வாரகடைசியில படிக்கலாம்னு பிரிண்ட் பண்ணினேன், ஆனால் சோம்பேறித்தனம்.இந்த வீகெண்ட் படிக்கறேன் 🙂

  5. பாபா, அகோபில மட ஜீயர்கள் vs திருப்பதி கோயில் சர்ச்சையை படித்த
    பின்னுமா ஆசை விடவில்லை :).
    கார்பரேட் சாமியார் ஆகவேண்டுமென்றால் முதலில் தாடி வளர்க்க வேண்டும், அதற்கு முன் நிலத்தை வளைக்க வேண்டும் :).
    அல்லது நிலத்தை முதலில் வளைத்து போட்டு ஆசிரமம் கட்டும் திறன் வேண்டும் :).
    வத்திகனில் உள்ள வசதிகளைக் கேள்விப்பட்டால் கார்டினல் ஆக இருந்தால் போதும் என்று தோன்றும்,
    போப் லெவலுக்கு ஆசைப்பட வேண்டாம் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.