மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?


மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

 • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
 • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
 • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
 • மக்களிடம் வேலைத் திறன்,
 • தொழில் நுட்ப அறிவு,
 • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
 • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
 • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

 • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
 • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
 • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

11 responses to “மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

 1. எக்ஸலண்டாக எழுதியுள்ளீர்கள்…!!!

 2. உங்கள் இக்கட்டுரையில் பல ஊகங்களும் சுய கணிப்புகளுமே அடங்கி உள்ளன. வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டதைப்போல அதிதீவிர ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களிடம் நான் காணும் ஒரு பொதுவான விஷயம் இது!

  [1] அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வை – இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  [2] மெக்கைய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. – ஆதாரம் இருக்கா? Washington Postல் ஒவ்வொரு செனட்டர் கொண்டுவந்த பில்லின் summary கிடைக்கிறது அதைப் படித்திருக்கிறீர்களா?

  [3] அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி ”இருக்க வாய்ப்பு இருக்கிறது” – ஊகத்திற்கு ஆதாரம்?

  [4] பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி ”இருக்கவும் வாய்ப்புண்டு” – ஊகத்திற்கு ஆதாரம்?

  [5] புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம் – என்ன ஊழல்? எத்தனை டாலர் கொள்ளை அடித்தார்? தீவிர இடதுசாரிகள்கூட சொல்லாததை சொல்லி இருக்கிறீர்கள் – Conspiracy theory இல்லாத அத்தட்சி இருந்தால் அறியத்தரவும்

  [6] அவை சுழற்சி இல்லாதவை. – அப்ப ஆடம் ஸ்மித்தின் கொள்கைகளை அடிப்படியாக கொண்டு வளர்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரதையே கேள்விக்குள்ளாக்குகிறார்களா? Invisible hand என்பது மாயைதானோ? ரீகன் காலத்தில் எல்லோரும் மண்சட்டியில்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனரோ? Didn’t you notice or fail to ralize the economic stimulus check helping the economy to stay afloat?

  [7] புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை – கிளிண்டன் காலத்தைக்காட்டிலும் புஷ்சின் tax cut அதிக வருவாய் ஈட்டித்தந்ததாக பொருளாதார வல்லுனர்கள் கூறுவது பொய்யா?

  [8] தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை – முதல் தேர்தலில் தான் தில்லுமுல்லு என்று கதை கட்டினார்கள் ஜனநாயகக் கட்சியினர், இரண்டாவது தேர்தலிலுமா தில்லுமுல்லு?

  [9] பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன. – அவருடைய கனவுகள் பலமாகத்தான் இருக்கின்றன. அதற்கான சாத்தியங்களை பொருளாதார நிபுணர்கள் ஆய்ந்திருப்பதை படித்திருக்கிறீர்களா? Increased tax to higher 1% and 10% increase in capital gains tax போன்ற வரி அதிகரிப்பினால் வரக்கூடிய தீவிரங்களைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா?

  ”என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது” – இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் கட்டுரை முழுதும் ஊகங்களையும் கட்டுக்கதைகளையும் நிரப்பிவிட்டு எந்த வலுவோடு இந்த அடித்தளமற்ற கட்டுரையை முன்வைத்தீர்கள் என்று தெரியவில்லை. எனக்குத்தான் ஆதாரங்கள் தென்படவில்லை போல? பத்திரிக்கையில் வந்த சார்பு செய்தி சுட்டிகளை அடுக்காமல் சார்பற்ற ஆதாரங்களை அறியத்தந்தால் தன்யனாவேன்.

  -டைனோ

 3. டைனோ,

  [1] அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வை – இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  செமொக்ரட்ஸ் சார்பு என்று கருதப்பட்டாலும், ஜனநாயகக் கட்சி சறுக்கும்போது அத்தகைய ஊடகங்கள் அவர்களை மிகக் கடுமையாக சாடுகிறது (உதாரணம்: டெமொக்ரசி நௌ)

  ரிபப்ளிகன்ஸ் ஆதரவாக இருக்கும் பல பத்திரிகைகள், ஃபாக்ஸ், (சி என் என் டிவிகள்?), அவர்களின் மறுபக்கத்தை சுய மதிப்பீடாக தங்களை விமர்சிப்பதில்லை. மெகயின் தேர்வின் போது இப்படிப்பட்ட ‘Maverick’ (தமிழில் என்ன) வந்துவிடக் கூடாது என்று தலையங்கள் தீட்டியிருந்ததே தவிர மெகயினின் கொள்கைகளில் எது கவர்ந்தது என்பதையும் தவிர்த்திருந்தது.

  ‘நம்ம கட்சி ஆளு’ என்று புஷ் மீது இருக்கும் பாசத்தையும் நமது நாட்டின் போர் என்று புனிதமாவதாலும் கண்ணை மறைத்துவிடுகிறது.

  [4] பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி ”இருக்கவும் வாய்ப்புண்டு” – ஊகத்திற்கு ஆதாரம்?

  அமெரிக்க தேர்தல் – ஜான் மெக்கெயின் சறுக்கிய தருணங்கள்

  இந்த குற்றங்கள் பெரிதுபடுத்தாதற்கு காரணங்கள்:
  அ) ஒபாமா எதிர்மறைப் பிரச்சாரத்தை விரும்பாதது

  ஆ) மக்களுக்கு எளிதில் புரிய வைக்க முடியாதது (எல்லாரும் லாபியிஸ்ட் கொடுப்பதை வாங்குகிறார்களே? மெகயினுக்கு மட்டும் ஏன் இப்படி குற்றச்சாட்டு என்னும் கேள்விக்கு ‘சுய முரண் அல்லவா’ என்று படாதபாடு பட்டு விளக்கவேண்டும்)

  இ) மெக்கயினே இவற்றை ஒப்புக் கொண்டாகி விட்டதே! அப்புறம் ஏன் வாக்குமூலம் கொடுத்தவரை சித்திரவதை செய்யணும்?

  [5] புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம் – என்ன ஊழல்? எத்தனை டாலர் கொள்ளை அடித்தார்? தீவிர இடதுசாரிகள்கூட சொல்லாததை சொல்லி இருக்கிறீர்கள் – Conspiracy theory இல்லாத அத்தட்சி இருந்தால் அறியத்தரவும்

  இது இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது. Halliburton, Blackwater, Rumsfeld, Cheney அப்பா புஷ் என்று தேடினால் எக்கச்சக்கமாய் மாட்டும்.

  [6] Didn’t you notice or fail to ralize the economic stimulus check helping the economy to stay afloat?

  வீட்டுக்குப் பணம் அனுப்பியதால் பொருளாதாரம் முன்னேறியது என்பதை அறுதியிட்டு நிலைநிறுத்துவதற்கு ஆதாரம் கிடையாது. மேலும், இவ்விதமாக ‘செயற்கை கிரியா ஊக்கி’களின் இடைக்கால விளைவுகளையும் நெடுங்கால மோசமான எதிர்வினைகளையும் விரிவாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள் economic stimulus checkஇன் பாதகங்களை சொல்லும்.

  [7] புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை – கிளிண்டன் காலத்தைக்காட்டிலும் புஷ்சின் tax cut அதிக வருவாய் ஈட்டித்தந்ததாக பொருளாதார வல்லுனர்கள் கூறுவது பொய்யா?

  அதிக வருவாய் எவருக்கு, எந்தவிதமான பொருளாதார வர்க்கம் மேம்பட்டது என்பதில்தான் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் வேறுபடுகிறார்கள்.

  [8] தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை – முதல் தேர்தலில் தான் தில்லுமுல்லு என்று கதை கட்டினார்கள் ஜனநாயகக் கட்சியினர், இரண்டாவது தேர்தலிலுமா தில்லுமுல்லு?

  இதைக் குறித்து ஆவணப் படங்கள் எக்கச்சக்கமாய் வெளியாகியுள்ளன. Link டிவியில் ஓரிரண்டு பார்த்ததுண்டு. ஒஹாயோ மாகாணத்தில் வாக்களிக்க முடியாமல் செய்தது; வந்தேறிகளை மிரட்டி வாக்குரிமை உள்ளவர்களையும் உறவினர்களை உள்ளே தள்ளுவோம் என்று அச்சுறுத்தியது; ஏதோவொரு குற்றம் செய்தாலே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது; விடுமுறை அளிக்காமல் தினக்கூலிகளை வேலைக்கனுப்பியது… மிக விரிவாக அலசப்பட்டது.

  அவர் வந்தால் மேலும் விடைகள், ஆதாரங்கள் கிட்டலாம்.

 4. >>>>டெமொக்ரட்ஸ் சார்பு என்று கருதப்பட்டாலும்,

  CNN குடியரசு கட்சி சார்பா? அமெரிக்க முதல் 10ல் Fox தவிர எல்லா செய்தி நிறுவனங்களும் ஜனநாயகக் கட்சியின் கையில்.

  >>>>இந்த குற்றங்கள் பெரிதுபடுத்தாதற்கு காரணங்கள்:

  மெக்கைய்ன் அந்த செய்திக்கு மறுப்பு அனுப்பி அதை நியுயார்க் டைம்ஸ் ஏற்றுக்கொண்டது தெரியாதா? அந்த கட்டுரையிலும் எத்தனை ஊகங்கள் என்பதை நீங்களே இன்னொருமுறை படியுங்கள்.

  இது அநியாயம். பேலின்னின் வரவுக்கு பிறகு ஜன்னி கண்டு கண்டதையும் உளறிய விஷயத்தை சென்ற இரண்டுவாரச்செய்திகளில் படித்திருக்கலாமே. நியுயார்க் டைம்ஸே ஜனநாயகக் கட்சியின் இந்த ஜன்னியை கிண்டல் அடித்ததை படிக்கவில்லையா? http://www.nytimes.com/2008/09/11/opinion/11collins.html

  >>>>‘சுய முரண் அல்லவா’

  Campaign funding விவகாரத்தில் பராக் அடித்த பல்டி அதைவிட பெரிய நகைமுரணாகிவிடும் என்பதால் அடக்கி வாசிக்கிறார் என்பதுதானே உண்மை?

  >>>>இது இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது

  இணையத்தில் 9/11 அமெரிக்காவே நிகழ்த்தியதாக Conspiracy theoristகள் பல செய்தி பரவவிட்டுள்ளார்கள், அதையும் நம்புவதா? புஷ் போருக்குப் போனது தவறு என்றுதான் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டினார்கள் – ஊழல் செய்தார் என்று எந்த ஆதரமுல் இல்லாமல் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால் அப்படி எந்த ஊழலும் நடக்கவில்லை என்பதுதான்.
  அதனால்தான் தெளிவாக conspiracy theory அற்ற ஆதாரத்துடன் கூடிய செய்திகளாஇ அறியடதாருங்கள் என்று சொன்னேன்.

  >>>>வீட்டுக்குப் பணம் அனுப்பியதால் பொருளாதாரம் முன்னேறியது என்பதை அறுதியிட்டு நிலைநிறுத்துவதற்கு ஆதாரம் கிடையாது.

  ஆதாரத்தை தேடினீர்களா? நாட்டில் எல்லா நிறுவனங்களும் லாபம் குறைந்துள்ளது, இழப்பு அதிகரித்துள்ளது என்று கூறும்போது Retail நிறுவனங்கள் மட்டும் லாபம் ஈட்டுவது எதனால்? இதை எந்த செய்தி நிறுவனமும் வெளியிடவில்லை – Walmart தனது Quarterly 8k reportல் சொல்லியிருக்கிறார்கள். வரும் பணத்தை வங்கியில் சேமித்து வைக்கும் இந்தியர்களுக்கு செலவு செய்தே பழக்கப்பட்ட அமெரிக்க வாடிக்கையாளர்களின் நுகர்வை விளக்குவது கடினம்.

  http://www.newsobserver.com/business/story/1123311.html
  http://www.nytimes.com/inc_com/inc1214228849567.html
  இதையெல்லாம் இப்படி ”Consumer spending” number ஆதாரத்துடன் விலக்கினாலும் நீங்கள் நம்பப்போவதில்லை. யாரோ அவர்கள் ந்ண்பர்கள் பத்து பேரை பேட்டி எடுத்துபோட்டால் அதை இணையத்தில் தேடிப்படித்து ஆனந்த்திருபீராக!

  கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அரசு மூக்கை நுழைக்க வேண்டும் என்று கதறிய ஜனநாயகக் கட்சி அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று கூறிய புஷ்சை முட்டாள் என்று சாடியது. இன்று $91 க்கு இறங்கிய பிறகு அதைப்பற்றி பேச்சே எடுக்கவில்லை.

  >>>>‘செயற்கை கிரியா ஊக்கி’

  வேறு எந்த மார்க்கமுல் இல்லாததால்தான் இந்த “தற்காலிக” தீர்வு என்று அறிவித்தார்?

  >>>> அதிக வருவாய் எவருக்கு

  அது என்ன கேள்வி? வரி வருவாய் என்றுமே அரசாங்கத்திற்குத்தான். இல்லை அதிலும் ஊழல் செய்தார் என்று வேறு எதாவது கதை இருக்கிறதா?
  கொஞ்சம் விளக்கமாக – கிளிண்டனின் காலத்தில் 1% high earning மக்களிடம் 38-39% வரி வசூலித்து கஜானா நிரம்பச்செய்தார். புஷ் ஆட்சிக்கு வந்தவுடன் அதை 33% ஆகக்குறைத்தார். ஜனநாயகக் கட்சியினர் வழக்கம் போல புஷ் கிரமத்தான், முட்டாள் என்று சாடினார்கள். ஏன் கன்சர்வேடிவ்களே அதில் கலந்தும் கொண்டனர். இப்போது the figures are out – and they don’t have anything to say abt that (Just like Barack mumbled when Oreilly asked him a pointed question regarding this).
  http://www.ncpa.org/pub/st/st307/st307f.html

  >>>>இதைக் குறித்து ஆவணப் படங்கள் எக்கச்சக்கமாய் வெளியாகியுள்ளன

  அதே டீவியில் துலாவிப்பாருங்கள் புஷ்தான் ரிமோட் கண்ட்ரோல் வைத்து நியுயார்க் கோபுரங்களை வீழச்செய்தார் என்றும் செய்தி இருக்கலாம் :).கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூவும் வடிவேலு காமெடிப்போல உள்ளது இது!

  >>>>அவர் வந்தால் மேலும் விடைகள், ஆதாரங்கள் கிட்டலாம்.

  யார் பராக்கா? ஒன்னும் செய்யப்போவதில்லை. If in fact he somehow wins the presidency பராக் will be “லிண்டன் ஜான்சன் II”.

 5. —நியுயார்க் டைம்ஸே ஜனநாயகக் கட்சியின் இந்த ஜன்னியை கிண்டல் அடித்ததை படிக்கவில்லையா? http://www.nytimes.com/2008/09/11/opinion/11collins.html—

  இது ஒபினியன் பக்க ஆசிரியரின் ஆக்கம்.

  ஞாநி எழுதுவது விகடன்/குமுதத்தின் தலையங்கம் ஆகாது. குடியரசு, ஜனநாயகம் என்று இரு பக்க பத்தி எழுத்தாளர்களையும் டைம்ஸ்/போஸ்ட் அமர்த்திக் கொள்ளும்.

  (பத்தி எழுத்தாளர்களும் அவ்வப்போது கட்சி மாறி “நாங்க ‘ரேகன் டெமொக்ராட்ஸாக்கும்’ என்று பல்டியடிப்பதும் சகஜம்)

  Walmart தனது Quarterly 8k reportல் சொல்லியிருக்கிறார்கள். —

  பெரு நிலக்கிழார்களுக்கும் விவசாயத்திற்கும் மட்டும்தான் வரிச்சலுகையும் மானியமும் தருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். வால்மார்ட்டுக்கும் உண்டா?

  புஷ்தான் ரிமோட் கண்ட்ரோல் வைத்து நியுயார்க் கோபுரங்களை வீழச்செய்தார் —

  Conspiracy Theory என்று களப்பணி செய்தவர்களை ஒதுக்க முடியவில்லை.

  நியு ஹாம்ஷைரில் குடியரசுக் கட்சி Campaign Manager தொலைபேசிகளை செயலிழக்க செய்தது உட்பட மேலே சொல்லப்பட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் ஆதாரம் + சாட்சி நீதிமன்றத்தில் இருக்கிறது.

  வாக்களிப்பில் குளறுபடி நடக்கிறது என்பதை குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் (பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்திருந்தால்) ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

  —கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூவும் வடிவேலு காமெடிப்போல உள்ளது இது!

  வாழ்க என்ரான்! வளர்க (கத்ரீனா) டிஸாஸ்டர் கேபிடலிஸம்!!

 6. ஒபாமா இங்கிருக்கும் இந்தியர்களுக்கு நல்லது செய்வாரா.

  ரொம்ப தற்குறியான கேள்விதான்.
  நான் ஓட்டளிக்கவும் போகிறதில்லை.
  இன்ங்உ என்னைச் சுற்றி இருக்கும் வெள்ளைக் குடும்பங்களில் மாக்கெயின் ஆதரவும்.சில பழமைய்யாஅன குடும்பங்களிலும் ரிபளிகன் ஆதரவு இருக்கிறது.

  என் சந்தேகத்தை உங்களிடம் தெளிவுக்காகக் கேட்கிறேன்.

  டெமக்ராடிக் கட்சியினால் நம் இந்தியர்களுக்கு நன்மை உண்டா.

  நன்றி பாலா.

 7. >>>> களப்பணி செய்தவர்களை ஒதுக்க முடியவில்லை

  இந்தியாவில் எல்லா கட்சி தலைவர்களும் தேர்தல் முடிவுக்குக்கு முன்பே ரெண்டு அறிக்கைகளை தயார்படுத்தி வைத்துவிடுவார்கலாம். தோத்தால் எதிர்கட்சி சதி என்றும் ஜெயித்தால் நீதி தேவன் கண் திறந்துவிட்டான் என்றும். அதுபோல இருக்கைய்யா! கெர்ரி மாதிரியோ, அல் கோர் மாதிரியோ ஒரு ஜனாதிபதி வந்திருந்தால் 9/11 க்கு பிறகு அமெரிக்காவே அடகு கடைக்கு போயிருக்கும்!

  >>>>வாழ்க என்ரான்! வளர்க (கத்ரீனா) டிஸாஸ்டர் கேபிடலிஸம்!!

  ஆமாமாம். என்ரான் வீழ்ச்சிக்கும், புயலுக்கும் ஏன் பராக்கின் ஒன்னுவிட்ட சித்தப்பா பையன் கக்கா போனதுக்கும் கூட புஷ் மட்டும்தான் காரணம்!

 8. ரேவதி நரசிம்மன்…

  தங்கள் கேள்விக்கு விரிவான அலசல் ட்ஹேவை. சிலரிடம் கேட்டிருக்கிறேன்.

  அதுவரை என்னுடையது:

  1. பொருளாதாரம்:
  – ஒபாமா வந்தால் அமெரிக்க நிறுவனங்களின் இந்திய முதலீடு குறையும்.
  – இந்தியாவில் இருந்து ஏற்றுமதியில் மாற்றம் இராது

  2. அயல்நாட்டு கொள்கை:
  – பாகிஸ்தானில் ஆட்சி மாறியுள்ளது. அமெரிக்க- பாக் உறவில்
  மாற்றமிருக்காது
  – சீனா: அயோவா முதற்கட்ட தேர்தலிலேயே இனி சீன பொம்மைகள் வரக்கூடாது என்று
  மிரட்டியவர் பராக்

  3. தேசி:
  – பெரிதாக எதுவும் வித்தியாசப்படப் போவதில்லை

 9. Die hard republican Dyno appears to have all signs of becoming next Dinesh D’Souza.

  In his first response Dyno challenges Baba to provide evidence for Baba’s not so sweeping statements. But same Dyno, in his last response, throws the mother of all sweeping statements — கெர்ரி மாதிரியோ, அல் கோர் மாதிரியோ ஒரு ஜனாதிபதி வந்திருந்தால் 9/11 க்கு பிறகு அமெரிக்காவே அடகு கடைக்கு போயிருக்கும்!

  Care to substantiate this, Dyno? I think his is lot less creative than swift boating.

 10. >>>> appears to have all signs of becoming next Dinesh D’Souza.

  I am humbled, Moose Hunter!

  D’Souza was one of the few who had the opportunity and privilege to work closely with one of the greatest president that I admire even today. I do wish that your words come true and would love to serve in Palin or Jindal presidency as policy advisor. 🙂

  The comment about Kerry / Al Gore might sound a bit exaggerated but that was my opinion given how these candidates scrambled to bits in comparison to GWBush during and after the elections. With the country going into war either of them would not have been able to lead the country as GWB.

 11. Pingback: வாக்களித்த வைபவம் - மைத்ரேயன் « US President 08

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.