தொடர்புடைய தினமணி கட்டுரை: Tamil New Year: Thai Pongal or Chithirai First Day?: “சித்திரையில்தான் புத்தாண்டு – எஸ். ராமச்சந்திரன்”
பெண்
அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன
செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல
இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்
பல்லவி
சித்திரையில் என்ன வரும்?
வெய்யில்
சிந்துவதால் வெக்கவரும்
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
சரணம் : ஒன்று
பாவி பயலால
இப்ப நானும்
படும் பாடுயென்ன
ஆவி பொகபோல
தொட்டிடாம
அவன் போறதென்ன
கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற
நூலப்போல சீல – பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல
சரணம் : இரண்டு
கேணி கயிறாக
ஒங்கபார்வ
என்ன மேலிழுக்க
கூனி முதுகாக
செல்லவார்த்த
வந்து கீழிழுக்க
மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற
யாரும் எறச்சிடாத – ஒரு
ஊத்துப்போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம்- இவ
கண்ணுமுழி தூங்கி