வீட்டில் இலக்கின்றி தட்டுமுட்டு வேலைகள் செய்யும் நேரம். சத்தமாக பாடல் பாடிய போது வாயில் முணுமுணுத்தவை:
1. ‘காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்;
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்’
– உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
2. ‘பருவ மழை பொழியப் பொழிய உறவு தாம்பத்யம் ஆகாதோ;
இவள் வாழ்வில் பருவ மழை பெய்ததால் உடம்பு பாலைவனமாகியதே’
– வேறு இடம் தேடிப் போவாளோ
3. ‘இது தேவதையின் பரிசு; யாரும் திருப்பித்தர வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நடக்க ஒரு சம்மதமும் வேண்டாம்’
– சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
4. ‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்தில’
– நிலா அது வானத்து மேலே
5. ‘தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே’- ராஜராஜ சோழன் நான்
6. ‘காலங்கள் போனால் என்ன…
தலை சாய இடமா இல்லை; இளைப்பாறு பரவாயில்லை’
– அகரம் இப்போ சிகரமாச்சு
7. ‘நிலவெங்கே சென்றாலும் பின்னால் வராதா;
நீ வேண்டாமென்றாலும் வட்டமிடாதா’
– புது ரூட்டுலதான்
8. ‘மனதின் ஆசைகள்; மலரின் கோலங்கள்; குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்’
– புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை
9. ‘நடந்தவை எல்லாம் வேஷங்களா; நடப்பவை எல்லாம் மோசங்களா…
திரை போட்டு நீ மறைத்தாலென்ன தெரியாமல் போகுமா?’
– வாழ்வே மாயமா பெருங்கதையா கடும்புயலா வெறுங்கனவா
10. ‘ஆட்டுக்கு வேலி தேவையும் இல்ல;
என் பாட்டுக்குத் தாளம் தேவையும் இல்ல’
– ஒயிலாப் பாடும் பாட்டில ஆடுது ஆடு
Pingback: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot