இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள்
சென்னை, செப். 27: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்திக் குறிப்புகள், நன்னடத்தை விதிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான கையேடுகள் ஆகியன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இந்தத் தகவல்கள் அடங்கியுள்ளன.
இணையதள முகவரி: www.tnsec.tn.nic.in











இன்றைய இந்தியா எங்களின் இனத்தின் தனித்துவத்தை ஏற்க மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் எங்களின் நியாயமான உரிமைகளையும் அபிலாசைகளையும் அவமதிக்கின்றது. நீங்கள் இந்தியர்கள் ஊன்றிய விதை தானே இந்த விடுதலைப் போராட்டம்? அன்னை இந்திரா காந்தியின் திருமுகத்தை நடுவீட்டில் பெருமையுடன் வைத்து வழிபட்ட நம் மக்கள்; இடை நடுவில் எம்மையெல்லாம் கதியற்றவர்களாக்கிய அவரின் இழப்பால் இன்று வீடு வாசல் அற்ற வெற்றுக் கூட்டமாக காடு மேடுகளில் உயிரைக் கைவிட்ட உடலங்களாய் அல்லவா வாழ்கின்றோம். எங்கள் ஒவ்வொருவரினதும் உயிரும் நீங்கும்போது எங்களின் எல்லாச் சிந்தனை அதிர்வுகளும் இந்தியத் தாயை தட்டி விண்ணப்பித்து விட்டு தான் நீங்குகிறோம்! ஒவ்வொரு தமிழனும் சாகும் போதும் எங்களின் எண்ண அலைகளை கண்ணீர் மழைத்துழிகளாக்கி உங்கள் மண்ணை நனைத்து விடுகின்றோம்! உங்கள் மண்ணாவது பாச ஞாபகத்தில் தன் கடைசிப் பிள்ளையை தவிக்க விட்ட தவறுணர்ந்து தன் வன்மை கரைந்து கடல் நிரவி எங்களை சேர்த்து அணைத்து உச்சி முகரட்டும்! இராவணனின் சொந்தம் ஒன்று கூட உயிரோடிருக் கூடாதா? அதுவே உங்களின் சிங்கள நட்புக்கு சூத்திரமா? எங்களின் உரிமைப் போராட்டமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் வேறு வேறு என்கிறார்களே இது என்ன சூத்திரம்? தமிழ் நாட்டில் தோன்றிய பிரிவினை வாத கருத்தை வலுவிழக்க வைப்பதற்காக அவர்களைப் பார்வையாளர்காக்கி எங்களையல்லோ தீயில் தள்ளினாய் தாயே? உன் ஆசைக்கு ஒன்று ஆஸ்த்திக்கு ஒன்று என்று இரண்டாவதாவல்லவோ நாம் இருந்திருப்போம்! ஒவ்வொரு தடவையும் கடல் கடந்து எங்களை நீங்கள் ஆக்கிரமித்தபோதும் நாம் ஆனந்தக் கண்ணீர் அல்லவா சொரிந்தோம்! எந்த ஒரு தமிழனுள்ளும் கனந்து கொண்டிருக்கும் அந்த விடுதலை உணர்வு எமது தேசியத் தலைமையில் தான் வேர் கொண்டுள்ளது என்பதை அறிவாயே அம்மா. ஒவ்வொரு வீரனும் போராடி மடியும் போதும் ஒரு தமிழன் எரிமலை வெடித்து புறப்படுகின்றான். இதுவே எங்களின் சூத்திரம். தமிழரின் உரிமை வேறு புலிகளுடனான போர் வேறு என்கிறாரே உன் புதல்வர். எப்போது ஒரு தமிழன் புலியாகிறான் என்று நீ அறியாயோ? ஒரு தமிழன் தமிழச்சியின் கருவில் உருவாகும் போதே புலியாகின்றான் அம்மா. தன்னால் ஆழப்பட்ட மண்ணில் பற்றுறுதி கொண்டு வெள்ளையர்களால் பிணைத்து விடப்பட்ட சிங்களப் பிசாசுகளிடம் இருந்து விலகி ஓடி ஓடி இறுதியில் இயலாமல் உன்னிடம் வந்தபோது நீதானே அம்மா திருப்பி அடிக்கச்சொன்னாய்! மூன்று தலைமுறையாக அல்லவா அடிக்கின்றோம்? நான் வேறு என் பிள்ளை வேறு என்கிறாரே உன் புதல்வர். இது வஞ்சகமன்றோ தாயே! சிங்களவன் எங்கள் எல்லாரையும் சிறைப் பிடிக்கும்போது அவனுக்கு நாம் எல்லோரும் புலிகளே! அப்போது சிங்கள ஒருமைப்பாட்டை ஓதி அடங்குவர் உன் புத்திரர். தமிழினத்தின் பொதுவான விருப்பும் அரசியல் அவாவும் சிங்களத்தை நோக்கியதில்லை, இலங்கையின் இறைமைக்குள் இல்லை என்பத்தை நீ அறியாயோ? சிங்கள தேசத்தின் அவா தமிழீழத்தை ஆக்கிரமிப்பது தானே. அதை அவர்கள் தேர்தல்கள் மூலம் உலகத்துக்கு அறிவிக்கின்றனரே. ஏன் எங்கள் தமிழ் அழுகை மட்டும் கேட்பதில்லை உனக்கு? உடுக்கை இழந்த கையற்றவளாய் தமிழீழத் தங்கை கண்ணீருள் மூழ்கி நிற்க நீ சந்திரனில் அல்லவா கொடி நடுகின்றாய். அந்த அதிசயப் பொழுதுகளை பார்ப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கா தாயே? இடுக்கண் களைய நீ கண்ணசைத்தால் போதுமே எங்கள் தேசத்தில் சுதந்திரக்கொடி பறக்குமே உன் நிழலில்!