Vijaykanth party launches team to catch bad officers!:
கேப்டனின் ‘ரமணா ஸ்டைல்’ ஊழல் தடுப்பு படை
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் குறித்து இங்கு புகார் கொடுக்கலாம் எனவும், அப்படிப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் பிரச்சினையில் நான் மிகவும் தீவிரமாக உள்ளேன். பிரச்சினைக்கு தீர்வு வரும் அன்றுதான் எனது பிறந்த நாளை கொண்டாடுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.
என்றார் விஜயகாந்த்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது வழக்கம்போல் சினிமா பாணியில் கோபமடைந்த விஜயகாந்த்,
திட்டம் இல்லாமலா கட்சியை ஆரம்பித்திருப்பேன்? அதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் உங்களிடம் விவாதிக்க முடியாது என்றார்.”











is this true or just made up, Bala? either way, it is funny.
Very authentic
இதை எப்படி என்று சொல்லப் போயிற்று , வெங்கட்ரமணி!?
குட்டையில் ஊறியே கிடப்பது என்று முடிவு செய்து விட்டீர்களா?
அல்லது, குட்டையை விட்டுத்தான் தப்பித்து வந்து விட்டோமே, இனி நமக்கென்ன கவலை என்ற எகத்தாளமா/?
எதுவாயினும், இது…வெட்கம்![shame]
பாராட்ட வேண்டிய நிகழ்வைக் கிண்டல் செய்கிறீர்களே!
உங்களைப் புண்படுத்தும் எண்ணத்தில் சொல்லவில்லை.
யாரோ ஒருவன் மணி கட்ட வருகிறான்.
அவனையும் கிண்டல் செய்கிறீர்களே என்கிற ஆதங்கத்தில் சொல்கிறேன்!
//பாராட்ட வேண்டிய நிகழ்வைக் கிண்டல் செய்கிறீர்களே!//
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரட்டப் பட வேண்டியதே.. பகிரங்கமாக கண் முன் நடக்கும் பல தவறுகள் கண்டு எரிச்சல் அடையும் பொழுது இதையெல்லாம் மிக எளிதாக அரசாங்கம் நினைத்தால் சரி செய்யலாமே என தோன்றும். இருந்தும் எதுவும் சரி செய்யப்பட வில்லை…அடிக்கடி இவற்றை (உண்மையான) செக்கிங் செய்தாலே போதும்… ஒரு பயம் இருக்கும்..தவறுகள் குறையும்.. பல இடங்களில்.
That wil be great if every thing works out well…
Boston Bala,
நீங்க முந்திக்கிட்டீங்க! நான் இந்த மேட்டரை ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன்! நன்றி!
பாலா ஒரு மேட்டர் விட்டுவிட்டீங்க அந்த ‘ரமணா ஸ்டைல்’ ஊழல் தடுப்பு படைக்கு பெயர் என்ன தெரியுமா? அதே தான்! ACF (ANTI CORRUPTION FORCE), விஜயகாந்த் சுமார் ஒரு லட்சம் பட்டதாரிகளை தன்னார்வு தொண்டர்களாக சேர்த்து இருக்காரு!!! சுமார் 4 பகுதியா தமிழ் நாட்டை பிரிச்சு இருக்காரு! பகுதிக்கு ஒன்று வீதம் 4 ஓய்வு பெற்ற IAS அதிகாரிகளை சுமார் ஒரு லட்சம் மாத சம்பளம் கொடுத்து பணியமர்த்தி இருக்காரு. அவர்கள் கொடுக்கும் ஆதாரப்பூர்வ தகவல் அடிப்படையில் தான் இனி DMDK போராட்ங்கள் அமையுமாம்! கலக்கராருங்க விஜயகாந்த். ரமணாவா மாறாம இருந்த ஊழல் பார்டிகள் தப்பிச்சாங்க! ஏதோ நடக்க போவது, அது நல்லதாவும் இருக்கலாம் (அந்த புள்ளி விவரங்களை வெச்சு அதிரிகாரிகளுக்கு தண்டனை வாங்கி தருவது), கெட்டாதகவும் இருக்கலாம்(அந்த புள்ளி விவரங்களை வெச்சு அதிரிகாரிகளிடம் கட்டிங் வாங்கி வருவது)!!! As usual நாம் தமிழ்நாடுக்கு நல்லதாக அமையும் என்று எதிர்ப்பார்போம்.
நல்ல எண்ணங்களுக்கும் செயலுக்குமான இடைவெளி எந்த சமுதாயத்தில் குறைவாயிருக்கிறதோ, அது முன்னேறிக்கொண்டிருப்பதாக கொள்ளலாம். அந்த வகையில் இந்த முயற்சி மிகவும் சந்தோஷமளிக்கிறது. ஆனால், செயலாக்கம் அதன் எந்த நிலையில் இருக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டியது. விஜயகாந்தின் செயல் அதன் உச்சகட்ட நிலையான பயன் – நிலை வரை செல்ல வாழ்த்துவோமாக.