Jaya attacks Nakkeran of spreading false stories
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு சென்னை அருகே மகாபலிபுரத்தில் ரகசியமாக சிகிச்சை மேற்கொள்ள தான் உதவியதாகவும், அதற்கு உபகாரமாக அவர் ரூ. 50 கோடி பணம் கொடுத்ததாகவும், அதில் சில கோடி ரூபாய் கள்ள நோட்டு எனவும் அந்த கள்ள நோட்டுக்களை அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரண நிதியுடன் கலந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இதுதொடரபாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
25.6.2006 அன்று வெளியான நக்கீரன் இதழில் கள்ள நோட்டுக் கணக்கு என்ற தலைப்பில் மிகப் பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.
Webulagam : CBI to file chargesheet against Jayalalithaa on gift case!
தனது பிறந்தநாளிற்கு அன்பளிப்பாக ரூபாய் 2 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது!
ஜெயலலிதா தற்பொழுது தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு சட்டப் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய புலனாய்வுக் கழகத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறியதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான அடிப்படைகளை விளக்கும் 180 பக்க புலனாய்வு அறிக்கையையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு கடந்த 23 ஆம் தேதி ம.பு.க. அளித்துள்ளது.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அவர்கள் உறுப்பினர்களாக உள்ள அவைத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்று நரசிம்ம ராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ள ம.பு.க. காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உள்ள ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளிற்காக ஜெயலலிதா 89 வங்கி வரைவோலைகளை பெற்றுள்ளார் என்றும், அதுமட்டுமின்றி, ரூ.15 லட்சத்திற்கு ரொக்கமாக அன்பளிப்பு பெற்றுள்ளார் என்றும், ஆனால் அதற்கான கணக்கை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி வருமான வரித்துறையின் தலைமை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பிறகு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. அயல்நாடுகளில் இருந்தும் வங்கி வரைவோலைகளாக அன்பளிப்பு பெறப்பட்டுள்ளதால் அது தொடர்பாக லண்டனிலும், அமெரிக்காவிலும் ம.பு.க. அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தற்பொழுது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக உள்ள டி. முகர்ஜிதான் ம.பு.க. சார்பாக அயல்நாடு சென்று விசாரணை நடத்தியவர்.
முதலமைச்சராக உள்ள ஒருவர் ரொக்கமாகவும், வங்கி வரைவோலையாகவும் அன்பளிப்புகளை பெறுவது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11-ன் கீழ் குற்றம் என்று கூறி ம.பு.க. வழக்கு பதிவு செய்துள்ளது.










