Wake-up Annoyances


காலங்காத்தால இம்சை பண்ணாதே

எதற்காக காலையில் எழுந்து கொள்கிறேன். தமிழ்மண நட்சத்திர வாரம் மலையேறியது. அதிகாலையில் சேவலை எழுப்பி தினம் கூவென்று சொல்கிறேன் என்று பாட்டு பாடும் காதல் கல்யாண அகவையும் கிடையாது.

அதற்காக சில அதிர் கடிகாரங்கள்:

  1. பறக்கும்! அலாரம் பறக்கும்: சுத்தி சுத்தி பறப்பதை தாவிப் பிடித்தவுடன் நீங்கள் எழுந்து கொண்டு விட்டீர்கள் என்று தன்னை நிறுத்திக் கொள்ளும். ‘றெக்கை கட்டி பறக்குதடீ அண்ணாமலை சைக்கிள்’ பாடலுடன் பறக்க விட ஆரம்பித்து, ‘சுத்தி சுத்தி அடிப்பேன்’ என்று முடிப்பது இதன் ஸ்பெஷாலிடி.

  2. நானொரு பின்னு… அலாரம் பின்னு: நாளுக்கொரு ஆணியாக நீட்டிக் கொள்ள, முப்பது ஆணிக்கோவைகளில் ஏதாவதொன்று தினமும் நெம்பி நிற்க, நின்றதைக் கண்டுபிடித்து, தினப் போராட்டத்தைத் துவங்க அழைக்கிறது.

  3. கூடையில் முட்டை; கடிகாரத்தில் கோட்டை: எத்தனை முட்டை இட்டிருக்கிறது என்று தேடிப் பிடித்து, அனைத்தையும் அடுக்கும் வரை கொக்கரக்கோ தொடரும்.

  4. டாவின்சி கோட் பிரியர்: புதிர்களை விடுவிப்பதை விருப்பமானவர்களுக்கான அதிர் விழிப்பான். தூக்கக் கலக்கத்துடன் அசின் படத்தை சரியாகப் பொருத்தும்வரை அலாரம் அடிக்கும்.

  5. கண்ணாமூச்சி ரே ரே: தரையில் உருண்டோடி மறைந்து கொள்ளும். அதிர்வுகளை நிறுத்துவதற்கு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கண்டிபிடிக்க வேண்டும். ‘சிச்சிச்சிச்சீ… என்ன பழக்கம் இது’ போன்ற வேண்டிய பாடல்களை ஒலிக்க விடலாம் என்பது சிறப்பம்சம்.

நன்றி: Uber-Review » Blog Archive » Top Ten Most Annoying Alarm Clocks


| |

11 responses to “Wake-up Annoyances

  1. Unknown's avatar கோவி.கண்ணன்

    காலம் கார்த்தால, ‘இப்ப எந்திருக்கிருங்களா, என்ன ?’ என்று மனைவிகள் அன்போடு (?) போடும் கூப்பாட்டிற்கு முன் இந்த அலாரங்கள் எம்மாத்திரம் 🙂

  2. காலங்காத்தால எழுந்து அசின் படத்தை கோத்துக்கிட்டிருந்தா, அன்னிக்கு மத்தியானம் ஆபிஸுல டிபன் பாக்சைத் திறந்துபாத்து சொல்லப்போவது – ‘வெறும் காத்து தாங்க வருது’ !!

  3. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    🙂

  4. —one more for your list:—

    Aargh! I will certainly pull the plug on it 🙂

    சிரிச்சு சிரிச்சு வந்த சீனா அன்னாவுக்கு நன்றி ;-D)

    —-காலங்காத்தால எழுந்து அசின் படத்தை கோத்துக்கிட்டிருந்தா—

    ‘உன் படம்தான்ம்மா வச்சிருந்தேன்… தூக்கக் கலக்கத்தில் அசின் புதிர் இடம் மாறிடுச்சு’ என்று சரணாகதி ஆகிட வேண்டியதுதான்

    (அடுத்த நாளில் இருந்து தானியங்கியாக கோவி கண்ணன் சொல்வது போல் மனைவி டாண்ணு எழும்ப சொல்லிடுவாங்க 😉

  5. Unknown's avatar கல்வெட்டு

    //உன் படம்தான்ம்மா வச்சிருந்தேன்//
    :-))))))))

  6. அவங்க படத்தை ப்ரொஃபைலில் வைத்துக் கொண்டே புன்சிரிப்பா… நடத்துங்க கல்வெட்டு 😛

  7. Unknown's avatar கோவி.கண்ணன்

    //அவங்க படத்தை ப்ரொஃபைலில் வைத்துக் கொண்டே புன்சிரிப்பா… நடத்துங்க கல்வெட்டு 😛 //
    புன்சிரிப்பு இல்லிங்க புன் சிரிப்பு அவரே புன்னாகிபோய் விரக்தியில் சிரிக்கிறாரு … 🙂

  8. பாலா,

    நட்சத்திர வாரத்தில் போட்டு தாக்கிட்டீங்க. பரீட்சைக்கு முன் விழுந்து விழுந்து படிச்சுட்டு, எல்லாம் முடிஞ்சு கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது தூக்கம் வராமல் காலை நாலு மணிக்கே முழிப்பு வந்து திண்டாடுற மாதிரி இருக்கீங்கன்னு நினைக்கிறேன். கார்ட்டூன்ல வர மாதிரி சுத்தியலோடயோ, பக்கட் தண்ணீரோடவோ கடிகாரம் இருந்தா சொல்லுங்க.

    ரங்கா.

  9. —கார்ட்டூன்ல வர மாதிரி சுத்தியலோடயோ, பக்கட் தண்ணீரோடவோ கடிகாரம் இருந்தா சொல்லுங்க.—-

    Long time back (during mid 80s) Madan had drew similar cartoons in Anandha vikadan. If only he had been a product designer… 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.