எதற்காக காலையில் எழுந்து கொள்கிறேன். தமிழ்மண நட்சத்திர வாரம் மலையேறியது. அதிகாலையில் சேவலை எழுப்பி தினம் கூவென்று சொல்கிறேன் என்று பாட்டு பாடும் காதல் கல்யாண அகவையும் கிடையாது.
அதற்காக சில அதிர் கடிகாரங்கள்:
- பறக்கும்! அலாரம் பறக்கும்: சுத்தி சுத்தி பறப்பதை தாவிப் பிடித்தவுடன் நீங்கள் எழுந்து கொண்டு விட்டீர்கள் என்று தன்னை நிறுத்திக் கொள்ளும். ‘றெக்கை கட்டி பறக்குதடீ அண்ணாமலை சைக்கிள்’ பாடலுடன் பறக்க விட ஆரம்பித்து, ‘சுத்தி சுத்தி அடிப்பேன்’ என்று முடிப்பது இதன் ஸ்பெஷாலிடி.
- நானொரு பின்னு… அலாரம் பின்னு: நாளுக்கொரு ஆணியாக நீட்டிக் கொள்ள, முப்பது ஆணிக்கோவைகளில் ஏதாவதொன்று தினமும் நெம்பி நிற்க, நின்றதைக் கண்டுபிடித்து, தினப் போராட்டத்தைத் துவங்க அழைக்கிறது.
- கூடையில் முட்டை; கடிகாரத்தில் கோட்டை: எத்தனை முட்டை இட்டிருக்கிறது என்று தேடிப் பிடித்து, அனைத்தையும் அடுக்கும் வரை கொக்கரக்கோ தொடரும்.
- டாவின்சி கோட் பிரியர்: புதிர்களை விடுவிப்பதை விருப்பமானவர்களுக்கான அதிர் விழிப்பான். தூக்கக் கலக்கத்துடன் அசின் படத்தை சரியாகப் பொருத்தும்வரை அலாரம் அடிக்கும்.
- கண்ணாமூச்சி ரே ரே: தரையில் உருண்டோடி மறைந்து கொள்ளும். அதிர்வுகளை நிறுத்துவதற்கு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கண்டிபிடிக்க வேண்டும். ‘சிச்சிச்சிச்சீ… என்ன பழக்கம் இது’ போன்ற வேண்டிய பாடல்களை ஒலிக்க விடலாம் என்பது சிறப்பம்சம்.
நன்றி: Uber-Review » Blog Archive » Top Ten Most Annoying Alarm Clocks















