The Book of Questions


இந்த ஏழு நாளும் உங்களிடம் கேள்வி கேட்க விருப்பம். நானாகக் கேட்கவில்லை. க்ரெகரி ஸ்டாக்கிடம் கடன் வாங்கித்தான் கேட்கப் போகிறேன்.

‘ஆம்’/’இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போய் விட வேண்டாம். யோசித்து, உங்கள் சொந்த வலைப்பதிவில் எண்ணங்கள் அடங்கிய மறுமொழிகளை இட்டு, இங்கும் ஒரு வார்த்தை பின்னூட்டமாக இட்டால், வசதியாக இருக்கும்.

முன்கூட்டிய நன்றி 🙂

1. இன்று மாலையே உங்களின் முடிவு நேரும். அதன் முன் எவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. எவரிடம் பேச முடியாததற்கு வருத்தமடைவீர்கள்? இறுதி நிமிடங்களில் சொல்லி விட முடியவில்லையே என்னும் ஏக்கம் ஏன் எழும்? இன்றளவும் எப்படி சொல்லாமல் தள்ளிப் போட்டீர்கள்?

2. தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் குழந்தை மாறாட்டம். உங்களின் சூட்டிகையான ஒரு வயதுக் குழந்தை உங்களுடையது அல்ல! அசல் குழந்தைக்கு பரிமாற்றம் ஏற்பட முயற்சிகளை மேற்கொள்வீர்களா? வளர்த்த மகவா அல்லது வயிற்று மகவா?


| |

7 responses to “The Book of Questions

  1. 1-சொல்லாமல் விட்ட மேட்டர் எதுவும் என்னிடம் இல்லை. உடனுக்குடன் சொல்லாவிட்டால் தூக்கம் வராது. கடைசி நேரத்தை
    தனிமையில், சந்தோஷமாய் கழிப்பேன்.
    2- அம்மாவான எனக்கு இந்த கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்.
    பி.கு நன்கு தெரிந்த நட்சத்திரத்தை . நட்சத்திரம் என்று அறிமுகப்படுத்துவது சரியா :-)))))))))

  2. —நட்சத்திரம் என்று அறிமுகப்படுத்துவது சரியா —

    மில்லியன் ஒளி (லைட்) ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பவற்றினை நாம் இப்போதுதானே கண்டுபிடிக்கிறோம். அந்த மாதிரின்னு வைத்துக் கொள்ளலாமா 😉

    —அம்மாவான எனக்கு இந்த கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்—

    பதில்களுக்கு நன்றி.

  3. Unknown's avatar கப்பி பய

    நிரந்திர நட்சத்திரம் பாலா(ஹி ஹி ஹி)

    நட்சத்திர பதிவோட சேர்த்து ஒரு ‘ஆறு’ பதிவும் போட்டுடுங்க…

    http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html

  4. Unknown's avatar வல்லிசிம்ஹன்

    1,சொல்லாமல் விட்டது எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு ஒரு நன்றி.(யாரும் இப்போது இல்லை)அதைத்தான் இப்பொதும் என் கடைசி நாளிலும் நினைப்பேன்.
    2,இப்பொழுது வளர்ந்து அவர்களுக்கே குழந்தைகள் இருக்கிறது.ஆனாலும் அடடா இப்படி படுத்துகிறதே மாத்திக் கொண்டுவந்து விட்டொமோ என்று நினைத்தது உண்டு:-))))))))அவர்களுடைய சின்னப் பருவத்தில்

  5. கப்பி சாருங்களுக்கு, ‘ஃப்ரீயா வுடு மாமே’ என்று சொல்ல நினைத்தாலும், மினிமம் கியாரண்டியாய் ஆறு பட விமர்சனமாவது எழுதி விடுகிறேன் 🙂

    வள்ளி… வெளிப்படையான பகிர்வு; நன்றி.

  6. உங்க ஸ்டைலில்… நானும்:

    —எவரிடம் பேச முடியாததற்கு வருத்தமடைவீர்கள்—

    டைம் மெஷின் ஒருத்தன் விற்றுக் கொண்டிருந்தான். அவனை உதாசீனம் செய்தேனே என்னும் ஏக்கம் வரும். கையில் டப்பு இல்லாததால்தான் டைம் மெஷின் ஆய்வுக்கு காசு கேட்டு வந்திருந்தவனை விரட்டியிருந்தேன். இப்போது மட்டும் அவன் இருந்தால், பத்து வருடம் முன்பு சென்றிருக்கலாம் 🙂

    —அம்மாவைக் கண்டுபிடித்து மூளைகளை மட்டும் —

    அம்மாவை இடம் மாற்றாத வரைக்கும் ஓகேதானே :O!

  7. //இப்போது மட்டும் அவன் இருந்தால், பத்து வருடம் முன்பு சென்றிருக்கலாம் :-)//

    அது… :)))))

வல்லிசிம்ஹன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.