Webulagam : Poet Suradha admitted in Ramachandra Hospital!
உவமைக் கவிஞர் சுரதா கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை மோசமானதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரதாவின் சிகிச்சைக்காக முதலமைச்சர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ரூ.50,000 நிதியுதவி செய்திருந்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது பற்று கொண்டு அவருடைய இயற்பெயரோடு தாசன் என்கின்ற அடைமொழியையும் சேர்த்து (சுப்பு ரத்தினதாசன்) தனது பெயரை சுரதா என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுரதா அவர்கள், தனி கவிதைப் பாரம்பரியத்தையே உருவாக்கியவர்.
பல்லாயிரக்கணக்கான கவிதைகளை யாத்த சுரதா உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையும் பல நூறைத் தாண்டும்.
“கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்” எனும் இனிய திரைப்படப் பாடலை எழுதிய சுரதா, பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.











பாலா,
தகவலுக்கு நன்றி. இச் செய்தியைப் படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. கவிஞர் சுரதா நலம் பெற இறைவனப் பிரார்த்திகிறேன். கவிஞரின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி செய்த கலைஞருக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.
இவரின் ” அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே” எனும் பாடலைப் பல தடவை கேட்டு இரசித்திருக்கிறேன்.இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ கீழ்க் காணும் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
http://www.musicindiaonline.com/p/x/Q4X2G5wFDS.As1NMvHdW/
நன்றி
அன்புடன்
வெற்றி
பாலா,
சட்டென்று நினைவிற்கு வரும் திரைப்பாடல்களை எழுதுகிறேன்.
1.ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி)
2.அமுதும் தேனும் எதற்கு (போலீஸ்காரன் மகள் ? – சந்தேகந்தான்)
3.விண்ணுக்கு மேலாடை (நாணல்)
4.தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
5.முகத்தில் முகம் பார்க்கலாம்
அன்புடன்
ஆசாத்
அவருடைய பெயர் ராஜகோபால்.புரட்சிக்கவிஞரின் இயற்பெயருடன் சேர்த்து சுப்புரத்தினதாசன் ஆனார்;சுருக்கி
சு.ர.தா.என மாற்றினார். பின்னர் புள்ளிகளைத் நீக்கிவிட்டு சுரதா ஆனார்