Warrant issued against Anitha Radhakrishnan :: தட்ஸ் தமிழ்
போலி வாக்காளர்களை சேர்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Webulagam : Sethu Samuthiram Project will end 2 Years – சேது சமுத்திரப் பணி 2 ஆண்டில் நிறைவடையும்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 2008ம் ஆண்டுக்குள் நிறைவு பெற்று விடும் என்று மத்திய நெடுஞ்சாலை, தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்களை பார்வையிட்ட டி.ஆர். பாலு, பிரதமரால் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் வடக்கு பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணி 30 விழுக்காடு முடிந்துவிட்டது. ஜூலை மாதத்திற்குள் மீதப் பணிகளும் முடிந்துவிடும்.
தெற்கு பகுதியில் 3 கட்டங்கள் உள்ளன. இந்த பணிக்கான உத்தரவு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வழங்கப்படும். அக்டோபர் 1ம் தேதிக்குள் பணி தொடங்கப்பட்டு 2008 நவம்பர் 1ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று விடும்.
சென்னை துறைமுகத்தில் ரூ.401 கோடி செலவில் 2வது சரக்கு முனையம் அமைக்கப்படும். ரூ.150 கோடி செலவில் கப்பல் பழுதுபார்க்கும் தளமும் அமைக்கப்படும் என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.
www.webulagam.com :: அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் மீது உரிமை பிரச்சனை
தமிழக சட்டப் பேரவையில் ரகளையில் ஈடுபட்டதாக அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மீது கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சனையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்!
தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், கடந்த 26 ஆம் தேதி உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் பேசிக் கொண்டிருக்கும் போது, பேசாதே உட்காருடா என்று அதிமுகவினர் குரலெழுப்பினர் என்றும், அதிமுக உறுப்பினர்கள் கலைராஜன், சி. சின்னசாமி, ஆர். சின்னசாமி, சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களை அடிக்கப் பாய்ந்ததாகவும் கூறினார்.
அவையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், இருக்கை மீது ஏறி நின்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தங்களை அடிக்கப் பாய்ந்து வந்ததாகவும், அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அதிமுக உறுப்பினர் சேகர் பாபு மீண்டும் அவைக்குள் வந்து மைக்கைப் பிடித்து முறுக்கி முதல்வரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.
எனவே, கலைராஜன், ஆர். சின்னசாமி, சி. சின்னசாமி, சி.வி. சண்முகம், பாண்டுரங்கள், சேகர் பாபு ஆகியோரின் நடவடிக்கைகளை அவை உரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பேசிய பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், “இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கையில் அவை உரிமை மீறல் இருப்பது தெரியவருகிறது. எனவே, இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க அவை உரிமைக் குழுவிற்கு இதை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினார்.










