Monthly Archives: மே 2006

Maalai Malar Election Coverage

  • சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் இடதுகை ஆள் காட்டி விரலில் அழியாத மையால் கோடு போடப்பட்டது. கடந்த தேர்தலின்போது அழியாத மையால் புள்ளி வைக்கப்பட்டது.
  • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாகாணியம் கிராமம், விருத்தாசல தொகுதி முகவை, பாரூர் கிராமம் ஆகிய 3 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு
  • அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் அருகே உள்ள பொன்பேத்தி கிராமத்தில் சுமார் ஆயிரத்து 500 ஓட்டுகள் உள்ளன. இங்கு உள்ள வாக்குச் சாவடியில் பகல் 1 மணி நிலவரப்படி ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை.
  • விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 9 தொகுதியிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். தி.மு.க. கூட்டணி மக்களை நம்பாமல் பண பலத்தையும், வன்முறையையும் நம்பியது. பத்திரிகைகளின் கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு அதி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
    – விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன்
  • ஆரணி ஆதனூரில் வாக்குச்சாவடியில் புகுந்த 20 பேர் கும்பல்: கதவை பூட்டிக்கொண்டு வாக்களித்தனர். அங்கு முன்னாள் ராணுவத்தினர் 2 பேர் மட்டுமே பாதுகாப்புக்கு நின்றனர்.
  • குளச்சல் தொகுதிக் குட்பட்ட சேரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப்போட சென்றவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. காரணம் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் தலைகீழாக இருந்தது.
  • குளச்சல் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரையைச் சேர்ந்த முருகன் என்ற 65 வயது முதியவர் இன்று காலை ஓட்டுப்போட வந்தார். தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் அவரது கையில் ‘மை’ வைத்தார். பின்னர் அதே ஊழியர், முருகனை அழைத்துச் சென்று ஓட்டுப்போடச் செய்தார். முருகனின் விரலால் 4வது இடத்தில் இருந்த பொத்தானை பெண் ஊழியர் அழுத்தினார். இதனால் முருகன் அதிர்ச்சி அடைந்தார்.

    நான் வேறுகட்சிக்கல்லவா ஓட்டுப்போட நினைத்தேன். எனக்கு உதவுவதாக கூறி மோசடி செய்துவிட்டீர்களே என முருகன் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

  • சேலம் அருகே உள்ளது பனமரத்துப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உடை யாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). அயோத்தியாபட்டணம் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர் இன்று காலை தன் மகளுடன் உடையாப்பட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட வந்தார்.

    அப்போது அவர் தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்தார். இதைப்பார்த்த போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கரை வேட்டி அணிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. எனவே வேறு உடை அணிந்து வருமாறு கூறினர். ஆனால் ராஜன் அதற்கு மறுத்தார். தொடர்ந்து போலீசார் வாக்குச்சாடிக்குள் விட மறுத்ததால் திடீரென ராஜன் தான் கட்டி இருந்த தி.மு.க. கரைவேட்டியை அவிழ்த்து தூக்கி வீசி எறிந்தார்.

    கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நிர்மல்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் இப்படி அநாகரீகமாக உள்ளாடையுடன் வாக்கு சாவடிக்குள் செல்லக்கூடாது என்று கூறி வேறு வழியில்லாமல் அதே தி.மு.க. கரை வேட்டியை எடுத்துக் கொடுத்தனர். பின்னர் அவர் தன் கரை வேட்டியை கட்டிக்கொண்டு வாக்களித்தார்.

    Thanks: Maalai Malar.com

  • Star News exit poll predicts big DMK win

    திமுக – 175 இடங்கள்
    அதிமுக – 51 இடங்கள்
    மற்றவர்கள் – 8

    வாக்கு சதவீதம்
    திமுக – 48.5 %
    அதிமுக – 37.5

    The Star News-AC Nielsen Exit Poll conducted during today’s Assembly elections in Tamil Nadu gives a big win to the DMK-led front and predicts that the DMK will return to power in the State.

    Color Tv vs Computer – Dinamalar

    1. கலர் டிவியும், கம்ப்யூட்டரும் கவருமா மக்களை?

    இந்தத் தேர்தலுக்கு மல்லு கட்டியுள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் பலப் பல “பளபள’ அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தி.மு.க., சார்பில் இலவச கலர் “டிவி’ கவர்ச்சிகரமான அறிவிப்பாக உள்ளது. அ.தி.மு.க.,வில் மிகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அறிவிப்பு தான் மிகக் கவர்ச்சியாக உள்ளது. பொழுதுபோக்கு, படிப்பு என்ற இரு தேவைகளில் எதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது வரும் 11ம் தேதி தெரிந்துவிடும். இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின், பிரசாரங்களின் “ஹைலைட்ஸ்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா :

    ஜெயலலிதா பிரசாரத்தில் மக்களிடையே பேசிய விவரம் வருமாறு:

    * ரேஷனில் அரிசியை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசம்.

    * முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேலை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.

    * மாநில அரசின் வருவாயை பயன்படுத்தி, விவசாய கூட்டுறவு கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    * நெசவாளர் நலன் காக்க பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படும்.

    * பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

    * இரண்டாயிரத்து 900 கோடி ரூபாயில் இரண்டு நீர்வள ஆதார திட்டம் அமைக்கப்படும்.

    * உழவர் பாதுகாப்பு திட்டம் போல மீனவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்.

    * தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த தொழிற்சாலைகளிலும் சமூக விரோதிகள், ரவுடிகள் பண வசூலில் இறங்கியது இல்லை.

    * தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.

    * வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம்/ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தை எதிர்த்து சாலை மறியல், துப்பாக்கிச் சூடு போன்ற கலவரம் ஏற்பட்டதுண்டு. பஸ் எரிப்பு சம்பவங்களும் நடந்ததுண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை.

    * சுனாமி ஏற்பட்டதும் தமிழக அரசின் பணியை உலக நாடுகளே பாராட்டின.

    * மழையால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், தமிழக அரசின் மீட்புப் பணிகள் வேகமாக நடந்ததை மக்களே அறிவார்கள்.

    * பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம் வழங்கியது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.

    * சென்னையில் மக்கள் குடிநீருக்காக குடத்தை எடுத்துக் கொண்டு அலைவது தடுத்து நிறுத்தப்பட்டது எங்கள் ஆட்சியில் தான். வீராணம் குடிநீர் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் நிறைவேற்றி, சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்த்தது எங்கள் ஆட்சியில் தான்.

    * பல்வேறு தொழில்நுட்ப பூங்காக்கள் இந்த ஆட்சியில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஐந்து ஆண்டில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    * சென்னையில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியே விடுதிகள் கட்டப்படும்.

    * சென்னைக்கு அருகில் இரண்டு சேட்டிலைட் நகரங்கள் அமைக்கப்படும். இதனால் பல தொழிற்சாலைகள் உருவாகும்.

    * சென்னைக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைவது போல, மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

    * அ.தி.மு.க., ஆட்சியில் தான் தொழிலதிபர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வளர முடியும். நேரடி வேலை வாய்ப்பும், மறைமுக வேலை வாய்ப்பும் பல லட்சம் பேருக்கு கிடைக்க இந்த ஆட்சி பாடுபடும்.

    * ஏழைகளுக்கு இலவச நிலம் தருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வதாக உள்ளது.

    * சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் திட்டத்தை ஒழிப்போம்.

    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு தனது பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.


    தி.மு.க., தலைவர் கருணாநிதி

    தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரசாரத்தில் இதுவரை கூறியது என்ன? அதன் விவரம் வருமாறு:

    * ஜெயலலிதா தினந்தோறும் கற்பனையான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார்.

    * எங்கள் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கதாநாயகன் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருக்க வேண்டும். அந்த வில்லன் ஜெயலலிதா தான்.

    * இந்திய வரலாற்றில் மாநிலத்திலிருந்து 13 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றதே சாதனை தான்.

    * வியாபாரிகளின் நலனுக்காக “மறுவிற்பனை’ வரியை ரத்து செய்தது தி.மு.க., ஆட்சி தான்.

    * அரிசி விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பு செய்திருப்பது ஏட்டிக்கு போட்டி.

    * தனி ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ, எப்படி அமைந்தாலும் பரவாயில்லை. இந்த ஆட்சி ஒழிய வேண்டும்.

    * தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் வாரம்தோறும் சத்துணவில் இரண்டு முட்டை வழங்கப்படும்.

    * ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்க முடியுமா. இலவச டிவி தர முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும். முடியாது என்பது தி.மு.க., அகராதியிலேயே கிடையாது.

    * கல்வி கட்டணத்தை கண்டிப்பாக குறைப்போம்.

    * “தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்’ என்று ஜெயலலிதா அறிவித்தார். முதலைகள் மாநிலமாக மாற்றிவிட்டார்.

    * மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்கள் திருமண நிதிஉதவி திட்டம் கொண்டுவரப்படும்.

    * தாய்மார்கள் பொது அறிவு பெற கலர் “டிவி’ தருகிறோம்.

    * “கலர் “டிவி’ கொடுப்பாய், கேபிள் இணைப்பு கொடுக்க முடியுமா என்று ஒருவன் கேட்கிறான். அவசியம் ஏற்பட்டால், அதையும் கொடுப்போம்.

    * காஸ் ஸ்டவ் தருவோம்.

    * விவசாயி இயற்கையாக மரணமடைந்தால், அவர் பெற்ற கூட்டுறவு கடனை ரத்து செய்வோம்.

    * நிலமற்ற ஏழை விவசாய குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்.

    * மகளிர் சுய உதவிக் குழுக்களை போல, இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துவோம்.

    * கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்துவோம்.

    * சென்னை நகரில் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மேலும் பாலங்கள் கட்டப்படும்.

    * சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ளுவோம்.

    * சுனாமி நிவாரண நிதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவோம்.

    * மீண்டும் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவுவோம்.

    * மீண்டும் சட்டசபை மேலவையை கொண்டு வர பாடுபடுவோம்.

    * அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வருவோம்.

    * காலியாக உள்ள பணியிடங்களில் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.

    * எதிர்முகாமில் இருப்பவர்கள், பிரபல நடிகர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் பேரம் பேசி, பிரசாரத்துக்கு அழைத்தனர். அவர் வரமறுத்துவிட்டார்.

    * எங்கள் ஆட்சியில் ஜாதி கலவரங்கள் ஏற்பட, எதிர்க்கட்சிகள் தான் காரணம்.

    இவ்வாறு அவர் பிரசாரம் செய்தார்.


    2. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் தலைகீழ் திருப்பம்? அடுத்த காட்சி :: அணி மாற கட்சிகள் இப்போதே வியூகம் அமைப்பு

    கடந்த பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து பேசினார். காங்கிரஸ் தலைவர்களையும், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் கடுமையாக சாடினார். ஆனால், இந்த முறை முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது தனது ஆட்சியின் சாதனைகளை மட்டுமே எடுத்துக் கூறியுள்ளார். தி.மு.க.,வைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் ஜெயலலிதா பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.

    டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் டாடா தரப்பில் இருந்து மறுப்பு வெளியாக வேண்டும் என்பது தி.மு.க.,வின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்காக எவ்வ ளவோ நெருக்கடி கொடுத்தும் காங்கிரஸ் தலைமை அதற்கு இசையவில்லை. இது தி.மு.க.,வுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மகாஜன் இறுதிச் சடங்கிற்கு தயாநிதி சென்ற விவகாரம் காங்கிரசிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Engal Anna Supports Vijayakanth & Murasu Icon

    அறிஞர் அண்ணா ஆதரிக்கும் முரசு ஒலி

    1. இசைக்கு அடுத்தபடியாகத் தமிழரின் செவிக்கும் சிந்தனைக்கும் இனிமை பயப்பதாகும்
    2. போர்க் கருவியாக மட்டுமல்ல, புகழ்க்கருவியாக, கொடை அறிவிக்கும் கருவியாகக் கொள்ளப்பட்டு தமிழகத்தில் ஏற்றம் பெற்றிருந்த ஒன்றாகும்.
    3. கேட்டுத் தமிழர் இன்புறுவர்; மாற்றார் மருளுவர்; இறுதி வெற்றி பெற்றுத் தமிழர் மகிழ்ச்சி கொள்வர்.
    4. வீரத்தினை விளக்கிற்று; வீண் ஆரவாரத்தை ஆர்ப்பரிப்பைக் காட்டும் கருவியாக இருந்ததில்லை.
    5. கேடு களைந்திட விழைவோருக்கு, நாடு வாழ்ந்திட வழி காண விரும்புவோருக்கு, தேவைப்படும் எழுச்சியைத் தரவல்லது.
    6. தம்பியின் முரசு தன்னைச் சிறிது போழ்து தட்டி மகிழ்கின்றேன்.
    7. இன்று மீண்டும் தமிழர் தன்னரசு பெற்றுத் தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட நடாத்தப்பட்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிக்கு ஓர் எழுச்சி முரசாக அமைந்து பணியாற்றி வருகிறது.
    8. இன்று நமது நாடு, மலர்த்தோட்டமாகவுமில்லை; நமது அரசும் நடத்திடவுமில்லை. எனவேதான் ‘முரசு’ தேவைப்படுகிறது.
    9. ‘போர் முரசு’ – இதன் மூலம் கிடைக்கும் எழுச்சி, வீடெல்லாம் விழா என்று கூறத்தக்க விடுதலையைப் பெற்றிட, நமக்கு ஆர்வம் தரும் – தந்து வருகிறது. அந்த ஆர்வத்தின் வளர்ச்சி, வெற்றியை நமக்கு அளித்திடும். அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறோம்.

    அண்ணாதுரை
    நன்றி: 1960, 61, 62 – முரசொலி – பொங்கல் மலர்கள்

    நமீதா அறிமுகம் செய்த ‘எங்கள் அண்ணா‘ விஜய்காந்த்தின் முரசு ஒலிக்க செய்வீர்.


    | |

    How to avoid Avian Flu? – Vote DMK

    1. முதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் – பறவைக் காய்ச்சல் நாடெங்கும் பரவி இருக்கும் காட்சி. பெண்மணிகள் அழுது கொண்டே மரக்கறி வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.

    2. உங்களுக்கு பறவைக் காய்ச்சல் வந்துவிடுமோ என்னும் பயமா?
    உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க… டாமிஃப்ளூ விற்க டீலர்ஷிப் கொடுப்போம்.

    3. கலைஞர் தன்னைத்தான் தருவார்!
    தனக்காகத்தான் தருவார்!!!

    திமுக-வின் நிஜ விளம்பர விவரிப்பு


    பதிவுக்கு உணர்வூக்கம் கொடுத்த நிஜ குறுஞ்செய்தி:

    நன்றி: தினமலர்


    | |

    My vote – Rs.11,000 Free

    இந்தத் தேர்தலில் என்னுடைய மேலான வாக்கு யாருக்கு என்று கேட்பவர்களுக்காக:

    விளம்பரம் வெளியான இதழ்: தினமலர்

    ரொம்ப சிந்திப்பவர்களுக்கான மறுப்புக்கூறு: இலவசமாகக் கணினி கொடுக்கும் அதிமுக அறிவிப்புக்கும் இந்தப் பதிவுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.


    | |

    எழுத்தாளர் சாரு அறச்சீற்றம்

    எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்.அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் கட்டுரையில் அரசியல் பற்றியும் தேர்தல் பற்றியும் தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.

    வழக்கம்போல் விளிம்புநிலை மனிதர்களுக்காக கவலைப்பட்டிருக்கும்(வேசிகள் உள்பட)சாரு இன்று வைகோவின் தயாநிதி மாறன் மீதான புகார்களைத்தான் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பேசு வருவதாக எழுதி கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.

    மற்ற பலரையும் போல் ஒரு சீட்டுக்காகத்தான் வைகோ திமுக கூட்டணியை விட்டு சென்றதாக எழுதியுள்ள சாரு, இந்த கட்டுரையில் ஜெவை தாக்கியதை விட திமுகவை தாக்கியது அதிகம்.அதை விடுங்கள்.

    பொருட்படுத்ததக்க விஷயங்கள் சில

    தினமலரை பெயர் சொல்லி தினகரன் தாக்குவதாகவும் தினமலர் நிர்வாகி தண்ணியடிக்கும் இடததையெல்லாம் தினகரன் எழுதுவது அடாவடி என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.சாருவுக்கும் அந்துமணி கும்பலுக்கும் உள்ள நெருக்கத்தை இங்கு நினைவு கூறாதீர்கள்.சாரு அறச்சீற்றம் உடையவர்.

    இலக்கியவாதிகள் அரசியலுக்கு போவதிலும் சாருவுக்கு வருத்தமே என்று தெரிகிறது. சல்மாவை பற்றி அவர் கூறும்போது அவர் தோற்கும் அணியில் இருக்கிறார் என்று ஒரே போடாக போடுகிறார்.ஆகவே அவர் ஆசை, எதிர்ப் பார்ப்பு என்ன என்பது வெளியே வந்துவிட்டது.(ஆனால் ரொக்கையா மாலிக் என்ற சல்மா தேர்தல் களத்தில் பெண்களை கவர்ந்துவிட்டதாகவும் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று மனம்திருந்திய(?) குமுதம் ரிப்போர்ட்டரில் படித்த ஞாபகம்)

    அடுத்ததாக தன் உற்ற தோழன் ரவிகுமார் தேர்தலில் நிற்பதற்காக தாடியை இழந்து பெட்டி வாங்கிவிட்டதாக எழுதியிருப்பது சாருவின் ஆதங்கத்தை நன்றாகவே வெளிகாட்டுகிறது.

    திராவிட கட்சிகளுக்கு இலக்கியவாதிகளை தெரியாதாம்.(அவர்கள் ஞான சூன்யங்கள் என்கிறார்).ஆனால் மற்ற கட்சிகாரர்களுக்கு இலக்கிய வாதிகளை தெரியுமாம்.தெரிந்தவர்கள் சட்டசபைக்கு போவது நல்லது இலலை என்று கூறுகிறார் புரட்சி முற்போக்கு எழுத்தாளர் சாரு.

    கவலை வேண்டாம் சாரு அவர்களே,திமுக வென்றாலும் தினமலர் நிர்வாகி தண்ணி அடிக்கும் இடத்தை மாற்ற தேவையில்லை.திமுகவினர் அந்தளவிற்கு அடாவடி செய்ததில்லை.ஆனால் இந்த முறை வென்றால் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமும் தருவதற்கில்லை.

    Minorities Choices, MLA Dynasties, CPI(M) SWOT – Dinamani

    1. தேர்தல் ஆதரவு: சிறுபான்மை உரிமை பாதுகாப்பு கழகம் கருத்து : திமுக கூட்டணிக்கு எஸ்றா சற்குணம் தலைமையில் சில ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை தேசிய சிறுபான்மை உரிமை பாதுகாப்புக் கழகம் கண்டித்துள்ளது.

    ஒரு சில தனி நபர்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதை, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் முடிவு என கருதக் கூடாது.

    மத மாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட போதிலும் பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இன்றளவும் காங்கிரஸ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் அந்தச் சட்டம் அமலில் உள்ளது. எனவே, சிறுபான்மை மக்கள் திமுக கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க மாட்டோம். இம்மக்களை பாதுகாக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்போம்.

    – ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோம்ஸ்


    2. “பொன்’மலையை வெட்டி தலா 1 கிலோ தங்கம்?’: திருச்சியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

    அகில இந்திய மலஜலம் கழிப்போர் சங்கம்‘ என்ற பெயரில் உள்ள இதன் தொடக்கமே படு நக்கலாக “பொய்யே துணை’ எனத் தொடங்குகிறது. சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்… என்ற வாக்குறுதிகள் பட்டியலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

    “குடிசை வீடுகள் அனைத்தையும் மாற்றி சகல வசதிகளும் நிறைந்த வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீட்டிலும் இணைக்கப்படும் 5 குழாய் இணைப்புகள் மூலம் பச்சை மற்றும் புழுங்கல் அரிசிகளும், கோதுமை மாவு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, எண்ணை வகைகள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என சகலமும் வீடுகளுக்கே வழங்கப்படும். திருச்சியிலுள்ள “பொன்மலை’யை உண்மையான “பொன்’ மலையாக மாற்றி வெட்டி மக்களுக்கு 1 கிலோ தங்கம் வழங்கப்படும்’

    என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    “எஸ்.பி. சையதுமுகமது என்கிற சத்யானந்த யோகி பாபா’ என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் முகவரி ஏதுமில்லை.


    3. பொன். தனசேகரன் ::

  • திமுக – மறைந்த அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் : அன்பில் பெரியசாமி – திருச்சி-1 தொகுதி
    இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
  • திமுக – மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் மகன் : தங்கம் தென்னரசு – அருப்புக்கோட்டை
  • திமுக – அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் : பூங்கோதை அருணா – ஆலங்குளம்
    எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக இருந்தவர் ஆலடி அருணா.
  • திமுக – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் : ராஜேந்திரன் – வீரபாண்டி தொகுதி
    மகனுக்காக வழக்கமான தமது வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
  • திமுக – தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் : கீதா ஜீவன் – தூத்துக்குடித் தொகுதி
  • திமுக – முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன் : எம்.ஏ. ஆண்டி அம்பலம் – நத்தம்
  • காங்கிரஸ் – முன்னாள் எம்எல்ஏ வீரணன் அம்பலத்தின் மகன் : கே.வி.வி. ரவிச்சந்திரன் – மேலூர் தொகுதி
  • திமுக – அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமியின் மகன் : ராஜா – ஈரோடு தொகுதி
    மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
  • அதிமுக – சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் : கே.எஸ். விஜயக்குமார் – கும்மிடிப்பூண்டி
    இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
  • காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் : வசந்தகுமார் – நாங்குநேரி
  • பாஜக – குமரி அனந்தனின் மகள் : தமிழிசை சௌந்தரராஜன் – ராதாபுரம்
  • காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் : எம்.கே. விஷ்ணு பிரசாத் – செய்யாறு
    முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
  • காங்கிரஸ் – நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் : அருள் அன்பரசு – வேலூர் மாவட்டம் சோளிங்கர்.

    4. CPI(M) N Varadarajan – SWOT :: தங்கள் அணியின் பலம், எதிர் அணியின் பலவீனம் என்ன என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அரசியல் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் அனுப்பியுள்ள கட்டுரை.

  • Suba Veerapaandiyan in Sun TV

    நிகழ்ச்சி: வணக்கம் தமிழகம்
    உரை: சுப வீரபாண்டியன்
    நாள்: மே 4 2006

    பகுதி 1:

    this is an audio post - click to play

    இன்னொரு பகுதி:

    Suba Veerapaandiyan in Sun TV Campaigns for DMK - this is an audio post - click to play

    Purasaivakkam Poster & Pre-Poll Opinions – Dinakaran

    Christian Minorities Plea to Purasaivaakkam Voters

    Pre-election Opinion Polls

    நன்றி: தினகரன்