Stalin gets two best officers to assist him
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருந்து அமைச்சகத்தை திறம்பட நடத்த மிகத் திறமையான அதிகாரிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன், அசோக் வரதன் ஷெட்டி ஆகியோரை முதல்வர் கருணாநிதி தேர்வு செய்து நியமித்துள்ளார். தமிழக அரசுத் துறைகளிலேயே அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்படும் துறையும் இதுதான் (கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி வரை ஒதுக்கப்படுகிறது).
அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி. ராதாகிருஷ்ணனைப் போலவே திறமையான, சர்ச்சைகளில் சிக்காத அதிகாரி ஷெட்டி. இவரும் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக இருந்தவர். அவரை ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமித்துள்ளார் கருணாநிதி. இவர் இதற்கு முன் ஊனமுற்றோர் நலத்துறையின் ஆணையராக இருந்து வந்தார்.
இதுவரை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வந்த சாந்த ஷீலா நாயர் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட, சாந்த ஷீலா நாயர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) தலைவராக நயமிக்கப்பட்டுள்ளார். இவரும் சுனாமி பாதிப்பின்போது ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல அதிமுக ஆட்சியில் விவசாயத் துறை கூடுதல் இயக்குனராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சந்தானத்தையே அத்துறையின் இயக்குனராக நியமித்துள்ளார் கருணாநிதி.
இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த வாசுதேவன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.










