சிதறலாய் என் சிந்தையைக் கவர்ந்த சில செய்திகள்/வலையகங்கள்:
- பிரேசிலின் சிறைகளை தாதா ஆதரவாளர்கள் கைப்பற்றி காவலாளர்களைப் பிணைக்கைதியாக்கினார்கள்: கூட்டுக் குடும்பமாக இருந்த எட்டு பெரிய தாதாக்களை பிரித்து விட்டார்களாம்; அதனால் ஏற்பட்ட வியாபாரப் பின்னடைவினால் கொந்தளிப்பு. சிடி ஆஃப் காட் நிஜத்தில் அரங்கேறுகிறது.
- விடாக்கண்டன் அமெரிக்காவிற்கும் கொடாக்கண்டன் க்யூபாவிற்கும் மீண்டும் சதாய்ப்பு: அமெரிக்க கட்டிடத்தில் விடுதலையைக் கவர்ச்சியாக விற்கிறார்கள்; பயந்து போன ஃபிடல் காஸ்ட்ரோ கொடித் தோரணம் கட்டி மறைக்கிறார். (க்யூபா குறித்த முந்தை பதிவு.)
- ‘Incendiary Circumstances – Amitav Ghosh: புத்தக விமர்சனம் – 1
- ‘Seeing’ By José Saramago: நோபல் பரிசு வென்றவரின் சமீபத்திய புத்தகத்தைக் குறித்த விமர்சனம் (பு.வி. 2)
- Chantix™ (Varenicline): நீங்க புகை ஊதுபவரா? பழக்கத்தை விட்டுவிட நினைப்பவரா? இன்னொரு மார்க்கம் சந்தைக்கு வரப்போகிறது.
- இஸ்ரேலில் திருமணமானவர்கள் பிரிந்திருக்க வேண்டும்: பாலஸ்தீனியர்களை மணமுடித்தவர்களைப் பிரித்து வசிக்க வைக்கிறது இஸ்ரேலிய நீதிமன்றம் & சட்டம்.
- ஜெர்மனியின் ராபின் – ஹூட்: அமெரிக்க டாலர் 150-க்கு சாண்ட்விச்; கூச்சி கைப்பைக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று சம்பாதிப்பவர்களிடம் இருந்து திருடினால் தப்பா?
- மோச்சே பழங்குடியினருக்குத் தலைவராக இருந்தவர் பெண்: 1600 வருடங்களுக்கு முந்தைய பெரு நாட்டின் பூர்வகுடியினர் சம்பந்தமான ஆராய்ச்சி.
- The Revolution Will Not Be Televised: வெனிசுவேலா நாட்டு அதிபர் ஹூகோ சாவெஸ் குறித்த திரைப்படம். உங்கள் ஊரில் திரையிடுகிறார்களா என்றும் அறியலாம்.
- PIRELLI FILM – The Call: பிரேல்லி டயர்கள் தயாரிப்பது தவிர, (Rated Adults Only) நாள்காட்டிதான் இதுவரை கொடுத்து வந்தார்கள். இப்பொழுது நவோமி காம்பெல், ஜான் மால்கோவிச்சுடன் திரைப்படம். இணையத்திலேயேப் பார்க்கலாம் (திரைப்படம் சைவ விளம்பரம்தான்; தைரியமாகக் குடும்பத்தோடு பார்க்கலாம்)
- FREE Gas Help.com: அமெரிக்காவில் இலவசமாய் பெட்ரோல் பெறுவது எப்படி?











