எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்.அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் கட்டுரையில் அரசியல் பற்றியும் தேர்தல் பற்றியும் தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.
வழக்கம்போல் விளிம்புநிலை மனிதர்களுக்காக கவலைப்பட்டிருக்கும்(வேசிகள் உள்பட)சாரு இன்று வைகோவின் தயாநிதி மாறன் மீதான புகார்களைத்தான் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பேசு வருவதாக எழுதி கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மற்ற பலரையும் போல் ஒரு சீட்டுக்காகத்தான் வைகோ திமுக கூட்டணியை விட்டு சென்றதாக எழுதியுள்ள சாரு, இந்த கட்டுரையில் ஜெவை தாக்கியதை விட திமுகவை தாக்கியது அதிகம்.அதை விடுங்கள்.
பொருட்படுத்ததக்க விஷயங்கள் சில
தினமலரை பெயர் சொல்லி தினகரன் தாக்குவதாகவும் தினமலர் நிர்வாகி தண்ணியடிக்கும் இடததையெல்லாம் தினகரன் எழுதுவது அடாவடி என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.சாருவுக்கும் அந்துமணி கும்பலுக்கும் உள்ள நெருக்கத்தை இங்கு நினைவு கூறாதீர்கள்.சாரு அறச்சீற்றம் உடையவர்.
இலக்கியவாதிகள் அரசியலுக்கு போவதிலும் சாருவுக்கு வருத்தமே என்று தெரிகிறது. சல்மாவை பற்றி அவர் கூறும்போது அவர் தோற்கும் அணியில் இருக்கிறார் என்று ஒரே போடாக போடுகிறார்.ஆகவே அவர் ஆசை, எதிர்ப் பார்ப்பு என்ன என்பது வெளியே வந்துவிட்டது.(ஆனால் ரொக்கையா மாலிக் என்ற சல்மா தேர்தல் களத்தில் பெண்களை கவர்ந்துவிட்டதாகவும் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று மனம்திருந்திய(?) குமுதம் ரிப்போர்ட்டரில் படித்த ஞாபகம்)
அடுத்ததாக தன் உற்ற தோழன் ரவிகுமார் தேர்தலில் நிற்பதற்காக தாடியை இழந்து பெட்டி வாங்கிவிட்டதாக எழுதியிருப்பது சாருவின் ஆதங்கத்தை நன்றாகவே வெளிகாட்டுகிறது.
திராவிட கட்சிகளுக்கு இலக்கியவாதிகளை தெரியாதாம்.(அவர்கள் ஞான சூன்யங்கள் என்கிறார்).ஆனால் மற்ற கட்சிகாரர்களுக்கு இலக்கிய வாதிகளை தெரியுமாம்.தெரிந்தவர்கள் சட்டசபைக்கு போவது நல்லது இலலை என்று கூறுகிறார் புரட்சி முற்போக்கு எழுத்தாளர் சாரு.
கவலை வேண்டாம் சாரு அவர்களே,திமுக வென்றாலும் தினமலர் நிர்வாகி தண்ணி அடிக்கும் இடத்தை மாற்ற தேவையில்லை.திமுகவினர் அந்தளவிற்கு அடாவடி செய்ததில்லை.ஆனால் இந்த முறை வென்றால் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமும் தருவதற்கில்லை.











//கவலை வேண்டாம் சாரு அவர்களே,திமுக வென்றாலும் தினமலர் நிர்வாகி தண்ணி அடிக்கும் இடத்தை மாற்ற தேவையில்லை.திமுகவினர் அந்தளவிற்கு அடாவடி செய்ததில்லை.ஆனால் இந்த முறை வென்றால் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமும் தருவதற்கில்லை.//
இப்பத்தியில் ஏதாவது சொல்ல வருகிறீர்களா? அல்லது பதிவு நீளம் காணாமல் சேர்த்த வசனங்களா?
எங்கு படித்தீர்கள் சாருவின் பதிவை ,வலையில் என்றால் என்க்கும் சொல்லுங்கள் நானும் படிக்கிறேன் .
சாரு அவர் பதிவுகளில் குறிப்பிடும் மணி அந்துமணி என்பதும் அவர் தண்ணி அடிக்கும் இடங்களை இவர் எழுதுவ்து தான் அதிகம் ஆனால் பெர்ம்பான்மையோர் படிக்க மாட்டார்கள் என் அவர்களுக்குத் தெரியும்.
இந்தவாரப் பதிவில் கூட மணியின் பிரதாபங்களை அவர் எழுதியிருக்கிறார் படித்துப் பாருங்கள்.அறச்சீற்றம் எல்லாம் தெரிந்தவர்களிடம் சொல்லமுடியாது ..அதில் நீங்களும் நானும் கூட அடக்கம் தான்.
முத்து இந்த சாருவின் கட்டுரையின் சுட்டி தாருங்களேன், charuonlineல் எந்த கட்டுரை என கண்டுபிடிக்க முடியவில்லை, ம்… சாரு ஒருவரைத்தான் இலக்கிய உலகின் நடுநிலைவாதி என நினைத்திருந்தேன், அவருமா?
ஹி…ஹி…அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…இருக்கர ஒரே ஸ்பான்ஸருக்காக ஒரு “ஸ்மால்” சொம்பு…அவ்வளவே! இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கப் படாது.
பொட்டீக்கடை,
அதே கருத்துத்தான் இங்கயும்..
கூத்தாடி,
அறச்சீற்றம் எல்லாம் தெரிந்தவர்களிடம் சொல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்…ஆனால் இது..
கொழுவி,
தி.ரா.மு.மு சார்பாக சேர்க்கப்பட்ட பத்தி அது.
சாருவை பற்றி ஒரு முறை அ.மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அது ” கடைசி போத்தல் பீர் யார் வாங்கித்தருகிறார்களோ அவர்தான் நல்ல எழுத்தாளர் என்று மறுநாள் சொல்லுவார்”
இதையும் படியுங்கள்- http://kuttapusky.blogspot.com/2006/04/hexa.html
//தி.ரா.மு.மு சார்பாக சேர்க்கப்பட்ட பத்தி அது.//
நா ரெடிங்கோ!!! :-))
>> தி.ரா.மு.மு சார்பாக சேர்க்கப்பட்ட பத்தி அது. >>
தி.ரா.மு.மு-விலே கொ.ப.செ பதவியை எனக்கே தந்தாக வேண்டும் என தலைவர் அவர்களை ‘அன்போடு’ கேட்டுக் கொள்கிறேன்!! ;))
கோணல் பக்கங்களுக்கு அண்மைக்கால அனுசரணை தினமலராக இருக்க சாரு இவ்வாறு எழுதுவதில் வியப்பில்லை ரவிக்குமார் பொட்டி வாங்கினால் அதற்குப் பெயர் லஞ்சம்.
அந்துமணியும், சாரு குறிப்பிடும் மணியும் வெவ்வேறு ஆட்கள்னு நினைக்கிறேன்.
சாருவைப் பொறுத்தவரை செஞ்சோற்றுக்கடன் தீர்க்கிறார்.சன்.டி.வி ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பலரும் தினமலர் தமிழ் வெளியில் நிகழ்த்தும் பார்ப்பனக் கருத்து திணிப்பு குறித்து பேசுவதில்லை.ரவிக்குமாரைப் பொறுத்தவரை சாரு கூறுவது சரிதான்.
துளசி கோபால் said…
அந்துமணியும், சாரு குறிப்பிடும் மணியும் வெவ்வேறு ஆட்கள்னு நினைக்கிறேன்.
11:28 AM
அந்த மணி தான் அந்துமணி. ஒரு முறை நானும் சாருவும் குடிக்கபோய்க்கொண்டிருந்தோம், போகும் வழியில் மணியின் அழைப்பு , சரி அங்கு போய்விடலாம் ஆனால் அவர்கள் எல்டிடிக்கு எதிர்ப்பானாவர்கள் நீ கொஞ்சம் அடக்கி வாசி என்று சாரு கேட்டுக்கொண்டார் அதன் காரணமாகவே நான் வர மறுத்துவிட்டேன் பிறகு எக்மோர் சென்று குடித்தோம்
திராவிட இயக்க எழுத்தாளர் சுகுனா திவாகரை :))) முத்துவின் களத்துக்கு வரவேற்கிறேன்
VANGA SUGUNA DIWAKAR,
வரவணையான்,
என்ன இது களம் அது இது என்று?
திராவிடம் என்றாலே கெட்டவார்த்தை என்று கட்டமைக்க முயல்பவர்களை மாற்றுவது நம் கடமை. அவ்வளவுதான்.
சல்மா அவுட்..
ரவிகுமார் வெற்றி..
இது மேலதிக தகவல்.
சாருவைப் பொறுத்தவரை செஞ்சோற்றுக்கடன் தீர்க்கிறார்.சன்.டி.வி ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பலரும் தினமலர் தமிழ் வெளியில் நிகழ்த்தும் பார்ப்பனக் கருத்து திணிப்பு குறித்து பேசுவதில்லை.ரவிக்குமாரைப் பொறுத்தவரை சாரு கூறுவது சரிதான்.
ரவிகுமார் எனது 18 ஆண்டுகால நண்பர். ரவி வெற்றி பெற்றவுடன் எனது உறவினர் ஒருவர் ரவியின் தொலைபேசி எண் எனக்கு தெரியும் என நினைத்து என்னை தொடர்பு கொண்டார். ஆனால், என்னிடம் இல்லை என தெரிவித்தேன்.
எப்படியாவது வாங்கிக்கொடுங்கள் என அவர் வலியுறுத்த நான் ஒரு சிறுத்தையை தொடர்பு கொண்டேன். அந்த சிறுத்தையும் என் நெருங்கிய நண்பர் ஆனாதால் அந்த சிறுத்தை என்னைப்பார்த்து சீறியது.
இருப்பினும், வேறு தொடர்பு எண்ணைக் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்றார். நான் அந்த எண்ணை தொடர்பு கொண்டு ரவியின் எண்ணை கேட்ட போது அவரோ ரவிக்குமாரிடம் தொலைபேசியை கொடுத்துவிட்டார்.
பிறகெண்ண நான் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு ரவியிடம் எண் வாங்கி என் உறவினரிடம் கொடுத்தேன்.