எழுத்தாளர் சாரு நிவேதிதாவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்.அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் கட்டுரையில் அரசியல் பற்றியும் தேர்தல் பற்றியும் தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.
வழக்கம்போல் விளிம்புநிலை மனிதர்களுக்காக கவலைப்பட்டிருக்கும்(வேசிகள் உள்பட)சாரு இன்று வைகோவின் தயாநிதி மாறன் மீதான புகார்களைத்தான் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பேசு வருவதாக எழுதி கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மற்ற பலரையும் போல் ஒரு சீட்டுக்காகத்தான் வைகோ திமுக கூட்டணியை விட்டு சென்றதாக எழுதியுள்ள சாரு, இந்த கட்டுரையில் ஜெவை தாக்கியதை விட திமுகவை தாக்கியது அதிகம்.அதை விடுங்கள்.
பொருட்படுத்ததக்க விஷயங்கள் சில
தினமலரை பெயர் சொல்லி தினகரன் தாக்குவதாகவும் தினமலர் நிர்வாகி தண்ணியடிக்கும் இடததையெல்லாம் தினகரன் எழுதுவது அடாவடி என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.சாருவுக்கும் அந்துமணி கும்பலுக்கும் உள்ள நெருக்கத்தை இங்கு நினைவு கூறாதீர்கள்.சாரு அறச்சீற்றம் உடையவர்.
இலக்கியவாதிகள் அரசியலுக்கு போவதிலும் சாருவுக்கு வருத்தமே என்று தெரிகிறது. சல்மாவை பற்றி அவர் கூறும்போது அவர் தோற்கும் அணியில் இருக்கிறார் என்று ஒரே போடாக போடுகிறார்.ஆகவே அவர் ஆசை, எதிர்ப் பார்ப்பு என்ன என்பது வெளியே வந்துவிட்டது.(ஆனால் ரொக்கையா மாலிக் என்ற சல்மா தேர்தல் களத்தில் பெண்களை கவர்ந்துவிட்டதாகவும் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று மனம்திருந்திய(?) குமுதம் ரிப்போர்ட்டரில் படித்த ஞாபகம்)
அடுத்ததாக தன் உற்ற தோழன் ரவிகுமார் தேர்தலில் நிற்பதற்காக தாடியை இழந்து பெட்டி வாங்கிவிட்டதாக எழுதியிருப்பது சாருவின் ஆதங்கத்தை நன்றாகவே வெளிகாட்டுகிறது.
திராவிட கட்சிகளுக்கு இலக்கியவாதிகளை தெரியாதாம்.(அவர்கள் ஞான சூன்யங்கள் என்கிறார்).ஆனால் மற்ற கட்சிகாரர்களுக்கு இலக்கிய வாதிகளை தெரியுமாம்.தெரிந்தவர்கள் சட்டசபைக்கு போவது நல்லது இலலை என்று கூறுகிறார் புரட்சி முற்போக்கு எழுத்தாளர் சாரு.
கவலை வேண்டாம் சாரு அவர்களே,திமுக வென்றாலும் தினமலர் நிர்வாகி தண்ணி அடிக்கும் இடத்தை மாற்ற தேவையில்லை.திமுகவினர் அந்தளவிற்கு அடாவடி செய்ததில்லை.ஆனால் இந்த முறை வென்றால் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமும் தருவதற்கில்லை.










