Daily Archives: ஜனவரி 26, 2006

காஷ்மீர்

குடியரசு தின வாழ்த்துக்கள்
Happy Republic Day

எந்த நாய் இந்தியாவைக் குறிக்கிறது என்று சொல்பவருக்கு அல்லது எந்த நாய்க்கு மட்டுமே பூனை சொந்தம் என்று தீர்ப்பளிப்பவருக்கு ‘பூனை’ மின்மடலிடப்படும்


|

ஈகோ

எனக்கு ஈகோ கிடையாது என்றால் பலரும் நம்புவதே இல்லை. யாரென்று குறிப்பிட்டு சொன்னால் மானநஷ்ட வழக்கு விழும் அபாயம் வேறு இருக்கிறது 😉

மூன்றாம் பிறையை நாலாம் நாள் பார்த்ததாலோ என்னவோ ‘பட்ட பழி படாத பழி‘யாக இருக்கிறதே என்னும் தீராக் கவலையுடன் சலித்திருந்தபோதுதான் ஈகோ மேய்ச்சல் கண்ணில் பட்டது.

தேர்தலில்தான் டெபாஸிட் இழந்தோம்.

அகங்காரம், தன்முனைப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால்உனக்கு அந்த மாதிரி தன்னலமே கிடையாதே கண்ணா‘ என்று பெரிய முட்டை காண்பித்தார்கள்:

சில முக்கிய வலையகங்களின் கணக்கெடுப்புகள்:

  • விகடன்: 4928 புள்ளிகள்
  • திசைகள்: 6371 புள்ளிகள்
  • தமிழ்மணம்: 14817 புள்ளிகள்
  • நிலாச்சாரல்: 9318 புள்ளிகள்
  • தமிழோவியம்: 10431 புள்ளிகள்

    யார் இனிமேல் ஈகோ ட்ரிப் என்று கதைக்க ஆரம்பித்தாலும் இவர்களை சுட்டி என்னுடைய பொதுப்பணியை முன்வைத்து கதைக்கலாம்


    |