உலகம் ஹெர்குலிஸ் சைக்கிள்களால் ஆனது


வேம்பநாட்டுக் காயலில் நான் ரசித்த பகுதிகள்:

  • அந்தக்கால மலையாள நகைச்சுவை நடிகர் பகதூர் மாதிரி கெச்சலான தேகம் சுப்பையாவுக்கு. காக்கி நிஜார், கூம்புத் தொப்பி, மட்கார்ட் இல்லாத ஹெர்குலிஸ் சைக்கிள், பின்னால் துருப்பிடித்த காரியரில் சடம்பு போட்டுக் கட்டிவைத்த லாட்டிக் கம்பு, மூக்குப்பொடி வாடை என்று அறுபதுகளின் அடையாள கான்ஸ்டபிள்.
  • திருப்பாச்சி அருவாளைத் தூக்கிண்டு வாடா அம்பி என்று பிராமணசங்க காலத்துக்கு முற்பட்ட தீர்க்கதரிசனமான அந்த முழக்கத்தைத் தொடர்ந்து. அம்பியானவன் அரிவாளும், தோட்டத்து இளநீருமாக வந்து சேர்ந்தான்.
  • மாடியிலே குடியிருக்கிற பிள்ளாண்டான். பி.டபுள்யூ.டியிலே டென் – ஏ- ஒன் கிளார்க்கா இருக்கான். அப்பப்ப ஊஸ்ட் பண்ணி வேலையிலே சேர்த்துப்பா.
  • போலீஸ்காரனை முறைத்துக் கொள்கிறான் இந்தப் பிள்ளை. பெண் கவிஞரை தூஷித்த எழுத்தாளர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி இழுப்பதுபோல், தரதரவென்று இழுத்துப்போய், ஸ்டேஷனில் வௌவால் மாதிரித் தலைகீழாகத் தொங்கவிட்டு விடுவார்கள். (சும்மா, பேச்சுக்குச் சொன்னது இது அந்தக் காலத்தில் காப்பி இருந்தது. கவிஞர்கள் இருந்தார்கள். துப்பட்டா இல்லை.)
  • அந்த சாயந்திரம் கான்ஸ்டபிளுக்கு நகைச்சுவை பற்றி விளக்க என்.ஜி.ஓ பிள்ளையாண்டான் ரகோத்தமன் பட்ட கஷ்டம் போன வாரம் சட்டென்று இதை எழுதுகிறவனுக்கு நினைவு வந்தது.

    நிச்சயமாய் நான் தலையாட்டி — எனக்குத் தோன்றியதை, நான் சொல்வதைவிட சிறப்பாக சொல்லியிருக்காரே என்று நினைத்த எண்ணங்கள்:

    Sub altern, micro history கூறுகளும், காலத்தை இறுக்கி உறைய வைக்கும் புனைவும் கதையாடலும் எல்லாவற்றுக்கும் மேலாக, வாசகனைப் பயமுறுத்தாத நடையுமாக விளங்கும் இவற்றில் பலவும் இன்னும் ஐம்பது வருடம் போனாலும் நிற்கும். Derivative literature சுவடு இல்லாமல் போய்விடும்.

    காராபூந்தி சாப்பிடுதல், நகைச்சுவைக் கட்டுரை எழுதுதல் போன்ற விஷயங்களுக்காக இபிகோ – இலக்கிய பிரொசிஜர் கோட் விதிகளின்படி சகலரையும் கூண்டில் ஏற்றித் தண்டிக்க, தலைமுறை தலைமுறையாக இலக்கிய கான்ஸ்டபிள்கள் அலைந்து கொண்டிருப்பது தமிழ் இலக்கிய சூழலை சுவாரசியமாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.


    | |

  • 5 responses to “உலகம் ஹெர்குலிஸ் சைக்கிள்களால் ஆனது

    1. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

      இலக்கிய கான்ஸ்டபிளா ?
      என்ன ஒரு உதாரணம் ! அருமை !!
      :))

    2. ஏட்டுச் சுரைக்காய்?

    3. என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியலை. அதுனால ஒரு + போட்டுட்டேன்.

      (இந்தப் பின்னூட்டத்துக்கான word verfication-ல இங்கிலீஸ் கெட்ட வார்த்த கேக்குதுங்க.)

    4. எல்லா +ம் இரா முரிகனை சாரும் 🙂

      (தமிழில் கெட்ட வார்த்தை கேட்காத ப்ளாகர் ஒழிக :-))

    5. பதிவின் தலைப்பு என்ன்னை இழுத்து வந்தது.மெல்லிய எள்ளல், காயப்படுத்தாத எள்ளல் இரா.மு. விடம் இருந்து (நான்)கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.