Daily Archives: ஜனவரி 18, 2006

antimetabole

விவேக் மொழி என்னும் தலைப்புடன் வந்த மின்மடலில் இருந்து…
(இரண்டனா எல்லாம் என் கருத்துகள்)

1. பேண்ட் போட்டு முட்டி போட முடியும்,
ஆனா முட்டி போட்டு பேண்ட் போட முடியுமா?

இரண்டணா: போடணும்னா ‘அபூர்வ சகோதர’ராக இருக்கணும்.

2.ஃபேனுக்கும் றெக்கை இருக்கு; பறவைக்கும் றெக்கை இருக்கு.
ஃபேனால் பறக்க முடியாது; பறவையால் சுத்த முடியாது.

இரண்டணா: சுத்தி சுத்தி அடிக்கறதுக்கு ஊர்க்குருவிகளால் முடியாது.

3. மேட்ச் பாக்ஸில் (கிரிக்கெட்) மேட்சை பார்க்க முடியாது.

இரண்டணா: தீப்பெட்டி சைஸில் ஐ-பாட் வருதே…

4. இருக்கறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விடா குடிச்சாலும், செத்ததுக்கப்புறம் பால்தான்.

இரண்டணா: இருக்கறப்ப கொழுப்பு நீக்கிய அல்லது சோயா பால் குடிங்க.

5. சவுத் இந்தியாவில் நார்த்தங்கா கிடைக்கும்;
ஆனா, நார்த் இந்தியாவில் சவுத்தங்கா கிடைக்குமா?

இரண்டணா: பெருசுங்களை ‘டா’ போட்டால், POTA-வில் போடாங்கா கிடைக்கும்.

6. பச்சை மிளகா பச்சையா இருக்கும்;
ஆனா, குடை மிளகாயில் குடையா இருக்கும்!

இரண்டணா: சப்டெக்ஸ்ட் – குடை சின்னம் + இரட்டை பச்சை = தலையில் மிளகாய்

7. லன்ச் பேக்கில் லன்ச் கொண்டு போகலாம்;
அதனால், ஸ்கூல் பேக்கில் ஸ்கூலைக் கொண்டு போக நினைக்கக் கூடாது.

இரண்டணா: கற்றது கைச்சோறு அளவு; கல்லாதது ஸ்கூல் அளவு.

8. நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும், உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு, கடையில்தான் வாங்கணும்.

இரண்டணா: சினிமா பருப்பு அரசியலில் உதவாது.

9. மெழுகை வைத்து மெழுகுவர்த்தி செய்யலாம்;
ஆனால், கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.

இரண்டணா: சக்கரத்தை வைத்து சக்கரவர்த்தி செய்ய முடியாது.

10. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்;
ஆனால், கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.

இரண்டணா: கோவிலை இடித்தாலும் ஒரே ரத்தம்தான் வரும்.


| |

அடுத்த கருத்துக்கணிப்பு

உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் வலைப்பதிவு திரட்டி எது?

  • பழைய தமிழ்மணம்
  • புதிய தமிழ்மணம்
  • தேன்கூடு

    கருத்தான வாக்கை அளிக்க: Free Vote Caster from Bravenet.com

    Old Poll


    | |

  • வாழ்த்துகள்

    சிலி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி: Michelle Bachelet
    Centre-left candidate Michelle Bachelet has become Chile's first woman president

    ஆப்பிரிக்காவிலேயே முதன்முறையாக — தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், லைபீரியாவின் பெண் பிரதம மந்திரி: Ellen Johnson-Sirleaf
    Ellen Johnson-Sirleaf has been sworn in as Liberia's president, making her Africa's first elected female leader.


    | |