தமிழகத்தில் பார்வார்டு ப்ளாக் என்கிற ஒரு கட்சி இருக்கிறதா இல்லையா என்பதே, “தேவர் ஜெயந்தி” கொண்டாடும்போது தான் தெரியும். முத்துராமலிங்க தேவரினை முன்னிறுத்தி பெரியதாக தமிழக அரசியலில் சாதிக்கவில்லையெனினும், தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியினைப் பிடித்து தொங்கிக் கொண்டு ஒரிரண்டு தொகுதிகளைப் பெற்று கட்சியினை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியாக நினைவிருப்பின், பழ.கருப்பையா கூட ஏதோ ஒருவிதத்தில் பார்வார்டு ப்ளாக்கொடு தொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.
இப்படியாக ஒரங்கட்டப் பட்டிருந்த கட்சிக்கு இப்போதைய புது வரவு நடிகர் கார்த்திக்.ஏற்கனவே “சரணாலயம்” என்கிற “சமுக அமைப்பினை” வைத்து சமூகப் பணிகள் செய்து வருவதாக சொல்லியிருந்தவர். இவர் போன எல்லா கூட்டங்களும் பெரும் குழப்பத்திலும், நெரிசலிலும் முடிந்தன. இந்நிலையில் பார்வார்டு பளாக்கின் மாநில கட்சிக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. கார்த்திக்கும் கூட்டத்திற்காக மதுரை சென்றிருந்தாலும், சில காரணங்களினால் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் பேட்டியில் மட்டும் தமிழ்நாட்டில் மாநில செயலாளர் பதவி கிடைத்தால் பார்வார்டு பளாக்கில் சேர்ந்து போட்டியிடுவேன் என்றும்,இல்லையெனில் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
என்ன அடிப்படை தகுதிகளைக் கொண்டு பொது செயலாளர் பதவி கேட்கிறார் என்பது ஒருபுறமிருக்க, கார்த்திக்கின் ஆதரவாளர்கள் கொஞ்சம் அதிகமாகவே உசுப்பேற்றுகிறார்கள். ஆக, தமிழக அரசியலில் குட்டையை குழப்ப இன்னொரு அரசியல் கட்சி உதயமாகும் சாத்தியங்கள் தெரிகிறது











சரியாக நினைவிருப்பின், பழ.கருப்பையா கூட ஏதோ ஒருவிதத்தில் பார்வார்டு ப்ளாக்கொடு தொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.
ஹூம்.இவர் நடுவில் காங்கிரஸில் கொஞ்ச நாள் இருந்து விட்டுப் பின் மதிமுக சென்றார் என நினைக்கிறேன்.தற்போது தீவிர அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார் என நினைக்கிறேன்.
ஏற்கனவே “சரணாலயம்” என்கிற “சமுக அமைப்பினை” வைத்து சமூகப் பணிகள் செய்து வருவதாக சொல்லியிருந்தவர்
ராதாரவியின் உபயத்தால் சென்ற வருடம் அம்மாவைச் சந்தித்தார்.அங்கே பருப்பு வேகாததால் தான் இந்த சோ கால்ட் சமூக அமைப்பு எல்லாம்.
என்ன அடிப்படை தகுதிகளைக் கொண்டு பொது செயலாளர் பதவி கேட்கிறார் என்பது ஒருபுறமிருக்க
ஷூட்டிங்குக்கு ஒழுங்கான நேரத்திற்கு வராததது,கால்ஷீட்டுகளில் தொடர்ச்சியான சொதப்பல்,குஜாலான வாழ்க்கை முறை போன்ற தன்னிடம் இருக்கும் குணாதிசியங்களுக்கு சினிமா மார்க்கெட் போனதும்,அரசியல் தான் ஒரே தகுதியான் போக்கிடம் என்று என்று நினைத்திருப்பார் போலும்.
சுதர்சன் அதே, அதே! அதிமுகாவில் சேரலாம் என்றுப் பார்த்தால் அம்மா கண்டுக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்,
குழப்பங்கள். அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்ற பெர்னாட்ஷாவின் கூற்றுப்படி அங்கிட்டும் இங்கிட்டும் லோல் பட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனா தனிக்கட்சி என்று எல்லாம் ஆரம்பிக்க டப்பு லேதே?
தற்போதைய நிலவரம்:
தமிழ்நாடு பார்வார்ட் பிளாக் தலைவராக நடிகர் கார்த்திக் நியமனம்.இலவச இணைப்பாகக் கிடைத்தது அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவியும்.
முழு விவரங்களுக்கு:
http://dailythanthi.com/article.asp?NewsID=232045&disdate=1/6/2006&advt=1
One more actor and One more result ;)!
அகில இந்திய அளவில் – முக்கியமாக மேற்கு வங்கத்தில் – இடதுசாரிக் கூட்டமைப்பில் உள்ள கட்சி அகில இந்திய பார்வர்ட் ப்ளாக். ஆனால் தமிழகத்திலோ அது ஒரு சாதாரண ஜாதிக்கட்சி. தேவர்கள் ஜாதிக்கட்சி. அதன் பழமைச் சிந்தனைகள் காரணமாக, குருபூஜை என்ற பெயரில் வருடாவருடம் நடக்கும் கூத்துக்கள் காரணமாக, தலித்துகளுக்கு எதிராக பதற்றத்தினை ஏற்படுத்தும் ஒரு கலக அமைப்பாக இருக்கும் பிற்போக்கு சக்தி.
எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது என்பது வேறு விஷயம். ஆனால் கார்த்திக் + பிற தேவர் ஜாதி நடிகர்கள் ஒன்று சேர்ந்து தம் ஜாதி நலனுக்காக கட்சியை வலுப்படுத்தி நமக்கும் பத்து சீட் கிடைக்கட்டுமே என்று பார்க்கலாம்.
ஆனால் நாளடைவில் ஜாதி சார்ந்த அமைப்புகள் – அவை எந்தப் பெயரில் நடைபெற்றாலும் சரி – அடிவாங்கும் என்று தோன்றுகிறது. Integrated and inclusive policies are the only ones going to work in the long term.
karthik is a fgood actor i like him