தொகுதிப் பங்கீடு: கழுகார் தகவல்


ஜூ.வியில் கழுகார் சொல்வதிலிருந்து சில பத்திகள்:

‘‘தி.மு.க. தலைமைதான் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்த வைகோ, ‘இந்த முறை கௌரவமான தொகுதிப் பங்கீட்டை எங்கள் கட்சி கோரும்’ என பொடி வைத்திருக்கிறார். இப்படி திடீரென்று அவர் சொன்னதற்கு பலமான ஒரு பின்னணி இருக்கிறதாம்…’’

‘‘முதலில் அதைச் சொல்லுமய்யா!’’ கழுகாரை உசுப்பேற்றினோம்.

‘‘அரசியல் அரிச்சுவடியைத் தலைகீழ் பாடமாகக் கற்றுத்தேர்ந்த சிலர் வைகோவின் காதில் முன் ஜாக்கிரதை சங்கை ஊதியிருக்கிறார்கள். அந்த ‘சங்கொலி’ கேட்டதும்தான் வைகோவின் போக்கில் மாறுதலாம். அதாவது, ‘தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலத்தில் மொத்தம் 120 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக ம.தி.மு.க. வலுப்பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும்போது, 15 ஸீட், 20 ஸீட் என்று நீங்கள் பேரத்தில் ஈடுபடுவது கட்சி வளர்ச்சிக்கு உதவாது. இப்போதிருக்கும் நிலையில், ஜெயலலிதாவிடம் நிச்சயம் பேரம் பேசி 40 ஸீட்டு களையாவது வாங்கி விட முடியும். அதில் 30 இடங்களில் வென்றாலே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸக்கு அடுத்தபடியாக அரசியல் களத்தில் முக்கிய ஸ்தானத்தைக் கைப்பற்ற முடியும். இதை மனதில் வைத்து தி.மு.க. தலைமையிடம் ஸீட்டுகளைக் கேளுங்கள் என்று தூபம் போட்டிருக்கிறார்களாம்.

“கருணாநிதியால் இந்த அளவுக்குக் கருணை காட்ட முடியுமா?”

“நிச்சயமாகக் கருணாநிதி கொடுக்கமாட்டார். கைதான் விரிப்பார். அதனால் அ.தி.மு.க&வுடன் போவதுதான் பெஸ்ட் என்கிற ரீதியில் அந்த அரசியல் ஆலோசகர்கள் வைகோவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம். அதன் எதிரொலிதான்… ஸீட் பங்கீடு பற்றி வைகோவை இப்போதே குரல்கொடுக்க வைத்ததாம்!”

“தைலாபுரம் சங்கதி என்னவோ?”

“அங்கு வைத்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், ‘தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பா.ம.க. பாடுபடும்’ என கூட்டணி தலைமைக்குத் தேன் தடவிவிட்டு, எங்கள் கட்சிதான் பெரிய கட்சி. எங்கள் ஆதரவில்லாமல் வெற்றியை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது’ என தன் பேச்சில் வேப்பெண்ணெயையும் தடவியிருக்கிறார். ஆக, கூட்டணி மத்தளத்தில் இரண்டு பக்கமும் இடி இறங்க ஆரம்பித்துவிட்டதால், கருணாநிதி சாதுர் யமாக காய் நகர்த்தினால்தான் விரிசல் இல்லாமல் கூட்டணி பிழைக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.”

————————

இதையும் ‘சந்திப்பின்’ முந்தைய பதிவையும் சேர்த்துப் படிக்கும் போது தோன்றும் எண்ணங்கள்:

1. வைகோவால் அதிமுக கூட்டணிக்குப் போக முடியுமா? இப்படி ஒரு அரசியல் முடிவை மக்கள்
ஏற்றுக் கொளவார்களா? முக்கியமாக, இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி வைகோ என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி கருணாநிதி என்ன நினைக்கிறார்?

2. குஷ்பு விவகாரத்தை ராமதாஸ் அண்ட் கோ கையாண்ட விதம் தொகுதிப் பங்கீடு பேரத்தை பாதிக்கிறதா? ‘நீங்க அந்த நடிகை விஷயத்தில நடந்துகிட்ட விதத்தினால மக்கள் ரொம்ப அதிருப்தி அடைஞ்சிருக்கிக்கிறதா கேள்விப்படறேனே…இவ்வளவு தொகுதில ஜெயிக்க முடியுமா உங்களால?’ 🙂

8 responses to “தொகுதிப் பங்கீடு: கழுகார் தகவல்

  1. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    இன்றைய அப்டேட்:
    தேவை 60 சீட்.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கேட்கிறது.கோஷ்டிகளை சமாளிக்க வேறு வழியில்லையாம்.
    http://dinamalar.com/2006jan06/fpnews1.asp

  2. வை.கோ அ.தி.மு.க பக்கம் சாய முடியாது. காரணம் அவரது நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமே “எதேச்சதிகார ஜெயலலிதா ஆட்சியியினை அகற்றுவதே”. அப்படியிருக்கையில் ஒருவேளை வை.கோ அ.தி.மு.க பக்கம் போனால், மக்கள் ஒட்டுப் போடுவார்களா என்று தெரியாது.

    பா.ம.க இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

  3. Unknown's avatar குழலி / Kuzhali

    காங்கிரசை இப்படியே 60,70 என ஏத்திவிட்டு கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முனைவதாக நினைக்கின்றேன்… ம்… கலைஞர் என்ன செய்கிறார் பார்ப்போம்…

  4. நாராயண்,

    வைகோ செய்த அரசியல் தப்புத் தாளங்களில் இதுவும் ஒன்று. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, ரொம்ப திமுகவை ஆதரித்து, ரொம்ப கமிட் ஆகி விட்டார். மீள முடியாத மூலையில் இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

    ஆனால் கூட்டணி ஆட்சி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கலைஞருக்குத் தோன்றினால், மதிமுகவையும் காங்கிரஸையும் வைத்துக் கொண்டு பாமகவைக் கழற்றி விட்டு விடுவார். அந்த விஷயத்தில் பாமகவின் நம்பகத்தன்மையை அவர் சந்தேகிப்பார் என்று தான் தோன்றுகிறது. (குழலியார் மன்னிக்க)

  5. //வைகோ செய்த அரசியல் தப்புத் தாளங்களில் இதுவும் ஒன்று. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, ரொம்ப திமுகவை ஆதரித்து, ரொம்ப கமிட் ஆகி விட்டார்.//

    அவர் இந்தளவுக்கு கமிட் ஆனதற்கு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் கருணாநிதிக்கு அடுத்து திமுக என்ன செய்யும் என்று யோசிக்கும் நிலை வரும்போது புரியும். அப்போது பெரியார், அண்ணா, கலைஞர் b/w ஆகவும், வைகோ கலர் தலைவராகவும்
    இருப்பார்கள் 🙂

  6. Unknown's avatar குழலி / Kuzhali

    //அந்த விஷயத்தில் பாமகவின் நம்பகத்தன்மையை அவர் சந்தேகிப்பார் என்று தான் தோன்றுகிறது. (குழலியார் மன்னிக்க)
    //
    ம்…. அரசியலில் எல்லா தலைவர்களின் நம்பகத்தன்மையும் அந்த நேரத்தையும் சூழலையும் பொறுத்தது, மேலும் கலைஞர் சென்ற முறை செய்த தவறை இந்த செய்யமாட்டார், 🙂

  7. There is no permanent enemy or friends in Politics

  8. இப்பல்லாம் எல்லாரும் எல்லோரோடையும் கூட்டு வெக்கிறாங்க. வெஞ்சனம் வெக்கிறாங்க. பாஜகவோட இருந்தப்பயும் கருணாநிதிக்கு ஓட்டு விழத்தான் செஞ்சது. காங்கிரசுக்கு வந்தப்புறமும் ஓட்டு விழத்தான் செஞ்சது. ஆனா இந்த வாட்டி உண்மையிலே ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டியது கருணாநிதிதான். ஜெயலலிதா கூட்டணில இப்ப அந்தம்மா மட்டுந்தான் இருக்காங்க. அதுனால யாரு வந்தாலும் ஜெயலலிதாவுக்கு நல்லதுதான். அதே நேரத்துல கருணாநிதி கூட்டணியில யாரு போனாலும் நட்டம் கருணாநிதிக்குதான்.

    கூட்டணி அரசாங்கந்தான்னு வந்துருச்சுன்னா….இப்ப கர்நாடகாவுல நடக்குறத தமிழ்நாட்டுலயும் பாக்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.