முத்து தனது பதிவில் சொன்னது போல் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னைகள் இருக்கும் என்று தோன்றுகிறது. சென்ற இரு தேர்தல்களில் நிகழ்ந்த பங்கீடுகளைப் பார்வையிட்டால் இது தெளிவாகிறது.
இந்தத் 2006ஆம் வருடத் தேர்தலைப் பொறுத்தவரை சரியான மற்றும் சுலபமான ஒப்பீடு 2001ஆம் வருடத் தேர்தலோடுதான் என்றாலும், ஒரு பார்வைக்காக 1996 நடந்த தொகுதிப் பங்கீட்டை வைத்துக் கொள்ளலாம். தமிழகக் கூட்டணிகளில் இன்று முக்கியப் பங்குதாரர்களாக இருப்பவர்கள் இக்கட்சிகள்: திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இடது சாரிகள், மற்றும் (போனால் போகிறதென்று) பாஜக. 1996-ஆம் ஆண்டு அவை கீழ்க்கண்டவாறு போட்டியிட்டன:
மொத்த இடங்கள்: 234
திமுக கூட்டணி:
திமுக: 182
தா.ம.க: 40
சிபிஐ: 11 (? – இவர்கள் கூட்டணியில் இருந்தார்களா என்பதை ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை)
அதிமுக கூட்டணி:
அதிமுக: 168
காங்கிரஸ்: 64
தனித்து:
பாமக: 116
மதிமுக: 177
பாஜக: 143
சிபிஐஎம்: 40
2001-ஆம் ஆண்டுத் தேர்தலில் இரண்டு காங்கிரஸ்களும் ஒன்றாய் இருந்ததால், வரப்போகும் தேர்தலுடன் ஒப்பிடுவதற்குப் பொருத்தமாக இருக்கிறது. இதில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்:
திமுக கூட்டணி:
திமுக: 183
பாஜக: 21
அதிமுக கூட்டணி:
அதிமுக: 141
காங்கிரஸ்: 46 (காங்கிரஸ்: 14, தாமக: 32)
பாமக: 27
சிபிஐ: 8
சிபிஐஎம்: 8
தனித்து:
மதிமுக: 211
வரும் தேர்தலின் கூட்டணி நிலவரம் 2001-ஆம் ஆண்டு தேர்தலின் தலைகீழாக இருக்கிறது. பாமக, மதிமுக, காங்கிரஸ், இடது சாரி ஆகியவை திமுக கூட்டணியில் உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால், பாஜக அதிமுக கூட்டணியில் ஒண்டிக் கொள்ளலாம். அதிமுகவுடன் வேறு எந்தக் கட்சியும் இல்லை. 
ஆனால், இத்தனைக் கட்சிகளை உள்வாங்கிக்கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் அஜீரணக் கோளாறு உண்டாகலாம். தொகுதிப் பங்கீடு செய்வதில் திமுக சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இவ்வாறு உள்ளது:
1. திமுக தனித்து ஆட்சி அமைக்கவே விரும்பும். தனித்து ஆட்சி அமைக்க குறைந்தபட்சத் தேவை 118 இடங்கள். இத்தனை இடங்களில் வெற்றி பெற திமுக போட்டியிட வேண்டியது எவ்வளவு என்று தீர்மானிக்க வேண்டும். 1996-இல் வெற்றி பெற்ற போது 182 இடங்களில் போட்டியிட்டு 173 இடங்களில் வென்றது. 2001-இல் தோல்வியுற்ற போது 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக 180-க்குக் குறைவான இடங்களிலேயே போட்டியிட முடியும். ஆயினும் எந்த அலையும் இல்லாத இந்தத் தேர்தலில் 118 இடங்களில் வெல்ல குறைந்தபட்சம் 150 இடங்களிலாவது போட்டியிட வேண்டியிருக்கும் என்பது என் கணிப்பு.
2. காங்கிரஸ்: சென்ற தேர்தலில் 46 இடங்கள், அதற்கு முந்தைய தேர்தலில் (தாமக) 40 இடங்கள். இம்முறை இவர்கள் நாற்பது இடங்களுக்காவது கடுமையாக வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
3. பாமக: சென்ற முறை 27 இடங்களோடு திருப்திப்பட்டுக் கொண்டவர்கள், கண்டிப்பாக அதை விட அதிகம் கேட்பார்கள். விடுதலை சிறுத்தைகளுக்கும் அவர்கள் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும். நாற்பதுக்குக் குறைவாக இவர்களை திருப்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம்.
4. மதிமுக: இவர்கள் ஒரு wild card. சென்ற இரு முறையும் தனித்துப் போட்டியிட்டவர்கள். சென்ற பாராளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டு ஜெயித்தவர்கள். தனது அரசியல் செல்வாக்கின் மீது வைகோ வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஈடாக இந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க முடியுமா என்பது கேள்வி. இவர்கள் ஒரு இருபதேனும் எதிர்பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது.
5. இடது சாரிகள்: மொத்த குத்து மதிப்பாக ஆளுக்குத் தலா ஐந்தென்று இவர்களுக்கு ஒரு பத்து தொகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆகக் கூடி, 150 + 40 + 40 + 20 + 10 = 260. ஆனால் இருப்பதோ 234 தொகுதிகள்.
தன்னிடமிருந்து ஒரு பத்தைப் பிடுங்கி, காங்கிரஸிடமிருந்து ஒரு பத்தைப் பிடுங்கினாலும் போதாது. பாமகவிடம் கை வைத்தால் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விடுவார்கள். வைகோ ஏற்கனவே கொஞ்சம் முறைப்பாக இருக்கிறார். மேலும் இவை தவிர சில இதர உதிரி கட்சிகளும் உள்ளன. தென்மாவட்டத் தொகுதிகள்/வட மாவட்டத் தொகுதிகள் பிரச்னைகள் வேறு. ஆகையால் பல கட்சிகள், கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் கருணாநிதியின் விசாலமான இதயத்தில் கிடைக்கும் இடத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.











My predictions 🙂
தங்கள் பங்குக்கு திமுக 134 தொகுதிகளை வைத்துக் கொள்ளும். மீதமுள்ள நூறை இராமதாஸிடம் கொடுத்து, பிரித்துக் கொடுக்குமாறு சொல்லிவிடும்.
மத்திய ஆளுங்கட்சியான காங்.ஸை, பா.ம.க-வால் பகைத்துக் கொள்ள முடியாது?
மதிமுக-விற்கு அதிருப்தி ஏற்பட்டாலும் கவலையில்லை. எம்.பி.க்கள் இல்லாத திருமா-வுக்கோ, பா.ம.க.வுக்கு அடிபணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே, ஆதியில் கொடுக்கப்பட்டது:
பா.ம.க.: 40
காங்: 30
வி.சி.: 5
கம்யூ: 5 + 5
மதிமுக: 15
ஆனால், முடிவில் பெற நினைப்பது:
பா.ம.க.: 45
காங்: 35
வி.சி.: 7
கம்யூ: 7 + 6
பாலா,
நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது – மதிமுகவும் வைகோவும் ஒரு தப்ப முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சீட்டு கூட கொடுக்காவிட்டாலும், அதிமுகவிற்கு அவர்களால் செல்ல முடியாது கருணாநிதி நினைப்பதாகத் தான் தோன்றுகிறது. ஆக, மீண்டும் தனித்து போட்டியிட்டு பூஜ்ய சீட்டுகள் தான் ஜெயிப்பார்கள். ஆனாலும், திமுக ஓட்டுகளைப் பிரிப்பார்கள் என்ற கவலை கலைஞருக்கு இருக்கும்.
பாமக 45, வி.சி 7 என்பது அதிகமாகப் படுகிறது. நாற்பது சீட்டுகளுக்குக் கம்மியாகப் பெற்றால், வாசனால் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியாது.
என்னோட ஆரூடம்:
1. ஜெ, எடுத்த எடுப்பிலேயே, அஞ்சு சீட், ஆறு சீட் என்று தான் அடிமாட்டு ரேட்டில் ஆரம்பிப்பார். அதனால், பா.ஜ.க, கூட்டணியில் இருந்து விலகி, விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கும். இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் வேலை செய்வார்.
2. நாட்டுக்காக பல கோடி ரூபாய் சொத்தை கொடுத்தவன் என்ற ரீதியிலே, விஜயகாந்தின் campaign அமையும். பா.ஜ.கவும் ஒத்து ஊதும். அவர் அருப்புக்கோட்டையில் ( மதுரை நிச்சயமாக வாய்ப்பில்லை ) போட்டியிடுகிறார். வெற்றி பெறுவார் ( அவர் மட்டும்)
3. சீட்டு பேரத்தில், பா.ம.கவுக்கும், திமுகவுக்கும் சண்டை வரும். அவர் அதிமுகவுடன் கூட்டணியில் ஐக்கியமாகிவிடுவார். தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, ராமதாஸை கழட்டி விட, வடக்கிலே லாபியிங் நடக்கிறது ( அன்புமணியின் பல அமைச்சக முடிவுகள் காரணமாக). ஆக, சோனியாவும் ஒத்துக் கொள்வார். மதிமுக இருக்கும். விடுதலை சிறுத்தைகள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்று இப்போது சொல்ல முடியாது.
4. இந்த ஆட்சி அதிகமாக கெட்ட பெயர் வாங்கவில்லை. இது பா.ம.க வின் மேடைப் பேச்சு அரசியலுக்கு உதவியாக இருக்கும். அம்மா செய்த நல்ல காரியங்கள், அவருக்கு உதவியாக இருக்கும்.
5. சீட்டுகள் எண்ணிக்கை பற்றி இப்போது சொல்லமுடியாது. ரொம்ப premature
6. அடுத்த மூன்று மாதங்களுக்குள், பெரிதாக நிகழ்வு ( நல்ல, கெட்ட) இல்லாத பட்சத்தில், தமிழக வரலாற்றில் முதன்முறையாக, hung assembly ஏற்படும்.
தவமாய் தவமிருந்து தனித்து மறுமலர்ச்சி மலர சேரன் விண்ணப்பம் – Call for MDMK to contest alone – News Today :: REGIONAL FARE
பாஸ்டன் பாலா சொன்னது போல தொகுதி பங்கீடு நடக்க வாய்ப்பு உள்ளது. பா.ம.க அறுபது இடங்கள் கேட்கலாம். நாற்பதுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ம.தி.மு.கவிற்கு இருபது கிடைக்கலாம்.
காங்கிரஸ் 40 இருந்து 50 சீட்.
தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது என்ற பிரகாஷின் கூற்றை தமிழக மக்கள்
நிறைவேற்றுவார்கள் என்று கூற முடியாது…இது ஆழ்ந்த ஆராய வேண்டிய விஷயம..
இந்த தபா யாருக்கு இதயத்தில் மட்டும் இடம்? எனி ஐடியா?
From Dinamalar
http://www.dinamalar.com/2006jan05/fpnews5.asp
——————
சென்னை: தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பூர்வாங்கமாக சீட் ஒதுக்கீடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது பூர்வாங்கமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் விவரம்:
தி.மு.க., 138
காங்கிரஸ் 40
பா.ம.க., 25
ம.தி.மு.க., 17
மார்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
ஆர்.எம்.வீரப்பன் 1
இவ்வாறு தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதிமுக ‘ஓ நெகடிவ்’ ரத்தம் மாதிரி, அது எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர முடியும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
http://thatstamil.indiainfo.com/news/2006/01/04/mdmk.html
என்னுடைய கணிப்பு
தி.மு.க., 136
காங்கிரஸ் 37
பா.ம.க.+வி.சி(32)
ம.தி.மு.க., 15
மார்க்சிஸ்ட் 5
இந்திய கம்யூனிஸ்ட் 5
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
ஆர்.எம்.வீரப்பன் 1
மற்றவை 2
என்னுடைய தேர்தல் கணிப்பு
புதுச்சேரி மாநிலம் – காங்கிரஸ் தலைமையில் கூட்டணி.
இந்த திட்டத்தின் பிரதிபலனாக தமிழ்கத்தில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைப்பது.
காங்கிரஸிடம் ஒன்றிரண்டை குறைத்து அதை மதிமுகவுக்கு கொடுத்து திருப்தி படுத்தலாம்
திமுக-134(ஆர்.எம். வீரப்பன் + இ.முஸ்லீம் லீக்)
காங்கிரஸ் -40
பாமக+விசி=30 (அ)பாமக மட்டும் 28
மதிமுக -18 விசி இல்லாது போனால் -20
மா.கம்யூனிஸ்ட் =6
இ,கம்யூனிஸ்ட் =6
தி.மு.க. – 140
காங்கிரஸ், பா.ம.க. – 34
ம.தி.மு.க. – 15
கம்யூனிஸ்ட்கள் – தலா 5
இதர – 3
இதை தவிர வி.சி.க்கு இதயத்தில் இடம் கொடுக்கப்பட்டாலும் படலாம்.