Tag Archives: States

தேர்தல்: கருத்தில் கவர்ந்தது

பா ராகவன் :: Pa. Raghavan | writerpara.com » தேர்தல் 2009 – என்ன சொல்கிறது? | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.

அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.

அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.

வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.


மா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்

மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,

* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.

குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்


அனானியார் சொன்னது:

பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.

பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.

ஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.

பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.


Krish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை

தோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.

இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.


தேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:

தங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.

சமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.


கார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்

தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.


ஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….

எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.

சீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


குசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�

கேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி?

பதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.


மூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்

எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.


IdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?


அசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.


CableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி?

பாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.


சென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…


ட்விட்டர்:

narain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு

~o0o~
காசி

Anyone trying to link this election with Eelam are living in some imagnary world, or in monitor and keyboard (and maybe in siRRithazs) – 2:11 PM May 16

1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?

Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.

akaasi

In spite of sincere Pro-Tamil, Pro-downtrodden agenda, and reasonably good track record of ministers, why PMK is drubbed so badly?1:44 AM May 17th from web

~o0o~

kabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும்? இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web

~o0o~

ksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்

~o0o~

athisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி

~o0o~

பத்ரி சேஷாத்ரி

bseshadri :: I am told, the final TN voting percentage is 70+, though yet to see the EC data. 10% votes “polled” during the last one hour.12:39 AM May 15

Paying voters is one thing. Paying polling officials is yet another thing altogether.

(1) Paying voters directly. We have all heard them. From Rs. 500 per head to Rs. 2,500 and so on.

(2) Paying polling booth officials and polling agents of opposite parties to cast bulk votes between 4-5 in several polling booths.

(3) Paying presiding officers (I heard numbers like Rs. 2 lakh!) to fix votes for them in the dying hours.

~o0o~

srikan2 :: Manmohan Singh the first person to return to power after a full-term as PM since, guess what, since one Mr J.Nehru!!11:06 AM May 16th f

ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு

(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)

மிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்?

மிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்?

மணி மு. மணிவண்ணன்

ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.

அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.

அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது என்று நான் மகிழ்கிறேன்.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாம் எல்லா இந்தியர்களின் தலைவராக மட்டும் இதுவரை பார்த்ததில்லை.

ஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்

ஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்

பெண் தலைவர்களும் வேறு ஆண் தலைவரின் தொடர்பினால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து வென்றிருக்கிறார்கள் – மாயாவதி உள்பட.

ஒபாமா கருப்பினத் தலைவர் இல்லை. அவர் கருப்பினத் தலைவராய் மட்டும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் வெல்லும் நிலையை எட்டியிருக்க முடியாது.

ரோனால்டு ரேகன் நடிகர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் வென்றதற்குக் காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவரது அரசியல் கொள்கைகள்தாம் அவரை ஆளுநராக்கின.

பின்னர் 70 வயதில் அதிபர் தேர்தலுக்கு அவர் போட்டியிடும்போது அவர் நடிகராய் இருந்தார் என்பதே ஒரு தலைமுறைக்குத் தெரியாது.

வரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு

வரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு

கென்னடி கத்தோலிக்கர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.

ரேகன் நடிகர், முதியவர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.

ஒபாமா கருப்பர் என்பதையும் மீறி வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார்.

ஒபாமா வெறும் ஒரு முறை மட்டும் தேர்தலில் வெற்றி பெரும் அரசியல்வாதியில்லை.

ஒரு தலைமுறைக்கே மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவர்.

மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கனவை நிறைவாகும் வேளை வந்திருக்கிறது. அதற்கேற்ற தலைவர் வந்திருக்கிறார்.

பாரதி கொண்டாடியிருப்பான்.

“விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை”

தமிழருக்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலம் வரவில்லை.

– மணி மு. மணிவண்ணன்
சென்னை, இந்தியா.

(அவரின் முந்தைய பதிவு: அரசியல் ஆழிப்பேரலை)


ட்விட்டரில் கிடைத்த விடைகள்:

rarunach

Why:

  • Iraq war
  • New generation of voters.

How:

  • His movement
  • eloquency
  • McCain’s erratic campaign.

thendral

  • media
  • VP
  • JohnM’s projection
  • first time voters
  • asians
  • thanks to Bush!

PriyaRaju

  • People don’t want 4 more years of Dubya style politics
  • Palin was the final spanner in the works.

விளம்பர மூழ்கடிப்பு: பணம் பத்தும் செய்யும் – அதிபரும் ஆக்கும்?

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com: Democrats are spending far more heavily than Republicans on field operations, after years of ceding the advantage in organizing to the GOP voter-turnout machine.

குழப்பமும் காரணம்

விநோத வில்லன் வடிவ ஜோ - சராசரியா? செல்வந்தரா?: குழப்பமும் காரணம்

Finance records show Democrats have hired five to 10 times more paid field staff in swing states than the Republicans.

Democrats have set up 770 offices nationwide, including in some of the most Republican areas of traditionally “red” states — like one in Goshen, Ind., a manufacturing town with a population of about 30,000. It is the seat of Elkhart County, which voted for President George W. Bush in 2004 by more than 40 percentage points. By comparison, Republicans have about 370 offices nationwide.

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall.

The senator’s presidential campaign along with the Democratic National Committee have put at least $112 million into state parties in recent months, a review of campaign-finance filings shows. They have poured $6 million into both North Carolina and Virginia and even sent $1.8 million into Montana — nearly two dollars for every resident of that state.

Four years ago, the party’s get-out-the-vote effort was largely run by an independent group named America Coming Together, or ACT, which was financed with $164 million from rich liberals but legally prevented from coordinating with their candidate.

ACT was also legally restricted when it came to mentioning candidates, and was fined $775,000 after allegedly attacking President Bush in its voter drives.

The GOP spent an estimated $22 million on personnel from June 1 to Oct. 15, compared to $19 million over the same period in 2004.

Democrats have increased their staff expenditures from $30 million to $56 million — and they employed an estimated 4,500 workers making more than $1,500 a month as of mid-October, the latest information available. Sen. McCain and the Republicans had about 1,100 at that point.

The expansion was made possible by Sen. Obama’s decision to decline public financing for his campaign, freeing himself from its spending caps. Instead he has relied on the legions of supporters who have already contributed over $600 million.

Sen. McCain is limited to spending the $84.1 million he accepted from the government after his September nomination. Sen. Obama is on track to spend more on television advertising than any candidate in history, likely spending more than $100 million on ads in October alone.


செய்தித்தாள், தினசரி, பத்திரிகை, ஊடகங்களின் அமோக ஆதரவு

Newspaper Endorsements – A Final Tally – Interactive Graphic – NYTimes.com: In their presidential endorsements, most editorial boards supported the same party in 2008 as they had in 2004. But there were some notable exceptions.


வாக்கு மதிப்பு – ஒரு சிலரின் ஓட்டு பலரின் ஓட்டை விட சாலப் பெரிது

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I பதிவைப் பின் தொடர்ந்து:

Op-Chart – How Much Is Your Vote Worth? – Op-Ed – NYTimes.com

மைத்ரேயன்:

இந்தக் கட்டுரை சுருக்கமாக ஒரு பிரச்சினையை விளக்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு தழுவிய தேர்தல். இப்படி ஒரு தேர்தலை இந்தியாவில் நடத்த முடியாது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நபராலும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த அளவில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி அவர்கள் மரியாதையைப் பெற்று நாடு பூரா அங்கீகாரம் தந்து அதன் வழியே நாடாளும் தகுதி பெற முடியாது என்று நினைக்கிறேன்.

அதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடு சில்லு சில்லாக உடைந்து அங்கங்கே பிராந்திய சத்ரபதிகள் தாமே முடி மன்னராக ஆள்கின்றனர். மத்திய அரசு பெயரளவு ஒரு பெரும அரசாகச் செயல்படுகிறது.

அமெரிக்க அதிபர் இன்னமும் பொதுமக்கள் நடுவே இருந்து அங்கீகாரம் பெறும் நபராகவே தெரிய வருகிறார்.

ஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா? அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

மைத்ரேயன்:

Op-Chart – Op-Chart – How Much Is Your Vote Worth? – Interactive Feature – NYTimes.com: “This map shows each state re-sized in proportion to the relative influence of the individual voters who live there. The numbers indicate the total delegates to the Electoral College from each state, and how many eligible voters a single delegate from each state represents”

These Voters Matter the Most :: Capital Journal – WSJ.com

  • Young and Hispanic voters.
  • Suburban Philadelphia voters.
  • New Hampshire voters.
  • Virginia voters.
  • North Carolinians.

Every vote in Tuesday’s election is equal, of course, but some are more equal than others. That is to say, some votes have more strategic significance.

செனேற் சபையும் காங்கிரஸ் உறுப்பினர்களும் – அமெரிக்க தேர்தல் களம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் எவர் ஜெயிப்பார் என்பது இழுபறியாக இருந்தாலும், செனேட்டிலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் சர்வ நிச்சயமாய் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வெற்றியை தக்கவைத்து, வித்தியாசத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால், மெகயின் இதை தீவிரமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கார்ல் ரோவ் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர்.


ஏன் குடியரசுக் கட்சி தோற்கிறது?

1. தற்போதைய குடியரசுக் கட்சி தலைவர் ஜாஜ் டபிள்யூ புஷ்

2. ஜனாதிபதிக்குத்தான் ஒபாமாவுக்கு வாக்களிக்க முடியவில்லை. உள்ளூர் தேர்தலில் மட்டுமாவது ஜனநாயகக் கட்சியைப் பார்த்து குத்துவோம்.

மேலும் விவரங்களுக்கு: G.O.P. Facing Tougher Battle for Congress – NYTimes.com


2008 Election Map – Senate – Election Guide 2008 – The New York Times:


2008 Election Map – House – Election Guide 2008 – The New York Times:

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related