வாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே!
சுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯
முதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.
Recession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.
டைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.
சோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.
கம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.
வரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.
மும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அதே போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை? எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்?’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.
ஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம்? இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்?
டூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.
அந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.
ப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.
சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.
donion: Shruti Haasan is a great environmentalist; heavy reuse and recycling in songs of unnaipOl oruvan — View Tweet
milliblog: Shruti’s music is amateurish, while masquerading as polished. Milliblog music review of Unnaipol Oruvan: http://j.mp/k2T9
orupakkam: உன்னைப் போல் ஒருவன் இசை – Didnt fail. Kamal & Bombay Jayshree’s number is the pick of the lot. இது ஒரு குடும்ப இசை ஆல்பம் 🙂 — View Tweet
ursmusically: As a composer, Shruthi Haasan makes quite a promising debut in ‘UnnaiPol Oruvan’. She has tried something diff in limited space. — View Tweet
chanduji: UNNAIPOL ORUVAN – songs not so great for the first hearing! may be will get used to it soon!!! — View Tweet
girsubra: Allah Jaane .. from the album-Unnaipol Oruvan is awesome.I think ,kamal Hassan -the singer doesnt always get the credit he deserves — View Tweet
graja: Hearing song Nilai varuma sung by kamal & bombay jayasree from #Unnaipol oruvan… Music by Shruthi hassan— Nice #Melody — View Tweet
srikanthvaradan: Shruti hasan has done a neat job in unnaipol oruvan…. pick of the album is Nilai varuma…. sung by kamal and bombay jayashree… — View Tweet
dvimal24: “UnnaiPol Oruvan” songs are really good – seems to be a promising entry for Shruthi Hasaan!!! — View Tweet
charanftp3: Giving the composing job to Shruti was indeed a big move,but she makes a terrible mess of the Unnaipol Oruvan soundtrack-Disappointing! — View Tweet
Listened to Unnaipol Oruvan atleast 10 times.. Listen to the album with open mind and the songs are apt for the plot very intriguing lyrics — View Tweet
Kamal’s rational taught all over the unnaipol oruvan lyrics listened to all the songs atleast 10 times good stuff — View Tweet
உன்னைப் போல் ஒருவனில் அரசு உயர் அதிகாரியாக தலைமைச் செயலாளர் கதாபாத்திரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமி நடிக்கிறார்.
இந்தியில் ஜிம்மி ஷெர்கில் நடித்த வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சக்ரி டொலேடி, இயக்குகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
50 ஆண்டு பொன்விழா
கேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா?
பதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
உன்னைப் போல் ஒருவன் – நிருபர் சந்திப்பு:
கமல் மேற்கோள்
i) ‘அரசியல் பேசுவதாக இருந்தால் காரணமில்லாமல் (நிருபர்களை) சந்திக்கலாம்; நான் சினிமா எடுக்கும்போதுதான் மீட் செய்வேன்.’
3. இட்லிவடை :: IdlyVadai: “நேற்று – எனக்குள் ஒருவன் , இன்று – உன்னைப்போல் ஒருவன்”
இரா முருகன்
நடிகர்கள் சீமான்,
டாக்டர் பரத்,
கணேஷ்,
தெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்),
வசன கர்த்தா ரமாதேவி,
படத்தின் உதவி இயக்குனர்கள்
– எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம். — பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.
முக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி,
நண்பர் ஜாஃபர் பற்றி (பிரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்),
ஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி,
கலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி,
ஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி,
ஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.
நண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்?
க்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.
‘That was an one-man symphony, kamal-ji’ – I told. He just smiled.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde